பதிவுகள் முகப்பு

மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் In Ceylon's Tea Garden 1952 ஆங்கில நெடுங்கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு பற்றிய சிந்தனைகள்! (2) - எல்.ஜோதிகுமார் -

விவரங்கள்
- எல்.ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
05 மார்ச் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பகுதி 2

வேலுப்பிள்ளையின் எழுத்துக்கள் மூன்று கட்டங்களாக பிரிபடலாம்.

ஒன்று, காந்தியாலும் தாகூராலும் கவரப்பட்ட நிலையில், அவர் இளைஞனாய் இருந்த போது, தோன்றிய மனக்கசிவுகள்.

மற்றது, நேருவின் ஆசிர்வாதத்துடன், இலங்கை இந்திய காங்கிரஸ், ஸ்தாபனமுற்ற நிலையில் வேலுப்பிள்ளை, தொழிலாள சாரியுடனும் தொழிற்சங்கத்துடனும் இணைந்த ஓர் காலப்பகுதி.

மூன்றாவது, திருமணம் முடிந்து, ஓர் குடும்ப மனிதனாகிவிட்ட ஒரு காலப்பகுதி.

தொழிற்சங்கத்தில் இணைந்து தொழிலாளர் அணியுடன் கட்டிப் புரண்ட காலப்பகுதியில் (போலிஸ் வேனிலும் அடைப்பட்ட போது) முகிழ்த்து கிளம்பியதே ‘தேயிலை தோட்டத்திலே’ எனும் இந்நெடுங்கவிதை.

இந்த மாற்றங்கள் குறித்தே, அதாவது, இம்மாற்றங்கள் எப்படி ஏற்பட்டன – முக்கியமாக – ‘தாகூரின் ஆளுமைக்கு உட்பட்டிருந்த இவ் இளைஞன்’ என வேலுப்பிள்ளையை, வியக்கின்றார், ஜெக் மோகன்.

இப்பின்னணியில் வேலுப்பிள்ளையின் குடும்பமும் (Phழவழ)இ அனேக விடயங்களை எமக்கு எடுத்துரைப்பது.

கோபமுற்று, கைக்கட்டி இருக்கும் தாத்தாவின், பின்னால் நிற்கும் ஓர் இளைஞனாய் வேலுப்பிள்ளை தோன்றுகின்றார். தனது செல்லப்பேரன், கோட்-சூட்டு சகிதம், ஒரு துரை போன்று காட்சியளிக்க கூடும் என தாத்தா எதிர்ப்பார்த்திருந்தால், அது இயல்பானதாகவே இருந்திருக்க கூடும். ஆனால் இவ் இளைஞனோ, காந்திய குல்லாயும், கதிராடையும் அணிந்து, காலனித்துவத்துக்கு எதிராய் கோபம் கொண்டவனாய், இந்திய விடுதலை இயக்கத்தின் ஓர் சிறு பிழம்பாய் காட்சி தருகின்றான். இவனது பார்வை, தீவிரமான தீட்சண்யம், இவை யாவுமே, இவ் இளைஞனின் வருங்கால எழுத்துக்களுக்கு கட்டியம் கூறுவதாக அமைகின்றது. இருந்தாலும், இவ் இளைஞன் இன்னமும் தாகூரின் இளைஞனாகவே இருக்கின்றான் - பிற்காலத்தில், காலம் அவனை தொழிலாளர் அணியினர் மத்தியில் வீசி எறியும் மட்டும். அப்படி வீசி எறிந்த போது உருவானவையே இந் நெடுங்கவிதை. ஜெக்மோகன் வார்த்தையில்: ‘முற்றாக மர்மம் நிறைந்தது – இத் தாவல்’. இத்’தாவலின்’ முக்கியத்துவம், மனிதனையே புரட்டி எடுக்க தக்கதுதான் - வரலாற்றில்.

மேலும் படிக்க ...

நினைவுக் குளியல்: 4 - பழந்தமிழ் இலக்கிய ஆர்வம்! - தேவகாந்தன் -

விவரங்கள்
- தேவகாந்தன் -
தேவகாந்தன் பக்கம்
05 மார்ச் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இள வயதில் வாசிப்பை நெறிப்படுத்த மூத்தவர்கள் ஓரிருவருடைய உதவி எனக்கு இருந்திருந்தாலும், பின்னால் இலக்கியரீதியான வழிகாட்டலுக்கு யாரும் இருந்திருக்கவில்லை என்பது துர்பாக்கியமாகும். அந்த வெளியைக் கடந்தேனென்றாலும், அது சுலபத்தில் கைகூடியிருக்கவில்லை. பிழைவிட்டு திருந்தி, பிழைவிட்டு திருந்தி… ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்கவேண்டி இருந்தது. காலமே, ஒரு சக்தியாகயிருந்து அந்த வெறுமையை நிவர்த்தித்தது என்றுதான் இப்போது நினைக்கத் தோன்றுகிறது.

அக் காலத்திய அரசியல் மேடைகள் இலக்கியமும் பேசின. பாரதியார், பாரதிதாசன், திருவள்ளுவர், கம்பன் பற்றியேல்லாம் நான் மேடைகளில்தான் முதன்முதலாக அறிந்தேன். அவர்களது தமிழ்ப் பற்று என் நெஞ்சிலும் மூண்டெழுந்தது.

இளைஞனாக இருக்கும்போது சாவகச்சேரி சரஸ்வதி புத்தகசாலையில் நான் வாங்கிய புத்தகம் ‘பாரதியார் இன்கவித் திரட்டு’ என்கிற ராஜாஜி தொகுத்த புத்தகமாகும். அதில் எவ்வளவற்றைப் புரிந்துகொண்டேன் என்பதையெல்லாம் எனக்கு இப்போது சொல்லத் தெரியவில்லை. ஆனால் சுவையான விஷயம் என்னவென்றால், அந்தப் புத்தகத்தின் பெயரை ‘பாரதியாரின்’ ‘கவித்திரட்டு’ என்பதாகவே அப்போது நான் புரிந்துகொண்டிருந்தேன். பின்னால் பாரதியாரின் பாடல்கள் சிலவற்றை நான் வாசித்துப் புரிந்துகொள்ள முடிந்தபோது,

அதை ‘பாரதியார்’ ‘இன்கவித்’ ‘திரட்டு’ என சரியாகப் பிரித்து பொருள்கொள்ளத் தெரிந்தேன்.

அப்போதே பாரதிதாசனின் ‘தமிழுக்கு அமுதென்று பேர்’, சுத்தானந்த பாரதியாரின் ‘தமிழே தமிழே தமிழர்க்குயிரே’ போன்ற பாடல்களை பொருள் புரிந்து வாசிக்க முடிந்திருந்தது.

இவைபோலவேதான் திருக்குறளும், கம்பராமாயணமும் எனக்கு அறிமுகமானது மேடைகள் வழியாகத்தான்.

இந்தளவு பின்னணியோடு நான் க.பொ.த. உயர்தரம் புகுந்தபோது, தமிழ் பாடத் திட்டத்தில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் ‘இலக்கிய வழி’ நூலும் இடம்பெற்றிருந்தது. ஏற்கனவே பாலபாடத்திலும், பாலபோதினியிலும், இலக்கிய மஞ்சரியிலும் என் இலக்கிய ரசனை வளர்ந்திருந்ததுபோல், ‘இலக்கிய வழி’ மூலமும் ஒரு பாய்ச்சல் நிகழ்ந்தது.

மேலும் படிக்க ...

மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் - 2026! - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
நவஜோதி ஜோகரட்னம்
05 மார்ச் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

   சர்வதேச மகளிர் தினத்திற்காய்த் துணிவுடன் போராடி, அளப்பரிய தியாகங்களை மேற்கொண்ட அனைத்துப் பெண்களையும் முதற்கண் இவ்வேளை நினைவுகூர்ந்து தலைசாய்த்து வணங்குகின்றேன்.

  2026 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர்தினக் கருப்பொருளாக ‘Give to Gain’   ‘வழங்கிப் பெறுவோம்’ என்பதாக உணர்த்தப்;படுகின்றது. உலகளாவிய ரீதியில் சமத்துவத்தை அடைவதற்கு தாராள மனப்பான்மையுடனும், கூட்டுப் பணியுடனும், பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பங்களிப்பதன் மூலம் அதனை அடையும் வகையில் வலுவுறுத்துவதாக அமைகின்றது. குறிப்பாக மரியாதை, அறிவு, சமத்துவமான நீதி மற்றும் வாய்ப்புகளை வழங்குவதில் கவனம் செலுத்துகின்றது.

   அமெரிக்காவில் தொழிற்புரட்சி நகரான நியூயோர்க்கில் நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக்கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால்த்தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 1857இல் நியூயோர்க் நகரில் உழைக்கும் பெண்கள்கூடிக் குரல் எழுப்பினர். தொடர்ந்து போராடினர்;. பெண்கள் அமைப்புகள் பல தோன்றின. 1908 இல் வாக்குரிமை கேட்டு கொதித்து எழுந்தனர். அப்போதைய ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் அவர்கள் போராட்டத்தின் தாக்கம் கண்டு நில குலைந்து போனார். போராட்டம் என்பது மிகவும் பெரியது. போராடினால்த்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளாந்தெழுந்தது.

     அதன் விளைவாக 1910இல் ஹேகனில் அனைத்துலகப் பெண்கள் மாநாடு கம்யூனிஸ ஆர்வலரும் பெண்கள் உரிமைக்காகக் குரல் கொடுத்தவருமான கிளாரா ஜெட்கின் (Clara Zetkin) தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக சர்தேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் திகதி ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரனின் முகநூல் உரைகள்! (1)

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
03 மார்ச் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கலை, இலக்கியக்கோட்பாடுகள் பற்றிய என் எண்ணங்களை அவ்வப்போது காணொளிகளாகத் தருவதற்கு முடிவு செய்திருக்கின்றேன். அவ்வகையில் முகநூலில் பகிர்ந்துள்ள காணொளிகள் இவை.  இவை பற்றிய உங்கள் கருத்துகள் எவையாயினும் அறியத் தாருங்கள். இவை பற்றிய ஆரோக்கியமான தர்க்கங்களுக்கு அவை வழி வகுக்கும். காணொளிகள் என் 'ஐபோன்' மூலம் எடுக்கப்பட்டவை. 

நவீனம், நவீனத்துவம் பற்றி... https://www.facebook.com/reel/1254157106063345

மேலும் படிக்க ...

நிழலின் நிலவரைபடம் - ஈழக்கவி -

விவரங்கள்
- ஈழக்கவி -
கவிதை
03 மார்ச் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


ஆயத்துல்லாஹ் அலி கொமெய்னி:
அடிபணியாத நிழல்

வரலாறு தனது கறுப்புப் பிரதியைத் திறக்கும்போது
உறைந்த இரத்தத்தின் தழும்புகளிடையே
ஒரு தேசத்தின் நாடித் துடிப்பு கேட்கும்.
அவர் - பெரும்பான்மையின் ஆரவாரத்தால் அல்ல,
தனிமையின் தியானத்தால் செதுக்கப்பட்டவர்.

மத்திய கிழக்கின் மணற்புயலில்
திசைமாறாத ஒற்றை அச்சு.
அவரது நிழல் நிலத்தில் விழவில்லை;
ஏகாதிபத்திய நிலவரைபடங்களின் மீது
ஒரு பிளவென விழுந்தது.

மேலும் படிக்க ...

கனடாவில் நவீனத் தமிழ்க் கவிதை ! - மா.சித்திவினாயகம் -

விவரங்கள்
- மா.சித்திவினாயகம் -
ஆய்வு
02 மார்ச் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[எழுத்தாளர் மா.சித்திவினாயகம் 'ரொறன்ரோ தமிழ்ச் சங்க'த்தில் 'கனடாவில் நவீனத் தமிழ்க் கவிதை' பற்றி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்]

 கனேடியப் பனி நிலத்தின்இந்தப்  பெருங் குளிரிலும், நம் தமிழ்க் கவிதைப் பூந்தோட்டம்  சீரோடு செழிக்கிறது.  அது கொடிவிட்டுத் தழைத்துச் செழிக்கின்ற புனிதத்தைப் போற்றுகிற,  இந்த தமிழ்க்கவிதை   உரையாடலுக்கு  வருகை தந்திருக்கும் அறிஞர்களே, கவிஞர்களே அன்பு உறவுகளே உங்கள் கரங்களை தமிழன்போடு இறுகப் பற்றுகின்றேன். 

    புலம்பெயர்ந்த மக்களின் புண்பட்ட இதயங்களுக்குக் கவிதையே மருந்தாகிறது. அவர்களின் பண்பாட்டு அடையாளங்களுக்குக் கவிதையே மகுடமாகிறது. 

    இத்தகையதொரு சீரிய உரையாடலை, அவசியமான உரையாடலை  ஒருங்கிணைத்த ரொறன்ரோ தமிழ்ச் சங்கத்திற்கும், அதன் நெறியாளர், மதிப்பிற்குரிய பேராசான் சுப்பிரமணிய ஐயா அவர்களுக்கும், அவருக்குத் தோள் கொடுக்கும் தோழர் அகில் போன்றோருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். 

கடந்த மாதம் இதே அவையில் மானிடவியல் குறித்த தேடல் ஒன்று இடம் பெற்றது ... மனிதன் குரங்கிலிருந்து கிளைத்தானா அல்லது கடவுளின் கையால் படைக்கப்பட்டானா என்ற அந்தப் பதிலறியாப் பெரும் போர் இன்றும் எங்கும் தொடர்கிறது. அதே போன்றதொரு தர்க்கமும், மயக்கமும் தான் கனடாவில் நவீன கவிதையின் தோற்றம் குறித்தும் நமக்கு எழுகின்றது. 

கனடியத் தமிழ்க் கவிதையின் வேர்களைத் தேடுவது என்பதும்   அதிலும் நவீன கவிதைக்கான பிறப்பை ஆராய்வதென்பதும் அதன் பூர்வீகம் அறிய முற்படுவதும்.. .. ஓர் வில்லங்கமான முயற்சி.  இது ஒரு சிக்கலான, தேடல்.. ஆனால் அந்தத் தேடலை தேடுவதுதான் தமிழர் வாழ்வின் வரலாற்றின் நீட்சியென்பதை  தன் குறிக்கோளாக கொண்டுள்ள  ரொறன்ரோ தமிழ்ச் சங்கத்திற்கென் வாழ்த்துகள். 

மேலும் படிக்க ...

பதினெண்கீழ்க்கணக்கு அறநூல்கள் வழி சமுதாயத்தில் கல்வியின் நிலைகள் - முனைவர் கு.வளர்மதி -

விவரங்கள்
- முனைவர் கு.வளர்மதி -
ஆய்வு
01 மார்ச் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாளர் - முனைவர் கு.வளர்மதி, உதவிப்பேராசிரியர், இளங்கலைத் தமிழ்த்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -


முன்னுரை

பல்வேறு உயிரினங்களுள் கல்வி பெறும் வாய்ப்பினை உலகில் மனிதர்கள் மட்டுமே பெற்றுள்ளனர். பிற உயிரினங்களுக்கு கல்வி பயிலும் வாய்ப்பில்லை. மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து கூடி வாழும் அமைப்பே சமுதாயம் எனப்படும். சமுதாயத்தில் இரண்டறக் கலந்துவிட்ட கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது. சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாகத் திகழும் கல்வியால் மட்டுமே ஒரு சமுதாயத்தை நல்லதொரு சமுதாயமாக மாற்றியமைக்க இயலும். சமுதாயத்தில் கல்வி பெற்றுள்ள இடத்தினைப் பதினெண்கீழ்க்கணக்கு அறநூல்கள் வழி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

கல்வி – விளக்கம்

ஒரு சிறிய நிலப்பரப்பில் பொதுவாழ்க்கை முறையைப் பின்பற்றி, கூட்டாக வாழும் மக்கள்தொகுதி சமுதாயம் எனப்படும். ஒரு மனிதனுக்குச் சமுதாயத்தினையும் அச்சமுதாயத்தில் தன்னுடைய வாழ்க்கை நிலையினையும் அறிந்து கொள்ளும் அறிவினைத் தருவதாக கல்வி அமைகின்றது. கல்வி என்பதன் வேர்ச்சொல் ‘கல்’ ஆகும். ‘தோண்டுதல், துருவுதல்’ ஆகிய பொருட்களைக் ‘கல்லுதல்’ என்ற சொல் உணர்த்தும். உடலளவில் மனிதர்களாகத் தோன்றுபவர்களை உள்ளத்தளவிலும் மனிதர்களாக மாற்றுவதே கல்வியாகும்.

மேலும் படிக்க ...

விடைபெற்றார் வாழ்நாள் போராளி! - ம.ஆச்சின் -

விவரங்கள்
- ம.ஆச்சின் -
கவிதை
26 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எளிமையின் உருவமாக
ஒழுக்கத்தின் உச்சியாக
மக்கள் மனங்களில் வேரூன்றியவர் 

புன்னகை மறையாத போராட்ட மேகம்,
இன்று மௌனமாக விண்மீன்களோடு கலந்துவிட்டாரோ?

செங்கொடியை சுமந்த தியாகத் தீபம்,
பதவிகள் தேடி வந்த போதும்
பழைய வாடகை வீடையே சொர்க்கமாகக் கொண்டவர்;

பொதுவாழ்வின் தூய்மைக்கு அளவுகோல் வைத்த
அந்த தவமிகு வாழ்க்கை
இன்று அமைதியில் உறங்குகிறதோ?

மண்ணுக்காகவும் மக்களுக்காகவும்
முன்னணியில் நின்ற நீதிச் சிங்கம்;
ஆற்று மணல் கொள்ளையை தடுத்த வீர மனம்,
இயற்கையின் காவலன், ஏழைகளின் இதயம்;
வயது தள்ளினாலும் நடை தளராதவர் 
நீதிக்காக நடந்த அந்த அடிகள்
இன்று ஓய்வெடுக்கிறதோ?

மேலும் படிக்க ...

அஞ்சலி: பொதுவுடமைக் கட்சியின் தலைவர் இரா. நல்லகண்ணு மறைந்தார்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
அரசியல்
26 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் முன்னாள் தலைவரும், கட்சியின் முன்னாள் செயலாளருமான இரா. நல்லகண்ணு அவர்கள் பெப்ருவரி 25, 2026 அன்று, தனது நூறாவது வயதில் மறைந்தார். தனது பதினெட்டாவது வயதிலிரிந்து கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக்கொண்டவர். இந்தியாவில் ஆங்கிலேயருக்கெதிராகப் போராடிய சுதந்திர வீரர். கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டபோது நெல்லை சதி வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுச் சிறை வாசம் அனுபவித்தவர். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை நீங்கியபோது விடுதலை செய்யப்பட்டார்.  விவசாயத்  தொழிலாளர் சங்கத் தலைவராகவும் பணியாற்றியவர். 

மேலும் படிக்க ...

மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் In Ceylon's Tea Garden 1952 ஆங்கில நெடுங்கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு பற்றிய சிந்தனைகள்! (1) - எல்.ஜோதிகுமார் -

விவரங்கள்
- எல்.ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
26 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

“அமர காவியம் இது”: என்று கூறியுள்ள திரு.சக்தீ பாலையா, தனது மொழிப்பெயர்ப்பு பற்றி, மேலும் கூறுவார்: ‘(ஆனால்) நான் எழுதியது வரிக்கு வரியிலான மொழிப்பெயர்பல்ல. மன உந்துதலால் உதித்த கவிதைகள் (இவை)’ (மேற்கோள்:திலகர்: சூரியகாந்தி:25.12.2023).

சக்தீ பாலையா இப்படி கூறுவதிலும் பல அர்த்தங்கள் உண்டு. என்றாலும், அவரே இம் மொழிப்பெயர்ப்புகளுக்கு முன்னோடியாக திகழ்கின்றார் என்பது அழுத்தமான உண்மையாகின்றது.

ஆனால், கீழே காணப்படும் மொழிப்பெயர்ப்பானது, அவரது மொழிப்பெயர்ப்பில் இருந்து சற்றே வேறுபட்டு, வித்தியாசமான ஒரு நடையில் தரப்படுகின்றது. ஒரு வேளை இது, வேலுப்பிள்ளையின் மூல நடையின் பாதிப்பால் ஏற்பட்ட ஒன்றாகவும் இருத்தல் கூடும்.

இப்புள்ளியிலேயே, வேலுப்பிள்ளை அவர்களின் எழுத்துக்கள் பொறுத்த, விருப்பு வெறுப்பற்ற கணிப்பொன்றை, நாம் உருவாக்கி கொள்வதும் அவசியமாகின்றது. ஏனெனில், ஜக் மோகனுக்கு மாத்திரமல்லாமல் அனேகருக்கும் ஓர் மர்மமாக அல்லது ஓர் புதிராக அமையக்கூடிய வேலுப்பிள்ளையின் எழுத்துக்கள் பொறுத்த யதார்த்தப்பூர்வமான கணிப்பொன்று எமக்கு தேவைப்பட்டுத்தான் போகின்றது.

மேலும், வேலுப்பிள்ளையின் எழுத்துக்கள் பொறுத்த பின்வரும் குற்றச்சாட்டுக்கள் காலந்தோறும் முன்வைக்கப்படாமலும் இல்லை:

“அவரது கலைப்படைப்புக்கள் தோட்டத் தொழிலாளியின் போர் குணத்தை காட்ட தவறுகின்றன. அவரது காலத்தில் நிகழ்ந்த முனைப்புற்ற போராட்டங்களையும் எழுச்சிகளையும் இலக்கியமாக்க அவர் தவற விட்டிருக்கின்றார்…” (2012 ஒக்டோபர்).

மேலும் படிக்க ...

மறவன்புலவு க.சச்சிதானந்தனின் 'ஹிந்துத்துவா'! - நந்திவர்மப்பல்லவன் -

விவரங்கள்
- நந்திவர்மப்பல்லவன் -
அரசியல்
25 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'காந்தளகம்' மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களை இ துவரை பதிப்பாளராக, ஐக்கிய  நாடுகள் அபிவிருத்திச் சபையில் பணி புரிந்தவராக, எழுத்தாளராக, சூழலியலில் ஆர்வமுள்ளவராக , அண்மைக்காலமாக ஹிந்துத்துவா நோக்கில் செயற்படுவராக அறிந்திருக்கின்றேன். அண்மையில் இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்துக்காகக் குரல் கொடுத்துவரும் அருண் சித்தார்த் தனது முகநூற் பக்கத்தில் பகிர்ந்திருந்த காணொளியொன்றில் தென்பட்ட  மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களின் நேர்காணலொன்று என் கவனத்தை ஈர்த்தது.

அருண் சித்தார்த் தான் சார்ந்த சமூகத்திற்காகக் குரல் கொடுத்துவருபவர் என்னும் வகையில் முக்கியமானவர். இவரது கடந்த கால அரசியற் செயற்பாடுகள் முரண்பாடுகள் மிக்கவை.  சொந்த வாழ்க்கை அனுபவங்கள் காரணமாக இவர் வெளிப்படுத்தும் கருத்துகள் அவ்வப்போது சர்ச்சைகளைக் கிளப்புபவை. இவரது செயற்பாடுகளில் முக்கியமானதாக நான் கருதுவது இதுவரை காலமும் பல்வேறு விதங்களில் ஒடுக்கப்பட்டு வரும் தான் சார்ந்த சமூகத்துக்காகக்குரல் கொடுத்து வருவது. அதனை ஏற்காமல் மூடி மறைத்து, கடந்து சென்றிட முடியாது. அது தீக்கோழி தன் தலையை மண்ணுக்குள் புதைப்பது போன்றது. 

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் - தமிழ்மொழிச் சாதனை விழா! - கிறிஸ்டி நல்லரெத்தினம் -

விவரங்கள்
- கிறிஸ்டி நல்லரெத்தினம் -
நிகழ்வுகள்
25 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

அகணி சுரேஸின் நூல் வெளியீட்டு விழாவும், 50 இசைப்பாடல்களின் நிறைவு விழாவும்!

விவரங்கள்
- தகவல்: அகணி சுரேஸ் -
நிகழ்வுகள்
25 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வீரமாமுனிவரின் ஆன்மீகப்பயணமும் தமிழ்த் தொண்டும்! - முனைவர் ரா.பிரேம்குமார் -

விவரங்கள்
- முனைவர் ரா.பிரேம்குமார் -
இலக்கியம்
25 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாசிரியர் - முனைவர் ரா.பிரேம்குமார், உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திருவானைகோவில், திருச்சிராப்பள்ளி-05  -


முகவுரை:

தமிழ் இலக்கிய வளர்ச்சியில் கிறித்துவப் பாதிரிமார்களின் பங்களிப்பு மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. தமிழ் இலக்கியங்களின் பெருமையையும், செழுமையையும் மேனாட்டார் அறியும் வகையில் உலகளவில் எடுத்துச் சென்றவர்கள் இவர்கள். அத்துடன் உலக இலக்கிய புதுமைகளைத் தமிழுக்குக் கொண்டு வந்தவர்களும் இவர்கள் தாம், தமிழ் இலக்கணம், உரைநடை, செய்யுள் உள்ளிட்ட அனைத்து வகைகளிலும் புதுமைகளைப் படைத்து தமிழின் உயிரோட்டத்தை மிகச் செழுமைப்படுத்தியவர்கள் இவர்கள். ஐரோப்பாவிலிருந்து வந்து சமயப்பணி மூலமாக சமூகப்பணிக்காகத் தம்மை அர்பணித்துக் கொண்டு வாழ்ந்த பல பாதிரிமார்கள் தமிழிலும் புலமைப்பெற்று தமிழ் பணியாற்றியுள்ளனர். அந்தவகையில் வீரமாமுனிவர் என்று அழைக்கப்பட்ட காண்ஸ்டாண்டியஸ் ஜோஸப் பெஸ்கி தமிழுலகமே என்றும் வியந்து போற்றுவதற்குறிய பெருமைக்குரியவர் ஆவார்.

பிறப்பு:

இறைமகன் இயேசுவின் பிரதிநிதியாக உலகையாளும் பாப்பரசரின் ஆட்சிப்பீடம் உள்ளதும், வெர்ஜில், தாந்தே போன்ற பெருங்கவிஞர்கள் தோன்றியதும், கலை, இலக்கியம் ஆகிய துறைகளில், மறுமலர்ச்சி அரும்பியதும், ஈரறமும் முச்சீரும் சுகமோர் ஏழும் நிலவுவதும் ஆகிய பெருமைகளை உடையது இத்தாலிய நாடு. இந்நாட்டில் வர்ஜில் மாண்டுவா மாவட்டத்தில் காஸ்திக் கிளியோன் என்னும் ஊரில் 08.11.1680 ல் டான் கொண்டல்போ பெஸ்கிக்கும் எலிசபெத் அம்மையாருக்கும் நன்மகனாய் பிறந்தார்.

மேலும் படிக்க ...

நூல் வெளியீடு: நாகரத்தினம் புஸ்பநாதன் எழுதிய 'ஆன்மீகத் தேடல்கள்'

விவரங்கள்
- தகவல்: சந்திரசேகரன் -
நிகழ்வுகள்
23 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

வ.ந.கிரிதரனின் பாடல் - இருப்பைப் புரிந்து கொள்ளல்!

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
22 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வ.ந.கிரிதரனின் பாடல் - இருப்பைப் புரிந்து கொள்ளல்!

இப்பாடலில் மேனாட்டு, கீழ்நாட்டு வாத்தியக் கருவிகள் எல்லாவற்றையும் ஒன்றாகப் பாவித்திருக்கின்றேன்.  அத்துடன் இராகம் - ஆனந்த பைரவியைப் பாவித்து உருவாக்கும்படி செயற்கை நுண்ணறிவைப் பணித்தேன். அதில் எவ்வளவுதூரம் அது வெற்றி அடைந்திருக்கின்றது என்பதை இசை வல்லுநர்கள்தாம் கூற வேண்டும். பாடல் அற்புதமாகவே பாடப்பட்டிருப்பதாகவே கேட்கையில் நான் உணர்ந்தேன். நீங்களும் அப்படியே உணர்வீர்கள் என்று கருதுகின்றேன். பாடலைக் கேட்க -  https://www.youtube.com/watch?v=It5rpmhrFyU

வ.ந.கிரிதரனின் பாடல் - இருப்பைப் புரிந்து கொள்ளல்!

- இசை & குரல் - SUNO AI.   ஓவியம் - கூகுள் AI

விரிந்து கிடக்கிறது பேர் அண்டம்.
புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன்.

இருக்கும் இருப்பைப் புரிந்து கொள்வது
இன்பம் மிக்கது. ஊக்கம் தருவது.
இருப்பை அறிவதும் அறியும் பொருட்டு
இருப்பது என்றால் அதுபோதும் எனக்கு.

விரிந்து கிடக்கிறது பேர் அண்டம்.
புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன்.

மேலும் படிக்க ...

ஈழக்கவி கவிதைகள் - அக-நகரத்தின் வாசல்கள்

விவரங்கள்
- ஈழக்கவி -
கவிதை
22 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒரு முன்னுரை

"வாசிப்பு என்பது ஒரு திறப்பு; கவிதை என்பது அந்தத் திறப்பின் வழி நுழையும் ஒளி."

இந்த வலைப்பதிவு, ஒரு தனிமனிதனின் அகப்பயணத்தை வார்த்தைகளாக மாற்றும் ஒரு முயற்சி. இங்கே கவிதைகள் வெறும் சொற்களின் கூட்டமல்ல; அவை காலத்தின் சுவர்களில் படிந்திருக்கும் நினைவுகளின் ரேகைகள்.

"அக-நகரத்தின் வாசல்கள்" - இந்தப் பெயர் உணர்த்துவது போல, ஒவ்வொரு கவிதையும் ஒரு ரகசியக் கதவைத் திறக்கும். அந்த வாசல்களுக்குப் பின்னே:

மௌனமாகப் பேசும் நிழல்கள் உண்டு.
காலத்தை ஒரு நகரமாகப் பார்க்கும் விசித்திரப் பார்வை உண்டு.
தன்னைத் தேடிப் புறப்பட்டு, இறுதியில் பிரபஞ்சத்தின் இசையோடு ஒன்றிப்போகும் ஒரு பெண்ணின் ஆன்ம விடுதலையுண்டு.

இந்தத் தொகுப்பு, ஒரு பிம்பத்திலிருந்து பிம்பமற்ற நிலைக்கு (Abstraction) நகரும் ஒரு பயணம். இதில் வரும் 'அவள்', வெறும் ஒரு பாத்திரமல்ல; நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் அந்தத் தேடல் மிக்க ஆன்மாவின் பிரதிபலிப்பு.

நிழல்கள் மெல்ல ஒளியாக மாறும் இந்த ரசவாதத்தைக் காண, இந்த வாசல்களின் வழியே உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

- ஈழக்கவி -


1. உருமாற்றம் (அவளின் உளநிலை மாற்றங்கள்)

அகத்தின் அலைக்கழிப்பில் 
ஒரு வண்ண விளிம்பில் நிற்கிறாள். 
பழைய நிழற்படங்கள் 
தொட முடியாத 
தொலைவில் சுடர்விடுகின்றன.

"நான் நானல்ல" – 
அவளின் பிரகடனம். 
பிறர் பார்வையின் கோடுகள் 
அவளைச் சித்திரமாக்க முடியாது.

அவளுக்குள் ஒரு புயல் 
இப்போது மெல்லப் பச்சையமாகிறது. 
அச்சம் என்பது 
கடந்து போக வேண்டிய 
ஒரு நிலப்பரப்பு.

நிழலுக்கு வெளியே 
அவளுக்காகக் காத்திருக்கிறது 
இன்னும் பெயரிடப்படாத 
ஒரு பிரகாசம்.

மேலும் படிக்க ...

கோவிற் கலையும் தமிழரும்! - முனைவர். அ. ஸ்ரீதேவி -

விவரங்கள்
- முனைவர். அ. ஸ்ரீதேவி -
ஆய்வு
20 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாளர்  - முனைவர். அ. ஸ்ரீதேவி , துறைத்தலைவர் தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.105 -


திறவுச் சொற்கள்:

சிற்பம் – கல், மரம் அல்லது உலோகத்தில் செதுக்கப்பட்ட கலை வடிவம்
• சிலை – வழிபாட்டிற்கோ அலங்காரத்திற்கோ பயன்படும் மனித அல்லது தெய்வ உருவம்
• கோபுரம் – கோவிலின் நுழைவாயிலில் அமைந்த உயரமான கட்டிட அமைப்பு
• விமானம் – கருவறையின் மேல் அமைந்த கட்டிட அமைப்பு
• மண்டபம் – திருவிழா, இசை, நடனம் போன்ற நிகழ்வுகளுக்கான கூடம்

முன்னுரை

கோவில்கள் தமிழர்களின் சமய நம்பிக்கைகள் மற்றும் பண்பாட்டின் மையமாக விளங்குகின்றன. இவை வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாது கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை மற்றும் கல்வெட்டு போன்ற கலை வளர்ச்சியின் மையங்களாகவும் இருந்துள்ளன. தமிழ் கோவில்கள் திராவிடக் கட்டிடக்கலையின் தனித்துவத்துடன் கூடியன; உயரமான கோபுரங்கள், விமானங்கள், மண்டபங்கள் மற்றும் நுணுக்கமான சிற்ப அலங்காரங்கள் தமிழர்களின் அழகியல் பார்வையையும் நுட்பமான கலைத் திறனையும் வெளிப்படுத்துகின்றன. கோவில்கள் கல்வி, இசை, நடனம், மற்றும் சமூக ஒருங்கிணைப்புக்கும் முக்கிய பங்களிப்பை செய்துள்ளன. இதன் மூலம் தமிழர் வாழ்வியல், ஆன்மிக சிந்தனை மற்றும் பண்பாட்டின் அடையாளம் கோவில்களில் பிரதிபலிக்கிறது. எனவே, கோவில் கலை தமிழர் பண்பாட்டை அறியவும், அவர்களின் கலாச்சார மரபை புரிந்துகொள்ளவும் முக்கியமான ஆதாரமாகும்.

“நுட்பம் உடையார் நுண்ணிய செய்கை,
படிப்பார் கண்ணும் புலப்படும்.” – திருக்குறள்

“அருவி அலைத்து விழுந்தாலும்,
சிற்பி கை தொட்டு அழகாய் படைக்க வேண்டும்.”

“அழகு எல்லாம் தொழிலில் காண்பான் கலைஞன்.”

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் : “கனடாவில் நவீன தமிழ்க் கவிதை”

விவரங்கள்
- தகவல்: முனைவர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
19 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268 | Join Zoom Meeting 

மேலும் படிக்க ...

பெப்ருவரி 14 காதலர் தினம் (வெலன்ரைன் தினம்)! அன்பைப் பரிமாறும் தினம்! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
16 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வெலன்ரைன் தினம் என்பது உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் பலராலும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும். பொதுவாக அன்பைப் பரிமாறும் தினமாக இதை எடுத்துக் கொள்வதால், ‘அன்பைப் பரிமாறும் நாள்’ என்றும் குறிப்பிடுவர். இத்தினத்தில் வேறுபாடு காட்டாமல் யாரும் யாரிடமும் தங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்வதால், மனதால் பண்பட்ட யாரும் அதைத் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். 

அதே சமயம் காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்த, அல்லது பரிமாறிக்கொள்ள இந்த நாள் உகந்ததாகவும் இருப்பதால், ‘காதலர்கள் தினம்’ என்றும் குறிப்பிடுவர். சில நாடுகளில் 9 நாட்கள் இதைக் கொண்டாடுவர். காதலைக் கொண்டாடாத நாடுகளே இல்லை என்பதால், தொடக்கத்தில் அன்பைப் பரிமாற காதலர்கள் இயற்கை தந்த மலர்களையும், அவர்களுக்குப் பிடித்தமான இனிப்பு போன்றவற்றையும் பரிமாறினர். அதன் பின் கையால் எழுதிய வாழ்த்து மடல்களையும், தொடர்ந்து அச்சு யந்திரங்கள் வந்ததால் அச்சிட்ட வாழ்த்து மடல்களைப் பரிமாறும் வழக்கமும் அறிமுகமானது.

வெலன்ரைன் தினம் எப்படி அறிமுகமானது என்பதைப் பார்ப்போம். மூன்றாம் நூற்றாண்டில் ரோமானிய அரசனான இரண்டாம் கிளாடியஸ் பேரரசர் இரண்டு பேருக்குத் தண்டனை கொடுத்து அவர்களை பெப்ரவரி 14 ஆம் திகதி தூக்கிலிட்டார். வெவ்வேறு ஆண்டுகளில் அவர்கள் தூக்கிலிடப் பட்டாலும் அவர்களைப் போன்ற தியாகிகளுக்கு வெலன்ரைன் என்று பெயரிட்டார்கள். பெப்ரவரி 14 ஆம் திகதி அன்று நடந்ததால், அவர்கள் செய்த தியாகம் புனித காதலர் தினமாகப் 14 ஆம் நூற்றாண்டில் இருந்து கொண்டாடப் படுகின்றது. இதைப்பற்றி, ‘செயிண்ட் வெலன்ரைன் தினத்திற்கானது இது, ஒவ்வொரு பறவையும் தன்னுடைய இணையைத் தேடி வரும்போது’ என்று ஜெப்ரி சாஸர் ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஆங்கிலத்தில் ‘லவ்’ என்று சொன்னால் அது அன்பைக் குறிக்கும். யாரைப் பார்த்தும் ‘லவ்யூ’ சொல்ல முடியும், தவறாக எடுக்க மாட்டார்கள். ஆனால் தமிழில் அப்படி அல்ல, அன்பு என்ற சொல்லை இன்னும் விளக்கமாக, தெளிவாகப் பிரித்திருக்கிறார்கள். அன்பு, பாசம், காதல், நேயம், பக்தி என்று அன்புக்குத் தனித்தனியாக விளக்கம் தந்திருக்கிறார்கள். 

மேலும் படிக்க ...

தொடர் நாவல் : சுதந்திர மனிதன்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நாவல்
16 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் ஒன்று: அர்த்தமும், அர்த்தமின்மையும்!

சுதந்திரன் அவன் வசித்து வரும் தொடர்மாடிக் கட்டடத்தின் , அப்பார்ட்மென்டின் பல்கணியிலிருந்த சாய்வு நாற்காலியில் வந்தமர்ந்தபோது நன்கு இருண்டு விட்டிருந்தது. வானம் தெளிவாகவிருந்தது. நகரத்து ஒளி மாசிலிருந்து தப்பி நட்சத்திரக்கன்னியர்கள் சிலர் தொலைவிலிருந்து கண்களைச் சிமிட்டிக்கொண்டிருந்தனர். தொலைவிலிருந்து கண்களைச் சிமிட்டிக்கொண்டிருக்கும் சுடர்க்கன்னியர்கள் வழக்கம்போல் அவனுக்கு மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தினர். அவர்கள் ஓரிடத்திலிருந்து தன்னைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டுவதைப்போல் அவன் அப்போதெல்லாம் கருதிக்கொள்வான். அச்சிந்தனையே அவர்கள் மேல் அவனது ஈர்ப்பை மேலும் அதிகமாக்கியது. ஆனால் உண்மையில் அவர்கள் ஓரிடத்தில், ஒரே சமயத்திலிருந்து அவனை நோக்க்கவில்லையென்பதையும் உணர்ந்திருந்தான். காலத்தின் அடுக்குக்களின் வெவ்வேறு அடுக்குகளிலிருந்து  அவர்கள் அவனை நோக்கிக் கண்களைச் சிமிட்டிக்கொண்டிருந்தார்கள். உண்மையில் அவர்கள் ஒவ்வொருவரையும் சுற்றி வெறுமை கலந்த விரி வெளி கவிந்திருந்தது. தனிமையின் வெறுமைக்குள் அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அதிலிருந்துகொண்டுதான் அவர்கள் உற்சாகம் மிக்கர்வகளாகக் கண்களைச் சிமிட்டிக்கொண்டிருந்தார்கள். அதனால் அவனுக்கு அவர்கள் மேலான மதிப்பும், நாட்டமும் அதிகரித்தது.

எவ்விதம் அவர்களால் தனிமைக்குள் இனிமை காண முடிகின்றது?  ஒருவிதத்தில் தனக்கும் அவர்களுக்குமிடையில்தான் என்ன வேறுபாடு? தானும் ஒருவகையில் அவர்களைப்போன்றுதானே இருக்கின்றேன் என்றும் எண்ணிக்கொண்டான். தான் மட்டுமே அவன் வசிக்கும் இக்கோளில் உள்ளவர்கள் அனைவருமே இப்படித்தானே இருக்கின்றார்கள் என்றும் இவ்விதமான சமயங்களில் எண்ணிக்கொள்வான். அன்றும் எண்ணிக்கொண்டான்.

இரவுகளில் நட்சத்திர வானைப்பார்த்து மெய்ம்மறக்கும் இயல்பு அவனுக்கு அவனது பால்யப் பருவத்திலிருந்தே அவனுக்கிருந்தது. அதற்குக் காரணம் அவனது தந்தைதான். பூமத்தியரேகைக்கண்மையிலிருந்த வெப்பமண்டலத் தீவொன்றில் பிறந்தவன் அவன். பகலும், இரவும் சமமாகப் பிரிக்கப்பட்ட பிரதேசத்தில் ,இரவுகளில் அவன் தந்தை சாய்வு நாற்காலியில் அண்ணாந்து சாய்ந்தபடி விரிந்து ,பரந்திருக்கும் இரவு வானைப்பார்த்திருப்பார். அவரது சாறத்தொட்டிலுக்குள் படுத்திருந்தபடி அவனும் அண்ணாந்து பார்த்தபடி , இரவு வானை, அங்கு கண்சிமிட்டும் நட்சத்திரக் கன்னியரை இரசிப்பான். 

காலம் எவ்வளவு தூரம் விரைந்தோடி விட்டது? பருவ  மழை பொழியும் வெப்பமண்டலத்திலிருந்து , பருவப்பனி பொழியும் குளிர் மண்ணுக்கு அவனது இருப்பு மாறி ஆண்டுகள் பல ஓடிவிட்டிருந்தன. போரும், சமூக,ம் அரசியல், பொருளியற் சூழலும் அவன் இருப்பை நிர்ணயித்ததன்  விளைவு அவனது புலம்பெயர்தலுக்கான முக்கிய காரணம். 

இந்த இட மாற்றம் அவனைப்பெரிதும் பாதித்ததா? இல்லையென்றே கூற வேண்டும். அங்கிருந்தால் எப்படியிருப்பானோ, எப்படிச் சிந்திப்பானோ அவ்விதமே இங்கும் அவன்  இருந்தான். சிந்திக்கின்றான். இருப்பை எதிர்கொள்கின்றான். உண்மையில் நவீனத்  தொழில் நுட்ப வசதிகள் இருப்பை மிகவும் எளிதாக்கியிருந்தன என்றும் கூறலாம். ஒரு விதத்தில் இருப்பைப் பொருளியல்ரீதியில் கொண்டு நடத்தத் தொழில் நுட்பம் மிகவும் உதவியிருக்கின்றதென்றே கூற வேண்டும். சமூக ஊடகங்கள் அவனைப் பொருளியல்ரீதியில் தாங்கிப்பிடிக்கும் தூண்களாக மாறியிருந்தன என்றும் கூறலாம். வீட்டிலிரிந்து சுய தொழில் முனைவனாக வேலையாற்றவும் தொழில் நுட்பம் வழி சமைத்தது. இப்போது மேலதிகமாகப் பொருள் ஈட்டவும் வழி காட்டியிருக்கின்றது.  இது அவனது சுய சிந்தனைகளுக்கு , சுய விருப்புகளுக்கு மேலும் உரமூட்டிச் சிறகடிக்க வைத்திருக்கின்றது. 

இருப்பு பற்றிய தேடல் எப்போதும் அவன் இருப்பினோர் அம்சமாகத்தான்  இருந்திருக்கின்றது. இருந்து வருகின்றது. இருக்கும் வரையிலும் இருந்து வரும்.

அர்த்தத்துடன் இங்கு வந்தோமா? அர்த்தமின்றி வந்தோமா?  அர்த்தமின்றி வந்தோமென்றால் அர்த்தமுண்டா ? இருப்புக்கு அர்த்தமுண்டா? இடை விடாமல் அவன் இருப்பில் இன்றுவரை தொடர்ந்து வரும் வினா. இதற்கான  விடைதான் என்ன? அர்த்தமுள்ள விடை இதற்குண்டா? அல்லது இல்லையா? அர்த்தத்தடன் வந்தோமென்றால் ஏன் வந்தோம்? அர்த்தம்தான் என்ன? அர்த்தமில்லையென்றால் எதற்கு வந்தோம்? எதற்கு இந்த இருப்பு?

சிந்தனைகள் சுதந்திரனைத்   துரத்துகின்றன. விடாமல் துரத்துகின்றன. இருப்புக்கு ஒரு சாரமுண்டா? சாரம்தான்  இருப்பை நிர்ணயித்ததா? அல்லது இருப்புத்தான் சாரத்தின் அடித்தளமா? இருப்பற்று சாரமில்லையா? ஏன்? ஏன்? ஏன்?

இந்தக்கேள்வி எழுந்தால் சிந்தனைக்கொரு முடிவே இல்லை. விரிந்திருக்கும் காலவெளி நிரந்தரமானது அல்ல. இயங்கிக்கொண்டிருப்பது. இடைவிடாது , ஓய்வேதுமற்று இயங்கிக்கொண்டிருப்பது. ஒவ்வொரு கணமும் இடம் மாறிக்கொண்டிருப்பது. இதில் நிலைத்து நிற்பதென்று எதுவுமேயில்லை இயக்கம் தவிர. மாறுதல்கள் தவிர.  இதில் அவனது இருப்பு என்ன அர்த்தம்  இருக்க முடியும்?

இருப்பு தற்செயலானது. முக்கியத்துவம் அற்றது. தற்செயலான ஒன்றினுள், முக்கியத்துவம் அற்ற ஒன்றினுள் இருக்கும் இருப்புக்கு அர்த்தம் கண்டு இருப்பதில் ஏதும் அர்த்தமுண்டா? ஆனால் அப்படியும் இருக்காவிட்டால் இருக்கும் வெறுமைக்குப் பதில், அப்படி அர்த்தம் கண்டு இருப்பதால் உருவாகும் அர்த்தம் இருக்கும்வரை திருப்தியை, இன்பத்தைத்  தராதா? தரும் அல்லவா? சுதந்திரனின் சிந்தனைகள் இவ்விதமும் இருப்பது அவன் இருப்பின் இயல்பு.

இவ்விதமாக இருப்பு பற்றிய சிந்தனைகளில் மூழ்கிக் கிடந்தவன் இறுதியில் வழக்கம்போல் ஒரு முடிவுக்கு வந்தான். இருப்புக் காரணம் அர்த்தம் அல்ல. அர்த்தத்துக் காரணம் இருப்பே. சாரம் அற்ற இருப்புக்குச் சாரம் தருவது இருப்பே. இதுவே சரியானது என்று தனக்குத்தானே ஒரு தடவை கூறிக்கொண்டான் சுதந்திரன்.  இவ்விதம் சுதந்திரன் கூறிக்கொண்டாலும் அவனது இருப்பு பற்றிய விசாரம் இத்துடன் நிறைவுக்கு வந்து விடுவதில்லை. அடுத்த நாளிரவும் மீண்டும் அவன் வந்து இந்தச் சாய்வு நாற்காலியில் சாய்ந்து , இரவு வானை நோக்கும்போது முதலிலிருந்து ஆரம்பித்து விடும். முடிவில் இவ்விதம் முடிந்தாலும் , அது அப்பொழுதுக்கான ஒரு முடிவே. தற்காலிகமான தீர்வே. மீண்டும் மற்றோர் இரவில் மீண்டும் அவ்விசாரம் தொடங்கும் வரையிலான தற்காலிகமானதொரு தீர்வே.

இவ்விதமாகச் சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்த சுதந்திரனை நித்திராதேவி பூரணமாக ஆட்கொண்டபோது, அவன் நிலையைக் கண்டு தொலைவில் , கவிந்திருந்த வெறுமைக்குள்ளிருந்த, காலத்தின் வெவ்வேறு அடுக்குகளில் வாசம் செய்து கொண்டிருந்த  நட்சத்திரக் கன்னியர்கள் கெக்கலி கொட்டிச் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

[தொடரும் ]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* டிஜிட்டல் ஓவியம் - கூகுள் AI

இந்தியத் திரைப் படத் துறையில் ஒரு பெரு மாற்றத்தைக் கொண்டு வந்த திரு சத்யஜித் ராய்! - இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் -

விவரங்கள்
- இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் -
கலை
12 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்தியத் திரைப் படஉலகம் மட்டுமின்றி அகில உலக் திரைப் பட உலகிலேயே மிகவும் பெருமையாகப் பாராட்டப் படுபவர் திரு சத்யஜித் றேய் அவர்கள். அத்துடன்; வங்காளத் திரைப் படத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியத் திரைப் படத் துறையில் ஒரு பெரு மாற்றத்தைக் கொண்டு வந்தவர்; திரு சத்யஜித் ராய்.

இந்திய நடிகரில் ஒருவரான சித்தார்த் சத்யஜித் ராயைப் பற்றிக் குறிப்பிடும்போது,’ அவரின் படம் மேற்கு நாடுகளில் வெளிவந்ததும்,திரைப்பட ஆர்வமுள்ள மக்கள் திரண்டு வந்து வரிசையில் நிற்கிறார்கள். ஆனால் இந்தியாவில் அப்படி ஏன் இல்லை’ என்று கேட்டார். அதற்குப் பதில் இக்கட்டுரையிலுள்ளது என்று நினைக்கிறேன்.

நாங்கள் உலக அமைதிக்கும் சமாதானத்திற்குமான தியானக் களத்தில் இருப்பவர்கள். அதே கோட்பாடுகளைத் தழுவிய தனது அறிவு, ஆற்றல்,அத்துடன் முழுவாழ்க்கையையுமே ஒட்டு மொத்த மக்களின் சிறந்த சிந்தனை மாற்றத்திற்காக அர்ப்பணித்த திரு சத்தியத் ராய் அவர்களைப் பற்றிக்; கொஞ்சமாவது தெரிந்து கொள்வது எமது அதிர்ஷடம் என்று சொல்லிக் கொள்கிறேன்.

இவ்வுலகின் பெரும்பாலான இடங்களில் ஒரு மனிதன் பிறக்கும்போது ஒரு கலைஞனாகவோ வைத்தியராகவோ அல்லது வேறு எந்தத் தொழிலையும் செய்யவேண்டும் என்ற உள்ளுணர்வுடன்; பிறப்பதில்லை. ஆனால் இந்தியாவில் மட்டும் பெருமபாலானவர்களின் குலத் தொழில் அல்லது குடும்பத் தொழில் அவர்களின் எதிர்காலத்துடன் இணைக்கப் பட்டு விடுகிறது. ஓன்றிரண்டு மனிதர்கள் தங்களின் வாழ்க்கைப்; பிரயாணத்தில் கண்ட அனுபவங்களின் உள்ளுணர்வின் உந்துதலால் தற்செயலாக அவர்களுக்கு அறி முகமில்லாத துறைகளில் தங்களையிணைத்துக் கொண்டு உலகம் வியக்கும் வகையில் பெருமையான மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க ...

பொலிசாரின் சட்ட மீறல்களும், சிறுவனின் மரணமும்! - நந்திவர்மப்பல்லவன் -

விவரங்கள்
- நந்திவர்மப்பல்லவன் -
அரசியல்
12 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டிப் பகுதியில் , பொலிசாரின் வேண்டுகோளையும் புறக்கணித்துத் தப்பி வாகனத்தில் விரைந்த, வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த, 17 வயதுள்ள , அயூப்ராஜ் அருள் என்னும் சிறுவன் கொல்லப்பட்டிருக்கின்றான். வழக்கம்போல் பல்வேறு விமர்சனங்கள், குற்றச்சாட்டுகளால் சமூக ஊடகங்கள் நிறைந்து வழிகின்றன.

பொலிசார் அவ்வப்போது மேலதிகமாகத் தம் பலத்தைப் பாவிப்பதால உயிர்கள் பறிபோவதென்பது உலகின் பல பாகங்களிலுன் அவ்வப்போது நடைபெறுமொன்று. இங்கும் அதுதான் நடந்திருக்கின்றது. பொலிசாரின் நடவடிக்கையைக் கடந்த கால வரலாற்றுடன் இணைத்துப் பார்க்கும் போக்கென்பது நம்மவரின் பலரின் பொதுவான பண்பு. இவ்விடயத்திலும் அதைக் காணலாம்.

இங்கு நடந்ததென்ன?

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரனின் பாடல்கள் : தலை குனிந்து செல்லும் பெண்ணே! , என் பிரியம் மிகு யாழ் மண்ணே! & உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
11 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1. வ.ந.கிரிதரன் பாடல் : தலை குனிந்து  செல்லும் பெண்ணே! 

இசை & குரல்:  SUNO AI   ஓவியம்: கூகுள் AI

பாடலைக் கேட்டுக் களிக்க : https://www.youtube.com/watch?v=DYAA3AhCA0Y

தலை குனிந்து  செல்லும் பெண்ணே! 
தலை நிமிர்ந்து பார்த்தால் என்ன?
தலை நிமிர்ந்து பார்த்தால் என்ன
நிலை குலைந்தா போவாய் கண்ணே!

கண்ணும் கண்ணும் பார்க்க வேண்டும். 
காதல்  நதியெனப்  பொங்க வேண்டும்.
எண்ணம் எல்லாம் நிறைய வேண்டும்.
மண்ணின் வாழ்வு சிறக்க வேண்டும்.

தலை குனிந்து  செல்லும் பெண்ணே! 
தலை நிமிர்ந்து பார்த்தால் என்ன?

மேலும் படிக்க ...

சிறுகதை; பாட்டில்கள்! - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
சிறுகதை
10 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 அசோக மரங்களின் குவியல் அடர்த்தியான நிழலைக்கொண்டு வந்திருந்தது. மரத்தடியில் போடப்பட்டிருந்த சிமெண்ட் நாற்காலிகள் திரைப்பட விழாவுக்கானது என்றில்லாமல் அயனக்ஸ் திரையரங்குகளின் நிரந்தரத்தன்மையால் உருவாக்கப்பட்டவை.  மண்தரையின் ஈரம் இன்னும் குளுர்ச்சியைக் கொண்டு வர முயற்சித்தது.

கோவா திரைப்பட விழா ஆரம்பித்து ஆறு நாட்களாகிவிட்டன.கோவாவின் முத்திரை எங்குமாக இருந்தது.பேசுபவர்களின் வாயிலிருந்து வரும் மது வாசனை முக்கியமானது . மது குறைந்த விலையில் எங்கும் கிடைப்பதே இங்கிருந்து போனவர்களை தாரளமாகப் புளங்கச் செய்தது. 

தாடிக்கார்ர் ஒருவர் சுற்றிலும் போடப்பட்டிருந்த ஸ்டால்களில் விநியோகிக்கப்பட்ட  அட்டைகளை சீட்டுக்கட்டை ஒன்றின் மேல் ஒன்று மடக்கி அடுக்குவது போல் அடுக்கிக் கொண்டிருந்தார். அதில்  உணவு விபரங்கள், மத்திய அரசின் என் எப் டி சி ஸ்டாலில் கிடைக்கும் இந்திய இயக்குனர்களின் படங்களின் பட்டியல்,  பழமையான திரைப்படக்கலைபொருட்கள், திரைப்படம் சம்பந்தமான வெவ்வேறுப் போட்டிகளை அறிவிப்பவை என்றிருந்தன, படங்கள் பற்றியக் குறிப்புகளை அடுக்கி வைத்திருந்தார்.அந்த அடுக்கின் மேல் பகுதியில் சோவியத் ரஷ்யப்படங்களின் விபரங்கள் அழுத்தமான வர்ணஙகளில் பளீச்சிட்டன. சட்டென மேலிருந்த சோவியத் அரங்கின் அட்டைகள்கவிழ்ந்து விழுந்து தூரமாய் தெரித்துப் போனது. அது ஒரு பெண் இயக்குனரின்  காலடிக்குச் சென்று உட்கார்ந்தது. அவர் அதை எடுத்துப் பார்த்து வியந்து கொள்வதைப் போல் பார்த்துக் கொண்டார். . தார்க்கோவிஸ்கியின் மிரர்  படத்தின் காட்சியை அந்தப்படம்  காட்டியது காட்டிக் கொண்டிருந்த்து. ட்ரினிடி மடாலயத்திலிருந்து துறவிகள் ஆந்த்ரேய் ருப்ளேவ், தானியல்,  மூவர்    புனித உருவங்களை வரைவதற்காக மாஸ்கோவிற்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.   மழைக்காக ஒதுங்குமிடத்தில் ஆடியும் பாடியும் அங்கிருப்போரைச் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் ஒருவனைக் காவலர்   பிடித்துச் செல்லும் காட்சி அதிலிருந்தது. அக்காட்சியை அப்பெண்  இயக்குனர்    பார்த்துக் கொண்டிருந்தார்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. நினைவுக் குளியல் (3): பஞ்சாங்க ஐயர்! - தேவகாந்தன் -
  2. அமெரிக்கப் பயணத்தொடர்: மேற்கு அமரிக்கா (1) - நடேசன் -
  3. 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' 'யு டியூப் சானலு'க்கு உங்களை வரவேற்கின்றோம்!
  4. அடிகளார் கண்ணுற்ற அஞ்சலி! - கலாநிதி செல்லத்துரை சுதர்சன் -
  5. இலக்கியவெளி நடத்தும் “பேராசிரியர் ஆறுமுகம் சதாசிவம் அவர்களின் தமிழியல் சுவடுகளும் நூற்றாண்டு தின நிகழ்வும்”
  6. அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்த பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திராவின் உரை - நந்திவர்மப்பல்லவன் -
  7. ஜனாதிபதி அநுர குமார திசாயநாயக்கவின் சுதந்திர தின உரையும் , அது பற்றிய குடிமகன் ஒருவனின் சிந்தனைகளும்! - நந்திவர்மப் பல்லவன் -
  8. சிறுகதை: நிலவின் மொழி புரிவதில்லை! - ஶ்ரீரஞ்சனி -
  9. கல்வெட்டுக்கள் இரண்டு: சிம்மவிஷ்ணு 25 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு (கி.பி. 579) கண்டுபிடிப்பு & சோழர்கால (கி.பி.12-13) கல்வெட்டு கண்டுபிடிப்பு! - முனைவர் ஆ. சந்திரன் -
  10. வ.ந.கிரிதரன் பாடல்: நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
  11. அதிகாரத்தின் ஆன்மீகமயமாக்கம் - மேற்கத்திய அரசியல் யதார்த்தவாதத்திற்கு மாற்றாகக் காந்திய அறவியல்! - ஈழக்கவி -
  12. கனடாவில் ‘தைப்பொங்கல்’ நூல் வெளியீடு! - சுலோச்சனா அருண் -
  13. சிறுகதை: நன்றி முத்தம்! - கன்பரா யோகன்-
  14. வ.ந.கிரிதரன் பாடல்: ஏற்றம்மிகு உலகைச் சமைக்கவே சூழலைப் பேணுவோம்!
பக்கம் 6 / 128
  • முதல்
  • முந்தைய
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • அடுத்த
  • கடைசி