Adolescence – TV miniseries - ஶ்ரீரஞ்சனி -

NetFlix இல் வெளியாகியிருக்கும் Adolescence என்ற குறுகிய தொலைக்காட்சித் தொடரைப் பதின்மவயதினருடன் தொடர்பாக இருக்கும் அனைவரும் பார்க்கவேண்டும். நான்கு பகுதிகளைக் கொண்ட இதன் முதல் தொடர் தொடர் என் ஆசிரியர் வேலையுடனும், மொழிபெயர்ப்பாளர் வேலையுடனும் தொடர்பானதாகவும், நான் பார்த்திருந்த காட்சிகளைக் கொண்டதாகவும் இருந்ததால், ஒரேயடியாக இருந்து முழுவதையும் பார்த்துமுடித்தேன்.
வன்முறையின் உச்சக்கட்டம்தான் கொலை. ஆனால், வன்முறையாளர்கள் எல்லோரும் கொலைசெய்வதில்லை. கொலைசெய்வதற்கு உளவியல்ரீதியான காரணங்கள்தான் ஏதுவாக இருக்கின்றன என்கின்றனர் உளவியலாளர்கள். சக மாணவி ஒருவரைக் கொலைசெய்வதற்கு ஒரு 13 வயதுச் சிறுவனுக்கு எவை உந்துதலாக இருந்தன என்பதைச் சொல்லும் இந்தத் தொடர் சமூக ஊடகங்களின் செல்வாக்குப் பற்றியும் எச்சரிக்கிறது.
பொதுவில், தன் செயல்களுக்குப் பொறுப்பெடுக்காத, சமூக விரோதக்குணம் கொண்ட psychopathஆக இருப்பவர்கள்தான் கொலைசெய்கிறார்களெனக் கூறப்பட்டாலும்கூட, அந்த மாணவன் அப்படியானவன் என்பதற்கான அறிகுறிகள் இதில் காட்டப்படவில்லை, அப்படியிருந்திருந்தால், அதனைக் குணப்படுத்த முடியாது என்றாலும், நேரத்துடன் கண்டறியப்பட்டால் சிகிச்சைகளால் அதன் தாக்கத்தைக் குறைக்க முடியும் என ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால், இதில் அச் சிறுவனுக்கு சுயமதிப்பின்மை, தன் உணர்சிகளைக் கையாளத் தெரியாமை என்பன இருந்தமை தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. இவ்வகையான பிரச்சினைகளுக்கு உதவக்கூடிய தொடர்பாடலைச் சந்ததி இடைவெளி முன்னெப்போதையும்விட அதிகமாக இப்போது தடைசெய்கிறது. அதுவும் ஆண் பிள்ளைகள் பொதுவில் தங்களைப் பற்றிக் கதைப்பதேயில்லை. எனவே உரையாடல்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தவேண்டியது பெற்றோரின் கடமையாகும் என்பதையும் இது விளங்கவைக்கிறது.


திரு. எஸ். பி. சாமி என்று பலராலும் அழைக்கப்பட்ட திரு. செல்லையா பொன்னுச்சாமி 19-2-2025 ஆம் ஆண்டு தனது 89 வது வயதில் எங்களைவிட்டுப் பிரிந்து விட்டார். தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகரும், யாழ்ப்பாணம் சென்ரல் மருத்துவ மனை, நொதேன் பீச் ஹேட்டல் போன்றவற்றின் உரிமையாளருமான இவரது மறைவு எங்கள் தமிழ் சமூகத்திற்குப் பேரிழப்பாகும்.

- தாவரவியல் அறிஞரும், எழுத்தாளருமான பேராசிரியர் ஆசி.கநதராஜா அவர்களின் பவள விழாவினையொட்டி வெளியாகும் எழுத்தாளர் முருகபூபதியின் கட்டுரை. பதிவுகள் சார்பில் அவரை இத்தருணத்தில் வாழ்த்துகிறோம். - வ.ந.கிரிதரன் -

பண்டைக் காலந்தொட்டே ஆசியக் கண்டத்தின் முக்கிய நிலப்பரப்பாக இந்தியா விளங்கி வருவதால், உலக நாடுகள் பலவும் பல்வேறு நிலைகளில் இந்தியாவுடான உறவுகளைப் பேணுவதில் முனைப்புடன் செயல்பட்டு வந்துள்ளன. குறிப்பாக வணிகம் செய்தல், சமயத்தைப் பரப்புதல், அரசியல், பொருளாதாரத்தில் மேலாதிக்கம் செலுத்துதல் போன்றவை அவர்களின் முக்கிய நோக்கங்களாக இன்றளவும் உள்ளன. வெளிநாட்டவர்கள் தாக்கத்தில் இந்தியாவை ஆட்சி செய்த மன்னர்களும், குறுநில மன்னர்களும் தங்களின் மேலாதிக்கத்தைச் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எமது குடும்பங்களைப் பார்வையிட அல்லது உல்லாசப்பயணியாக போகும்போது நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் வேறு ஆனால் இலங்கையின் உட்பிரதேசங்களுக்குச் சென்று வசதி குறைந்த மக்களுடன் பழகும்போது அவர்களின் வாழ்வாதாரம் குழந்தைகளின் கல்விநிலை பற்றி அறியும் போது எமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் வேறு. இலங்கை போன்ற நாடுகளில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி மிக அதிகம். அந்த இடைவெளியில் எந்தவொரு பாலமும் இதுவரை அமைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இது மனவருத்தம் தரும் விடயம்.
எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் 10 பேர் வெற்றிபெற்றிருக்கிறார்கள், பரவலான கவனத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்றால் அவ்வத்துறைகளிலான UNSUNG HEROES அதற்கு மும்மடங்குக்கும் மேல். தற்காலத் தமிழ்க்கவிதையுலகில் அத்தகைய ஒருவர் ஆத்மாஜீவ். உடல் நிலைசார் நெருக்கடியும், நிதிநிலை சார் நெருக்கடியுமாக அவர் சமீபகாலமாக எழுதிவரும் கவிதைகள் மிகவும் துன்பகரமானதாக ஒலிக்கின்றன. கவிதை என்றாலே சோகம் ததும்புவது தானே, தமிழ்க்கவிஞர்களுக்கு உலகாயுதவாழ்வில் இன்னல்களும் இல்லாமையும் உடன்பிறந்த வையாயிற்றே, என்று பலவாறாகப் பேசி நம் மனதை சமாதானப்படுத்திக்கொண்டு கவிஞர் ஆத்மாஜீவின் கவிதைகளைக் கடந்துபோய்விடலாகாது. சமீபகாலமாக தனது ஃபேஸ்புக் வெளியில் அவர் உதவிகேட்டு எழுதும் வரிகளில் ஒரு கவிஞரின் துயரம் பீறிடுகிறது. அதைத் தாண்டி தமிழ்க்கவிதையார்வலர்கள், அமைப்புகள் தனக்கு உதவாதா என்ற ஏக்கம், உதவுவார்கள் என்ற நம்பிக்கை பீறிடுகிறது. தனிநபர்களாக முடிந்த உதவியை மனமுவந்து செய்பவர்கள் இருக்கிறார்கள். எள்ளல் பார்வையோடு அவரை விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள். அவருக்கு உதவி தேவை. உதவ முடிந்தவர்கள் உதவவேண்டும் என்ற வேண்டுகோளோடு மின்னஞ்சல் வழி கேள்விகள் அனுப்பி அதற்கு அவர் அளித்திருக்கும் பதில்களை ஒரு நேர்காணலாக உங்களிடம் பகிர்ந்துள்ளேன். - லதா ராமகிருஷ்ணன் -
மாரி காலத்தில் மட்டுமே சல சலத்து ஓடும். வானம் பார்த்த வரண்ட பூமி வாழ் கிராமிய மக்களின் பார்வையில் அது கொள்ளை அழகைக் கொடுத்துப் பாயும். அதன் கருணையில் செழித்துக் கொழிக்கும் நெற் பயிர்கள் நன்றி சொல்லத் தாமும் தலை சாயும். நண்டுகள் ஓடும், மீன்கள் துள்ளும். அது கண்டு நாரைகள், கொக்குகள் திரள் திரளாய்ப் பறந்து அவற்றை கொத்திக் கொண்டோடும். ஆற்றின் இருமருங்கிலும் உள்ள நெற்பயிர்களுக்கு நீர் பற்றாதிருந்தால் நீர் இறைக்கும் இயந்திரங்கள் கட, கடவெனச் சத்தம் எழுப்பி இறப்பர் குளாய்களினூடாக ஆற்றில் பாயும் வெள்ள நீரை வயல்களுக்குள் பாய்ச்சும். கமக்காரர் முகங்களில் ஒளி வெள்ளம் பளிச்சிடும். சின்னப் பெடியங்கள் அதில் கப்பல் செய்துவிட்டு விளையாடியதும், அரைக்காற் சட்டையுடனோ, கோவணத்துடனோ அல்லது அவையின்றி அம்மணமாகவோ உன்னிப்பாய்ந்து நீச்சல் அடித்து கொட்டம் போட்டதெல்லாம் அந்தக்காலம்.




அவுஸ்திரேலியா - விக்ரோரியா மாநிலத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு V C E உயர்தரப் பரீட்சையில் தமிழ்ப்பாடத்தில் தோற்றி, மிகச்சிறந்த புள்ளிகளைப்பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நோக்கத்தில், அவுஸ்திரேலியாவில் நீண்ட காலமாக இயங்கும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், தமிழ்மொழிச்சாதனை விழாவை எதிர்வரும் 30 ஆம் திகதி ( 30-03-2025 ) ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் நடத்துகிறது.

முதல் நாளிரவு நேரம் பிந்திப் படுக்கைக்குச் சென்றதால், அடுத்த நாள் ஆறுதலாக விழித்தெழுவது என்பதுதான் திட்டம். ஆனால், ரொறன்ரோ நேரத்தைவிட ஒரு மணி நேரம் முந்தியதாக இருந்த Aruba நேரம் என்னை ஏழு மணிக்கு முன்பாகவே விழிக்கச்செய்து விட்டது. ‘மீராவின் தம்பி’, ‘சிறகடித்துப் பறப்போம்; என்ற என் இரண்டு சிறுவர் நூல்கள் யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த வீடியோவைத் தனுசன் அனுப்பியிருந்தார். நேரத்துடன் எழும்பியதால் அதனை உடனேயே பார்க்க நேரமிருந்தது. அதனூடாக முன்பின் தெரியாத இரு ஆசிரியர்கள் என் நூல்கள் பற்றிப் பார்வையைப் பகிர்ந்ததைக் கேட்கமுடிந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதை முழுமையாகப் பார்த்துமுடித்ததும் அது பற்றி ஒரு குறிப்பெழுதவேண்டும் போலிருந்தது. உடனடியாக எழுதி, தனுசனுக்கு அனுப்பிச் சரிபார்த்துவிட்டு, வீரகேசரி வாரஇதழுக்கு அனுப்பினேன்.
உ. வே.சா என்றால் - உழைப்பு , வேகம் ,சாதனை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். எங்கள் தமிழ் மொழி யின் ஏற்றத்தைப் பறைசாற்ற இலங்கியங்கள் குவிந்திருக்கின்றன என்று - மேடை களில் முழங்குகிறோம். கருத் துக்களாய் கட்டுரைகளை வரைந்து குவி க்கின்றோம். பல்கலைக்கழகங்களில் பலவித ஆராய்ச்சிகள் செய்து நூல்களாய் வெளியிடுகின்றோம். இப்படி யெல்லாம் நாங்கள் செய்வதற்கு ஆதாரமாய் ஆணிவேராய் இருப் பவரை நினைத் துப் பார்க்க வேண்டாமா ? ஆம் .... கட்டாயம் நினைத்துப் பார்க்கவே வேண்டும். அந்தப் பேராளு மைதான் உ.வே.சா என்னும் தமிழ் த் தாத்தா டாக்டர் மகாமகோபாத்தியாய சாமிநாத ஐயர் அவர்கள் ஆவார்.
ஒல்லாந்தின் முக்கிய துறைமுக நகரமான அம்ஸ்டர்டாம், எங்கள் படகின் இறுதித் தரிப்பாக இருந்தது. ஏற்கனவே 150 வருடங்கள் இலங்கைத்தீவை ஆண்டவர்கள் என்பதால் அவர்களை பற்றிய பல விடயங்களைக் கேள்விப்பட்டுள்ளேன். எஇலங்கையை விட்டு அவுஸ்திரேலிய வந்தபின் இலங்கையிலிருந்து வெளியேறிய ஒல்லாந்து கலப்பினத்தவர்கள் அதாவது இலங்கையில் அவர்களை ‘பேர்கர் ‘என்போம் அவர்கள் பலர் எனது மிருக வைத்திய நிலையத்திற்கு செல்லப்பிராணிகளை கொண்டு வருவார்கள். எனது கிளினிக்கில் வேலை செய்த நேர்ஸ் ‘கலி’ தனது பூட்டன் இலங்கையில் முதலாவது சேவையர் ஜெனரலாக இருந்தவர் எனவும் – அதற்கான ஆதாரங்களை காட்டினாள்.





சோக்ரடீசின் மெய்யியல் விசாரணை சிறைகூடத்தில் எவ்வாறு இருந்தது என்பதனை ‘சிந்தனைக் களமாகிய சிறைக்கூடம்’ என்ற அடிப்படையில் அலசியுள்ளார். மரண தண்டனைக் கைதியாக முப்பது நாள்கள் சோக்ரடீஸ் சிறையில் வாழ்ந்தார். சிறையில் நடந்தவைகளை திரைகாவியம் போல நூலாசிரியர் காட்சிபடுத்தியுள்ளார். சோக்ரடீஸ் அவரது நண்பன் கிரீட்டோ ஆகியோருக்கிடையிலான உரையாடல் நாடகப்பாணியில் தரப்பட்டுள்ளது. சோக்ரடீஸ் இன் பேச்சு முழுவதும் மெய்யியல் விசாரணையே வியாபித்திருந்தது. நாடும் சட்டமும், ஆன்மாவும் மரணமும், நல்ல மரணம், தெய்வத்திற்கு நேர்த்திக் கடன். நீட்சே, சடமும் அகமும், ஒர்பிக்வாதிகளின் மரணக் கோட்பாடு, நப்ஸ்-சுயம், ரூஹ், சித்திலெப்பை: ரூஹ் போன்ற மினிதலைப்புகளில் சோக்ரடீஸ் இன் மெய்யியலை ஒப்பாய்வு செய்துள்ளார். சோக்ரடீஸ் நஞ்சை உட்கொள்ள முன்னும் பின்னும் நிகழ்ந்தவைகளை ஒரு திரைப்படத்தின் இறுதி காட்சிபோலவே நூலாசிரியர் சித்திரித்துள்ளார். மாதிரிக்கு சில வரிகள் வருமாறு,

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் 








