அனைவரையும் நினைவு கூருவோம்!
ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டம் ஆயுதமயமாகியபோது , களத்தில் பல விடுதலை அமைப்புகள் தமிழீழ விடுதலைப்புலிகள், தமீழீழ மக்கள் விடுதலைக்கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழப்புரட்சிகர மாணவர் இயக்கம் ஆகிய பிரதான விடுதலை அமைப்புகளுடன் மேலும் பல விடுதலை அமைப்புகள் (அளவில் சிறிய) குதித்தன. விடுதலை அமைப்புகளுக்கிடையில் நிலவிய உள் முரண்பாடுகள் அமைப்புகளுக்கிடையில் ஆயுத மோதல்களை உருவாக்கின. அதே சமயம் பல்வேறு அமைப்புகளும் காலத்துக்காலம் பல்வேறு மனித உரிமை மீறல்களைப்புரிந்துள்ளன. பல்வேறு அரசியற் தவறுகளைப்புரிந்துள்ளன. ஆனால் இவையெல்லாவற்றையும் மீறி விடுதலை அமைப்புகளில் இணைந்த அனைவரும் (ஆண்கள், பெண்கள்) மக்களின் மேல் திணிக்கப்பட்ட அடக்குமுறைகளுக்கெதிராக, உணர்வுபூர்வமாகப்போராடப்புறப்பட்டவர்கள். அடிமையிருளில் அல்லல்பட்டுக்கொண்டிருந்த மக்களுக்காகத் தம் உயிரைக்கொடுக்கத்துணிந்து, போராடுவதற்காகத் தம் வாழ்வை அர்ப்பணித்தவர்கள். போராட்டத்தில் போராளிகள், பொதுமக்கள், மற்றும் பல்வேறு முரண்பாடுகள் காரணமாகப்படுகொலை செய்யப்பட்டவர்கள் என மரணித்த அனைவரையும் நினைவு கூர்வோம்.

17 ஜூலை 2015 - பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது? தமிழ் சிவில் சமூக அமையம் தமிழ் வாக்காளர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்.
உலகத் தமிழர் பேரவை இலங்கையில் வாழும் தமிழ்மக்களையும் ஏனைய குடிமக்களையும் எதிர்வரும் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் விழிப்புடன் வாக்களித்து தங்களது வரலாற்றுக் கடமையை செய்ய வேண்டும் என ஆணித்தரமாகக் கேட்டுக் கொள்கிறது. அப்படி வாக்களிப்பதன் மூலம் அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள முற்போக்கான மாற்றங்களையும் வெற்றிகளையும் வலுப்படுத்த முடியும்.
முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் சாட்சிகளாகத்திகழும் காணொளிகளை, புகைப்படங்களை எடுத்து வெளியுலகுக்குத் தந்தவர்கள் சிறிலங்காப்படையிலிருந்த சிங்களவர்கள்தாம். அதுபோல் 1983 இல் நடைபெற்ற தமிழர்களுக்கெதிராக நடைபெற்ற இனக்கலவரத்தை ஞாபகப்படுத்தும் குறியீடாக விளங்குவது பொரளையில் காடையர்கள் முன் நிர்வாணமாக்கப்பட்டுக்கொல்லப்பட்ட தமிழரின் புகைப்படம். ஆடிப்பாடிக்கொண்டிருக்கும் இரத்தவெறி பிடித்த காடையர்கள் முன் , நிர்வாணமாகக்கூனிக்குறுகி நிற்கும் அந்தத்தமிழரின் நிலை ஈழத்தமிழரின் நிலையை எடுத்தியம்பும் ஒரு குறியீடு. அந்தப் புகைப்படத்தினை எடுத்தவரும் ஒரு சிங்களவரே சந்திரகுப்த அமரசிங்க என்னும் பெயரினைக்கொண்ட அவர் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் 'அத்த' நாளிதழில் பணியாற்றிய பத்திரிகையாளர்களில் ஒருவர். 24.07.1983 அதிகாலையில் பொரளை சந்திக்கண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது.



‘நேற்றிருந்தார் இன்றில்லை’ என்பது கனடிய தமிழர்களுக்காகத்தான் சொல்லப்பட்டதோ தெரியவில்லை. இந்த மண்ணில் மாரடைப்பு என்ற சொல்லைக் கேட்டாலே பயமூட்டுவாதாகவும், அதிர்ச்சி தருவதாகவும் இருக்கின்றது. கனடியத் தமிழர்களால் நன்கு அறியப்பட்ட நண்பர் பொன்னம்பலம் குகதாசனின் மறைவு இதைத்தான் இன்று எங்களுக்குச் சொல்லி நிற்கின்றது. நண்பர் பொன்னம்பலம் குகதாசன் பழகுவதற்கு இனிமையானவர். பூநகரான் என்ற பெயரில் ரி.வி.ஐ யின் செய்திக் கண்ணோட்டம் நிகழ்ச்சியில் பல தடவை அவரது பங்களிப்பைப் பார்த்திருக்கின்றேன். சி.எம். ஆர் வானொலியிலும் இவர் குரலைக் கேட்டிருக்கின்றேன். உதயன் பத்திரிகையில் இவரது கட்டுரைகளை வாசித்திருக்கின்றேன். இலக்கிய நிகழ்ச்சிகளிலும் சந்தித்திருக்கின்றேன். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவுடன் அவரது ‘வாலிவதை’ என்ற நூல் சமீபத்தில் கனடா கந்தசுவாமி கோயிலில் வெளியிடப்பட்டது. கலாநிதி எஸ். சிவநாயகமூர்த்தியின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பச்சையப்பன் கல்லூரி முன்னால் முதல்வர் பேராசிரியர் மு.பி. பாலசுப்ரமணியன் அவர்களும் விசேட அதிதியாக வந்திருந்து உரையாற்றினார். கனடா தமிழ் எழுதத்hளர் இணையத்தின் சார்பில் உபதலைவர் என்ற வகையில் நானும் உரையாற்றியிருந்தேன். அவருடன் உரையாட அப்போது சந்தர்ப்பம் கிடைத்தது. அதுவே அவருடனான கடைசி உரையாடலாகவும் இருந்துவிட்டது.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









