1. வ.ந.கிரிதரன் பாடல் : தலை குனிந்து செல்லும் பெண்ணே!
இசை & குரல்: SUNO AI ஓவியம்: கூகுள் AI
பாடலைக் கேட்டுக் களிக்க : https://www.youtube.com/watch?v=DYAA3AhCA0Y
தலை குனிந்து செல்லும் பெண்ணே!
தலை நிமிர்ந்து பார்த்தால் என்ன?
தலை நிமிர்ந்து பார்த்தால் என்ன
நிலை குலைந்தா போவாய் கண்ணே!
கண்ணும் கண்ணும் பார்க்க வேண்டும்.
காதல் நதியெனப் பொங்க வேண்டும்.
எண்ணம் எல்லாம் நிறைய வேண்டும்.
மண்ணின் வாழ்வு சிறக்க வேண்டும்.
தலை குனிந்து செல்லும் பெண்ணே!
தலை நிமிர்ந்து பார்த்தால் என்ன?
ஓரப் பார்வையை வீசிச் சென்றாய்.
ஒல்கி ஒசிந்தே நடந்து சென்றாய்.
தூரம் சென்றே திரும்பிப் பார்த்தாய்.
தொலைவில் திரும்பியே நெஞ்சில் நிறைந்தாய்.
தலை குனிந்து செல்லும் பெண்ணே!
தலை நிமிர்ந்து பார்த்தால் என்ன?
ஊர் எங்கும் உலாவி வந்தோம்.
யார் என்று தெரியாமல் வாழ்ந்தோம்.
கார் குழல் பரப்பி வந்தே
கூர் விழியால் கொள்ளை கொண்டாய்.
தலை குனிந்து செல்லும் பெண்ணே!
தலை நிமிர்ந்து பார்த்தால் என்ன?
தலை குனிந்து செல்லும் பெண்ணே!
தலை நிமிர்ந்து பார்த்தால் என்ன?
தலையை நிமிர்த்திப் பாரு கண்ணே.
நிலையை மறந்தே நீச்சல் அடிப்போம்.
தலை குனிந்து செல்லும் பெண்ணே!
தலை நிமிர்ந்து பார்த்தால் என்ன?
2. வ.ந.கிரிதரன் பாடல்: என் பிரியம் மிகு யாழ் மண்ணே!
- இசை & குரல்: AI SUNO - ஓவியம் : AI
பாட்டைக் கேட்டுக் களிக்க : https://www.youtube.com/watch?v=J197gHg7pQw
உணர்வுடன் , உயிருடன் கலந்த மண்ணே.
உள்ளத்தில் நிலைத்திருக்கும் பிரிய யாழ்மண்ணே.
பிறந்து உருண்டு தவழ்ந்த மண்.
பருவக் கனவுகள் பூத்த மண்.
போர்க்களங்கள் எத்தனை சந்தித்தாய் வரலாற்றில்.
பாரில் உயர்ந்து நிற்கின்றாய் யாழ்மண்ணே.
உணர்வுடன் , உயிருடன் கலந்த மண்ணே.
உள்ளத்தில் நிலைத்திருக்கும் பிரிய யாழ்மண்ணே.
தாழ்ந்த போதெல்லாம் மேலெழுந்தாய் நிலைத்தாய்.
தலைநிமிர்ந்து எழுந்து நின்றாய் என்மண்ணே.
எரித்த போதெல்லாம் துளிர்த்து எழுந்தாய்.
என்னருமை யாழ்மண்ணே! பிரிய யாழ்மண்ணே!.
உணர்வுடன் , உயிருடன் கலந்த மண்ணே.
உள்ளத்தில் நிலைத்திருக்கும் பிரிய யாழ்மண்ணே.
யாழ்ப்பாணம் என்றால் யாழ்தேவி நினைவுவரும்.
யாழ்ப்பாணம் என்றால் யாழ்கூழ் நினைவுவரும்.
கிடுகுவேலி நினைவுவரும். கிட்டிப்புள் நினைவுவரும்.
கமுகு ,தென்னை, பனை நினைவுவரும்.
உணர்வுடன் , உயிருடன் கலந்த மண்ணே.
உள்ளத்தில் நிலைத்திருக்கும் பிரிய யாழ்மண்ணே.
திரிந்த பொழுதுகள் களித்த தியேட்டர்கள்
சுகித்த உணவகங்கள் அருந்திய பானங்கள்
எப்படி மறப்பேன் உன்னை யாழ்மண்ணே.
எப்படி மறப்பேன் உன்னை யாழ்மண்ணே.
உணர்வுடன் , உயிருடன் கலந்த மண்ணே.
உள்ளத்தில் நிலைத்திருக்கும் பிரிய யாழ்மண்ணே.
எனது, வ.ந.கிரிதரனின் பாடல்கள் , யு டியூப் சானலில் , செயற்கை அறிவு மூலம் இசையமைக்கப்பட்டு, குரல் கொடுக்கப்பட்டு பதிவேற்றப்பட்டுள்ளன. நேரம் கிடைக்கும்போது சென்று கேளுங்கள். ஆரோக்கியமான உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளூங்கள். பிடித்திருந்தால் 'சான'லை subscribe செய்து கொள்ளுங்கள். எதிர்காலத்தில் நான் பதிவிடப் போகும் பாடல்களைக் கேட்பதற்கு அது உதவியாகவிருக்கும். வ.ந.கிரிதரன் பாடல்கள் - https://www.youtube.com/@girinav1
3. வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு!
இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI
யு டியூப்பில் கேட்டுக் களிக்க: https://www.youtube.com/watch?v=ZtuQd3SVYjM
வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல.
வரலாறு உற்பத்திச் சக்திகளின் வரலாறு.
உழைக்கும் தொழிலாளர் உருவாக்குவதே வரலாறு.
உலகின் வரலாற்றைப் படைப்பவர் இவரே.
உழைப்பவர் வேர்வை, உழைப்பில் உருவாவதே
உண்மையான வரலாறு தெரிந்து கொள்வோம்.
வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல.
வரலாறு உற்பத்திச் சக்திகளின் வரலாறு.
உண்மை வரலாற்றை அறியாது இருக்கின்றோம்.
மண்ணின் வரலாற்றை எழுதுபவர் மக்களே.
உண்மை வரலாறு அதுவே உணர்வோம்.
உணர்ந்து அவரை எப்போதும் போற்றுவோம்.
வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல.
வரலாறு உற்பத்திச் சக்திகளின் வரலாறு.
உழைக்கும் சக்திகள் உறவே இங்கு
உண்மை வரலாற்றை உருவாக்கி வைக்கும்.
மானுட சமுதாய அமைப்புகளை உருவாக்கும்.
மாடாய், உழைப்பவரே வரலாற்றைத் தீர்மானிப்பர்.
வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல.
வரலாறு உற்பத்திச் சக்திகளின் வரலாறு.
உண்மைதனை நாம் அறிவது அவசியம்.
உணர்ந்து உழைப்பவரை நாம் போற்றுவோம்.
எனது, வ.ந.கிரிதரனின் பாடல்கள் , யு டியூப் சானலில் , செயற்கை அறிவு மூலம் இசையமைக்கப்பட்டு, குரல் கொடுக்கப்பட்டு பதிவேற்றப்பட்டுள்ளன. நேரம் கிடைக்கும்போது சென்று கேளுங்கள். ஆரோக்கியமான உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளூங்கள். பிடித்திருந்தால் 'சான'லை subscribe செய்து கொள்ளுங்கள். எதிர்காலத்தில் நான் பதிவிடப் போகும் பாடல்களைக் கேட்பதற்கு அது உதவியாகவிருக்கும். வ.ந.கிரிதரன் பாடல்கள் - https://www.youtube.com/@girinav1



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









