பாபா சாஹிப் டாக்டர் பி ஆர் அம்பேத்கார் நகர் - நாவல்/ சிந்து சீனு - சுப்ரபாரதிமணியன் -
ஓர் இனக்குழு வேலூர் பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகிறது. அவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவர்கள் என்பதால் அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்கள் சாதி சார்ந்த அவர்களின் வேலை நிர்ணயிக்கப்படுகிறது. சமூகத்தால் தாங்கள் அடிமையாக இருந்து கொண்டும் சாதி ரீதியாக கொடுமைப்படுத்திய படுவதைக் கண்டு அந்த சமூகம் காலங்காலமாக மவுனமாக இருந்து கொண்டிருக்கிறது. அப்போதுதான் கல்வி என்பதற்கு பெரிய விடுதலையாக ஆயுதமாக இருக்கிறது என்பதும் தெரிகிறது.
அந்த அனுபவத்தை சிந்து சீனு அவர்கள் இந்த நாவலில் எழுதி இருக்கிறார் அந்த மக்களில் சிலர் கல்வி அறிவு பெற்று உயர்ந்த பதிவுகள் வருவது, மகிழ்ச்சி சந்தோஷம் துக்கம் என்ற பல வகைகளில் வாழ்க்கை அவர்களுக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது அவர்கள் வாழ்ந்த பகுதியை அம்பேத்கர் நகர் என்று பெயரிடுவதற்கு போராட வேண்டி இருக்கிறது. அவர்களின் உரிமைகள் எப்படி மீட்கப்பட்டன. அந்த ஊருக்கு எப்படி அந்த பெயர் வந்தது என்பதை ஒரு சரித்திரமாக செய்தியாக இந்த நாவலில் சொல்லி இருக்கிறார்
இந்த நாவல் பல்வேறு விதமான தலித் மக்கள் பற்றிய சரித்திர ரீதியான அடக்குமுறைகள், சாதியக் கொடுமைகள் பதிவுகள் உள்ளன. வேலூர் நகரம் விரிவடையும்போது அதில் பல்வேறு சாதியினுடைய பங்களிப்பு, கிறிஸ்துவர்களின் கல்விப் பணி மற்றும் மருத்துவத் துறை பங்களிப்பு என்று இந்த நாவல் நீள்கிறது எல்லா பகுதிகளிலும் கோவில் இருக்கிறது. நம் நம் பகுதிகளில் கோவில் இல்லை என்று அவர்கள் ஒரு கோவிலை கட்டுகிறார்கள் அதுதான் மாதம்மா கோயில் அதுவே பின்னால் மாரியம்மன் கோயில் என்று மாறிவிடுகிறது. இந்த வரலாறு ஒரு முக்கிய இடத்தை இந்த நாவலில் வைத்திருக்கிறது.