- இனிது இணைய இதழில் (https://www.inidhu.com) வெளியான 'பதிவுகள்' இணைய இதழ் பற்றிய குறிப்பு. -
உலகத்தமிழ் எழுத்தாளர்களின் இலக்கியம் பேசும், நவீன முன்னெடுப்புகளான தமிழின் பல்வேறு வடிவங்களைப் பதிவு செய்யும் இணைய இதழ் தான், பதிவுகள் – பன்னாட்டு இணைய இதழ்! இத்தளத்தின் ஆசிரியர் வ.ந.கிரிதரன் ஆவார். இவர் சிறந்த இலக்கியவாதி, திறனாய்வாளர், வரலாற்றாலாளர், இதழாளர், நூலாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர். இவரின் சீரிய முயற்சியில் 2000 லிருந்து தொடர்ந்து இவ்விதழை நடத்தி வருகிறார்.
“அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்” எனும் மந்திரச் சொல்லுடன் அறிவை உலகமயமாக்கும் பெரும் தமிழ் உழைப்பே இத்தளம். இத்தளத்திலுள்ள தலைப்புகளுக்குள்ளே ஆயிரம் ஆயிரம் படைப்புகள். அவை கீழ்கண்டவாறு உள்ளன.
• முகப்பு, • அரசியல், • இலக்கியம், • சிறுகதை, • கவிதை, • அறிவியல், • உலக இலக்கியம்,• சுற்றுச் சூழல், • நிகழ்வுகள் , • கலை, • நேர்காணல், • இ(அ)க்கரையில், • நலந்தானா? நலந்தானா?, • இணையத்தள அறிமுகம், • மதிப்புரை• பிற இணைய இணைப்புகள், • சினிமா, • பதிவுகள் (2000 – 2011), • வெங்கட் சாமிநாதன், • K.S.Sivakumaran Column, • அறிஞர் அ.ந.கந்தசாமி, • கட்டடக்கலை / நகர அமைப்பு, • வாசகர் கடிதங்கள், • பதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் ,, • நலந்தானா? நலந்தானா?, • வ.ந.கிரிதரன், • கணித்தமிழ், • பதிவுகளில் அன்று, • சமூகம், • கிடைக்கப் பெற்றோம்!, • விளையாட்டு, • நூல் அறிமுகம், • நாவல், • மின்னூல்கள், • முகநூற் குறிப்புகள், • எழுத்தாளர் முருகபூபதி, • சுப்ரபாரதிமணியன், • சு.குணேஸ்வரன் • யமுனா ராஜேந்திரன், • நுணாவிலூர் கா. விசயரத்தினம், • தேவகாந்தன் பக்கம், • முனைவர் ர. தாரணி, • பயணங்கள் , • ‘கனடிய’ இலக்கியம், • நாகரத்தினம் கிருஷ்ணா, • பிச்சினிக்காடு இளங்கோ, • கலாநிதி நா.சுப்பிரமணியன், • ஆய்வு, • த.சிவபாலு பக்கம், • லதா ராமகிருஷ்ணன், • குரு அரவிந்தன், • சத்யானந்தன், • வரி விளம்பரங்கள், • ‘பதிவுகள்’ விளம்பரம் • மரண அறிவித்தல்கள், • பதிப்பங்கள் அறிமுகம், • சிறுவர் இலக்கியம்
பதிவுகள் (2000 – 2011) எனும் பகுதியைச் சொடுக்கினால் இந்த இணைய இதழின் பழைய வடிவத்தையும் அதில் வெளியிடப்பட்ட அனைத்துப் படைப்புக்களையும் காணலாம். ஆய்வுப் பகுதியில் பேராசிரியர்கள் மற்றும் எழுத்தாளர்கள் எழுதும் ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
இத்தளத்தின் மின்னூல்கள் தொகுப்புக் குறித்து அவர்கள் மொழியில் கூறும்பொழுது,
“பதிவுகள் இணைய இதழ், இணையத்தில் வெளியான ஆரம்பகாலத்து இணைய இதழ்களிலொன்று. இதன் முக்கிய நோக்கங்களிலொன்று, இணையத்தில் தமிழ் எழுத்தாளர்கள் தம் படைப்புகளை எழுதுவதைத் தூண்டுவது. அவ்விடயத்தைப் பொறுத்தவரையில் நிச்சயமாக எனக்குத் திருப்தி உண்டு. வளர்ந்த எழுத்தாளர்களிலிருந்து வளரும் எழுத்தாளர்களை வரை பதிவுகள் இணைய இதழுக்குத் தம் ஆக்கங்களை அனுப்பி வைத்தார்கள்; வருகின்றார்கள். அவற்றையெல்லாம் இயலுமானவரையில் முதலில் ஆவணப்படுத்த வேண்டுமென்பதின் விளைவே இணையக் காப்பகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள இம் மின்னூல்கள். உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் ஆர்வத்துடன் பதிவுகள் இணைய இதழுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வருகின்றார்கள். இதுவரை வெளியான பதிவுகள் தொகுப்புகளிலுள்ள படைப்பாளிகள் மற்றும் அவர்கள்தம் படைப்புகளைப் பார்த்தால் புரிந்துகொள்வீர்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியான ஏனைய படைப்புகளும், காலப்போக்கில் மின்னூல்களாக ஆவணப்படுத்தப்படும்”.
இம்முயற்சி தமிழ் இலக்கியத்தின் ஆவணப்படுத்தும் முயற்சியில் ஒரு மாபெரும் முன்னெடுப்பாகும்; பாராட்டப்பட வேண்டியதாகும். உலகத் தமிழ் எழுத்தாளர்களின் இலக்கியம் படிக்க வேண்டுமானால் இந்தச் சொடுக்கியைச் சொடுக்கிப் படிக்கவும். https://www.geotamil.com
பாரதிசந்திரன் ( முனைவர் செ சு நா சந்திரசேகரன் )
9283275782
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.