மறக்க முடியாத சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் அவர்கள் (சுந்தர்)! - வ.ந.கிரிதரன் -
- சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரத்தின் நினைவு தினம் மார்ச் 3 -
இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் நகைச்சுவை என்றால் முதலில் நினைவுக்கு வருவது சிரித்திரன் சஞ்சிகைதான். சிரித்து இரன் என்னும் சொற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சிறப்பான பெயர் மட்டுமல்ல சஞ்சிகையின் நோக்கத்தையும் சிறப்பாகவே வெளிப்படுத்தும் பெயர். யாழ் மாவட்டக் கரவெட்டியைச் சேர்ந்த சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் (சுந்தர்) இந்தியாவுக்குக் கட்டடக்கலை கற்கச் சென்று சிறந்த கேலிச் சித்திரக்காரர்களிலொருவராகத் திரும்பி வந்தார். இந்தியாவில் 'பிளிட்ஸ்', 'கொஞ்ச்' சஞ்சிகைகளில் இவரது கேலிச்சித்திரங்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியாவின் பிரபல கேலிச்சித்திரக் கலைஞர்களாக விளங்கிய ஆர்.கே.லக்ஷ்மண், போல் தாக்கரே ஆகியோருடன் பழகும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.
இலங்கை திரும்பிக் கட்டடத்திணைக்களத்தில் படவரைஞராகப் பணியாற்றியவரைத் தினகரனில் கேலிச்சித்திரங்கள் வரைய அழைத்தவர் பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள். அப்பொழுது இவர் தினகரனில் சுந்தர் என்னும் பெயரில் வரைந்த 'சவாரித்தம்பர்' என்னும் தொடர் கேலிச்சித்திரங்களை மறக்கவே முடியாது. அவரது ஊரான கரவெட்டியில் வாழ்ந்த, அவருக்கு அறிமுகமான ஒருவரை ஆதர்சனமாகக்கொண்டே அவர் அப்பாத்திரத்தை உருவாக்கியதாக ஊடகக்கட்டுரைகள் வாயிலாக அறிந்துள்ளேன். அத்தொடரில் வரும் சின்னக்குட்டி, பாறி மாமி பாத்திரங்களும் கரவேட்டியில் வாழ்ந்தவர்கள் என்றும் அக்கட்டுரைகள் வாயிலாக அறிந்துள்ளேன். பின்னர் அவர் 1963இல் சிரித்திரன் சஞ்சிகையை கொழும்பில் ஆரம்பித்ததும், அதன் பின் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிட்டதும் யாவரும் அறிந்ததே.

மதுரை மாவட்டம் வைகை ஆற்றின் கரையிலிருந்து வடக்கே 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கீழடி. மத்திய தொல்லியல் துறையின் பெங்களூரு பிரிவைச் சேர்ந்தவர்கள் 2014 தொடங்கி 2017 வரையில் மூன்று கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டனர். பலவகை அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் அவை திராவிடப் பண்பாட்டை மேலும் செழுமைப்படுத்துவதாக இருந்தமையால் இவ்வாய்வு மேலும் தொடர பலத் தடைகள் உருவாக்கப்பட்டன. இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாடு தொல்லியல் துறை இதைக் கையில் எடுத்து 2017 இல் தனது நான்காவது கட்ட ஆய்வை மேற்கொண்டது. அதேபோல 2018 இல் ஐந்தாம் கட்ட ஆய்வும் செம்மையாகச் செய்து முடிக்கப்பட்டது.
மார்ச் மாத ஞானம் சஞ்சிகையில் நூலகர் என்.செல்வராஜா 'ஈழத்து இதழியலில் சுதந்திரனின் வழித்தடம்! விரிவான ஆய்வுக்கான சில குறிப்புகள்' என்றொரு கட்டுரையினை எழுதியுள்ளார். அக்கட்டுரையினைப் படித்துப் பார்த்தபோது எனக்கு உண்மையில் அதிர்ச்சியாகவிருந்தது. 1949 - 1952 காலகட்டத்தில் சுதந்திரனின் ஆசிரியப்பீடத்திலிருந்த அறிஞர் அ.ந.கந்தசாமியின் பெயரை அங்கு நான் காணவில்லை. ஏன் இந்தத்தவிர்ப்பு? நூலகர் செல்வராஜாதான் இதற்குப் பதிலளிக்க வேண்டும்.. அ.ந.க.வின் சுதந்திரன் பத்திரிகைக்கான பங்களிப்புப் பற்றிய பல குறிப்புகளை முகநூலிலும் , பதிவுகள் இணைய இதழிலும் பதிவு செய்துள்ளேன். சுதந்திரனில் அவர் எழுதிய படைப்புகள் பற்றிய விபரங்களையும் பதிவு செய்துள்ளேன். கவீந்திரன், கலையரசன், பண்டிதர் திருமலைராயர், அ.ந.கந்தசாமி ஆகிய பெயர்களில் அ.ந.க.வின் படைப்புகள் சுதந்திரனில் அவர் ஆசிரியராகவிருந்த காலகட்டத்தில் வெளியாகியுள்ளன. அதன் பின்னரே அ.ந.க இலங்கைத் தகவற்திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பத்தாண்டுகள் (1953 -1963) பணிபுரிந்தார்.அக்காலகட்டத்தில் அவர் தகவற் திணைக்களத்தின் தமிழ்ச் சஞ்சிகையான ஶ்ரீலங்கா சஞ்சிகையின் ஆசிரிய பீடத்திலிருந்தார்.
ஒலியமைப்பினைச் சார்ந்து வரக்கூடிய செய்யுளுறுப்புகளில் ஒன்று வண்ணம் என்பதாகும். பேராசிரியர் இதனை சந்த வேறுபாடு என்று குறிப்பிடுவார். தொல்காப்பியர் வரையறுத்துள்ள செய்யுளுறுப்புகளில் இருபத்தாறாவது உறுப்பாக வண்ணம் உரைக்கப்பட்டுள்ளது. இவ்வண்ணத்தின் வகைகளாக இருபது வகைகளைக் குறிப்பிடுகிறார். உலக வழக்கில் சிந்துப்பாடல்களிலும், நாடகப் பாடல்களிலும் இலக்கியத்தில் சந்த விருத்தங்களிலும் அருணகிரிநாதரின் திருப்புகழ்ப்பாடல்களிலும், நூற்றுக்கணக்கான வண்ணங்கள் பயின்று வருகின்றன. உலக வழக்கு செய்யுள் வழக்கு என்னும் இருவகை வழக்குகளிலும் காணப்பெரும் வண்ணங்கள் எழுத்து, சொல், தொடைநலன் என்பவற்றால் அமைவன. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் வண்ணத்தியல்பு என்னும் நூலினை எழுதியுள்ளார். அவ்வகையில் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையில் பயின்று வரும் வண்ணங்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
அவுஸ்திரேலியாவில் கடந்த இருபது வருடங்களாக தமிழ் இலக்கியம் மற்றும் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கையில், வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளது.


‘பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்’ என்ற கிரேக்க இடதுசாரிப் பொருளியலாளார் யானிஸ் வருஃபாகிஸ் அவர்களது நூல் குறித்து பேச உள்ளேன். இதனை எஸ்.வி. ராஜதுரை தமிழில் மிகச் செழுமையாக மொழிபெயர்த்து க்ரியா வெளியீடாக 2020 இல் வெளிந்துள்ளமை மிகப் பாராட்டுக்குரியதாகும். 203 பக்கங்களை அடக்கியுள்ள இந்நூல் மிக நேர்த்தியாக, அடிக்குறிப்புகளோடு அச்சிட்டிருப்பது வாசகனை வாசிப்பில் ஆவல்கொள்ளச் செய்கிறது. பொருளாதாரம் பற்றிய புத்தகம் என்ற தலைப்பைப் பார்த்தபோது சிரத்தை எடுத்துப் படிக்க முடியாத வகையில் மிகவும் கடினமாக இருக்குமோ அல்லது சலிப்பைத் தரக்கூடியவிதமாக இருக்குமோ என்று எண்ணினேன். பொருளாதாரத்துறை சார்ந்த வல்லுநர்கள்தான் அதனை வாசித்து விளங்குவார்கள் என்றும் சிந்தனையைக் குழப்பிக்கொண்டிருந்தேன். ஆனால் இப்புத்தகத்தை வாசித்தபோது சாதாரண நடைமுறை விஷயங்களிலிருந்து மிக உன்னதமான விஷயங்கள்வரை எல்லாவற்றையும் பொருளாதார முடிவுகள்தான் தீர்மானிக்கின்றன என்றும், வாழ்க்கைச் சம்பவங்களோடும், கலைச் சொற்களோடும் யானிஸ் அவர்கள் மகள் ஸீனியாவுக்கு அளிக்கும் விளக்கம் அற்புதமானது. மகளுக்கு பொருளாதாரம் பற்றி விளக்குவதுபோல் சுவையாக விவரிப்பது விநோதமான முயற்சியாகவும் எனக்குத் தென்பட்டது. 
பேராசிரியர் பத்தக்குட்டி சந்திரசேகரம் பற்றி அண்மையில்தான் சரியாக அறிந்துகொண்டேன். பேராசிரியர்கள் கைலாசபதி, கா,சிவத்தம்பி, மெளனகுரு, பாலசுந்தரம், நா.சுப்பிரமணியன், சபா.ஜெயராசா, எம்.ஏ. நுஃமான் போன்றோரை அறிந்த அளவுக்கு இவரை நாம் பெரிதாக அறிந்திருக்கவில்லை. பல்கலைக்கழக மட்டத்தில் அறிந்திருந்த அளவுக்கு பொதுமக்கள் மத்தியில் இவரை அதிகமாக அறிந்திருக்கவில்லையென்றே கருதுகின்றேன். இதற்கு முக்கிய காரணங்கள் இவருடன் பழகிய சக பேராசிரியர்கள் போதுமான அளவில் ஊடகங்களில் இவரைப்பற்றி அதிகம் எழுதாததும், இவரது படைப்புகளைத் தாங்கிய நூல்கள் அதிக அள்வில் வெளிவராததும் என்று கருத வேண்டியுள்ளது.
சுப்ரபாரதிமணீயனின் இரு நூல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியீடு கோவையில் வெள்ளி அன்று கோவை பீளமேடு கிளஸ்டர் மீடியா கல்லூரியில் நடைபெற்றது. மாலு மற்றும் 1098 என்ற திருப்பூர் வாழ் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் நாவல்கள் Notch, 1098 என்ற பெயர்களில் மொழிபெயர்ப்பாகி வெளிவந்துள்ளன Notch நாவலை கோவையைச் சார்ந்த பேரா .பாலகிருஷ்ணன் மொழிபெயர்த்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நேற்று 26 ஆம் திகதி உடல்நலக்குறைவால் மறைந்துவிட்ட தோழர் தா. பாண்டியன் அவர்கள், முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் – அதாவது 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதியே இறந்திருக்கவேண்டியவர் ! இதனை வாசிக்கும் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா..? அந்தத் திகதியை எவரும், ஏன் முழு உலகமுமே மறந்திருக்காது. அந்தநாள் எத்தகையது என்பதை தா. பாண்டியனின் வாக்குமூலத்திலிருந்தே இங்கே தருகின்றேன். அந்த வாக்குமூலத்தை அவர் தமது 69 வயதில்தான் பதிவுசெய்துள்ளார்.
கொஞ்ச நாளாய் தான் அந்த இயற்கை எழில் சூழ்ந்த ,அதாவது பச்சை மரங்கள் செடிகள் கொண்ட நடைபயிலுகிற பூங்கா என்று சொல்ல முடியாத, காடு என்றும் சொல்ல முடியாத பச்சை வளையப்பகுதியிலே நடக்கிறான். எல்லாம் கொரானாவின் கதவடைப்பால் வந்த உபயம். இதற்கு முந்தியும் பறவைகள் கீச்சிடும் அந்த பகுதி இருந்தது தான்.இறங்கி இருக்கவில்லை.வீட்டிலேயே கனநாள் கிடைக்கையில் ஏற்பட்ட உடல் மூட்டுகளில் வலியோடு ஏற்பட்ட கீரீச் கிரீச் என்ற சத்தங்களிற்குப் பிறகு,நடப்போம் என இறங்கி இருக்கிறான்.இந்த நாட்டில் எல்லாப் பகுதியிலும் பாம்பு போல போற இந்த பச்சை வழிப்பாதைகள் கிடக்கின்றன. எவ்வளவு பேர்களுக்குத் தெரியுமோ?, நாம் குளிக்கிற , பாத்திரம் கழுவுற தண்ணீர் , சலவை செய்கிற நீர், மழை, பனி நீர் எல்லாம் வீதிகளில் வலையமைப்பில் ஓடுற குழாய்க்கால்களில் ஓடி ,அடைப்புகள் ஏற்பட்டால் கிடக்கிற மனிதர் இறங்கி வேலை செய்கிற துளைகள் போன்ற கட்டமைப்புகளுடன் சேர்கின்றன.பிறகு இவை ஓடி வந்து பெரிய ஏரிகளை அடைகின்றன. இந்தக் கட்டமைப்பில் தொழிற்சாலைப் பகுதியிலிருந்து வெளியேறுகிற நீரை வடிகட்டி இரசாயன கலப்பில்லாது விட வேண்டும் என்ற விதிகளை சிலர் மீறி விடுகிறார்கள். பிறகென்ன நாம் குடிக்கிற நீரில் நஞ்சு கலந்து விடுகிறது. ஏரி நீரைத் தான் நாம் எல்லோருமே குடிக்கிறோம். சில பகுதிகள் பாதிக்கப் பட்டுக் கிடக்கின்றன. அவை பெரும்பாலும் முதல்குடி மக்களின் பகுதிகளாக கிடப்பது தான் பரிதாபம். தொழிற்சாலைகளுக்கும் வடிகட்டும் விசேச நிலையங்கள் இருக்க வேண்டும். அவற்றை அரசாங்கள் செய்யாது அவர்களே செய்ய வேண்டும் என தட்டிக் கழித்து விட்டதாலேயே தவறுகளும் கணிசமாகி விட்டிருக்கின்றன. மனிதக்கழிவு நீர்களுக்கு வடிகட்டும் விசேச நிலையங்கள் இருக்கின்றன. அதில் வடிகட்டி உர உப்புகள் கூடத் தயாரிக்கப்படுகின்றன. வடிகட்டிய நீரும் இதே வாய்க்காலிலே விடப்படுகின்றன. இலங்கை. இந்தியா போன்ற நாடுகளில் குடிமனைகளில் பரவி சேதம் ஏற்படுத்துபவை இங்கே ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன . இந்த வாய்க்கால்கள் சில நதிகள் என்றும் கூட அழைக்கப்படுகின்றன. நீளம் கூடியதால் அழைக்கிறார்களோ? மழைக்காலத்தில் பெருமளவு நீர் பெருக்கெடுத்து ஓடுறதும் ஏற்படுகின்றது.


படித்தவர்கள் பலர் பிற நாடுகளில் வாழ்ந்து , தம் பொருள் வளம் பெருக்குவதையே நோக்காகக்கொண்டு வாழ்கையில், இவர் தான் கற்றதை, அறிந்ததைத் தன் மண்ணுக்கு வழங்குவதற்காக வந்தார். தன் மண்ணின் அனர்த்தங்களை எதிர்கொண்டு , சமூக, அரசியல் ரீதியிலும் அவற்றைக் களையத் தன் பங்களிப்பினைச் செய்தார். அதற்கு இவருக்கு எம் மண் கொடுத்த பரிசு? தூக்கிப் போற்றிப் பாதுகாத்திருக்க வேண்டிய மண் புழுதியிலே போட்டு மிதித்துச் சீரழித்தது. எம் மண்ணின் வரலாற்றின் அவமானம் இம்மண்ணின் மகளின் மடிவு! முடிவு! தானிழைத்த வரலாற்றுத் தவறினை, இவரை நினைவில் வைப்பதன் மூலம் ஓரளவு தீர்த்துக்கொள்கிறது. எந்தக் கல்வி நிலையத்துக்காக இவர் தன் வாழ்வையே அர்ப்பணித்தாரோ அந்தக் கல்வி நிலையம் இதுவரை இவரை நினைவு கூர்ந்திட என்ன செய்தது? ஒரு சிலை கூட வைத்ததா? நினைவு கூர்ந்ததா? மிகவும் வெட்கக்கேடான விடயமென்னவென்றால் .. இவரிடம் கல்வி கற்றவர்களில் சிலரே இவரின் முடிவுக்கும் காரணமாக இருந்தார்களென்ற தகவல்கள்தாம்.
ஈழத்து இலக்கியத்தோப்பில் வைரம்பாய்ந்த தனி விருட்சமாக, ஆழ வேரோடி, பரந்தகன்ற கிளை விரித்து, குளிர்நிழல் பரப்பிநிற்கும் தனித்த ஆளுமைதான் கே.எஸ். சிவகுமாரன். இந்த பெரும் இலக்கிய வியக்திக்கு இணைசொல்ல இங்கே யாருமில்லை. நூறு கவிஞர்களைக் காட்ட முடியும்; நூறு நாவலாசிரியர்களைக் காட்ட முடியும்; நூறு கட்டுரையாளர்களைக் காட்ட முடியும். கே.எஸ். சிவகுமாரனுக்கு நிகரான பல்துறைசார்ந்த ஓர் எழுத்தாளனை ஈழத்து இலக்கியப்பரப்பின் கடந்த அறுபது ஆண்டுகால எல்லையில் காண்பதற்கில்லை. இந்த அறுபதாண்டுகாலத்தில் தொடர்ந்த வாசிப்பே அவரது சுவாசமாக இருந்திருக்கிறது. அந்த வாசிப்பின் வியாபகம் அசலானது. அயராத எழுத்துப்பணியே அவரின் மூச்சாக இருந்திருக்கிறது. இவரின் எழுத்துக்கள் 5,000 பக்கங்களில், முப்பத்தேழு நூல்களாக மலர்ந்திருக்கின்றன. ஆங்கிலத்திலும் தமிழிலுமாக இன்னும் நூல் வடிவம் பெறாத இவரின் எழுத்துக்கள், இன்னும் ஓர் ஆயிரம் பக்கங்களை மிக எளிதாகத் தாண்டிவிடும். இந்தளவு பல்துறை சார்ந்து, ஆங்கிலத்திலும் தமிழிலுமாக எழுத்தை ஓர் இயக்கமாக எண்ணிச் செயற்பட்ட வேறு ஒருவரை என்னால் சொல்ல முடியவில்லை.
கவிஞர் முத்துலிங்கத்தின் சிந்தையை வசியம் செய்யும் வரிகள், மெல்லிசை மன்னரின் இசை, கே.ஜே.ஜேசுதாஸ் & வாணி ஜெயராமின் குரல், எம்ஜிஆர் & லதாவின் சிறப்பான நடிப்பு , என்.பாலகிருஷ்ணனின் ஒளிப்பதிவு எல்லாமே நன்கிணைந்து எனைக் கவர்ந்த கானமிது. கவிஞர் முத்துலிங்கத்தின் வரிகளை ஒவ்வொன்றாக இரசித்தவாறே, அவற்றைப் பாடும் பாடகர்களின் குரல்களையும், அபிமான நடிகர்களின் நடிப்பையும் இரசித்துப்பாருங்கள் நிச்சயம் நீங்கள் உங்களையே மறந்து விடுவீர்கள். இப்பாடலின் பொருளை விளங்கி அமைக்கப்பட்டுள்ள இசை, அதையுணர்ந்து அனுபவித்துப் பாடும் பாடகர்களின் குரலினிமை , விளங்கி நடிக்கும் நடிகர்களின் நடிப்பு எல்லாமே என்னை ஈர்த்தனவென்பேன்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









