இலங்கையில் நடைபெறும் தமிழ் பண்பாட்டு – – அனைத்துலக மாநாட்டின் இரண்டாவது அமர்வு நுவரெலியாவில் வெகுவிமர்கையாக நடந்தேறியது.
தாஞ்சாவூர் அனைத்துலக பண்பாட்டு ஆய்வு மையம், தமிழ் நாடு திருநெறிய தமிழ் சைவ சமயப் பாதுகாப்பு பேரவை, இலண்டன் தமிழ் கல்வியகம், பிரான்சு உலக செம்மொழி தமிழ்ச் சங்கம் மற்றும் யாழ் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை ஆகியன இணைந்து நடத்தும் தமிழ் பண்பாட்டு – அனைத்துலக மாநாட்டின் முதலாவது அமர்வு யாழ்ப்பாணம் பல்லைக்கழகத்தில் 30-06-2025 தேதி இம்பெற்றது. இரண்டாவது நுவரெலியாவில் உள்ள மாவட்ட செயலகத்தின் கேட்போர் 02-07-2025 தேதி இடம்பெற்றது.
மூன்றாவது அமர்வு கொழும்பில் 06-07-2025 தேதியும் வரையும் இடம்பெறவுள்ளதாக என்று தமிழ்நாடு திருநெறிய தமிழ் சைவ சமய பாதுகாப்பு பேரவையின் தலைவர் க. சசிக்குமார் தெரிவித்தார்.
இம்மாநாட்டில் தென்னாபிரிக்கா, பிரான்சு, பிரிட்டன், சுவிட்சலாந்து நோர்வே, ஜெர்மனி, கனடா, மொரீசீயஸ், ரீ யூனியன், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து பேராளர்கள், சான்றோர்கள் பெரும் மக்கள் பங்கேற்றார்கள்.
தகொட்டக்கலை ஆசிரியர் கலாசாலை பிரதி முதல்வர் ஜெயகாந்தன் சற்குருநாதன் தலைமையில் இம்மாநாட்டில் நோக்கவுரையிரனை மாநாட்டு ஒருங்கிணைப்பாளர், தமிழ் நாடு பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர். க. பாஸ்கரன் அவர்களும், சிறப்பு விருந்தினர் உரையினை தோட்டம் மற்றும் சமூக உள் கட்டமைப்பு மறு சீரமைப்பு பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளரும் ஆலோசகருமான கலாநிதி பி. பி. சிவப்பிரகாசம் அவர்களும், , சிறப்புரையினை கண்டி இந்திய துணைத் தூதுவர் மேனாள் ஏ. நடராஜன், மையக் கருத்தினை பேராதனை பல்கலைக்கழக பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ். விஜயச்சந்திரன் அவர்களும் கௌரவ விருந்தினர் உரையினை முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர். ராஜாராம் அவர்களும், நுவரெலியாக கல்வி வலயத்தின் முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் நிர்மலா பத்மநாதன் அவர்களும் நாவலப்பிட்டி கதிர்வேலாயும் கோயிலின் அறங்காவலர் முத்தையாப்பிள்ளை ஸ்ரீகாந்தன் அவர்களும், அகில இலங்கை மகா சபைத் தலைவர் சிவஸ்ரீ வேலுசுரேஷ்வர சர்மா அவர்களும் இந்து கலாசார பேரவையின் தலைவர் ரெ. பாலகிருஷ்ணன் அவர்களும், ஸ்ரீசிவம் ஆதிசைவர் சித்தர் பீடத்தின் குருமுதல்வர் யோகி கோபிநாத் சுமாமி அவர்களும் நன்றியுரையினை பாரீஸ் உலகச் செம்மொழித் தமிழர் சங்கத்தின் தலைவர் நவரத்தினம் கணேஸ்வரன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்வில் ஒருங்கிணைப்பாளராக தமிழ் நாட்டுப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் க. பாஸ்கரன். ஸ்ரீ சிவம் ஆதிசைவம் சித்தர் பீடத்தின் குரு முதல்வர் யோகி. கோபிநாத்சுவாமி, இந்து கலாசார பேரவையின் தலைவர் திரு. ரெ. பாலகிருஸ்ணன், திரு. நவபிரகாஸ்ராஜன், கணக்காளர் காராளன் பிரதீஸ்குமார், சுற்றுலா பயண ஏற்பாட்டாளர் ஜீ. லோகிலதாசன், நம்சபரி சங்கீத சபா காப்பாளர் திரு. பாக்கியநாதன் லோகநாதன் ஆகியோர்களுடன் கருத்தரங்கு அமர்வுப் பொறுப்பாளர்களாக இலண்டன் தமிழ் கல்வியகம் இயக்குநர் திரு. ச. முருகையா, பாரீஸ் உலக செம்மொழிச் சங்க நிறுவினர் நவரத்தினம் கணேஸ்வரன், கிழக்குப் பல்கலைக்கழக முனைவர் ஆகியோர் பங்கேற்றனர்.
:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.