'ஈழத்து நூல்களைப் பேசுவோம்' என்னும் முகநூற் பக்கத்தைப் பார்த்தேன். பாராட்டப்பட வேண்டியதொரு முகநூற் பக்கம். இப்பக்கத்தின் முக்கியமான சிறப்பென்ன?
இலங்கையில் வெளியான பல்வகைத் தமிழ் நூல்களைப்பற்றியும் (புனைவுகள் அல்லது அபுனைவுகள்) அறிமுகம் செய்கின்றார்கள். புதிய , பழைய , அரிய நூல்களை அறிமுகம் செய்கின்றார்கள். இதன் மூலம் இந்நூல்களைப்பற்றிய விபரங்களை ஆவணப்படுத்துகின்றார்கள். நாமும் அவை பற்றி அறிய சந்தர்ப்பத்தினை வழங்குகின்றார்கள். இது உண்மையிலேயே வரவேற்கப்படத்தக்கதொரு விடயம்.
உலகெலாம் உணர்ந்து ஓதத்தக்க அருட்பாக்களை அருளிய அருட்புலவர்கள் திருமுறையாசிரியர்களும் ஆழ்வார்களும். அவர்கள் அருளிய அருட்பாக்கள் பன்னிரு திருமுறைகளாகவும் நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களாகவும் விளங்கி மக்களுளத்தில் இறைவேட்பினை அளித்து வருகின்றன. இறைவேட்பிலக்கியங்களான அவை பத்திமையை மட்டும் உட்கிடையாகக் கொண்டமையாமல் அக்காலத்திய வரலாற்றையும் கொண்டொளிர்கின்றது. குறிப்பாகக் கடைக்காப்பு இத்தன்மையன. அவை தரும் ஒளியில் வரலாற்றை அணுகுங்கால் தெள்ளிய நீரோடை போல அது காட்சிப்படும். நம்பகத்தன்மையுடைய வரலாறு வெளிப்படும். வரலாற்றெழுதியலுக்கு அவை உதவுமாற்றைச் சிறுகுறிப்புகளோடு எடுத்துக்காட்டும் போக்கில் இக்கட்டுரை அமைகிறது.
வரலாறெற்றெழுதியல்
வரலாறு என்பது அறிவியல்; கலையல்ல. கற்பனைகளுக்கு அதில் இடமில்லை. ஆனால் இலக்கியம் கற்பனையும் வரலாறும் கலந்தது. வரலாற்றைச் சுவைப்படுத்தித் தரும் இயல்பினது. இலக்கியத்தில் பதிவாகியுள்ள வரலாற்றுக் கூறுகளைத் தக்க சான்றுகளோடு கண்டடைந்து எழுதப்படும் வரலாறு பெரும்பாலும் நம்பகத்தையோடு விளங்குமென நம்பலாம். அத்தகைய வரலாற்றெழுதியலுக்கு இறைவேட் பிலக்கியங்களான பன்னிரு திருமுறைகளும் நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களும் பெரிதும் துணைசெய்கின்றன. கி.பி. ஐந்தாம் நுற்றாண்டு தொடங்கி பன்னிரண்டாம் நூற்றாண்டு வரலயிலான தமிழ்நிலத்தின் பல்வேறு சூழமைவுகளை அவை தன்னுட் கொண்டுள்ளன. அவற்றை இனங்கண்டு ஆய்ந்து வெளிப்படுத்த வேண்டியது தமிழுணர்ந்தாரின் கடனாகும்.
கடைக்காப்பு
திருமுறையாசிரியர்களும் ஆழ்வார்களும் அருளிச்செய்த பதிகங்கள்/பாசுரங்களின் கடைப்பாடல் கடைக்காப்பு/பயன்தலைக்கட்டுதல் என்று வழங்கப்படுகின்றன. அக்கடைப்பாடல்களைச் சற்று உற்றுநோக்கிடின் அவற்றில் வரலாற்றெழுதிலுக்குதவும் சில அடிப்படை வினாக்களுக்கான விடையிருப்பதைக் காணலாம். அப்பாடல்கள் எங்கு பாடப்பட்டன? யார் பாடினார்? ஏன் பாடப்பட்டன? அவற்றைப் பாடடினால் என்ன கிடைக்கும்? என்பன அவ்வினாக்கள். ஒன்றிரண்டு குறைந்தும் மிக்கும் வருவனவும் உள. சான்றாக, திருஞானசம்பந்தரின் திருநீற்றுப் பதிகத்தைக் கொண்டு இதனைக் காணலாம்.
- எழுத்தாளர் – ஊடகவியலாளர் - சமூகச்செயற்பாட்டாளர் முருகபூபதிக்கு ஜுலை 13 இல் அகவை எழுபது! அதனையொட்டி வெளியாகும் கட்டுரையிது. முருகபூபதி அவர்களுக்குப் பதிவுகள் இணைய இதழும், வாசகர்களும் தம் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றார்கள். பதிவுகள் இணைய இதழுக்குத் தொடர்ச்சியாகப் பல்லாண்டுகளாகப் பங்களித்து வரும் அவருக்கு இத்தருணத்தில் நன்றியினையும் பதிவுகள் தெரிவித்துக்கொள்கின்றது. - பதிவுகள்.காம் -
இற்றைக்கு எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் , 1951 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 13 ஆம் திகதி, காலைப்பொழுதில் நுரை தள்ளி கரை நனைக்கும் அலையோசையைத் தவிர எங்கும் அமைதி. நீர்கொழும்பு கடற்கரை வீதியில் அமைந்த அந்தத் தொடர்குடியிருப்பில் ஒரு சிறிய வீட்டில் ஒரு ஆண்குழந்தை வெளியுலகை எட்டிப்பார்த்தது, தாயின் கர்ப்பத்தின் சூடு தணிந்து கடற்காற்றின் குளிர்மை தழுவியதால் 'வீல், வீல்' என்று அலறுகிறது. அதன் அழுகுரலோடு அருகே அமைந்த கோயில்களிலிருந்தும் புனித செபஸ்தியார் தேவாலயத்திலிருந்தும் மணியோசை கேட்கிறது. அந்தக்குழந்தையைப் பெற்ற தாயின் தந்தையான தாத்தா, பேரன் பிறந்துவிட்டான் என்பதை பறைசாற்ற, வீட்டின் கூரையில் ஏறித் தட்டும் அதிசயமும் நடக்கிறது. அது அவரது குடும்பப்பின்னணியின் மரபார்ந்த பண்பாட்டுக்கோலம். அந்த ஒலி அயல்வீடுகளுக்கும் கேட்கிறது. அன்று அந்த வீட்டில் பிறந்த குழந்தையின் குரல் பின்னாளில் உலகெங்கும் கேட்கும் என்றோ, அதன் தாத்தா கூரையைத்தட்டி எழுப்பிய பேரோசை போன்று தாயகம் கடந்தும் செல்லும் என்றோ, அந்தத் தாத்தா உட்பட அதனது பெற்றோரும் உற்றார் உறவினரும் அப்போது உணர்ந்திருக்கமாட்டார்கள்!
சமீபத்தில் நடேசன் அவர்களின் அந்தரங்கம் சிறுகதை தொகுப்பு வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடேசன் அவர்களை எனக்கு எப்படி தெரியும் என்று எண்ணி பார்க்கிறேன். படித்ததில் பிடித்தது என்ற ஓர் நிகழ்ச்சி, அதில் கவிஞர் சல்மா அவர்கள் வாழும் சுவடுகள் என்ற புத்தகத்தை அறிமுகம் செய்து அதை எழுதியவர் Melbourne இல் வசிப்பதாக சொன்னார். பிறகு முருகபூபதி அய்யா மூலமாக அறிமுகம் கிடைத்து நடேசன் அவர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. ஓரிரு முறை பேசியுள்ளேன். ‘நைல் நதிக்கரையோரம்’ என்ற அவரது புத்தகத்தை வாசித்துள்ளேன். அந்தரங்கம் வாசித்த பிறகு அவருடைய அனைத்து எழுத்துகளையும் வாசிக்க வேண்டும் என்று எண்ணியுள்ளேன். இந்த புத்தகத்தை பற்றிய என் வாசிப்பனுபவம் அனைத்தும் முழுக்க அவரின் படைப்பின் மூலமாக நான் அடைந்ததே தவிர அவரை தெரியும் என்பதால் எழுதும் புகழுரை அல்ல.
அசாதாரணங்களின் கதை என்று கருணாகரன் அவர்கள் முன்னுரை வழங்கி உள்ளார். அதை வாசித்து உள் செல்வது நன்று. இலங்கை எழுத்தாளர்கள் தமிழகத்தில் அதிகம் பாவிக்க படாத சொற்களுக்கு அடி குறிப்பிடலாம் என்ற கருத்துக்கு, இலங்கை எழுத்தாளர்களை தொடர்ந்து வாசிப்பதனால் எனக்கு அடி குறிப்பு தேவைபடவில்லை. வாசகனாக சிறு உழைப்பும் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.
இந்த புத்தகத்தில் என்னை பாதித்த ஒரு எழுத்தாளர் touch என உணர்ந்த ஆறு இடங்களை பகிர்கிறேன்.
தீர்ப்பெழுதும் ஊர்: ‘ஒரு தாய் உறங்குகிறாள்’ என்ற கதை. திருமணமாகியும் தனியாக வாழும் ஒரு பெண். அவளை அந்த ஊர் பல விதங்களில் பேசுகிறது. அவளை ‘பொதுக்கிணறு’ என்று கூறுகிறது. அவள் இறந்த பின்பு தேவாலயத்தில் அவள் உடல் கிடத்தி வைத்திருக்கும் பொழுதில், இந்த கதை சொல்லியான ஆணுக்கு, 'இவள் இந்த ஊரிலேயே உருண்டு திரண்ட கால்களும், நடந்தால் பாதத்தின் சிறுவிரல் தரையில் படாது’ என்ற நினைவு எழுகிறது. இதில் என்ன எழுத்தாளரின் நுட்பம் என கேள்வி எழலாம். ஆனால் என் பார்வையில் ஊரே தவறாக பேசும் ஒரு பெண்ணை அவள் வாழ்த்த காலத்தில் ஒரு ஆண் எப்படி எல்லாம் கண்டிருக்கிறான், அவள் இறந்த பின்னும் அவனுக்கு அவள் பற்றிய எது முதல் நினைவாக எஞ்சுகிறது என்பதை தொட்ட நுட்பமான இடமாக காண்கிறேன்.
சொகுசுக்காரில் வந்திறங்கியவள் நக்கலாய்ப் பார்த்தாள்.
வித்தியா புன்னகைத்தபடி வரவேற்றாள்.
'எவ்வளவு?' ஆங்கிலத்திலேயே கேட்டாள்.
வித்தியாவும் சொன்னாள்.'120 பவுண்ட்'
விலை அதிகம் என்றாள்.
'இல்லை..நீங்கள் 200க்குள்ள வேணும் எண்டனீங்கள். அதுதான்...'
வித்தியாவை மேலும் கீழும் பார்த்துவிட்டு சொன்னாள்.
'இது 10 ரூபாயும் பெறாது'
வித்தியாவிற்கு கொஞ்சமாக ஏறியது.காட்டிக்கொள்ளாமல்' செய் கூலி இல்லாமல், பொருளுக்கு மட்டுமே சொன்னனான்'.
'பகிடி விடாதையும்...யாவாரிகள் உப்பிடித்தான் கதைப்பினம்..கொள்ளை லாபம் வைக்காமல் இருக்கமாட்டினம்'
கோபத்தை அடக்கிக்கொண்டு' என்ன சொல்ல வாறியள்?' கேட்டாள் வித்தியா.
'எப்படியோ வாங்கின சாமான்கள் முழுக்க பாவிச்சிருக்கமாட்டியள். மிச்சத்தை இன்னொன்று செய்தும் வித்துப்போடுவியள்.. பிறகேன் அறா விலை சொல்லுறியள்'. வந்தவள்தான் கேட்டாள்.
எனக்கு நீ எழுதிக்கொடுத்த
நம்மைப் பற்றிய நாட்குறிப்பை
நேற்றுதான் எடுத்து வாசித்தேன்.
உனது எழுத்துகள் அழகாக இருந்தன.
உனது எண்ணங்கள் மிக அழகாக இருந்தன.
என்னைப்பற்றிய உனதுக்கவிதை
எனதான கர்வத்தினை விசாரிக்கும்படியும் இருந்தது.
எப்போதும் அதைப் படித்துப் படித்து
பூரித்துப்போக நான் உற்சாகம் கொள்வேன்
ஒவ்வொருமுறையும்.
அரசமரத்தின் காற்றுத் தாக்கிய இலையாக
மனம் ஓய்வில்லாமல் ஏங்கிக் கொண்டிருக்கிறது
ஒரு பறவையின் வருகைக்காக!
வந்து பழகிய உனது குரலும்
வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மனமும்
ஏமாற்றத்தின் உச்சம் இன்று
வாழை மரத்தின் இலைகளைத் துழாவி
தூரத்து மின் கம்பிகள் பழக்கப்பட்டு விட்டன கண்களுக்கு
உன்னைத் தேடி!
முல்லைத்திணையைப் பாடுவதிலும் புனைவதிலும் வல்லமை பெற்றவர் பேயனார். முல்லை நிலம் காடும் காடுசார்ந்த பகுதிகளையுமுடையது. காடு சார்ந்தது முல்லை நிலமாதலால், இங்குப் பல்வகை மரம், செடி, கொடி ஆகிய தாவரங்கள் பசுமையோடும், செழிப்போடும் காணப்படும். இம்முல்லை நிலத்தின் வருணனைகளைப் படிக்கும்பொழுது, நிலத்தின் செழுமையும், வளமிக்க மலர்கள் மலர்ந்திருத்தலும் காட்சியளிக்கும். ஐங்குறுநூற்றில் இடம்பெற்றுள்ள இம்முல்லை நிலமானது மலர்களால் சூழப்பட்ட புறவாகக் காட்சிப்புனைவுகளுடன் அமைந்துள்ளது. பல்வேறு சொல்லாட்சிகளில் முல்லை நிலம் சார்ந்த வருணனைக்காட்சிகள் குறைந்த அளவே காணப்படுகின்றன. குறைவான அளவில் முல்லைபற்றிய காட்சிகள் இடம்பெற்றாலும், வருணனைகள் உரிப்பொருள் விளக்கத்திற்கு துணைநிற்கின்றன. எனவே, ஐங்குறுநூற்றில் இடம்பெற்றுள்ள முல்லை நிலம் பற்றிய வருணனைகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
முல்லை நிலம்
முல்லை நிலமானது, 1.புறவு, 2.கானம், 3.கான், 4.மென்புலம், 5.முறம்புகண், 6.வறந்த ஞாலம், 7.செந்நிலம், 8.வன்புலம், 9.புன்புலம், 10.இருநிலம் என்னும் பத்துச் சொல்லாட்சிகளில் பொருட்கூறுகளோடு பேயனரால் வருணிக்கப்பெற்றுள்ளன என்பதை ஆய்விற்குச் சேகரிக்கப்பட்ட தரவுகளிலிருந்து அறியமுடிகின்றது.
முல்லை நிலமாகிய ‘புறவு’ என்பது ‘புறவு’ என்னும் பெயரில் ஐங்.முல்.404:3-4; 405:2-4; 406:3-4; 411:1-2; 412:1-3; 413:1-4; 414:1-4; 415:1-4; 416:1-5; 417:1-3; 418:1-2; 419:1-4; 420:1-3; 421:1-2; 424:1; 462:5; 485:4; 494:1-2; 495:1-2 ஆகிய பத்தொன்பது (19) பாடல்களில் ‘நறும்பூந்தண்’புறவு, ‘பூஅணி கொண்டன்றால்’ புறவு, ‘நறுந்தண்’புறவு, ‘மணம்கமழ்’புறவு, ‘கவினிப்’புறவு, ‘கார்கலந்தன்றால்’புறவு, ‘அழிதுளி தலைஇய’ புறவு, ‘நன்னலம் எய்தினை’ புறவு, ‘நறும்பூம்’ புறவு, ‘முகைஅவிழ்’புறவு, ‘மலர்அணிப்’புறவு, ‘தண்கமழ்’புறவு என்னும் அடைகளுடன் வருணனைக்காட்சியாக இடம்பெற்றுள்ளது.
இயங்குதலே உயிரிகளின் அடிப்படை. மானுடசமூகத்தின் தொடர் இயக்கமே இன்று அதை பண்பட்ட சமூகமாக வளர்த்தெடுத்துள்ளது எனலாம். ஒரு சமூகத்தின் இயங்குநிலை பல்வேறு மரபுகளையும், பண்பாட்டுக் கலாச்சாரக் கூறுகளையும் உட்செறித்தது. அந்த இயங்குநிலைக்குத் தக்கச் சான்றாக சடங்குகள் விளங்கி வருகின்றன. ஒரு சமூகத்தின் மரபார்ந்த சடங்கின்வழி அதன் நெடிய இயக்கத்தினை அறிந்துக் கொள்ளவியலும். மேலும், சமூக இயக்கத்தின் நிலைச்சான்றாகவும் சடங்குகளைக் கொள்ளலாம். அவ்வகையில் நீலகிரியில் வாழும் பூர்வகுடி மக்களான படகர்களின் மரபார்ந்த சடங்குகளுள் ஒன்றான “உப்பு ஹட்டோது” (ஹட்டோது – ஊற்றுதல்) எனும் உப்புச் சடங்கினை இயக்கவியல் நோக்கில் ஆராய்வதை மையநோக்கமாகக் கொண்டு இவ் ஆய்வுக்கட்டுரை அமைகின்றது.
இயக்கவியலைப் புரிந்துக்கொள்ள முனையும்போது, “இயக்கவியல் என்பது விசியங்களை ஆராய்ந்து அறியாமலேயே விளக்குவதும், புரிந்துக்கொள்வதுமாக ஏற்பட்ட சாதனமல்ல. ஒரு விசயத்தின் ஒரு பொருளின் ஆதியென்ன?, அந்தமென்ன. அது எங்கிருந்து வந்தது, எங்கே போய்க் கொண்டிருப்பது என்று பரிசோதிப்பதற்கு வாய்த்திருக்கும் சாதனம். சிறந்த ஆராச்சிக்கு வாய்த்திருக்கும் சாதனம்” எனும் ஜார்ஜ் பொலிட்சரின் கூற்றை ஆழ்வதும், அணுகுவதும் அடிப்படையானதாகும்.
பொலிட்சரின் கூற்றினையொட்டி படகர்களின் மரபார்ந்த உப்புச்சடங்கினை அதன் ஆதி, அந்தம் அதாவது சடங்கியல் மற்றும் நோக்கநிலையின் ஆதி அந்தங்கள், அது எங்கிருந்து வந்தது?, அதாவது அதன் தோற்றநிலையின் காரண காரியம், அது எங்கே போய்க்கொண்டிருக்கின்றது? அதாவது அதன் பயன் ஆகிய கூறுகளின் அடிப்படையில் நோக்கும்போது அவ்வினத்தின் தொன்மையினையும், நீலகிரியில் அவர்களின் நெடுங்காலத்தைய இயக்கத்தையும் அறிந்துக் கொள்ளவியலும்.
மகாகவிஞர் அவர் என்று கூறுவர்.
சொற்களைத் தேர்ந்துடுத்து
சோகங்களை வடித்தெடுப்பதில்
அவர் வல்லவர்.
அவரது கவிதை வரிகளில்
அவர் வெளிப்படுத்தும் உணர்வுகள்
அவரது ஆழ்மனத்து உணர்வுகள்
அல்ல.
அவரது ஆழ்மனத்தை மூடிநிற்கும்
அவரது வெளிமனத்தின் செருக்குகள் அவை.
சிந்தித்துப் பொருத்தமான சொற்களை
அவர் தேர்ந்தெடுப்பது
அவற்றின் வாசகரைக் கவர மட்டுமே.
ஈழத்தில் மருத்துவத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் கலை இலக்கியத்துறைகளில் ஈடுபடுவது குறைவு. தமிழ் இலக்கியத்துறையில் அவ்வாறு ஈடுபட்டவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தவகையில் ஒருவர் மிகச் சிறப்பானவராக விளங்கினார். பாராட்டுகள் பெற்றார். புகழ்பெற்ற மருத்துவப் பேராசிரியராக விளங்கியதோடு, புகழ்பெற்ற, சிறந்த இலக்கியவாதியாக, நாடக, சினிமா நடிகராகத் திகழ்ந்தவர் டாக்டர் நந்தி என எல்லோராலும் அறியப்பட்ட செ. சிவஞானசுந்தரம் அவர்களாவார்.
யாழ்ப்பாணம் - இணுவிலில் 1928 -ம் ஆண்டு பிறந்த நந்தி யாழ்ப்பாணத்தில் ஆரம்பக்கல்வியைக் கற்றபின் கொழும்பு சென்ற் யோசப் கல்லூரி, றோயல் கல்லூரி ஆகியவற்றில் உயர்கல்வியைக் கற்றார். பல்கலைக்கழகத்திற்குத் தெரிவுபெற்றுக் கொழும்பு மருத்துவக் கல்லூரியில் கற்று 'எம். பி. பி. எஸ்.' பட்டம் (1955) பெற்றார். சிறிய தந்தையார் பேராசிரியர் வி. செல்வநாயகம், இலட்சுமண ஐயர் உட்பட சிலரிடம் முறைப்படி தமிழ் அறிவையும் வளர்த்துக்கொண்டார். குருநாகல், ஹிரிப்பிட்டியா, கொழும்பு, நாவலப்பிட்டி, யாழ்ப்பாணம் ஆதியாம் இடங்களில் வைத்திய அதிகாரியாகப் பணியாற்றினார். 1965 ஆண்டு முதல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமூக வைத்தியத்துறை விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1968 - 1971 காலத்தில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் 'டி. பி. எச்.' பட்டமும் 'பி. எச். டி.' பட்டமும் பெற்றுக்கொண்டார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து விரிவுரையாளராக, இணைப்பேராசிரியராக, பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1979 -ல் இணைந்து சமூக வைத்தியப் பிரிவுப் பேராசிரியராகத், துறைத் தலைவராக, மருத்துவத்துறைப் பீடாதிபதியாக 1993 -ம் ஆண்டுவரை பணியாற்றினார். இந்தோனேசியா, தாய்லாந்து, பங்களாதேசம், சிங்கப்பூர், இந்தியா, யோர்தான், பிரித்தானியா ஆதியாம் நாடுகளில் மருத்துவக் கருத்தரங்குகளில் பங்குபற்றியுள்ளார். இலங்கையிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதிச் சமர்ப்பித்துள்ளார். மருத்துவக் கல்லூரியில் கற்கும் காலத்தில் இலங்கை வானொலி நாடகங்களில் விருப்பத்துடன் நடித்துள்ளார். 'குரங்குகள்' என்ற நாடகத்தை எழுதி (1975)வெளியிட்டுள்ளார். எழுத்தாளர் காவலூர் இராசதுரை கதை வசனத்தில், பிரபல இயக்குனர் தர்மசேன பத்திராஜ◌ா இயக்கத்தில் உருவான 'பொன்மணி' திரைப்படத்தில் டாக்டர் நந்தி, தந்தை வேடமேற்று நடித்ததை அருகிருந்து யான் பார்த்திருக்கிறேன்.
நான் கல்வி கற்றது இளவாலைக் கொன்வன்ற். ஆசிரியராகப் பணியாற்றியது தலவாக்கெல்ல சென்ற் பற்றிக்ஸ் கல்லூரி. பண்டாரவளை பிந்துனுவௌ ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் எனது ஒரு வருட பயிற்சியை முடித்த பின்னர் மிகுதிக் காலப் பயிற்சியை நான் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் மேற்கொண்டிருந்தேன். நாட்டு நிலை கொந்தளிப்பான நிலை. 1980களின் முற்பட்ட காலப்பகுதி அது. அவ்வேளை திரு.முல்லைமணி அவர்கள் எனது விரிவுரையாளராக இருந்தார்; என்பது பெருமை தருகின்ற விடயம். அவ்வேளையில் கவிஞர் இ.முருகையன், வேல் ஆனந்தன், வீரமணி ஐயர். புவனேஸ்வரி ராமகிருஷ்ணா, துரைராஜா, அடைக்கலமுத்து, சுவர்ணா நவரட்னம் போன்ற பலர் விரிவுரையாளர்களாகக் கடமையாற்றியவர்கள். அவர்களின் மாணவியாக இருந்தேன் என்பதும் பசுமையான நினைவுகளாகி வருகின்றன. அவ்வேளை திருமதி ஆனந்த குமாரசுவாமி அவர்கள்தான் அதிபராக இருந்தார்.
முல்லை மணி சேரிடம் நான் தமிழ் பயிலும் வாய்ப்பு ஏற்பட்டதை பெருமையாகக் கருதுகின்றேன். அவ்வேளை ரசிகமணி கனக செந்திநாதனின் ‘விதியின் கை’ நாவல் மற்றும், இலங்கையர்கோனின் ‘வெள்ளிப்பாதசரம்’ என்ற சிறுகதைத் தொகுப்பு இரண்டு நூல்களும் (எமது 'சிலபஸ்') ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டி இருந்தது. நான் எழுதிய ஆய்வுகளைப் பார்த்ததின் பின்னர் கூடுதலாக சம்பாஷனைகளும் ஏற்பட்டன. நான் மேற்கொண்டிருந்த இரு நூல்களின் ஆய்வுகளும் தினகரன் வார இதழ் பத்திகையில் வெளியாகியிருந்தன. அதற்கு ஊக்கமளித்தவர்கள் முல்லை மணி சேர், நிட்சயமாக எனது இனிய தந்தை அகஸ்தியர் என்பதையும் இவ்விடத்தில் நினைவுகொள்ள விரும்புகிறேன்.
வரலாற்றுச்சின்னம்: பாலத்தடி பஸ் தரிப்பு!
யாழ்ப்பாணத்திலிருந்து காரைநகர் நோக்கிச் செல்லும் பாதை ஓட்டுமடத்தில் திரும்பி, காக்கைதீவு மீன் சந்தை, கல்லுண்டாய் வைரவர் கோயில், வழுக்கியாற்றுப்பாலம் தாண்டியதும் இரண்டாகப் பிரிகிறது. மேற்காகப்பிரியும் பாதை தெற்கு அராலிக்கூடாகச்சென்று மீண்டும் , வடக்கு அராலிக்கூடாகச் செல்லும் பாதையை வட்டுக்கோட்டைச் சந்தியில் சந்தித்து , கிழக்காகச் செல்லும். வடக்காகக் செல்லும் பாதை காரை நகரை நோக்கிச் செல்லும்.
இது எந்த நாட்டில் நடந்தது என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். எங்களுக்குப் புகலிடம் தந்து எங்களை அரவணைத்த கனடா நாட்டில்தான் நடந்திருக்கின்றது. புதைகுழிகள் என்றதும் எங்களுக்கு முதலில் ஞாபகம் வருவது தாயகத்தில் செம்மணிப் புதைகுழிதான். செம்மணியைத் தொடர்ந்து தாயகத்தில் ஏராளமான புதைகுழிகள் வரலாற்றில் பதியப்படாமல் மறைக்கப்பட்டுவிட்டன. யுத்த சூழலில் இன்னும் அனேகமான புதைகுழிகள் அடையாளம் காட்டப்படாமலே இருக்கின்றன. இரண்டு தலைமுறை போனால் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள் என்ற நினைப்பில் எல்லாமே மூடிமறைக்கப் பட்டிருக்கின்றன. காலம்கடந்தாலும், மறைக்கப்பட்ட யுத்தகாலப் புதைகுழிகள் ஒருநாள் தோண்டப்படும் போது பல உண்மைகள் தெரிய வரலாம். ஆனால் இதற்குக் காரணமானவர்களைத் தண்டிப்பதற்குக் குற்றம் புரிந்தவர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தினம் தினம் எதிர்கொள்ளும் வலியும், வேதனையும் யாருக்கும் சொல்லிப் புரியப்போவதில்லை. சொந்த மண்ணைப் பறிகொடுத்த, எங்களுக்கு ஏற்பட்ட அதே வலியைத்தான் இங்கே உள்ள முதற்குடி மக்களும் எதிர் கொள்கிறார்கள். ஆனால் இங்கு ஜனநாயக கோட்பாடுகள் பின்பற்றப்படுவதால், உண்மையை ஓரளவாவது கண்டறிய முடிகின்றது. 2008 ஆம் ஆண்டு கனடா பிரதமர் இப்படி நடந்தற்காக முதற்குடி மக்களிடம் மன்னிப்புக் கேட்டார். தற்போதய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கத்தோலிக்க திருச்சபை இதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கனடிய மக்கள் சார்பாக வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும் இழப்பு இழப்புத்தானே!
இந்தியத்திரையுலகின் உச்ச நட்சத்திரங்களிலொருவர் நடிகர் திலிப்குமார். இவரது இயற்பெயர் முகமத் யூசுப் கான். 1922இல் இந்தியாவின் ஒருபகுதியாக விளங்கிய பாகிஸ்தானின் பெசாவரில் பிறந்தவர். தனது தொண்ணூற்றியெட்டாவது வயதில் அவர் இன்று காலமானதை இணையச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவரது திரையுலகப் பங்களிப்புக்காக தாதாசாகேப் பால்கே விருது, இந்திய மத்திய அரசின் பத்மபூஷண், பத்ம விபூஷண் விருதுகளைப் பெற்ற இவர் அதிக தடவைகள் பிலிம் ஃபெயர் விருதுகளையும் பெற்றுள்ளார்.
யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் நிருவாக இயக்குநர் சொக்கநாதன் யோகநாதன் இன்று அதிகாலை யாழ்ப்பாணத்தில் கொவிட் தொற்றினால் மறைந்தார் என்ற செய்தி எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
நீண்டகாலமாக சமூகப்பணியாற்றி வந்திருக்கும் திரு. யோகநாதன் ( வயது 73 ) அவர்களின் திடீர் மறைவினால் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் பணியாளர்களுக்கும் மற்றும் யாழ்ப்பாணம் – முல்லைத்தீவு மாவட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அமரர் யோகநாதன் அவர்கள் யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஊடாக யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு கிளிநொச்சி, வவுனியா முதலான மாவட்டங்களில் வதியும் போரினால் பாதிப்புற்ற ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு உதவும் வெளிநாடுகளிலிருந்து இயங்கும் தன்னார்வத் தொண்டர் அமைப்புகளின் தொடர்பாளராகவும் அர்ப்பணிப்புடன் இயங்கியவர்.
அன்னாரின் திடீர் மறைவு ஈடுசெய்யமுடியாத இழப்பு என்று அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் தனது அனுதாபச்செய்தியில் தெரிவித்துள்ளது.
இயக்குநர் சத்யஜித் ரே நூறாண்டு நினைவுக் கட்டுரை!
"ஆக்ஷன்"
இந்த கம்பீரக் குரலுடன் 1951ல் ஆரம்பமானது 'இந்திய திரையுலக மேதை' என அழைக்கப்படும் சத்யஜித் ரேயின் திரையுலக பயணம். அவரது கன்னிப் படைப்பு பூபதி பூஷன் பாந்தோ பாத்யாவின் வங்க குழந்தை இலக்கிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட "பதேர் பாஞ்சாலி " திரைப்படம். கிராமத்தில் பிறந்து வளர்ந்து முதிரும் அப்பு என்ற சிறுவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் உள்ள உறவை சித்தரிக்கும் கதையின் முதல் பாகம் இது. ஐயாயிரம் அடியுடன் படம் நிதி தட்டுப்பாட்டால் பாம்பாய் பெட்டிக்குள் படுத்துக் கொண்டது. அதை எழுப்புமுன் ரேயின் பூர்வீகத்தை சிறிது பார்ப்போமா?
ரேயின் தந்தை வழி தாத்தா ஒரு எழுத்தாளர், இசையமைப்பாளர் மற்றும் அச்சக உரிமையாளரும் கூட. 'சந்தோஷ்' எனும் சிறுவர் இலக்கிய இதழ் வேறு நடத்தி வந்தார். அவர் மகன் சுகுமார் ராய் அனேக சிறுவர் இலக்கியங்கள் படைத்த எழுத்தாளர், விரிவுரையாளர். இந்த கனவுத் தொழில் சாலையில் மே 02, 1921 பிறந்த ரே பல்கலைகளையும் இயற்கையாகவே தன்னகத்தே கொண்டிருந்தார். பல்கலை என்று சொன்னேனா? எண்ணிக் கொள்ளுங்கள்..... எழுத்து, இசை ஈர்ப்பு, ஓவியம், வரைபட வடிவமைப்பு, பதிப்பகத்துறை, விமர்சனம்.....போதுமா? இந்த துறைகளில் அவருக்கிருந்த நாட்டமும் திறமையும் அவரை திரைப்படத்துறைக்கு இயல்பாகவே இழுத்து வந்ததில் ஆச்சரியமில்லை!
காலைச் சூரியன் பொட்டெனச்சுடுகிற இலையிடுக்கில் மாமரத்து நிழலில் பெண்கள் பண்பாயோடு குந்திவிட்டனர். மௌலானாவின் மன்சிலுக்கு வருகிற பெண்களுக்கு தாயத்தும் ஓதிய தண்ணீர் பிடிக்க கலனும் விற்கவென மன்சிலை ஒட்டிய செய்யதுவின் கடைச் சாம்புராணி, மன்சிலின் பெரிய கிணற்றடிக்கு பின்னால் செத்துக்கிடந்த பூனை நெடியிடம் தோற்றுப் போயிருந்தது. லெவ்வை கிணற்றுக்கு கிழக்கால் பாத்தி பிடித்து மரவள்ளிக்கிழங்கை செவ்வென நட்டியிருந்த வரிசை இடையில் பூனையை புதைக்க குழி வெட்டிக்கொண்டிருந்தார். லெவ்வை தான் மன்சிலின் பேஷ் இமாம். தொழுவிப்பது, ஓதுவிப்பது, மையத்து வீடு, கத்தம்பாத்திஹா கோழி அறுக்க தக்பீர் சொல்லுவதென மாதம் ஐயாயிரம் தேத்திக் கொண்டிருந்தார். மௌலானா வரும் மாதங்களில் சதகா மட்டும் பத்து பதினையாயிரம் தேறும். பார்க்க தடித்த தேகம். பெனியன் இறக்கிய பச்சைவாரில் மண்ணடி நண்டு மார்க் சாரன் பிடிபட்டிருக்கும். தங்க முலாம் கைக்கடிகாரமும் அதை மூடும் கைரோமங்களுமென திடும் என்று இருப்பார். நெற்றியில் தொழுகை வடுவும் முகத்தில் தோய்ந்த கறார் பாவமுமாக மஜ்லிஸை துவக்கினாலே எல்லோரும் கமுக்கமாக பாத்திஹா ஓதத் தொடங்கிவிடுவர்.
காலையில் எட்டு மணிக்கெல்லாம் மௌலானா மருந்து கொடுக்க வருவார். பாய் விரித்த மன்சிலின் வெளிப்பள்ளியில் வெள்ளை விரித்த தலையணைப் பஞ்சில் முஸல்லாவைக் கிடத்தி பானா வடிவில் விரிப்பு போடப்பட்டிருக்கும். ஒரே மாதிரியான பச்சை முசல்லாவுக்கு நடுவில் கொஞ்சம் உயரமான தலையணைக்கு மேல் சிவப்பு காஷ்மீர் முசல்லாவிலேதான் மௌலானா உட்காருவார். தீர்க்க முடியாத நோய்களை, மனநிலை பிறழ்ந்த பெண்களை, விசம் கொட்டுண்டு வீங்கிய பிள்ளைகளை, சைத்தான் பிடித்த குமருகளை தவிர அவசரத்திற்கு வேறு யாரும் மௌலானா வை தரிசிக்க முடியாது. வரிசையில் நான்கு நான்காக பெண்களும் இரண்டு இரண்டாக ஆண்களும் இருக்கவேண்டும். ஊரின் பெரிய பள்ளிகளின் மரைக்காயர்களோ பட்டினசபை மெம்பர்களோ யாராகினும் வரிசையிலே நிற்கவேண்டும்.
பொறையாரில் பிறந்து
வறுமையில் நெடிந்து
வலிகளைச் சுமந்து
உழைப்பை நம்பி உறுதியுடன்
பொதுகை (புதுவை) வந்தார்…
பல போராட்டங்களுக்கு மத்தியில் வாழ்க்கை
உழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை.
அடைக்கலம் தந்தார் மாமனிதர்
அன்போடு அடிமையாய் உழைத்தார்
அவர் நலன் கருதி.
இலங்கைப் போர்ச்சூழலில் தமிழர் பகுதியிலிருந்த அறிவுச் செல்வங்கள் அழிந்ததை அறிந்திருக்கின்றோம். யாழ் பொது நூலகம் ஜூன் 1, 1981 இரவு எரிக்கப்பட்டதை அறிந்திருக்கின்றோம். அன்றிரவே ஈழநாடு பத்திரிகை நிறுவனமும் எரிக்கப்பட்டு, ஊழியர்கள் படுகாயமடைந்ததையும் அறிந்திருக்கின்றோம். ஈழநாடு பத்திரிகை மீண்டும் இந்திய அமைதிப்படையினரின் காலத்தில் எரிக்கப்பட்டுள்ளதையும் அறிந்திருக்கின்றோம்.
ஆனால், இன்னுமொரு தமிழர் அறிவுச் செல்வமும் அழிக்கப்பட்ட விடயத்தை இந்தக் காணொளி மூலம்தான் அறிந்துகொண்டேன். இது பற்றி அதிகமாகப் பத்திரிகைகளில் நான் வாசிக்காததால் அறிய முடியாமால் போயிற்று.
இவ்வழிவு இந்திய அமைதி காக்கும் படையினரால் ஏற்படுத்தப்பட்ட அழிவு. நமக்கெல்லாம் நன்கு அறிமுகமானதும், இலங்கைத் தமிழ் கலை, இலக்கிய வரலாற்றில் முக்கியமானதொரு கலை, இலக்கிய மற்றும் நகைச்சுவைச் சஞ்சிகையான 'சிரித்திரன்' சஞ்சிகைதான் இவ்விதம் அழிக்கப்பட்டது. இவ்விதம் இக்காணொளியில் தற்போது இலண்டனில் வாழும் ,'சிரித்திரன்' ஆசிரியர் அமரர் சிவஞானசுந்தரத்தின் மகள், திருமதி வாணி சுந்தர் நினைவுகூர்கின்றார்.
இந்திய அமைதி காக்கும் படையினர் சிரித்திரன் ஆசிரியரின் கே.கே.எஸ் வீதியிலிருந்த சிரித்திரன் அச்சுக்கூட உபகரணங்களை, அலுவலகத்தை, சிரித்திரன் இதழ்களின் அதுவரை காலம் வெளிவந்த முழுமையான சேகரிப்பினை, ஆசிரியரின் நூலகத்தினை எல்லாம் எரித்து அழித்ததாகவும், அதன் பின் அவர்களது இல்லத்தைத் தமது முகாமாக்கியிருந்ததாகவும் அவர் சம்பவங்களை விபரிக்கையில் நினைவு கூர்கின்றார்.