அஞ்சலிக்குறிப்பு: சகலகலா வித்தகர் கலாநிதி தம்பி ஐயா கலாமணி விடைபெற்றார் ! - முருகபூபதி -

கடந்த 10 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை நான் வதியும் புறநகரத்திலிருந்து மெல்பன் நோக்கி பயணத்தை தொடங்கிய வேளையில், சிட்னியிலிருந்து இலக்கிய நண்பரும் வானொலி ஊடகருமான கானா. பிரபா தொலைபேசியில் தொடர்புகொண்டு, நண்பர் கலாமணி மறைந்துவிட்டார் என்ற துயரச்செய்தியை பகிர்ந்துகொண்டபோது அதிர்ந்துவிட்டேன். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 02 ஆம், 03 ஆம் திகதிகளில் எனது சில பொழுதுகள் வடமராட்சியில் அவருடன் கரைந்தது. அவர் தனது இரண்டாவது புதல்வனின் வீட்டிலிருந்து, மூத்த புதல்வன் பரணீதரனின் இல்லத்தில் நடந்த எனது 'சினிமா: பார்த்ததும் கேட்டதும்' புதிய நூலின் ( ஜீவநதி வெளியீடு ) வெளியீட்டு அரங்கிற்கும் வருகை தந்தார்.
மறுநாளும் அவருடன் உரையாடிக்கொண்டிருப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போதும் அவர் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கவில்லை. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலரது ஆய்வேடுகளை பரிசீலித்துக்கொண்டுதானிருந்தார். சில உடல் உபாதைகளுக்கு மத்தியிலும் அவர் உற்சாகமுடன் பேசிச்சிரித்து உரையாடி மகிழ்ந்தார். எனது குடும்பத்தின் நட்பு வட்டத்தில் நீண்டகாலம் இணைந்திருந்த ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்ட துயரத்துடன் இந்த அஞ்சலியை பகிர்ந்துகொள்கின்றேன். கடந்த 10 ஆம் திகதியே இலங்கை நேரம் மாலையில் அன்னாரது இறுதி நிகழ்வும் நிறைவெய்திவிட்டது.
அவரது மூத்த புதல்வன் , ஜீவநதி ஆசிரியர் பரணீதரனை தொடர்புகொண்டு, எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தபோது, தனது வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் ஒரு மனநிறைவான செய்தியையும் அறிந்தபின்னரே அவர் விடைபெற்றிருக்கிறார் என்ற தகவலும் கிடைத்தது. கலாமணியின் கடைசிப்புதல்வர், பெற்றவர்களினதும் மூத்த அண்ணன்மாரினதும் செல்லம், மதனாகரன், பட்டப்படிப்பினை நிறைவுசெய்து வவுனியா பல்கலைக்கழக வளாகத்தில் விரிவுரையாளர் பணியில் இணைந்துவிட்டார் என்பதே அந்த நற்செய்தி.
மதனாகரனுடனும் இதர இரண்டு புதல்வர்கள் மற்றும் அன்புத்துணவியாருடனும் கலாமணி அவுஸ்திரேலியா சிட்னியில் சிறிது காலம் தனது ஆய்வுப்பட்டத்திற்காக வாழ்ந்த காலப்பகுதியில் செல்வன் மதனாகரன் மழலைக்குரலில் பேசிக்கொண்டிருந்த குழந்தை. ஒரு நல்ல தந்தைக்கு, சிறந்த குடும்பத்தலைவனுக்கு தனது பிள்ளைகள் பற்றிய நற்செய்திகள்தான், இறுதிக்காலத்திலும் ஊக்கமாத்திரை. மருத்துவமனை தரும் மருந்து மாத்திரைகள் உடல் நலத்தை பேணிவந்தாலும், பிள்ளைகள் பேரக்குழந்தைகள் பற்றிய நற்செய்திகள்தான் உள நலத்திற்கு சிறந்த ஊக்க மாத்திரை.




யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சமூகத்தினருக்கு வணக்கம்,

கம்பராமாயணத்தில் விலங்குகள், பறவைகள்,நீர்வாழ்வன குறித்துக் கூறியுள்ளதைப் போல சில பூச்சிகள் குறித்தும் கம்பர் கூறியுள்ளார். அவற்றுள் குழவி,விளக்கு விட்டில் பூச்சி,மின்மினிப்பூச்சி,சிலந்திப் பூச்சி, வண்டு,தும்பி, மிஞிறு,இந்திரகோபப்பூச்சி,ஈ, எறும்பு, சிவப்பு எறும்பு,சிற்றெறும்பு,கரையான் முதலிய பூச்சிகள் குறித்து கம்பர், தம் இராமாயணத்தில் கூறியுள்ள பூச்சிகள் குறித்து ஆராய்வோம்.

இலங்கை, இந்தியா உட்பட கீழைத்தேய - மேலைத்தேய நாடுகளில் ஊடகவியலாளர்கள் மிகுந்த கவனத்தை பெற்றிருப்பவர்கள். அவர்களுக்கு எழுத்துத்தான் வாழ்வளித்தது. அதேசமயம் பலரது உயிரையும் அந்த எழுத்து வாங்கியிருக்கிறது ! ஊடகத்துறையில் காணாமல் போனவர்கள் , கொல்லப்பட்டவர்கள், அச்சுறுத்தப்பட்டவர்கள் பற்றியெல்லாம் நாம் அறிந்திருக்கின்றோம். சிலர் நாடு கடத்தப்பட்டனர். வேறும் சிலர் நாடுவிட்டு நாடு ஓடியிருக்கின்றனர்.



உணர்வுகளை அடையாளம்காண்பதற்கும், அவற்றை விளங்கிக்கொள்வதற்கும், தகுந்த முறையில் அவற்றைக் கையாள்வதற்குமான திறன், உணர்வுசார் நுண்ணறிவு எனப்படுகிறது. இது எம்மைச் சூழவுள்ளவர்களுடன் வினைத்திறனாகத் தொடர்புகொள்வதற்கும், எமக்கும் அவர்களுக்கும் இடையேயுள்ள முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்வதற்கும், எமது மனத்தகைப்பைக் குறைப்பதற்கும் உதவிசெய்கிறது.


அவுஸ்திரேலியாவில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் மற்றும் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கையில், வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமொன்றை கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.



ஆறு தசாப்தங்களுக்கு முன்னர், அதாவது 1960 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரத் தொடங்கிய விவேகி மாத இதழின் அன்றைய விலை நாற்பது சதம்தான். “நாற்பது சதமா…?“ அது எப்படி இருக்கும் என்று சமகாலத்தில் எமது குழந்தைகள் கேட்பார்கள். இலங்கையில் பணவீக்கம் படிப்படியாக வளர்ச்சி கண்டு, அக்கால நாணயங்களை மதிப்பிழக்கச் செய்துவிட்டது. அதற்கு காரண கர்த்தாக்கலான அரசியல்வாதிகளும் தவறான பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றிய அரசுகளும் நாணயமற்றுப் போனதன் விளைவை இலங்கை இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறது.




பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









