'தாயகம் (கனடா)' தொடராக 'அமெரிக்கா''மகுடம்' பதிப்பக வெளியீடாக 'அமெரிக்கா'

83 இனக்கலவரத்தைத்தொடர்ந்து நாட்டை விட்டுக் கனடா நோக்கிப்புறப்பட்டபோது வழியில் அமெரிக்காவில் தடுத்து நிறுத்தப்பட்டுத் தஞ்சம் கேட்டு , நியூயார்க் பெரும்பாகத்திலுள்ள புரூக்லீன் நகரத்துத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட அனுபவங்களைப் பதிவு செய்யும் பொருட்டு எழுதிய நாவலான 'அமெரிக்கா' 'தாயகம்' (கனடா) பத்திரிகையில் வெளியானது. ஏற்கனவே தொகுப்பு நூலாகத் தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக வெளிவந்தது.

அளவில் சிறிய நாவலானாலும் 'அமெரிக்கா' தனி நூலாக வெளிவரவேண்டுமென்று நீண்ட நாள்களாக விரும்பியிருந்தேன். தற்போது அதற்கான காலம் கனிந்து வந்துள்ளது. திருத்தப்பட்ட பதிப்பாக இந்நாவல் விரைவில் இலங்கையில் 'மகுடம்' பதிப்பக வெளியீடாக வெளிவரவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஏற்கனவே எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூல் எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்தவினால் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு 'அஹஸ மீடியா வேர்க்ஸ்' பதிப்பக வெளியீடாக வெளிவந்தது தெரிந்ததே. தற்போது 'அமெரிக்கா' நாவலும் இலங்கையில் வெளிவரவுள்ளது மகிழ்ச்சியினைத் தருகின்றது.


எஸ்.பொ.வின் 'நனவிடை தோய்தலும்' மகாகவி பாரதியும்!

நீண்ட நாட்களாக நனவிடை தோய்தல் எஸ்.பொ. அவர்கள் உருவாக்கிய சொல்லென்று எண்ணியிருந்தேன். ஆனால் பின்னர்தான் தெரிந்தது அது மகாகவி பாரதியார் தன் சுயசரிதையில் பாவித்த சொல்லென்று. தனது சுயசரிதையில் தனது பிள்ளைக்காதல் பற்றிக் கூறுகையில் 'அன்ன போழ்தினி லுற்ற கனவினை அந்த மிழ்ச்சொலி லெவ்வணஞ் சொல்லுகேன்? சொன்ன தீங்கன வங்கு துயிலிடைத் தோய்ந்த தன்று, நனவிடை தோய்ந்ததால்..' என்று மகாகவி பாரதியார் அச்சொல்லை ஏற்கனவே பாவித்துள்ளார். மகாகவி பாரதியாரின் கவிதை வரிகளை வைத்து எத்தனை எழுத்தாளர்கள் புனைகதைகளை, அபுனைவுகளை எழுதியிருக்கின்றார்கள். 'தீக்குள் விரலை வைத்தால்' (கே.எஸ்.ஆனந்தன்), 'பேசும் பொற் சித்திரமே', 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' (சேவற்கொடியோன்), 'தீராத விளையாட்டு' (கு.அழகிரிசாமி), 'வெந்து தணிந்தது காடு' (இந்திரா பார்த்தசாரதி), 'மண்ணில் தெரியுது வானம்' (ந.சிதம்பர சுப்பிரமணியன்) .. இவ்விதம் பலர் தம் நாவல்களுக்கு பாரதியாரின் கவிதை வரிகளைத் தலைப்புகளாக்கியுள்ளார்கள். அவ்வகையில் எஸ்.பொ. அவர்கள் தன் அபுனைவு நூலுக்கு 'நனவிடை தோய்தல்' என்னும் பெயரை வைத்துள்ளார்.


The Good, The Bad And The Ugly..

The Good, The Bad And The Ugly..Ennio Morricone சிறந்த இசையமைப்பாளர். The Good, The Bad And The Ugly திரைப்படத்துக்கு இசையமைத்தவர் இவரே. இத்தாலிய இயக்குநர் ஒருவரினால் (Sergio Leone) இயக்கப்பட்ட 'Cow Boy திரைப்படம் என்னும் சிறப்பினைப்பெற்ற இத்திரைப்படம் வெளிவந்த காலத்தில் மிகுந்த வரவேற்பைப்பெற்ற திரைப்படம். அண்மையில் டேனிஷ் தேசிய சிம்பொனி இசைக்குழுவினரால் இத்தாலிய- அமெரிக்கத்திரைப்படங்களிலிருந்து பெறப்பட்ட இசையினைத் தொகுத்து வழங்கப்பட்ட இந்நிகழ்ச்சியின் காணொளியைக் கண்டேன்; கேட்டேன்; என்னையே மறந்தேன். நீங்களும் உங்களை மறக்க உங்களுக்காக இதோ இங்கே: https://www.youtube.com/watch?v=enuOArEfqGo

பல்வகை வாத்தியங்களின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்படும் சிம்பொனி இசையென்றால் என்ன என்பது பற்றி அறிய விரும்பும் அனைவருக்குமாக வினவு இணையத்தளத்தில் வெளியான முனைவர் ச. அ. வீரபாண்டியன் 'சிம்பொனியின் தோற்றமும் வளர்ச்சியும்' என்னும் கட்டுரைக்கான இணைப்பினையும் தருகின்றேன். இசை கேளுங்கள். அது பற்றிய் அறிவினையும் வளர்த்துக்கொள்ளுங்கள்: https://www.vinavu.com/2016/07/28/history-of-symphony/

டேனிஷ் தேசிய சிம்பொனி இசைக்குழுவினரால் இத்தாலிய- அமெரிக்கத் திரைப்படங்களிலிருந்து பெறப்பட்ட இசையினைத் தொகுத்து வழங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில The Good, The Bad And The Ugly திரைப்பட இசையினைக் கேட்டதிலிருந்து அத்திரைப்படத்தை மீண்டுமொருமுறை பார்க்க வேண்டுமென்று ஆர்வம் ஏற்பட்டது. மாணவப்பருவத்தில் பார்த்த பல ஆங்கிலத்திரைப்படங்களில் என்னை மிகவும் கவர்ந்த திரைப்படங்களில் ஒன்று இத்திரைப்படம். இத்தாலிய இயக்குநரான சேர்ஜியோ லியோனால் இயக்கப்பட்ட திரைப்படத்தின் இயக்குநர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர்கள் பலர் இத்தாலியர்கள் என்பதால், அவர்களால் உருவாக்கப்பட்ட வெஸ்டேர்ன் திரைப்படம் என்பதால் அமெரிக்கத் திரைப்பட விமர்சகர்களால் 'ஸ்பாகட்டி வெஸ்டேர்ன்' (Spaghetti Western ) என்று கிண்டலாக அழைக்கப்பட்டது. ஆனால் இன்று இத்திரைப்படம் மிகச்சிறந்த வெஸ்டேர்ன் திரைப்படங்களிலொன்றாக வரலாற்றில் நிலைபெற்றுவிட்டது.

மிகவும் அதிக அளவில் வன்முறைகளை (துப்பாக்கி மோதல்களை, அழிவுகளை) உள்ளடக்கிய இத்திரைப்படத்தின் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் மூன்று நடிகர்களுமே ஒருவருக்கொருவர் போட்டி போட்டிக்கொண்டு நடித்திருப்பார்கள். இருந்தாலும் நடிப்பதற்கு அதிக வாய்ப்பு The Ugly பாத்திரத்தில் நடித்திருக்கும் Eli Wallach கிடைத்திருந்தது. அமெரிக்கச் சமூக யுத்தத்தின் பின்னணியில் நடைபெறும் திரைக்கதை மயானமொன்றில் கல்லறையொன்றில் புதைக்கப்பட்டிருக்கும் புதையலை அடைவதை மையமாக வைத்துப் பின்னப்பட்டிருக்கும். பணமென்றால் பிணமும் வாய் திறக்கும். அதை அடைவதற்கான முயற்சியில் மானுட ஆசையினை, வெறியினை அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார் Eli Wallach . இவர் 2014இல் தனது தொண்ணூற்றியொன்பதாவது வயதில்தான் மறைந்தார். லீ வான் கிளீவ்வும் மறைந்து விட்டார். கிளிண்ட் ஈஸ்ட்வூட்டும் இன்னும் இருக்கின்றார்.

கிளிண்ட ஈஸ்ட்வூட் (Clint Eastwood) , லீ வான் கிளீவ் (Lee Van Cleef) எல்லோரும் என் விருப்பத்துக்குரிய நடிகர்கள்.

திரைப்படத்தின் ஆரம்பத்தில் மூன்று கதாபாத்திரங்களும் அறிமுகமாகும் காட்சியினைச் சிறப்பாக உருவாக்கியிருக்கின்றார் இயக்குநர்.

'டோனினோ டெலி கொலி'யின் (Tonino Delli Colli) ஒளிப்பதிவும் சிறப்பானது.

திரைப்படம் முழுவதும் 'எனியோ மோரிக்கோனின்' (Ennio Morricone) இசை மிகவும் சிறப்பாக, உள்ளத்தைக் கவரும் வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. 'சேர்ஜியோ லியோ'னிம் (Sergio Leone) இயக்கம் , விறுவிறுப்பான திரைக்கதை, கண்ணைக்கவரும் ஒளிப்பதிவு எனப் பல விடயங்கள் இத்திரைப்படம் என்னைக் கவர்வதற்குரிய காரணங்கள்.

மேலும் மானுட ஆளுமையின் பல்வகை பக்கங்களையும் சிறப்பாகப் பிரநிதித்துவப்படுத்தும் வகையில் இத்திரைப்படத்தின் மூன்று பாத்திரங்களும் சித்திரிக்கப்பட்டுள்ளார்கள். இத்திரைப்படத்துக்கான காணொளியினை யு டியூப்பில் கண்டு களித்தேன். நீங்களும் கண்டு களியுங்கள். https://www.youtube.com/watch?v=Tw4qbH3qzBU


காலத்தால் அழியாத கானங்கள்: ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்! நீயொரு தனிப்பிறவி!

தனிப்பிறவி படத்தில் வாத்தியாரும், அம்மாவும்...பாட்டு கேட்டு நீண்ட நாட்களாகி விட்டன. டி.எம்.எஸ்- பி.சுசீலாவின் பாடலொன்று கேட்போமா? கவிஞர் கண்ணதாசனுக்கு மடை திறந்த வெள்ளமென சொற்கள் வந்து அழகாக விழுந்திருக்கின்றன இப்பாடலில். கே.வி.மகாதேவன்/ எம்ஜிஆர்/கண்ணதாசன்/டி.எம்.எஸ்-பி.சுசீலா கூட்டணியில் உருவான திரைப்படப்பாடல்கள் பல காலத்தால் அழியாத கானங்கள். அவற்றில் இப்பாடலுக்கும் இடமுண்டு. எழுபதுகளில் பட்டி தொட்டியெங்கும் அடிபட்ட பாடலிது. ஆலயங்களில் நடைபெறும் இசைக்கச்சேரிகளில் தவறாமல் பாடப்படும் பாடல்களிலொன்று.

பாடல் இடம் பெற்றுள்ள 'தனிப்பிறவி' திரைப்படத்தை நான் யாழ் நகரில் அமைக்கப்பட்டிருந்த புது வின்சர் திரையரங்கில் பார்த்ததாக நினைவு.

இப்பாடலில் எம்ஜிஆரின் இளமைத்தோற்றமும், ஜெயலலிதாவின் வயதுக்கு மீறிய வளர்ச்சியினை வெளிப்படுத்தும் தோற்றமும் நன்கு இணைந்திருப்பதே அவர்களுக்கிடையிலான இரசாயனத்தின் வெற்றிக்குக் காரணம். இப்படத்திலுள்ள எம்ஜிஆரின் தோற்றத்தைப்பார்த்து யாராவது கூறுவார்களா அவருக்கு அப்போது வயது ஐம்பது என்று?

இப்பாடலில் நான் இரசித்த ஏனைய அம்சம்: ஜெயலலிதாவின் நடன அசைவுகளும், அதற்கு ஈடுகொடுத்து நடித்திருக்கும் எம்ஜிரின் நடன அசைவுகளும்தாம்.

https://www.youtube.com/watch?v=d8hrEvZkjeQ&start_radio=1&list=RDd8hrEvZkjeQ&t=4&fbclid=IwAR0N5DDEYCSM87OM2PDAtaCT8Ui3oBHyRBA9U2Nn-ihYAmpYE-77_zjF0mA

பாடல் வரிகள் முழுமையாக:

ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்! நீயொரு தனிப்பிறவி!
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்! ஏன் இனி மறுபிறவி?
ஒரே முறைதான்...

வானம் பார்த்த பூமியின் மேலே மழையென விழுந்தாயே!
நீலம் பூத்த விழிகளினாலே நீ எனை அழைத்தாயே!
வசந்த காலப் பூக்களின் மேலே வண்டென அமர்ந்தாயே!
அமர்ந்த வண்டு பறந்து விடாமல் ஆசையில் அணைத்தாயே!
ஒரே முறைதான்...

காளையர் தோளைத் தேடி மகிழ்ந்தால் காதல் சுவையாகும்!
கன்னிப் பெண்ணின் கண்ணடி விழுந்தால் கல்லும் மலராகும்!
பொல்லா மனதில் ஆசை புகுந்தால் பொழுதும் பகையாகும்!
புல்லாங்குழலில் காற்று நுழைந்தால் புதுப் புது இசையாகும்!
ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்! நீயொரு தனிப்பிறவி!
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்! ஏன் இனி மறுபிறவி?

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R