சிறுகதை: கலைமகள் கைப் பொருளே..!
தேடல் ஆண்டு விழாக் கூட்டத்தில்,எதிர்பாராமல் அவனோடு படித்த சந்திரனை பல வருசங்களுக்குப் பிறகுச் சந்தித்தான். மனம் உவகை கொள்கிறது."எப்படியப்பா இருக்கிறாய்?"இந்த இடைவெளியில், இலக்கியவாதியாய் மாறியிருக்கிறான்.பத்திரிகைகளில் அவன் கட்டுரைகளை ...வாசிக்கிறவன் தான்.வானொலிகளில் கூட சில்லையூர் செல்வராசன் போன்ற குரலுடன் நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கிறான். கோபாலுடைய அம்மா அவனுடைய ரசிகை.இதைப் போல குலத்திட அம்மாவும் தன்னுடைய 'ரசிகை''என்று சொன்னதாகச் சொன்னான். ‘கண்ணுக்குத் தெரியாத ஒரு பாலம் கட்டப்படுறதில் ஒரு பெருமிதம் தெரிந்தது. புலம்பெயர் நாடுகளில் எல்லாரையும் எல்லாரும் சந்தித்துக் கொண்டா… இருக்கிறார்கள். அதற்கும் என்று ஒரு நேரம் வர வேண்டியிருக்கிறது.
"உனக்குத் தெரியுமா?எங்கட வகுப்புத் தோழர்கள் ...வருசா வருசம் ஒரு நாள் சந்திக்கிறவர்கள்.இந்த முறை குணா தீடீரென கார்ட்டடாக் வந்து செத்துப் போனதால் தள்ளி வைத்திருக்கிறார்கள் "என்றான். ‘



தன்னுடைய மனைவியோடும், குழந்தையோடும் அவன் அந்த மலை வெப்ப நீரூற்றுக்கு வந்துசேர்ந் திருந்தான். அது ஒரு பிரபல வெப்ப நீரூற்று. மனிதர்களிடம் பாலுணர்வையும் பிள்ளைப்பேற்றுத் திறனையும் பெருக்குவதாகக் கூறப்பட்டது. அதன் ஊற்று அசாதாரண வெப்பம் வாய்க்கப் பெற்றிருந்தது. எனவே, அது பெண்களுக்கு நிச்சயம் நல்லது செய்யும் என்பதில் சந்தேகமில்லை. அதோடு கூட, அருகாமையிலிருந்த குறிப்பிட்ட தேவதாரு மரமொன்றும், பாறையொன்றும் அங்கு வந்து குளிப்பவர்களுக்குக் குழந்தைப் பேற்றைத் தரும் என்ற மூடநம்பிக்கையும் அங்கு நிலவி வந்தது.
விடிந்தால் புது வருடம். நாளை பிறக்க விருக்கும் இரண்டாயிரத்து நாற்பத்தி இரண்டாம் ஆண்டைவரவேற்று எல்லா இணையத்தளங்களும் செய்திகளை வெளியிட்டுக் கொண்டு கொண்டிருந்தன. சலசலப்புத்தமிழ் இணையம் வேல்அன்பனது கதையொன்று இரண்டாயிரத்து நாற்பத்தி இரண்டாம் ஆண்டு புது வருச சிறப்பு மலரில் வருகின்றது என பரபரப்பு செய்தி வெளியிட்டிருந்தது. இதுதான் வேல்அன்பன் கடைசியாக தமிழ் மீடியாக்கு அனுப்பிய படைப்பு என கட்டம் போட்டுச் செய்தி வெளியிட்டது. கடந்த ஒருவாரமாக தமிழ் ஊடகங்களில் மெதுவாக வந்த கசிந்த செய்தி இப்போது காட்டுத்தீயைப் போன்று எல்லா இணையத்திலும் பரவியுள்ளது. ஒருவாரமாக வேல்அன்பனைக் காணவில்லை. அவரை எந்த மீடியாவாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. வழமையாக அவர் தொடர்பு கொள்ளும் முக்கிய சில மீடியாக்களும் அவர் ஓரு வாரமாக தம்முடன் தொடர்பு கொள்ளவில்லை என அறிவித்துள்ளன. அதைவிட அவர் தனது சொந்த இணையத்தளத்தில் தினசரி பதிவேற்றம் செய்வார். அதிலும் ஒரு வாரமாக எதுவும் பதிவேறவில்லை.
தூங்கிக் கொண்டிருந்த அவரது பருத்த வயிற்றின் மேல் யாரோ ஏறி அமர்ந்துகொண்டார்கள். இரு கைகளையும் மாற்றி மாற்றி நெஞ்சில் ஓங்கிக் குத்தினார்கள். கனவில் வந்திருந்த குதிரைப்படைகள் அடி தாங்காது அலறித் திசைக்கொன்றாகத் தெறித்தோடின. புலனுணர்ந்து பதறித் துடித்து விழித்துப் பார்த்தபொழுது மகன் வயிற்றுப்பேரன் அவர் வயிற்றிலமர்ந்து தன் இரண்டரை வயதுப் பிஞ்சுக் கைகளால் அவரது நெஞ்சில் குத்திக் கொண்டிருந்தான். 'அச்சு அச்சு' எனத் தன் அக்காவைப் பற்றி ஏதோ குற்றம் சொல்லவிழைந்தான்.
இது எமது தபால்பெட்டிக்கு வந்திருந்த நாலாவது அநாமதேயக் கடிதம். கடந்த இரண்டு வாரங்களில் இதேமாதிரியான மூன்று கடிதங்கள் வந்திருந்தன. "I buy houses, gas or no gas, call Tim." - கடிதத்தில் இருந்தது இவ்வளவுந்தான். இதுபோன்ற கடிதங்கள் இனிமேலும் வரலாம். யார் இந்த ரிம்? இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அந்தக்கடிதங்களை எடுத்துக் கொண்டு ரவுனிற்குப் போனேன். ரவுன் எனது வீட்டிலிருந்து பத்துநிமிடங்கள் கார் ஓடும் தூரத்தில் உள்ளது. றியல் எஸ்டேட் (Real Estate) திறந்திருக்கக்கூடும். நகரம் கேளிக்கையில் நிரம்பி வழிகின்றது. மேர்க்கியூரி ஹோட்டலின் கோலாகலமான வெளிச்சத்தில் மனிதர்களின் நடமாட்டம் தெரிகிறது. சாப்பாட்டுக் கடைகளிற்குள் மக்கள் நிதானமாகவிருந்து சாப்பிட்டுக் கொண்டும் மது அருந்திக் கொண்டும் இருக்கின்றார்கள். கிளப்பிலிருந்து ஜாஸ் மிதந்து வருகிறது. மூடப்பட்டிருந்த றியல் எஸ்டேட் கடையின் கண்ணாடிக்குள்ளால் தெரியும் விளம்பரங்களைப் பார்த்து சத்தமிட்டுக் கதைத்தபடி சிலர் நிற்கின்றார்கள். அவர்கள் சண்டையை ஆரம்பிப்பதற்கு முன்னதாக நான் திரும்பிக் கொண்டேன். இந்த விஷயத்தை அப்பா ஒருமாதத்திற்கு முன்பாகவே அறிந்து கொண்டார் என்றுதான் நினைக்கின்றேன். அன்று...
[ பிரபல முற்போக்கு எழுத்தாளர் அமரர் எஸ். அகஸ்தியரின் 19 ஆவது ஆண்டு நினைவையொட்டி - 08.12.2014 - அவரது ‘எவளுக்கும் தாயாக’ என்ற நூலிலிருந்து இச்சிறுகதை பிரசுரமாகிறது. - பதிவுகள்-]
அம்மா தனித்துப் போயிருந்தாள். இடம் பெயர்ந்தபோது பக்கத்து வீட்டு பரிமளம் அன்ரியுடன்தான் அம்மாவும் சென்றதாகச் சொன்னார்கள். பரிமளம் அன்ரிக்கு அம்மா மீது ஒரு வகை பாசம் இருந்தது. அவர்கள் கடைசியாகச் சாவகச்சேரியில் தங்கியிருந்ததாக எனக்குத் தகவல் கிடைத்தது. அப்படி என்றால் சாவகச்சேரி வரைக்கும் அம்மா நடந்துதான் போயிருப்பாளா? விமானக் குண்டு வீச்சு, ஷெல் தாக்குதல் என்று தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்த போது தான் அம்மா காணாமல் போயிருந்தாள். உறவுகளைப் பிரிந்து திக்குத் திக்காய் எல்லோரும் ஓடிப்போயிருந்தனர். தெரிந்த இடமெல்லாம் அம்மாவைத் தேடிப் பார்க்கச் சொல்லியிருந்தேன். யாராவது வயது போன பெண்கள் அனாதையாக இறந்து போயிருந்தால் கூட அவர்களைப் பற்றி எல்லாம் விசாரித்திருந்தேன். கனடாவில் இருந்து கொண்டு பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கப்பால் இருக்கும் எனது நாட்டில் அம்மாவைத் தேடுவதென்பது இலகுவான காரியமாக இருக்கவில்லை.
பலத்த காற்று வீசும்போதே ஈரப்பதத்தையும் சேர்த்தே வீசியது கண் சிமிட்டும் நேரத்துக்குள் சடசடவென்று மழை பிடித்துக்கொண்டது.திசை மறித்த இக்கட்டின் சீற்றமாய் அலறிக்கொண்டு வந்த மழையைத் துளைத்துக்கொண்டே மழையோடு மழையாய் வேக வேகமாக நடக்கும்போதே குடை சரிந்து சாய்ந்தது. ஆவேசத்தோடு குடையைத் துக்கி எறிந்த ராமலிங்கம் இன்னும் துரிதமாக நடையைப் போட்டான். ஒரு டேக்சியை நிறுத்தத் தோன்றவில்லை. டேக்சியில் ஏறினால் பத்தே நிமிடங்களில் போய்விடலாம் தான். ஆனால் திமிறத்திமிற முகத்தில் வந்து விழும் மழை நீரோடு ,கண்ணிலிருந்து விழுந்த உப்புநீரும் சட்டையை நனைக்க, ராமலிங்கம் வெறி பிடித்தாற்போல் நடந்து கொண்டிருந்தான். அலமலந்து சொல்லிக்கொள்ள வாய்விட்டு ஆற்றிக் கொள்ள ஒருபற்றுக்கோடு கூட இல்லாமல், காற்றை இரண்டு கைகளாலும் அளைந்து வீசிக்கொண்டே, ஏய், என்று ஓங்கிக் கத்தினான். எரி நட்சத்திரமொன்று, இருள் கிழித்த ஒளியாய் பளீரென்று, மின்னலும் இடியுமாய் கிடுகிடுக்க வானம் ஓவென்று கிழிந்து ஊற்றியது.அவள் மட்டும் இப்போது எதிரில் இருந்தால் அப்படியே அந்த இடுப்பிலேயே ஓங்கி மிதிக்க வேண்டும் போல் சண்டாளமாய் வந்தது கோபம்
மு.வெங்கடசுப்ரமணியன் 10.05.1956இல் பிறந்தவர். பிறக்கும்போதே ஒரு கண்ணில் மட்டுமே பார்வைத்திறன் கொண்டவராய் பிறந்தவர் பின் படிப்படியாக அடுத்த கண்ணிலும் பார்வையை இழந்துவந்தார். ‘ரெட்டினிட்டிஸ் பிக்மெண்ட்டோஸா’ எனப்படும் விழித்திரை பாதிப்பின் காரணமாக, மறு கண்ணிலும் முழுமையாக பார்வை பறிபோயிற்று.அப்பொழுது அவருக்கு வயது பதிமூன்று. மற்றவர்களின் உதவியையே எதிர்பார்த்துக்கொண்டிராமல் சுயமாக வாழ வேண்டும் என்ற ஆர்வமும், உறுதியும் அந்த இளம் வயதிலேயே வெங்கடசுப்பிரமணியனின் மனதில் ஆழமாக வேரூன்றிவிட்டன. குடும்பத் தாரின் ஊக்கமும், ஒத்துழைப்பும் அவருக்கு இருந்தது. தாயார் நாளேடுகள் முதல் இதிகாசங்கள் வரை படித்துக்காண்பிப்பாராம். தந்தை ஆங்கிலம் போதித்தார். உடன்பிறந்தவர்களும் இவருக்கு இப்போதுமே பக்கபலமாக இருந்துவந்தனர். 1986ஆம் வருடம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட திருவை யாறு அரசர் தமிழ் மற்றும் இசைக்கல்லூரியில் மிருதங்கம் பட்டயப் படிப்பில், விதிவிலக்கின் அடிப்படையில் தனது 29ஆம் வயதில் சேர்ந்தார் வெங்கடசுப்பிர மணியன். இவர் ஒருவர் தான் மாணாக்கர்களில் பார்வையிழந்தவர். ஆரம்பத்தில் இவரை ஒருமாதிரிப் பார்த்த சக மாணவர்கள் நாளாக ஆக இவரை மூத்த சகோதரனைப்போல் நடத்தத் தொடங்கினார்கள். அவர்கள் 8ஆம் வகுப்பு படித்தவர்களே. ஆனால், அவர்கள் வெங்கடசுப்ரமணியனின் கல்வி தொடர பெரிதும் உதவினார்கள். அவருக்கு ஆர்வமாகப் படித்துக்காட்டினார்கள். பள்ளிக் கல்வியையும் முடித்தார் வெங்கடசுப்ரமணியன். மிருதங்கம் கற்கத் தொடங்கியவர் இறுதியில் இந்திய இசையில் கீழ்/மேல் நிலைகளில் தேறினார். 1991இல் டி.டி.ஸி முடித்தார்(இசையாசிரியர் பயிற்சி). 1995இல் வெங்கடசுப்ரமணியனின் மனைவியாக மனம்விரும்பி முன்வந்தவர் சூரியா. பார்வையுள்ளவர். இன்றளவும் வெங்கடசுபரமணியத்தின் வலதுகர மாகத் திகழ்ந்துவருகிறார்!

ஆண் இளைஞனாக இருக்கும் காலத்தில் தனது காமத்தின் வீரியத்தால் தனக்குரிய பெண்ணை வசப்படுத்தி வைத்திருக்கலாம் என நினைக்கிறான். மத்திய வயதில் பணத்தால் அது முடியும் என மனம் சொல்லுகிறது வயதான காலத்தில் பிள்ளைகள், குடும்பம் என்பன பெண்களை கட்டுக்குள் வைத்திருக்கும் என அவன் தீர்மானிக்கிறான். இப்படியான ஆண்களின் சிந்தனையைத் தாண்டிச்செல்லும்; அன்னா கரினாக்கள் ரஷ்யாவில் மட்டுமல்ல இலங்கையின் ஒவ்வொரு கிராமங்களிலும் இருக்கிறார்கள். என்பதை புரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு எண்பதாம் ஆண்டுகளில் கிடைத்தது. அந்த அனுபவம் மிகவும் வித்தியாசமானது. மருத்துவர்களுக்கு மட்டுமே இறந்த மனிதர்களின் உடலை வெட்டி உள்ளுறுப்புகளை கூறாக்கி பார்க்கும் அனுபவம் கிடைக்கும். மற்றவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தாலும் அது மனதிற்கு உவப்பானதாக இருக்காது. பலரால் கண் திறந்து பார்க்கவும் முடியாதது .
கைபேசி ஒலிக்கிறது!

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









