நைரா - வாசிப்பு அனுபவம்! நாவலாசிரியருக்கு ஒரு கடிதம்! - வித்யா அருண், சிங்கப்பூர் -
ஆடைகளின் ஏற்றுமதி எப்படித் திருப்பூரை எப்படியெல்லாம் மாற்றியிருக்கிறது என்பதை யதார்த்தமாக பதிவு செய்திருந்தீர்கள். அரசியல், மக்களின் இயல்பு வாழ்க்கை, பொருளாதாரம் வேகமாக வளரும் ஊரில் அந்த ஊரின் கடைநிலை மனிதர்கள் இடம் மாறவேண்டிய கட்டாயம், மாட்டுக்கறிக்கென இருக்கும் கூட்டம் என்று பலவற்றையும் தொட்டிருக்கிறது இந்த நாவல். பள்ளிகளில் சமசீர் கல்விக்கான புத்தகங்கள் இல்லை என்பதுகூட விடப்படவில்லை. எனக்கு எப்படி இத்தனை விஷயங்களை ஒரே புத்தகத்தில் கோர்த்தீர்கள் என்பது அதிசயமாக இருந்தது.
நைரா என்ற சொல் எனக்குப்புதிது. முதல் அத்தியாயத்தில் ரயில் நிலையத்தில் கறுத்தப்பனையாக நிற்கும் நைஜீரிய மனிதனின் அறிமுகம் நன்றாக இருந்தது. நம் ஊரில் விற்கும் சிவப்பழகு பொருட்களின் விளம்பரங்கள் வெள்ளைத்தோலை விரும்பும் மனதைத்தானே வெட்டவெளிச்சப்படுத்திக்காட்டுகின்றன. கெலுச்சி போன்ற ஆண்கள், பெண்களைப் படி, நல்ல வேலைக்கு போ என்று உற்சாகப்படுத்துபவர்காளாக இருந்தாலும், அவர்கள் சிவகாமி போன்றவர்களுக்கு ஒருவித அபசகுனம் தானே . நம்மவர் அத்தனை கருப்பாகவும், கெலுச்சி போன்றோர் நம் தமிழர்களின் சராசரி நிறத்திலும் இருந்தால், இந்தக்காதலுக்கு ஒரு தடையும் இருந்திருக்காது இல்லையா?
ஒரு கதைசொல்லியாக, அங்கங்கே டைரிக்குறிப்புகளாக இந்தியாவையும், நைஜீரியாவையும் கல்வி, பெண்கள் பாதுகாப்பு, அங்கிருந்த தலைவர்கள், அவர்களைப்பற்றிய விமர்சனங்கள் என்று நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சி நிச்சயம் பாராட்டுதலுக்குரியது.
நைஜீரியா என்ற நாட்டைப் பற்றி ஓரளவு அறிமுகம் உங்கள் நூலின் வாயிலாகக்கிடைத்தது. அங்கும் முருகன் கோயில்களும், தமிழ் பேசும் மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்பது எனக்குப்புது செய்தி .
நான் அமெரிக்காவில் ஒரு சில ஆண்டுகள் வேலை செய்திருக்கிறேன். கென்யா நாட்டிலிருந்து ஓரிருவர் என்னோடு வேலைப்பார்த்தனர். வெள்ளை இன மக்களைவிட, நம் தமிழ் சமூகத்தோடு அவர்களால் தங்களது, எண்ணங்களையும், கலாச்சாரம் தொடர்பான பகிர்தலையும் எளிதில் செய்ய முடிவதாக எனக்குத்தோன்றுகிறது.

அண்மைகாலத்து இலங்கையில், பல்வேறு சம்பவங்கள், அடுத்தடுத்து இடம் பெற்று, இலங்கை அரசியல் சூழலை அல்லது அச்சூழலை வசப்படுத்த முயலும் சிந்தனைகளை, அடியோடு சிதறடிக்கும் தொடர் கோர்வையாக, அரங்கேறத் தொடங்கியுள்ளன.
திருப்பூர் வாசகர் சிந்தனை பேரவையின் ஏற்பாட்டில் 1/10/23 அன்று மொழிபெயர்ப்பு தினம் திருப்பூரில் கொண்டாடப்பட்டது .அதை ஒட்டி சுப்ரபாதி மணியனின் 'நைரா' நாவல் மலையாள மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்பட்டது. மற்றும் தூரிகை சின்னராஜ் அவர்கள் மொழி பெயர்ப்பு நூல்கள் தரும் புதிய வாசல்கள் பற்றி விரிவாக பேசினார்.
ஐம்பது தசாப்தங்களுக்கும் மேல் எழுத்துலகில் தடம்பதித்துள்ள எழுத்தாளர் முருகபூபதியின் முப்பதாவது நூல் "சினிமா: பார்த்ததும் கேட்டதும்". ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ள 128 பக்கங்கள் கொண்டிருக்கும் இந்த நூல், இலங்கை, இந்திய மற்றும் உலக சினிமாக்களை விமர்சிப்பதுடன் மட்டுமல்லாமல், சினிமா உலகில் எம்மை மகிழ்வித்த, மகிழ்வித்துக் கொண்டிருக்கும் கலைஞர்களையும் அவர்களில் சிலருக்கும் தனக்கும் நிகழ்ந்த சந்திப்புகளையும் உரையாடல்களையும் சுவாரசியமாக முருகபூபதி விபரிக்கிறார்.

காற்றுவெளியின் மார்கழி மாத மின்னிதழ்(2023) நமது எழுத்தாளர் சொக்கன்(க.சொக்கலிங்கம்)அவர்களின் நினைவுச் சிறப்பிதழாக வெளிவரவுள்ளதால் அவரின் படைப்புக்கள்,பாத்திர வார்ப்புக்கள்,நாடகம்,நாவல்,சிறுகதை,கவிதை,தொகுப்புக்கள் போன்றதுறை சார்ந்த ஆழுமையினை ஆய்வுக்கட்டுரையாக(4 பக்கங்களுக்கு அதிகமாகாமல்) அனுப்புங்கள்.படைப்புக்கள் யாவும் யூனிக்கோட் எழுத்துருவிலும்,வேறெங்கும் பிரசுரமாகாமலும் இருத்தல்வேண்டும்.

'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதாகள்' எனும் நூலை முன்வைத்து தான்யா எழுதிய குறிப்பு தொடர்பாக சில முரணனான கருத்துக்களை தெளிவுபடுத்தும் விதமாகவும் தான்யா அவர்கள் சில விடயங்களை தெளிவாக்கிவிட்டு வெகுஜன ஊடகங்களுக்கு எழுதியனுப்பும் ஆக்கங்கள் தொடர்பாக கவனமெடுக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டிக் இக்குறிப்பை வரைகின்றேன். தான்யாவின் முரண்பாடான பிழையான கருத்துக்களில் முதலாவதாக அமைவது 'பெண்' சஞ்சிகை என்பது தனிப்பட்ட ஒரு நபரான சித்ரலேகா மெளனகுருவினது என்பது. அத்தகைய எடுகோளின் அடிப்படையில் தான் சில மேற்கோள் காட்டுதலுக்காக தான் 'பெண்' போன்ற பதங்களை பிரயோகித்து எழுதப்பட்டுள்ளது தான்யாவின் குறிப்பு. இது தவறானது.
பதிவுகள், மார்கழி 2005 இதழ் 72 
விஜியின் மனம் மட்டுமன்றி வீடும் விசாலமானதாகவே இருந்தது. காலையில் சுப்ரபாதம் கேட்டுக்கொண்டு ருசிமிக்க மசாலா தேநீர் பருகுவதும்,பின்னர் விஜி பரிமாறும் விதம்விதமான சாப்பாட்டை வயிறாராச் சாப்பிடுவதும், அதன்பின்னர் ஊர் சுற்றிவிட்டு வெளியில் சாப்பிடுவதுமாகப் பொழுது ரம்மியமாகப் போனது.

கொடை வள்ளல் கர்ணனிற்கு, கொடுப்பது மட்டுமல்ல குணம். கொடுக்கையிலும் மற்றவர் நிலையுணர்ந்து கொடுக்கும் குணம் கொண்டவன் கர்ணன். நாம் நண்பர்களுக்கோ, அறிந்தவர்களுக்கோ, உதவி புரிதல் மட்டும் முக்கியமல்ல. ஒருவரிற்கு உதவி தேவைப்படுவதை உணர்ந்த போது , அவரதனை நம்மிடம் கேளாமல் இருக்கையிலேயே, அவரின் நிலையுணர்ந்து, அவரிற்கு எம்மால் முடிந்த வகையில் உதவுதலே உண்மை நட்பாகவும். அதுவே வள்ளுவரின் குறளான உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.(குறள் 788) என்ற குறளுக்கு முன்னுதாரணமாகும்.

35 வது வருட நிறைவைக் கொண்டாடும் கனடா மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முத்தமிழ் விழா சென்ற ஞாயிற்றுக் கிழமை 24-9-2023 ரொறன்ரோ சீனக்கலாச்சார மண்டபத்தில் குறிப்பிட்ட நேரப்படி மாலை 5:05 மணிக்கு ஆரம்பமாகிச் சிறப்பாக நடந்தேறியது.
“இலக்கியப்போக்குகள் ஒவ்வொரு தலைமுறையிலும் மாற்றங்களைப்பெற்றே வளர்ந்துள்ளன. நமது சங்க இலக்கியங்களிலிருந்து இன்றைய இலக்கியப் போக்கின் வரலாற்றைத் திரும்பிப்பார்த்தால் இது விளங்கும். இலக்கிய வரலாறு ஒவ்வொரு மொழிக்கும் மிக முக்கியமானது. ஆனால், தமிழைப்பொறுத்தவரையில் ‘ வரலாறு ‘ என்பது கண்டுகொள்ளப்படவேயில்லை. தமிழ் இலக்கியத்தை நமது இலக்கணத்தில் கூறப்படுவது போல் ஐந்திணைகளில் இப்பொழுது அடக்கிவிடமுடியாது. தென்குமரி, வடவேங்கடம் வரையிருந்த தமிழ் வேறு, இன்றுள்ள தமிழின் பரப்பு வேறு. ஐந்திணைகளில் பனிகொட்டும் நாடுகளில் வளர்ந்துவரும் தமிழ் இலக்கியத்தை நாம் அடக்கிவிடமுடியாது. வடவேங்கடம் தென்குமரிக்கு அப்பால் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மட்டுமல்லாது, உலகின் ஐந்து கண்டங்களிலும் தமிழ் இலக்கியம் அதனதன் போக்கில் உருப்பெற்று வளர்ந்து வருகிறது. “ என்று மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் நூலகர் என். செல்வராஜாவின் மலேசியாவில் தமிழ்: பார்வையும் பதிவும் என்ற நூலில் ( 2016 ) தனது கருத்தை எழுதியிருக்கும் எமது இலக்கியக்குடும்பத்தினைச் சேர்ந்த எழுத்தாளர் மலேசியா சை. பீர்முகம்மது இன்று அதிகாலை ( செப்டெம்பர் 26 ) மறைந்தார் என்ற துயரமான செய்தி எம்மை வந்தடைந்தது.
மலேசியத் தலைநகரான குவாலலம்பூரில் 1942ல் பிறந்த சை.பீர்முகம்மது 1959 முதல் எழுதி வருகிற மூத்த எழுத்தாளர்களுள் முக்கியமானவர். கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாக இவர் ஏதோவொரு விதத்தில் தன்னை இலக்கியத்துடன் இணைத்துக் கொண்டு வந்திருக்கிறார். 12 வயதுமுதலே தன் எழுத்தார்வம் தொடங்கியதாகச் சொல்லும் இவர் மலேசியாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது ஏற்பட்ட வெடிச் சத்தத்துடன் பிறந்ததாக வேடிக்கையாகச் சொல்வார். தனது கட்டுமானத்துறை நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் இவர் தனது குடும்ப உணவகங்களையும் கவனித்துக் கொள்பவராக இருந்து வருகிறார்.

"படிப்பைக் கொண்ட வேலையில் நாட்டம் அதிகமாக , அரசவேலையில் வசதிகள் எனஂற மானுக்குப் பினஂனால் ஓட கடல் தொழிலைச் செய்கிறவர்கள் அருகி விட்டது" என்று சங்கர் குறிப்பிடுறது அனஂனருக்கு நினைவுக்கு வருகிறது . அப்ப தான் இவரும் ' சேர் , இங்கே சாதியம் என்பவை பொய் ' என விளக்க முற்பட்டார் . " நாடார்களின் போராட்டங்களும் ,விடுதலையும் " என்ற நூலை வாசிக்கும் வரையில் அவருக்கும் கூட பல விசயங்கள் தெரிந்திருக்கவில்லை . பனம்தொழிலைச் செய்கிறவர்களும் , கடல்தொழில் செய்கிறவர்களும் உண்மையில் சாதியப் பிரிவினரே இல்லை . அவர்கள் பாண்டியகுலத்தையும் , சோழர் குலத்தையும் சேர்ந்த , மக்கள் பிரிவினர் எனஂற உண்மை அவரை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது . ஒருகாலத்தில் , லெமூரியா , இந்தியாவை விட பெரிய நிலப்பரப்பைக் கொண்ட ... நாடாக இருந்திருக்கிறது . அது , இனஂறு இந்து சமுத்திரத்தினுள் நீரினுள் மூழ்கிப் போய்க் கிடக்கிறது . பாண்டியரின் பொற்காலம் அந்த நிலப்பரப்பிலே எழுந்து புதைந்து போய் இருக்கிறது .அந்த காலத்திலேயே பாண்டியருக்கும் , சோழர்களுக்கும் இடையில் பகைமை கொடிவிட்டு படர்ந்திருக்கிறது . சேரர்கள் இருதரப்பிலும் மணத் தொடர்புகளை கொண்டு பகையை வளராது வைத்திருக்கிறார்கள். வெற்றி ,தோல்விகள் சகஜம் . பகை குலங்களை நசிபட வைத்து தீண்டாச்சாதியாகவும் , ஒருபடி இறங்கிய( குறைந்த) சாதியாகவும் ஆக்க வல்லவை . அந்த வரலாறையே அந்நூல் விபரிக்கிறது . கத்தியில் நினஂறு கூறுகிறது போல கூறுகிறது .