தெய்வச்சிலையாரின் இலக்கிய மேற்கோள்களில் : எச்சக்கிளவிகளை முன்வைத்து தொடரியல் சிந்தனைகள்தொல்காப்பியம் இலக்கியநிலையிலும் வழக்குநிலையினையும் எடுத்து இயம்பும் ஒப்பற்ற இலக்கணமாக விளங்குகின்றது. இத்தகைய இலக்கணத்தினை மக்களிடம் பரவவிட்டவர்கள் உரையாசிரியர்கள் எனலாம். இதற்கு அவர்கள் மேற்கொண்ட உரைமுறைகளும் ஒன்றாகும். அவ்வாறு உரைகூறும் பொழுது, உரையாசிரியர்கள் இலக்கியங்களில் இருந்து மேற்கோள்களைக் காட்டுகின்றனர். இவ்வாறான விளக்கத்தின் மூலம் தொல்காப்பியச் சிந்தனைப் பள்ளியினை உரையாசிரியர்கள் வளர்த்துள்ளனர். இத்தகையப் பணியில் குறிப்பிடத்தகுந்தவர் தெய்வச்சிலையார். இவரின் உரையினைத் தொடரியல் நோக்கில் அமைத்துள்ளார். எனவே, இவர் பயன்படுத்திய இலக்கிய மேற்கோள்களில் தொடரியல் சிந்தனையைக் காணும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.

எச்சங்கள்

எஞ்சி நிற்பன எல்லாம் எச்சம் எனலாம். வினையைக் கொண்டு முடிவது வினையெச்சம். பெயரைக் கொண்டு முடிவது பெயரெச்சம். வினையியலில் கூறப்படும் எச்சங்கள் வினையெச்சம் என்றும் பெயரெச்சம் என்றும் இருவகைப்படும். வினையைக்கொண்டு முடிவன எல்லாம் வினையெச்சம் இல்லை. குறிப்பிட்ட இலக்க அமைப்பிற்கு உட்பட்டுவருவன மட்டும் வினையெச்சம் எனப்படும்.

எச்சம் என்ற சொல் இலக்கண உலகில் இருபொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு சொல் மற்றொரு சொல்லை எஞ்சிநிற்பது அல்லது அவாவி நிற்பது. மற்றொன்று ஒன்றைக் கூற இன்னொன்று எஞ்சி நிற்பது. வினையியலில் கூறப்படும் எச்சம் முதல் பொருளிலேயே வந்துள்ளது. ஒன்று தொடாpயல் அடிப்படையாகக்கொண்டது மற்றது பொருண்மையியலோடு தொடர்புடையது  (அகத்தியலிங்கம்.ச : 2001 : 201) என்று  ச.அகத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

வினையெஞ்சு கிளவி

வினையெச்சமாவது ஒரு வினைச்சொல் எஞ்சிநிற்பது

(தெய்வச்சிலையார் : 1984 : 244)

என்று தெய்வச்சிலையார் விளக்கம் தருகிறார். மேலும்,

வினையெஞ்சு கிளவிக்கு வினையும் குறிப்பும்

நினையத் தோன்று முடிபா கும்மே

ஆவயிற் குறிப்பே ஆக்கமொடு வருமே” (தொல்.தெய்வ.424)

என்ற நூற்பாவிற்கு,

வினையெச்சமாகவுடைய சொல்லிற்கு வினையும், வினைக்குறிப்பும் நினையத் தோன்றிய முடிபாகும். ஆண்டு, வினைக் குறிப்பு ஆக்கச் சொல்லோடு அடுத்துவரும் என்றுகூறி, இதற்கு,

“அழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னார்

வழுக்கியுங் கேடீன் பது”  (குறள்.165)

என்ற குறளினை மேற்கோளாகக் காட்டி,

கேடுபயத்தற்கு அழுக்காறு தானே அமையும், பகைவர் கெடுக்குதல் தப்பியும்…… வேண்டுதலின், வரும் என்பது எஞ்சி நின்றது. மேலும் ஓர் சான்றில்,

“அற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி” (குறள்.22)

என்பதற்குப் பொருள் வைத்தற்கு இடம் பெற்றான் ஆம் என உரைக்க வேண்டுதலின், ஆமென்னும் வினைக்குறிப்பு எஞ்சி நின்றது (தெய்வச்சிலையார்:1984:244) என்று விளக்கம் தருகிறார்.

பெயரெஞ்சு கிளவி

உண்ணும் சாத்தன், உண்ட சாத்தன் என்ற சான்றுகளையே இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகிய மூவரும் தந்துள்ளனர். இளம்பூரணர் வினையியல் நூற்பாவிற்கும் இதற்கும் வேறுபாடு காட்ட முயன்றுள்ளார். மாறாக, தெய்வச்சிலையார் செய்யுளில் பெயர்ச்சொல் கெட்டு வந்ததை உதாரணமாகக் காட்டியுள்ளார்.

“பெயரெஞ்சு கிளவி பெயரோடு முடியுமே” (தொல்.தெய்வ.425)

என்ற நூற்பாவிற்கு,

“துறக்குவன் அல்லன் துறக்குவன் அல்லன்

தொடர்வரை வெற்பன் துறக்குவன் அல்லன்

தொடர்புள் இனையவை தோன்றின்” (கலி.41)

‘உயர்த்திணை என்மனார் மக்கட் சுட்டே’ (கிளவி)

“மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே

அரும்பிய சுணங்கின் அம்பகட் டிளமுலைப்

பெருந்தோள் நுணுகிய நுசப்பிற்

கல்கெழு கானவன் நல்குறு மகளே” (குறுந்.71)

மேற்கண்ட மேற்கோள்களைக்காட்டி,

இதனுள் எனக்கு என வேண்டுதலின் வேற்றுமை ஏற்ற பெயர் எஞ்சி நின்றது. இவை தெய்வச்சிலையார் கொடுத்த கூடுதல் உதாரணங்கள். உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே என்ற தொல்காப்பியச் சூத்திரத்தில், என்மனார் ஆசிhpயர் என வேண்டுதலின், ஆசிhpயர் என்னும் பெயர் எஞ்சி நின்றது. மற்றுமோர் குறுந்தொகைப்பாடலில், இதனுள் எனக்கென வேண்டுதலின், வேற்றுமையேற்ற பெயர் எஞ்சி நின்றது  (தெய்வச்சிலையார்:1984:245-46) என்று உரை கூறுகின்றார்.

மேற்கண்ட சான்றுகள் தொடரியல் நோக்கில் அணுகக் கூடியவையாகும். வெற்பன் துறக்குவன் அல்லன் என்று கூறிவிட்டு, தொடர்புள் என்ற பெயரில் அடையாக - அவன் என்பது ஊகிக்கக் கூடியதாகும். இங்குப் பெயர் கொடுத்தது யாப்புக்காக இருக்கலாமோ என்று எண்ண வேண்டியிருக்கிறது. மேலும், இரண்டாவது மேற்கோளில் என்மனார் என்ற வினைமுற்றுக்கு உரிய எழுவாய் இல்லை. இலக்கணம் ஆதலின், ஆசிரியர் என்ற பெயர்ச்சொல் எழுவாயாகக் கொள்ளப்பட்டது. மூன்றாவது சான்றில் ‘நல்குறு மகள் மருந்து’ என்பதே வாக்கியம். எனவே இன்னதற்கு இன்னாருக்கு என்ற தொழில்  முதனிலை கெட்டுள்ளது. எனவே அதை எமக்கு என்ற சொல்வருவித்து ஈடுகட்டுகிறோம். குறுந்தொகைப் பாடலைப் பொருத்தவரையில், எமக்கு என்ற நான்காம் வேற்றுமை கெட்டிருப்பது உடைமை உணர்ச்சி  இல்லாததைப் புலப்படுத்துவதாகக் கொள்ளலாம்.

பிரிநிலையில்லா பெயரெச்சத் தொடர்

பெயரெச்சங்கள் இரண்டு வகைப்படும். பிரிநிலைப் பெயரெச்சம், பிரிநிலையில்லாப் பெயரெச்சம் என்பவையாகும். இத்தகைய பெயரெச்சங்கள்,

ஒன்றை மற்றொன்றில் இருந்து பிரித்துக்காட்டும் பெயரெச்சம் பிரிநிலைப் பெயரெச்சம். அவ்வாறு இல்லாமல் ஒன்றின் பண்பைக் கூறுவது பிரிநிலையில்லாப் பெயரெச்சம் (அகத்தியலிங்கம்.ச:2001:219) என்று ச.அகத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

“இனச் சுட்டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை

வழக்கா றல்ல செய்யு ளாறே” (தொல்.தெய்வ.18)

என்ற நூற்பாவிற்கு விளக்கம் தரும்பொழுது, புறநானூற்றுப் பாடலையும், அகநானூற்றுப் பாடலையும்  மேற்கோளாகத் தெய்வச்சிலையார் காட்டியுள்ளார்.

மாக்கட னிவந்தெழு செஞ்ஞாயிற்றுக் கவினை (புறம்.4)

நெடுவெண் டிங்களு மூர்கொண் டன்றே (அகம்.2)

இதற்கு விளக்கம் தருகின்ற பொழுது,

இனச்சுட்டில்லாத பொருளாவன:- ஞாயிறு, திங்கள், தீயென்பன என்று கூறி, மேற்கண்ட எடுத்துக்காட்டினைக் கூறி, இவை வழக்கின்கண் வரின் கருஞாயிறும், கருந்திங்களும், தண்ணரியும் உளபோலத் தோன்றும். ஆயினும் செய்யுட்கண் அமையும் என்றவாறு. செம்போத்து என வழக்கின்கண் இனஞ்சுட்டாது வந்ததாலெனின், அப்பொருட்கு அது பெயரென்க. பெருவண்ணான், பெருங்கொல்லன் என வழக்கின்கண் இனஞ்சுட்டாது வந்ததாலெனின், பண்பாவது தமக்குள்ள தோரியல்பு: ஈண்டப்பெருமையியல் பன்மையான், அஃது உயர்த்துச் சொல்லுதற்கண் வந்ததென்க. பண்புகொள் பெயர் என்று விசேடித்தமையால், ஏனைப்பெயர்கள் இருவகை வழக்கினும் இனஞ்சுட்டாது வரப்பெறுமெனக் கொள்க (தெய்வச்சிலையார்:1984:21) என்று குறிப்பிட்டுள்ளார்.

மேற்கண்ட கூற்றினைக் காணும்பொழுது, ஞாயிற்றிலிருந்து செஞ்ஞாயிற்றைப் பிரிக்கவில்லை என்பதும், திங்களிலிருந்து வெண்திங்களைப் பிரிக்கவில்லை என்பதும், இதுபோன்று வானில் பவனிவரும் ஞாயிறு என்றோ திங்கள் என்றோ கூறி, வானில் பவனிவராத ஞாயிறுகளையும் திங்களையும் பிரிக்காமல் இருப்பது வெளிப்படையாகத் தரிகிறது என்பதும் புலப்படுகின்றன. எனவே இங்கு வருகின்ற பெயரெச்சத்தொடர் பிரிநிலையில்லாப் பெயரெச்சத் தொடர் என விளக்கியுள்ளார் எனலாம்.

எதிர்மறை எச்சம்

எதிர்மறைப் பொருள் எஞ்சி நிற்பதாகும். இதனை,

“எதிர்மறை எச்சம் எதிர்மறை முடிபின” (தொல்.தெய்வ.427)

என்ற தொல்காப்பிய நூற்பாவால் அறியலாம். இதற்கு, எதிர்மறை எச்சமாவது ஒருபொருளைக் கூறியவழி, அதனின் மாறுபட்ட பொருண்மையும் அதனானே உணரநிற்பது (தெய்வச்சிலையார்:1984:244) என்று தெய்வச்சிலையார் குறிப்பிட்டுள்ளார்.

“இம்மைப் பிறப்பிற் பிரியல மென்றேனாக்

கண்ணிறை நீர்கொண் டனள்” (குறள்.)

என்ற குறளைக்காட்டி,

மறுபிறப்புப் பிரிவேம் என நினைத்துக் கண்ணிறை நீர்கொண்டனள் எனப் பொருளுரைக்க வேண்டுதலின், எதிர்மறை, எஞ்சிநின்றனள் எதிர்மறைப் பொருளொடு முடிந்தவாறு (தெய்வச்சிலையார்:1984:246) என்று உரைத்துள்ளார்.

 

சொல்லெச்சம்

சொல்லெச்சமாவது ஒரு சொல்லின்னான் ஒரு பொருளை விதந்தோதியவழி, அவ்விதப்பினானே பிறிது பொருளைக் கொள்ளுமாறு நிற்பது (தெய்வச்சிலையார்:1984:244) என்று குறிப்பிடுகிறார்.

“நெடும்புனலுள் வெல்லு முதலை

கடும்புனலி னீங்கி னதனைப் பிற”(குறள்.495)

“காலாழ் களரி னரியடுங் கண்ணஞ்சா

வேலாண் முகத்த களிறு” (குறள்.500)

போன்றசான்றுகளைத் தந்து,

என்றவழித் தமது நிலத்தில் எளியவர் நின்றாலும் பிறரது நிலத்தில் வலியாரும் எளியாராவர் என்னும் பொருண்மை இச்சொற்றானே யுணர்த்துதலிற் சொல்லெச்சமாயிற்று (தெய்வச்சிலையார்:1984:244) என்கிறார்.

நிறைவாக,

தெய்வச்சிலையாரின் இலக்கிய மேற்களைக் காணும் பொழுது, பெயர், வினை, சொல் என்று எஞ்சி வருகிறது. இனச்சுட்டு என்பது அதன் இனத்தினைக் குறிப்பாக உணர்த்துவதாகும். இங்கு பிரிநிலையில்லா பெயரெச்சம் என்பது இலக்கிய வழக்குகளிலே காணப்படுகின்றது. எனவே, இலக்கிய ஆசிரியர்கள் எச்சக்கிளவிகளை இலக்கிய நயம் கருதிப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என அறியமுடிகிறது.

துணைநின்றவை

1.தெய்வச்சிலையார் (உ.ஆ.) தொல்காப்பியம் – சொல்லதிகாரம்

தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடு,

நிழற்படப்பதிப்பு, 1984

தஞ்சை-01.

அகத்தியலிங்கம் ச. தமிழ்மொழி அமைப்பியல்

மணிவாசகர் பதிப்பு ,சிதம்பரம்.,

சண்முகம் செ வை தொல்காப்பியத் தொடரியல், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2004 சென்னை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R