ஜேவிபி'யினரின் அரசுகெதிரான 1971 புரட்சியின் போது கதிர்காமம் அவர்களின் முக்கியதொரு கோட்டையாக விளங்கியது. அங்கு புரட்சியாளர்களை அடக்கிய இலங்கை அரச படையினர் ஆண்கள், பெண்களென்று பலரைக் கைது செய்தார்கள். அவர்களில் பிரேமவதி மனம்பெரியும் ஒருவர்.

இரவு முழுவதும் தடுப்புக்காவலில் அவரைப்பலமாகச் சித்திரவதைக்குட்படுத்தினர். அவரிடமிருந்து எவ்விதமான தகவல்களையும் பெற முடியாத நிலையில் ஆத்திரமுற்ற உயர் இராணுவ அதிகாரி அவரை நகரத்தெருக்களினூடு நிர்வாணமாக்கி நடக்க வைத்தார். அவ்விதம் செல்லும்போது இன்னுமோர் அதிகாரி அவரைப்பலமாகத் தாக்கினார். இறுதியில் தபால் நிலையமருகில் அவரைச்சுட்டு உயிருடன் புதைகுழிக்குள் விட்டுச் சென்றனர். பின் மீண்டும் இரு தடவைகள் வந்து அவரைச் சுட்டுக் கொன்றனர். பிரேமவதி மனம்பெரிக்கு அப்பொழுது வயது 22.

அவரைக்கொன்ற இராணுவ அதிகாரிகளான விஜேசூரியா, அமரதாச ரட்னாயக்க ஆகியோர் நீதி விசாரணைக்குட்படுத்தப்பட்டு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றனர். இவர்களில் விஜேசூரியாவை 1988இல் ஜேவிபியினர் பிரேமவதி  மனம்பெரியைக் கொன்றதற்காகச் சுட்டுக்கொன்றனர். சுடப்பட்டு புதைகுழிக்குள் மரணத்தின் விளிம்பில் இருந்தபோதும் அவர் யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை. யார் மேலும் தனக்குக் கோபமில்லையென்றே கூறியிருக்கின்றார். அந்த மனவலிமை எல்லோருக்கும் வந்து விடாது.

இது பற்றி சரிநிகர் பத்திரிகையில் எழுத்தாளர் சரவணன் எழுதி, பதிவுகள் இணைய இதழில் மீள்பிரசுரம் செய்யப்பட்ட கட்டுரை - https://www.geotamil.com/.../202.../4510-2018-04-20-12-22-50

பிறேமாவதி மனம்பேரி பற்றிய பாடகர் அன்டன் ஜோன்ஸின் பாடல் -  https://www.youtube.com/watch?v=oRQSrTvdnPU


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R