சிறுகதை: ஜெமோவும் சமந்தாவும் .
யாழ்ப்பாணம் .காலை ஏழு மணியளவில் கோண்டாவில் இருபாலை வீதியில் பச்சை பசேல் என்ற தொட்டவெளிக்குள் இருக்கும் அந்த வீட்டின் முற்றத்தில் ஒரு மொட்டார் சயிக்கில் வந்து நிற்கின்றது . முற்றத்தை கூட்டிக்கொண்டிருந்த அபிராமி விளக்குமாற்றை போட்டுவிட்டு வீட்டிக்குள் வந்து ,
“அப்பா ஊரெழு இராசையா மாஸ்டரின் மகன் வந்திருக்கின்றார்" .
நம்பி என்ற பெயர் வாயில் வராமல் இராசையா மாஸ்டரின் மகன் என்று மகள் அவரை அழைப்பது வசந்தனுக்கு தெரியும் .
காலையில் சனம் வந்து வரிசையில் குவிய முதல் போனால் தான் நல்ல ஆட்டு இறைச்சி வாங்கலாம் என்று வெளிக்கிட்டுகொண்டிருந்த வசந்தன் "என்ன இந்த நேரம் நம்பி வந்திருக்கின்றான் " என்று மனதில் நினைத்தபடி வெளியே வருகின்றான் .
“நம்பி ,என்னடா இந்த நேரம் ? “
“உமா மகேஸ்வரன் எல்லோ ராத்திரி செத்துபோனார் "
“அட, சுகமில்லாமல் இருக்கின்றார் என்று போன மாதம் போய் ஆளைப்பார்த்தேன் , கொஞ்ச நாளாக வருத்தமாகத்தான் இருந்தார்"
“நான் உனக்கு தெரிஞ்சிருக்கும் என்று நினைச்சன் .பின்னேரம் என்ரை வீட்டை வா, ஒண்டடியாக தெல்லிப்பழைக்கு போகலாம் "
“உனக்கு எப்ப நியுஸ் வந்தது "
“தம்பி போன் பண்ணினவன் .அரச மரியாதையுடன் அடக்கம் செய்யும் பிளான் இருக்காம்.பிரபாவையும் கூட்டிக்கொண்டு வாறாராம்"
“உன்ரை தம்பிக்குத்தான் அவரை பிடிக்காதே ,இப்ப மாகாண முதல்வர் எண்டபடியால் அரச மரியாதை செய்ய போறார் போல"
“ஓமடாப்பா , சும்மா பழைய கதைகளை இப்ப கிளறாமல் அஞ்சு மணிபோல வா , பார்த்துக்கொண்டு நிற்பன் என்ன "

- இந்த கதை போர்ஹேவின் அல்முட்டாசின் ஒர் அணுகுமுறை எனும் சிறுகதையின் வடிவத்தை தழுவி எழுதப்பட்டது. -
காலாண்டிற்கு ஒரு தடவை ஜப்பானில் இருந்து எமது தொழிற்சாலைக்கு வரும் ‘வர்ணமும் கடதாசியும்’ (Paint & Paper) என்ற துண்டுப்பிரசுரத்தில் இருந்த அந்தச் செய்தி என்னைத் திகைப்படையச் செய்தது.



நான் அந்த விடுதிக்கு வந்து சில மாதங்கள் இருக்கும்.இன்னும் இந்த முப்பது நாட்களை கடந்தால் ஒரு வருடம் ஆகிவிடும்.நான் புதுவருடத்தை எதிர்நோக்கி காத்து கொண்டிருந்தேன்.
நவீன முறையில் ஈமச்சடங்குகளை முடித்துவிட்டு அலுவலக நண்பர்களுக்கு நன்றி கூறியபின் இரவு நேரத்தில் வீடு திரும்பிய அவனை நாம் ‘அச்சா’வென்று அழைக்கலாம்.என்ன காரணமெனில் நகரத்திலுள்ள மூன்று குழந்தைகளுக்குத்தான் அவனது மதிப்புத்தெரியும். அந்தக்குழந்தைகள் அவனை ‘அச்சா’வென்று அழைப்பார்கள். பஸ்ஸில் அறிமுகமாகாத புதியவர்கள் மத்தியில் அமர்ந்துகொண்டு அவன் அந்த நாளின் ஒவ்வொரு கணத்தினூடாகவும் பயணித்தான். அந்நாளின் ஒவ்வொரு நிகழ்வையும் நினைத்துப்பார்த்தான்.காலை நேரத்தில் எழுந்ததிலிருந்தே அவளது குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. “உன்னி அப்படியே படுக்கையில் உருண்டுகிட்டே இருக்க முடியுமா? இன்னிக்கு திங்கட்கிழமை இல்ல?” அவள் அவளது மூத்த மகனை எழுப்ப முயன்றாள். அழுக்குப்படிந்து கசங்கிய வெள்ளைச்சேலையைக் கட்டிக்கொண்டு சமையலறையில் வேலையைத்தொடங்கினாள். ஒரு பெரிய கப்பில் அவனுக்குக் காபி கொண்டுவந்தாள். அதன் பின்... என்னவெல்லாம் நடந்தது.மறக்கவே முடியாத சொற்களை ஏதாவது அவள் பேசினாளா?.எவ்வளவுதான் நினைவுக்குக் கொண்டு வந்தாலும் அதன் பின் அவள் சொன்னதாக எதுவும் நினைவில்லை.அந்த வார்த்தைகள் தான் எண்ணத்தில் அலைமோதுகின்றன. “உன்னி அப்படியே படுக்கையில் உருண்டுகிட்டே இருக்க முடியுமா? இன்னிக்கு திங்கட்கிழமை இல்ல?” அவன் அந்த வாக்கியத்தை ஒரு மந்திரத்தைப்போல உச்சரித்தான். அந்த வார்த்தைகளை மறந்துவிட்டால் அவனது இழப்பு திடீரென விஸ்வரூபம் எடுத்து தாங்க முடியாததாகிவிடும். அலுவலகம் கிளம்பும்போது குழந்தைகளும் அவனுடன் வந்தார்கள். குழந்தைகளுக்குப் பள்ளியில் சாப்பிட உணவு தயாரித்துக் கொடுத்திருந்தாள் அவள். அவளது வலதுகரத்தில் குங்குமப்பூத் துகள்கள் எஞ்சியிருந்தன. அதன்பின் அலுவலகத்தில் ஒருமுறைகூட அவளை நினைக்கவில்லை.
அவளுடைய அந்தச் சிரிப்பில் ஏதோ ஒரு வித கவர்ச்சி இருந்ததென்னவோ உண்மைதான், ஆனால் அது என்னை ஒரு கணம் நிலை குலைய வைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் என்னை மறந்து அவளைப் பார்த்தேன். அவளோ ஒரு கண்ணசைவோடு என்னைக் கடந்து மெதுவாகச் சென்றாள். அதுவே எனக்குள் ஏதோ நுழைந்து விட்ட உணர்வை ஏற்படுத்தி என்னைக் குளிரவைத்தது. அவள் என்னை அசட்டை செய்தாளா அல்லது என்னை ஏங்க வைத்தாளா என்பது அப்போது எனக்குப் புரியவில்லை. வீட்டிற்கு வந்து படுக்கைக்குச் சென்ற போதும் அவள் நிiவாகவே இருந்தது. அவளது புன்னகையும், கண்ணசைவும் அடிக்கடி மனக்கண் முன்னே வந்து போனது. அந்தக் கணம்தான் அவள் நினைவாக என்னை ஏங்க வைத்திருக்கிறாள் என்பது புரிந்தது. 
எழுத்தாளர் பற்றி: பெஸீ ஹெட் Bessie Head

- ஈழத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக குடும்பத் தலைவனை இழந்து நிர்க்கதியாய் இருப்பவர்களுக்கு உதவும் நல்ல நோக்கத்தோடு செயற்படும் அன்பு நெறிக்காகப் புனையப்பட்ட சிறுகதை -
ஜெயந்தி சங்கர் 20 ஆண்டுகளாக எழுதுகிறார். 7 சிறுகதைத் தொகுப்புகள், 5 நாவல்கள் உள்ளிட்ட 27 நூல்கள் எழுதியுள்ளார். ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது, கரிகாலன் விருது, கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு, ncbh தனுஷ்கோடி ராமசாமி நினைவுப் பரிசு, திருப்பூர் வெற்றிப்பேரவைப் பரிசு,திருப்பூர் அரிமா மு.ஜீவானந்தம் இலக்கியப் பரிசு கு. சின்னப்ப பாரதி இலக்கிய விருது, நல்லி - திசையெட்டும் (மொழியாக்க) இலக்கிய விருது, அரிமா சக்தி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 'பின் சீட்', 'திரைகடலோடி', 'முகப்புத்தகமும் சில அகப்பக்கங்களும்', ஆகிய மூன்று சிறுகதைத் தொகுப்புகள் முறையே 2008, 2010, 2014 ஆகிய ஆண்டுகளில் சிங்கப்பூர் (short list) இலக்கிய விருதுக்குத் தேர்வாகின. ஆங்கிலத்தில் இவர் எழுதிய ‘Read Singapore’ என்ற சிறுகதை ‘Best New Singaporean Short Stories – volume 1 தொகுப்பில் இடம் பெற்றதுடன், ரஷ்யமொழியாக்கமும் செய்யப் பெற்று To Go To S'pore. Contemporary Writing from Singapore. தொகுப்பு நூலில் இடம் பெற்றது . தற்போது தமிழ் முரசில் உதவி ஆசிரியராகப் பணிபுரிகிறார். சூழலையும் சமூகத்தையும் துருவி ஆராய்ந்து எளிய நிகழ்வுகளை வாழ்வனுபவமாகச் சிருஷ்டிக்கும் இவரது ஆற்றலானது உலகளாவிய தமிழிலக்கியப் பெருந்திரையில் இவருக்கென்றொரு நிரந்தர இடத்தைப் பொறித்து வருகிறது. தனது வாழ்விட நிகழ்வுகள், நிலப்பரப்பு, பண்பாடு, சமூகம் ஆகியவற்றைச் சிறுகதைகளாகவும் நெடும் புனைவுகளாகவும் எழுதி அவற்றை உலக அனுபவங்களாக்குவதே இவரது எழுத்தின் வெற்றி. சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட எளிய எதார்த்த நடைக்காக நன்கு அறியப் பெறும் இவரது சிறுகதைகள் பல்வேறு தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளன. இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஸ்ரீலங்கா, மலேசியா போன்ற நாடுகளில் எண்ணற்ற சிறுகதைகள் கட்டுரைகள் பிரசுரமாகி பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன
சொந்தமென்றும், உறவென்றும், இலக்கியமென்றும், கலையுலகென்றும் மறைந்துகொண்டிருப்போரின் நினைவுகள் மனதைப் பம்பரமாக்கி, காலம் என்ற ககன வெளியில் சிதைத்தெறியும் துயரில் நான். நிம்மதி தேடி அலைகிறது மனம். நிற்பதுவும் நடப்பதுவும் வெறும் தோற்ற மயக்கங்களோ என்று சிந்தனை சிலிர்க்கிறது. வீட்டில் நடந்துபோன துயர் அனுபவங்களும் மேலும் துயர் சோபையைக் கூட்டுகிறது. ஏன் சிந்தனை அலையைக் குறிக்கிட்டு தொலைபேசி அழைப்பு அலறிக்கொண்டிருக்கிறது. மீண்டும் நிதர்சன உலகில் நான். இன்னுமொரு தொலைபேசி அழைப்பு. ஒரே கதையைத் திரும்பத் திரும்ப சொல்லப்போகும் அழைப்பு மணி அது. இன்னுமொரு திகிலில் கதையைக் கொண்டு சேர்க்கப் போகிறதா அந்த அழைப்பு மணி. அழைக்காத விருந்தாளியாக ஒலிக்கிறது அந்த அழைப்பு மணி. அழைப்பிற்கு பதில் சொல்லாமல் விடலாமோ என்று நினைத்தேன். அது நாகரீகமில்லை என்று மனதில் பட்டது.
எமது 15 வருஷ கனடியவாழ்வின் அருஞ்சேமிப்பில் இந்தவீட்டை நோபிள் ரியல் எஸ்டேட்ஸ் என்கிற ஒரு குழுமத்தின் அனுசரணையுடன்தான் வாங்கினோம். இங்கே வீடுகளைவாங்கும் தமிழர்கள் அநேகமாகச் செய்வதைப்போலவே நாங்களும் இவ்வீட்டை நிலவறைகள் உள்ள வீடாகத்தேர்வுசெய்தோம். ஆனாலொன்று எப்படி ஒரு அடுக்ககத்தின் உச்சிமாடத்தில் கூரைமுகடுகளுக்குள் அமைந்த வீடுகளை குடியிருப்பாளர்கள் தவிர்த்துக்கொள்வார்களோ, அதேபோல் இந்த நிலங்கீழமைந்த வீடுகளும் குடியிருப்பாளர்களின் முதல் விருப்புக்குரியவையல்ல. நிலங்கீழ்வீட்டையும் யாருக்காவது வாடகைக்கு விட்டால் அவர்கள் தரக்கூடிய வாடகையும் எமது மாதாந்த தவணைத்தொகையைச் செலுத்துவதற்கு உதவும் என்பதே இவ்வீட்டைத் தேர்வுசெய்ததின் சூக்குமம். நிலவறைகள் என்றால் நீங்கள் கிட்டங்கி மாதிரிகளையோ, அலுவலகங்களில் இருக்கும் பொருட்களை வைப்பதற்கான களஞ்சியவறைகளையோ உருவகப்படுத்திவிடக்கூடாது. அவையும் வதியுமறை, படுக்கையறை, குளிப்பறை, கழிப்பறை எல்லாவற்றுடனும்கூடியதும் மானுஷர் வதிவதற்கேற்றமான (பேஸ்மென்ட்ஸ்) மனைகள்தான்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









