திருப்பூர் கிருஷ்ணனின் “சிவப்பாய்ச் சில மல்லிகைகள்” சிறுகதையில் குடும்ப உறவுநிலைகளும் கதைமாந்தரின் பண்புகளும் - முனைவர் கா.சுரேஷ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுயநிதிப் பிரிவு), பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி, அவிநாசி ரோடு, கோயம்பத்தூர் - 14. -

தமிழ்மொழியில் தோன்றிய படைப்புகளில் ஆசிரியர்கள் மக்களின் சமுதாயப் பிரச்சினைகளையும், வாழ்வியல் நிலைகளையும் நேரில் கண்டும், தன் வாழ்வியல் நிகழ்ந்த நிகழ்வுகளையும் தம் சிறுகதைகளின் மூலம் வெளிப்படுத்துகின்றனர். அத்திறன் மிக்கவர்களில் திருப்பூர் கிருஷ்ணன் இலக்கியத் துறைகள் அனைத்திலும் ஈடுபாடு கொண்டு ஐநூறுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரின் சிறுகதைகளில் குடும்ப வாழ்வியல், சமுதாய வாழ்வியலை மையமாகக் கொண்டும், பெரும்பாலான சிறுகதைகளில் பெண் கதைமாந்தரை முதன்மைப்படுத்தி எழுதியுள்ளார். ‘சிவப்பாய்ச் சில மல்லிகைகள்’, ‘பட்டொளி வீசி’ ஆகியன இவரின் சிறுகதைத் தொகுப்புகளாகும். 1981 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘சிவப்பாய்ச் சில மல்லிகைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பை ஆராய்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
சிறுகதை
அளவிற் சிறிதாக இருப்பது சிறுகதை, ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்குள் படித்து முடிக்கக் கூடியதாகவும், ஒரே மூச்சில் படித்து முடிக்கக் கூடியதாகவும் இருப்பனவெல்லாம் இதிலடங்கும் என்பர். ஆனால் கால எல்லை மட்டும் அதன் முழு இலக்கணம் அன்று. சிறுகதை என்பது வாழ்க்கையில் நிகழும் ஒரு நிகழ்ச்சியை அல்லது ஓர் உணர்ச்சியைக் கருவாகக் கொண்டு பின்னப்படுவதாகும். ஒரு பாத்திரம், ஒரு மனவுணர்ச்சி, ஒரு நிகழ்ச்சி என ஏதேனும் ஒன்றை மட்டுமே நிலைக்களனாக வைத்துக் கொண்டு படைப்பது சிறுகதையாகும்.
சிறுகதை என்பது வாசிப்பவனின் மனதில் சோர்வு இல்லாமலும், அக்கதை படித்து முடிக்கும் வரை, அவன் மனதில் பல்வேறு சமுதாயக் கருத்துகளை எடுத்துக் கூறும் இலக்கிய வகை எனலாம்.


ஓர் இனக்குழு வேலூர் பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகிறது. அவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவர்கள் என்பதால் அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்கள் சாதி சார்ந்த அவர்களின் வேலை நிர்ணயிக்கப்படுகிறது. சமூகத்தால் தாங்கள் அடிமையாக இருந்து கொண்டும் சாதி ரீதியாக கொடுமைப்படுத்திய படுவதைக் கண்டு அந்த சமூகம் காலங்காலமாக மவுனமாக இருந்து கொண்டிருக்கிறது. அப்போதுதான் கல்வி என்பதற்கு பெரிய விடுதலையாக ஆயுதமாக இருக்கிறது என்பதும் தெரிகிறது.
எங்கள் கந்தவனத்தை இறைவன் அழைத்திட்டான்
கவிஞர் வி. கந்தவனம் அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்தது எமக்கு, குறிப்பாகக் கனடிய மக்களுக்குப் பேரிழப்பாகும். காங்கேசந்துறையில் நடக்கும் இலக்கிய விழாக்களில், மாணவப்பருவத்தில் குறிப்பாகப் பட்டிமன்றம், கவியரங்கம் போன்றவற்றில் கவிஞரைச் சந்தித்திருக்கின்றேன். ஆனால் இங்கே கனடாவில் அதிபர் பொ. கனகசபாபதி வீட்டில்தான் இவரை முதலில் சந்தித்தேன். உதயன் சிறுகதைப் போட்டியில் தங்கப்பதக்கம் கிடைத்தபோது என்னை அழைத்து வாழ்த்தியிருந்தார். அதன்பின் எழுத்தாளர் இணையத்தின் செயலாளராக எனக்கு ஒரு பதவியையும் பெற்றுத் தந்தார். அதன் பின்தான் வரவேற்புரையோ அல்லது நன்றியுரையோ மேடையில் ஏறிச் சொல்ல எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.


இந்தக் காலம் தொழில்நுட்ப வளர்ச்சி மிகுந்த காலம். காலத்திற்கு ஏற்ற வளர்ச்சியில் ஒரு மொழி பங்கு கொள்ளும் பொழுதுதான் அம்மொழி வளரும் என்று ஆய்வறிஞர்கள் கருதுகின்றனர். தமிழ் மொழி அவ்வாறே காலத்தைக் கடந்தும் வளர்ந்து வரும் மொழியாக அமைந்துள்ளது. தமிழ் மொழி வளர்ச்சியின் காலப் பரிமாணங்களில் பானையோடு, கல்வெட்டு, ஓலைச்சுவடி, செப்புப் பட்டயம், காகிதச் சுவடி, அச்சாக்கம், மின்னாக்கம், இணையம் ஆகியன அமைந்துள்ளன. அந்த வகையில் இணைய தளத்தில் தமிழ் மொழியின் தரவுகளைப் பதிவேற்றம் செய்வது காலத்தின் கட்டாயம் ஆகும். கல்விசார் வளங்களைப் பல்வேறு இணைய வளங்களில் பல்வேறு மொழிகள் பாதுகாத்து வருகின்றன. அவ்வாறு பாதுகாத்தல் வேண்டும் என்பதைக் கட்டற்ற தன்னார்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அப்படிப்பட்ட ஒரு கல்விசார் வளமாக விக்கிமூலம் அமைந்திருக்கின்றது. இத்திட்டத்தின் வழியாக மொழித்தரவுகளை மேம்படுத்தும் தன்னார்வலர்களுக்கு நிதியுதவி அளித்தும் போட்டிகள் நடத்தியும் ஊக்கப்படுத்தி வருகின்றார்கள் விக்கிமீடியா அறக்கட்டளையினர். இத்திட்டம் கட்டற்ற உரிமத்துடன் கல்விசார் ஆவணங்களைப் பாதுகாக்கும் திட்டமாக விளங்கி வருகின்றது. இது விக்கிமீடியா அறக்கட்டளையின் விக்கித் திட்டங்களுள் ஒன்று. இத்திட்டம் பற்றிய தகவல் இன்னும் பலரைச் சென்றடையவில்லை. விக்கிப்பீடியா சென்றளவில் கூட இத்திட்டம் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னுரை


நான் ஆப்பிரிக்காவில் 17 ஆண்டுகள் வேலை செய்திருக்கிறேன். அதில் 16 ஆண்டுகள் போட்ஸ்வானாவில். எனது வாழ்க்கையின் வசந்த காலம் அது. எனது இளமைக்காலமாக அமைந்தது மட்டுமல்லாது குறிப்பிடத்தக்க சேமிப்பு, நல்ல ஓய்வு நேரம், உயர்ந்த வாழ்க்கைத்தரம், நட்புறவான மக்கள், சட்டம் ஒழுங்கோடு கூடிய அரசியல் ஸ்திரத்தன்மை, மோசமில்லாத காலநிலை என்று நாம் வாழ்ந்த சூழலும் அதற்கு பெரும் பங்கு வகிக்கிறது. எமக்கே இந்த நிலைமை என்றால், ஐரோப்பியர் பற்றி சொல்லத் தேவையில்லை. அங்கு அவர்கள் முதல்தர குடிமக்கள் என்பதோடு வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கத் தெரிந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு போட்ஸ்வானா ஒரு சொர்க்கபூமி. அவர்களைப் பற்றி உள்ளூர் வாசிகள் சுவாரசியமாக ஒன்று சொல்வார்கள். குறிப்பிட்ட காலம் வேலை செய்த பின் "ஊருக்கு போகப்போகிறேன், இனியும் உங்களோடு இருந்து மாரடிக்க என்னால் முடியாது" என்று கூறி விட்டு செல்லும் அவர்கள், இரண்டு மாதத்தில் பெட்டி படுக்கையுடன் திரும்ப வந்து நிற்பார்கள் . ஏன் எனக் கேட்டால், "இங்கு வாழ்ந்த எம்மால் அங்கே போய் வாழ முடியாது" என்பார்களாம். 


வரலாற்றைவிட வழக்காறுகள் இன்றியமையானவை. ஒரு சமூகத்தின் நெடிய மரபும் பண்பாடும் வழக்காறுகளில் வாழ்கின்றன. மானுட சமூகத்தில் நடப்பிலுள்ள வழக்காறுகளில் உட்செறிந்துள்ள மரபறிவினைத் தேடிச்செல்வதும், உற்றுநோக்குவதும் இன்றைய தேவைகளுள் ஒன்று என்பதனைவிட காலத்தின் கட்டாயம் எனலாம். நிலவும் உடலியல், உளவியல் பிணிகட்கும், வாழ்வியல் பிணக்குகளுக்குமான தீர்விற்கு முன்னோக்கி ஆய்வதைவிடவும் பின்னோக்கி ஆய்வதே ஏற்புடையது என்பதில் மாற்றமில்லை. அவ்வகையில் நீலகிரியில் வாழ்கின்ற, யுனெஸ்கோவால் உலகப் பூர்வகுடிகளாக சான்றளிக்கப்பட்ட ‘படகர்’ இனமக்களிடையே வழக்கிலுள்ள ‘காயிகல்லு’ என்ற மருத்துவத் தன்மைமிக்க பொருளொன்றின் பன்முகப் பயனிலையையும் அதன் தொன்மையினையும் இக்கட்டுரை ஆராய்கின்றது.
போகும்போது, லைட்டையும் அணைத்துவிட்டு, காதுவரை போர்த்தி படுத்திருந்தார். போர்த்தியவாறே என்னை ஏறிட்டு பார்த்துவிட்டு… காய்ச்சல்… குளிர்காய்ச்சல்… என்று நடுநடுங்கிய குரலில் முனங்கினார். பதறி… என்ன இது என்று நினைத்து தலைக்கடியில் மடித்து வைத்திருந்த, போர்வையினூடு வெளியே நீட்டியப்படி, இருந்த முழங்கையின் பின்புறத்தை தொட்டு, சுடுகின்றதா என்று பார்த்தேன். அப்போதுதான் குளித்துவிட்டு வந்திருக்க வேண்டும்… சில் என்று இருந்தது.


உலகம் பூராகவும் சினிமாக் கதையைக் கேட்பதும், சினிமாவைப்பற்றிப் பேசுவதும், அதனைப் பார்ப்பதும் மக்களிடம் அதிமாகிக் கொண்டே இருக்கின்றது. சினிமாக்காட்சிகள் மனித மனதில் ஏற்படுத்தும் காட்சிப்படிமங்கள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. அத்தகையதொரு வலிமையான சாதனமாக நாம் சினிமாவைப் பார்க்கலாம். உண்மையில் ஒரு பயங்கரமான செய்தியை பத்திரிகையில் படிக்கும்போது , அதனை ஒரு செய்தியாகப் படித்துவிட்டுக் கடந்துபோய்விடுவோம். ஆனால், அதே செய்தியை , அந்தக் கதையைக் காட்சியாக்கி, மனித மனதை ஆராய்ந்து கலையாக மாற்றப்பட்டு திரைப்படமாகப் பார்க்கும்போது வலிமையான ஊடகமாகிவிடுகின்றது. உணர்ச்சிகள் மேலோங்கி அவை ஒரு திகைப்பை ஏற்படுத்திச் சாதனை படைத்துவிடுகின்றது.

அம்மாவுக்கு தூக்குத்தண்டனை உறுதியாகிவிட்டது.





பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









