அமுதா போட்டிருந்த செருப்பை ரோட்டில் தேய்த்து கொண்டே அவள் ஓட்டி வந்த ஸ்கூட்டியை நிறுத்த முயன்றாள். கைகளில் பிடித்து நிறுத்தும் பிரேக் இருந்தும் அமுதாவிற்கு கால்களால் நிறுத்துவதே பரிச்சியமான ஒன்று.
வண்டியை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் வேகமாக நடந்தாள் “நானே அவசரத்துல வேகமாக போய்கிட்டு இருக்கேன் ! நீயாவது ஞாபகப்படுத்த மாட்டியா? எத்தனை தடவை உனக்கு சொல்றது.” என்று தன் அம்மாவிடம் பேசிக் கொண்டே அவள் மறந்து வைத்துவிட்டுப் போன மதிய உணவை எடுத்து பையில் வைத்துக் கொண்டால். “சரி, சரி போயிட்டு வரேன்” என்று அவசரத்தில் அவள் அம்மாவின் முகத்தை கூட பார்க்காமல் சுவரைப் பார்த்து கூறிவிட்டு வெளியில் நடந்தாள்.
அமுதா ஒரு பிரபலமான கால் சென்டரில் வேலை செய்கிறாள். அந்த வீட்டில் இவர்கள் இருவர் மட்டுமே இருப்பார்கள். அது ஒரு பழைய காலத்து ஓட்டு வீடு சென்னையில் இதுபோன்ற ஒரு வீட்டை பார்ப்பது மிகவும் அரிது. அமுதா கடைக்குட்டி என்பதால் அவள் அம்மா அவள் எது செய்தாலும் மௌனமாய் மட்டுமே இருப்பாள் அவ்வப்போது மகிழ்ந்தும் கொள்வாள். சுந்தரி ஏதும் பேசாமல் மகளை வழி அனுப்பி வைத்தாள்.
சுந்தரி மீண்டும் வீட்டிற்குள் வந்து அவளுக்கான அடுப்படி பணிகளை மேற்கொண்டாள் இது தினமும் சுந்தரியின் வீட்டில் நடக்கும் படலம் தான்.
வீட்டின் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த தனது கணவரின் புகைப்படத்தை துடைத்து அதற்கு பூவும், பொட்டும் வைத்து விடுவாள். அந்த புகைப்படத்தை துடைக்கும் போதெல்லாம் ஏதோ சொல்ல வேண்டும் என்று நினைப்பாள் ஆனால் அவைகளை தொண்டைக் குழியில் போட்டு புதைத்து விடுவாள்.
மழையிருள் இறுக்கிய வானத்தில் அவ்வப்போது எங்கோ வெட்டிய மின்னலின் ஒளிக்கீறுகள் ஓடி மறைந்து கொண்டிருந்ததைக் கண்டபடி, தோளில் துவாயைக் போர்த்தி குளிரை மறைத்துக்கொண்டு ஜன்னலோரத்தில் வெளிபார்த்து நின்றிருந்தாள் குசுமவதி. தேசத்தின் நிலைபோல, காலநிலையும் நன்னிமித்தம் ஏதுமற்று இருண்டு விறைத்த குளிருக்குள் கிடப்பதாய்ப்பட்டது அவளுக்கு. நான்கு நாட்களாக மழை பெய்துகொண்டிருந்தது. கூதல் காற்று தகரக் கூரையைப் பிய்த்தெறியும் மூர்த்தண்யத்துடன் ஓங்காரமாய் அலைந்தடித்தது.
அங்கிருந்து பார்த்தால் வவுனியா-கொழும்பு பிரதான வீதிக்கப்பால் புத்த வளாகத்தின் முன்பகுதியில் நிமிர்ந்து பிரமாண்டமாய் நின்ற புத்தர் சிலை தெரியும். பின்னால் சுற்று மதிலினுள்ளே மூன்று புற விறாந்தையுள்ள சின்ன விகாரம். அதன் முற்றத்தில் செழிப்பாய் நெடிதுயர்ந்து வளர்ந்துகொண்டிருந்த அரசமரம் நின்றிருந்தது. பின்னாலுள்ள மரக்கூடலுள் இருந்தது பன்சால எனப்படுகிற புத்த துறவிகளின் வாசஸ்தலம்.
பதிவுகள் தளம் பார்வைக்குப் பழைய தளத்தைப்போலவே இருந்தாலும், உண்மையில் உட்கட்டமைப்பில் மிகப்பெரிய அளவில் மாற்றங்களைக்கொண்ட புதிய கட்டமைப்புடன் கூடிய தளமாக மாற்றப்பட்டுள்ளது. ஆக்கங்களை மிக இலகுவாகக் காணும் வகையிலும், அலைபேசியில் வாசிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மேலும் பல வாசிப்பினை இலகுவாக்கும் பயன்மிக்க மாற்றங்களைக் கொண்டு வருவோம்.
பதிவுகள் இதழுக்குப் படைப்புகள் அனுப்ப..
பதிவுகள் இதழுக்குப் படைப்புகள் அனுப்ப விரும்புவோர் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். , இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். அல்லது இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் முகவரிகளிலொன்றுக்கு அனுப்பி வையுங்கள். ஏற்கனவே வெளியான படைப்புகளை எழுதியவர்கள் பதிவுகளுக்கு அனுப்பினால் அவை பதிவுகளுக்கு அனுப்பிய படைப்புகளாக மட்டுமே கருதப்படும். முன்னர் அவற்றை வெளியிட்ட ஊடகங்களின் பெயர்களைக் குறிப்பிட மாட்டோம். மேலும் ஏனையவர்கள் உங்களுக்கு அனுப்பிய படைப்புகளைப் பதிவுகளுக்கு அனுப்பினால் அவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் ஏனையவர்கள் எழுதிய படைப்புகளையும் அனுப்பாதீர்கள். எழுதியவர்களே அவற்றைப் பதிவுகளுக்கு அனுப்ப வேண்டும்.
தட்டையர்கள் உலகுக்கு விஜயம் செய்வதென்றால்
எனக்கு மிகவும் பிடித்த
பொழுதுபோக்கு.
பரிமாண வித்தியாசங்கள் எங்களுக்கிடையில்
ஏற்படுத்திய வித்தியாசங்கள்
எங்களுக்கு மிகவும் சாதகமாகவிருக்கின்றன.
அதனால் தட்டையர்கள் உலகு எப்பொழுதும்
எனக்கு உவப்பானதாகவே இருக்கின்றது.
தட்டையர்கள் உலகில் நான் எப்போதுமே உவகையுறுவதற்கு
முக்கிய காரணங்களிலொன்று
என்னவென்று நினைக்கின்றீர்கள்?
மானுடப் படைப்பிலுள்ள பலவீனங்களிலொன்றுதான்.
ஏனெனில் அங்கு நான் அவர்களைவிட
எல்லாவகையிலும் உயர்ந்தவன்.
என்னை மீறி அங்கு எவையுமேயில்லை.
திருப்பூரில் புத்தகக் கண்காட்சி ஜனவரி 27 முதல் நடைபெற்று வருகிறது. நியூ சென்சுரி புக் ஹவுஸ், இந்திய அரசின் நேசனல் புக் டிரஸ்ட் ., காலச்சுவடு, கண்ணதாசன் பதிப்பகம்., நக்கீரன், விஜயா பதிப்பகம் உட்பட 25 பதிப்பகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வாரம் விற்பனைக்கு வந்துள்ள புதிய நூல் : பால் பேத வன்முறையும், பங்களாதேஷ் அனுபவங்களும் . ரூ65 - நியூ சென்சுரி புக் ஹவுஸ், ஆசிரியர் : திருப்பூர் சுப்ரபாரதிமணியன்
நூலின் முன்னுரை - ஆ. அலோசியஸ், ” சேவ் “, திருப்பூர் -
நண்பர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் வங்கதேசத்திற்கு 2020 ஜனவரி மாதம் சென்று கலந்துகொண்ட பாலின வேறுபாடு சார்ந்த வன்முறைகள் ( Gender Based violence )பற்றிய கருத்தரங்கு நிகழ்ச்சி அவரை பாதித்ததை ஒட்டி படைப்பிலக்கியத்தில் அவற்றை வெளிக்கொணரும் முயற்சியில் அவற்றை கவிதைகள், சிறுகதைகள் கட்டுரைகள் என்ற வகையில் வடிவமைத்து இந்த நூலை உருவாக்கியிருக்கிறார், அவருக்கு என்னுடைய பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.
மனிதகுலத்தின் பண்பாட்டு வளர்ச்சியின் இன்றியமையான படிநிலையாக உலோகங்களின் கண்டுபிடிப்பு விளங்குகின்றது. மானுடப் படிமலர்ச்சியில் இது ‘உலோகக்காலம்’ என்றே வரையறுக்கப்படுகின்றது. தங்கமும் அதற்கு அடுத்த நிலையில் வெள்ளியும் மதிப்புமிகுந்த உலோகங்களாகப் பண்டுதொட்டு வழங்கப்பட்டு வருகின்றன. உலோகங்களின் பயன்பாடும் பண்பாடும் குறியீட்டு நிலையிலிருந்தே பரிணமித்தவை எனலாம். இன்று அழகியலுக்கான நோக்கோடு ஆபரணங்களாக பயன்பாட்டிலுள்ள இந்த அணிகளின் குறியீட்டு தன்மை அதன் மாரபினை, பண்பாட்டினைத் தக்கவைத்துள்ளன. ஆனால் இன்றும் குறியீட்டு நிலையிலேயே தொடரும் நீலகிரிவாழ் படகர் இனமக்களின் வெள்ளி ஆபரணங்களைக் குறியீட்டு நிலையில் இந்தக் கட்டுரை ஆய்கிறது.
அண்மையில் மறைந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளரும், மல்லிகை ஆசிரியரும், மூவினத்தையும் சேர்ந்த கலை, இலக்கியவாதிகளாலும் , கலை இலக்கியப் பேராசிரியர்களாலும் ஆழ்ந்து நேசிக்கபட்ட, அடிநிலை மக்களின் எழுச்சிக்குரலாக திகழ்ந்த டொமினிக்ஜீவா அவர்களின் நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் அஞ்சலி நிகழ்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தொன்மத்தின் மீது தேவகாந்தனுக்கு இருப்பது தீராக் காதலல்ல தீராக்காமம். தொன்மத்தை மையப்படுத்திய தேவகாந்தனின் புனைகதைகளில் இரு விடயங்கள் அடிப்படையாக இருப்பதனை எடுத்துக் காட்டலாம். முதலில் ஏற்கனவே உள்ள நமக்கும் தெரிந்திருக்கும் தொன்மத்தை முன்வைத்தல். அடுத்தது அந்தத் தொன்மத்துக்கு சமாந்தரமாக இன்னொரு தொன்மத்தை உருவாக்கி இடைபுகுத்துதல். இதைத்தான் “பிறந்தவர் உறுவது பெருகிய துன்பம்” என்ற கருத்தியல் வழியாகச் சமூகத்தில் ‘ஊடு நிகழ்த்துகை’அவரால் மேற்கொள்ளப்படுகிறது. அந்த ஊடு நிகழ்த்துகையோடு இணைந்த மீள் வாசிப்பின் கலைப புனைவாக நாவல் நீண்டு செல்கிறது. ‘கதை சொல்லல்’ ‘கதை இணக்குதல்’ ஆகிய இருவகை நுட்பங்களிலும் நுண்ணாற்றல் மற்றும் நுண் அனுபவம் கொண்ட தேவகாந்தனின் கதை விசையூட்டற் செயற்பாடு வாசிப்பை நேர்பட நடத்திச் செல்கின்றது… “ என பேராசிரியர் சபா .ஜெயராசா குறிப்பிட்டுள்ளார்.
முன்னுரை
இலக்கியங்கள் பொதுவாக மனித வாழ்வினைப் பிரதிபலிக்கும் தன்மையில் அமைகின்றது. இலக்கியங்கள் வாயிலாக மொழியும் மனித வாழ்வியலும் உயர்வு பெறுகின்றன. செவ்விலக்கியங்கள் எனப்போற்றப்படும் இலக்கியங்களில் ஒன்று புறநானூறு. அப்புறநானூற்றின் வழியாகப் பண்டைத் தமிழரின் வானிவியல் அறிவை அளவிடுவதாக இக்கட்டுரை அமைகிறது.
ஐம்பூதங்கள்
இவ்வுலகமானது பஞ்சபூதங்களால் ஆனது. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் பஞ்சபூதங்களாக் கூறுவர். இத்தகைய ஐம்பூதங்களை ,
மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசம்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல (புறம்.2.1-6)
என்னும் வரிகளால் இயற்கை ஐந்து கூறுகளால் அமைந்தது என்பதை முரஞ்சியூர் முடிநாகராயர் சங்க கால வாழ்வு இயற்கையுடன் இணைந்து வாழ்வு என்பதனையும் இயற்கையை ஐந்து கூறுகளாகக் கண்ட அறிவினையும் அறியமுடிகிறது.
ஞாயிற்றின் வெம்மை
சேர மன்னனைப் புகழ்ந்து பாடும் புலவர் நினது ஆட்சியில் ஞாயிற்றின் வெம்மையைத் தவிர வேறெந்த வெம்மையும் மக்கள் அடையவில்லை என்பதனை ,
செஞ்ஞாயிற்றுத் தெறல் அல்லது
பிறிது தெறல் அறியார் நின் நிழல் வாழ்வோரோ
"அண்ணா! இஞ்சை வந்து பார் அம்மாவை...” வரதலிங்கத்தின் காதிற்குள் கிசுகிசுத்தான் சதாநேசன். இருவரும் பூனை போல கால்களைத் தூக்கித் தூக்கி வைத்து நடந்து, அம்மாவின் அறையை நோக்கிச் சென்றார்கள்., மறைவாக நின்று அம்மாவை எட்டிப் பார்த்தார்கள்.
அம்மா படுக்கையில் அமர்ந்தவாறு, வரதலிங்கம் சுவிஷில் இருந்து கொண்டுவந்த ஆடைகளைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் பஞ்சு போன்ற பாதங்கள் கட்டிலிலிருந்து நீண்டு அந்தரத்தில் தொங்கி ஆடிக்கொண்டிருந்தன. மனம் எங்கோ லயித்திருக்க, உதடுகள் மெல்லச் சிரிப்பதும் மூடுவதுமாக இருந்தன.
அந்த உலகம் எனக்குப் பலவிதங்களிலும் பிடித்த உலகம்
என்பேன்.
என் மனத்தில் சஞ்சலங்கள் அலையடிக்கத்தொடங்குகையில்,
என் மனத்தில் சஞ்சலப்புயல்கள் வீசத்தொடங்குகையில்,
என் மனத்தின் அமைதி சீர்குலையத்தொடங்குகையில்,
நான் அந்த உலகை நோக்கிப் பயணமாகத் தொடங்குகின்றேன்.
அந்த உலகப்பயணம் தரும் திருப்தியை எனக்கு வேறெந்தப் பயணமும்
தருவதில்லை.
அந்த உலகில் நானும் காட்சிகள் அற்புதமானவை.
பறவைகளைப் பற்றிய புரிதல்களை,
அறிவியற் சாதனைகளை வெளிப்படுத்தும்
அந்த உலகில் நான் எவ்வளவு நேரமானாலும் என்னை மறந்து
பயணிப்பேன்.
அண்மையில் இவ்வுலகை விட்டு மறைந்த திரு டொமினிக் ஜீவா அவர்கள் இலங்கையின் முற்போக்கு இலக்கியத்துறையில் மிகவும் முக்கியமான ஆளுமைகளில் ஒருத்தராகும். 27.6.1927-ல் பிறந்து 28.1. 2021 மறைந்த மதிப்புக்குரிய எழுத்தாளரின் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கற் செய்தியைப் பகிர்ந்து கொள்கிறேன். இச்சிறு கட்டுரையில அவருடன் எனக்கிருந்த இலக்கிய உறவு தொடக்கம் அவரின் இலக்கியப் பயணத்தின் எனக்குத் தெரிந்த சில விடயங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். இன்று அன்னாரின் மறைவுக்கு,உலகம் பரந்த விதத்தில் அஞ்சலி செலுத்துக்கொண்டிருக்கிறார்கள். பல்வேறு பத்திரிகைகளில் அவரைப் பற்றிய பல தகவல்கள் இலக்கிய ஆர்வலர்களால் எழுதப் படுகின்றன.
அவர் 1950-1960;ம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த சாதிக்கொடுமையின் விகார முகத்தை, வக்கிரமான நடவடிக்கைகளை எதிர்த்த பல முற்போக்கு படைப்பாளிகளில் முக்கியமானவராகும். அவரின் காணொலி ஒன்றில், அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதிக் கொடுமையின் தாக்கத்தால் அவர் பாடசாலைப் படிப்பையே பன்னிரண்டு வயதில் அதாவது 1939ம் ஆண்டு துறந்து வெளியேறியதைப் பற்றிச் சொல்கிறார். அதைத் தொடர்ந்து, அன்று யாழ்ப்பாணத்தில் இடதுசாரிக் கொள்கைகளுக்கு 1947ம் ஆண்டு முதல் அத்திவாரமிட்ட அண்ணல் மு. கார்த்திகேசு மாஸ்டரின் சமத்துவத்திற்கான முக்கிய வேலைகள் யாழ்ப்பாணத்தில் பரந்தபோது அதனால் ஈர்ப்பு வந்து இடதுசாரிப் பணிகளில் முக்கிய பங்கெடுத்த சரித்திரத்தைச் சொல்லியிருக்கிறார்.
1971-1977 காலப்பகுதியில் யாழ் இந்துக்கல்லூரியில், சமகால வகுப்புகளில் கல்வி கற்று வெளியேறி அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஐக்கிய அரபு இராச்சியம், இந்தியா, இலங்கை, தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வசித்துவரும் மாணவர்களில் சிலர் இணைந்து உருவாக்கிய, சமூக அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும், பதிவு செய்யப்பட்ட, இலாப நோக்கற்று இயங்கும் அமைப்பே ஓராயம் அமைப்பு. இவ்வமைப்பு புலத்து மக்களோடு இணைந்து செயற்படும் வகையில் கல்வி, விவசாயம், நீர்வளப்பாதுகாப்பு, சுகவாழ்வு, சூழற்பாதுகாப்பு, இளையோர் தொழிற்கல்வி ஆகிய துறைகளில் ஆறு உபகுழுக்களை அமைத்து இயங்கத்தொடங்கியுள்ளது. இதற்காக இவர்கள் இணையத்தளமொன்றினையும் உருவாக்கியுள்ளார்கள். அத்துடன் இவர்கள் புலத்தில் மேற்கொள்ளவிருக்கும் திட்டங்களை பின்வரும் மூன்று வகைகளாகப் பிரித்து ,அவற்றின் அடிப்படையில் செயற்படவும் முடிவு செய்துள்ளார்கள்:
உனக்கும் எனக்குமான
ஒரு கீதத்தை இசைத்தேன்.
அலைநுரைப் பூக்கள் அர்ச்சித்தன.
மலைகள் கம்பீரத்தைப் பெருக்கின.
கங்கைகளும் கடல்களும் நீரமுதாயின.
ஒளி பெருக்கி நின்றது வானம்.
கொடிகளுக்காகவே காற்று வீசிற்று.
நிலமோ நிமிர்ந்தெழுந்தது.
தமிழியல் துறை தமிழியற்புலம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,மதுரை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை, சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்,ஹ_ஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமெரிக்கா, உகண்டா தமிழ்ச்சங்கம், உகண்டா கிருஷ்ணகிரி மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் நலச்சங்கம் இணைந்து நடாத்தும் 100 நாள் தேசிய நாடகவிழா மற்றும் நாடகமும் பண்பாடும், திறன் மேம்பாட்டுத் தேசிய பயலரங்கம் நிகழ்வைச் சிறப்பித்துக்கொண்டிருக்கும் தமிழில்துறை தலைவர் முனைவர் யோ.சத்தியமூர்த்தி, கலைமணிச்சுடர் ம.வெ.குமரேசன், நாடக ஆசிரியர் மாதையன், நாடக மனேஜர் பெ.முருகேசன் மற்றும் கலைஞர்கள், நடிகர்கள், கலை ஆர்வலர்கள், இளையவர்கள் அனைவருக்கம் எனது இனிய வணக்கம்!
‘ஈழத்து நாடக மரபும் அதன் தொடர்ச்சியும்’ என்ற தலைப்பில் பேச உள்ளேன். யாழ்ப்பாண வரலாறு ஆய்வுகளில் அக்கறை கொண்ட என் தந்தை அகஸ்தியர் யாழ்ப்பாணக் கூத்து வடிவங்கள் பற்றி அதாவது வடபாங்கு, தென்பாங்கு, மன்னார் கூத்து வடிவங்கள், மட்டக்களப்பு கூத்து, காத்தவராயன் கூத்து, மலையக வடிவங்கள், கண்டிய நடனங்கள் என்று பேசுவதை அவதானித்து வந்திருக்கிறேன். அத்தோடு அவர் சிறந்த பாடகர். தாள லயம் குன்றாது நாட்டுக் கூத்து மெட்டுக்களை பாடக்கூடியவர். அத்தோடு மிருதங்கக் கலையை முறைப்படி கற்றவர். அவரது மிருதங்கக் கச்சேரிகளையும் நான் நேரில் பார்த்து ரசித்திருக்கிறேன். எனது பாட்டனாரான சவரிமுத்துவும் கலையார்வம் கொண்டவர். அவர் உண்மையான குதிரையை மேடையில் ஏற்றி நடித்தவர் என்று எனது தயார் நவமணி கூறியதைக்கேட்டு வியந்திருக்கிறேன். அவர் நடித்தவற்றை நான் நேரில் பார்க்காவிட்டாலும் கூத்துப் பாடல்கள் பாடியதைக் கேட்டிருக்கிறேன். எனது பெரிய தந்தை எஸ் சிலுவைராஜாவும் சிறந்த நாட்டுக்கூத்து கலைஞன். ‘சங்கிலி மன்னன், ‘கண்டி அரசன்’ போன்ற நாட்டுக்கூத்து நாடகங்களில் அரசனாகி கொலுவில் உட்கார்ந்து அவர் கர்ஜித்ததை நான் மேடைகளில் பார்த்து அனுபவித்திருக்கிறேன். அத்தோடு எனது மகன் அகஸ்ரி யோகரட்னம் லண்டனில் மிருதங்கக் கலையைப் பயின்று அரங்கேற்றம் கண்டு, லண்டன் மேடைகளில் தனது கலைத் திறமையை வெளிப்படுத்தி வருகின்றான். இத்தகைய கலைச் சூழலின் பின்னணியிலிருந்து வந்தவள் என்றவகையில் இங்கு பேசுவது பொருத்தமாகி மகிழ்விக்கின்றது.
கொழும்பு - பார்ப்பவர் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை சொல்லும் ஒரு மண். இலங்கையின் தலைநகர் என்பதற்கு அப்பால் இலங்கையின் சரித்திரத்தில் மிக முக்கியத்துவம் கொண்ட ஒரு மாநகரம். இலங்கை வாழ் தமிழரைப் பொறுத்தவரையிலும் கூட அவர்களின் தாயகம் வெவ்வேறு நகரங்களாக இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் கடந்த காலங்களில் அவர்களின் கதையோடு இணைந்துவிட்ட ஒரு ஊர் அது.
தமிழர் சந்தித்த கலவரங்கள் பெரும்பாலும் மையம் கொண்ட இடமாக கொழும்பு இருந்துள்ளது. அவர்களது வாழ்விடமாக அது இருந்துள்ளது. அவர்களுக்கு பொருளாதார ரீதியாக வளம் கொடுத்த மண்ணாக அது இருந்துள்ளது.
வடக்கு - கிழக்கில் இருந்தும் மலையகத்தில் இருந்தும் தலைநகர் வாழ்க்கையை நோக்கி ஓடிவருவோருக்கு கொழும்பு காண்பிக்கும் கோலங்கள் பல. ஆனால், எங்களைவிட, கொழும்புக்கு அண்மித்த நகரான நீர்கொழும்பில் பிறந்த முருகபூபதி அண்ணனுக்கு அது கொடுத்த காட்சிகள் வேறானவை. அனுபவங்கள் வேறானவை.
அவற்றைக் கொண்டு கொழும்பின், அதன் அடிநாதமான களனி கங்கையின் தீரத்தில் நடந்த நிகழ்வுகளை இங்கு காவியமாக வடிக்க அவர் முயற்சித்திருக்கிறார்.
வீரகேசரி பல எழுத்தாளர்களை விளைவித்த ஒரு களம். அங்கு உருவானவர்களில் மிகவும் முக்கியமானவர்களில் ஒருவர் முருகபூபதி அண்ணர். அவர் அங்கு பணியாற்றிய காலத்தில் நான் அங்கு இல்லை.
ஆனால், அவரோடு அந்தக் காலங்களில் பணியாற்றிய பலர் பெரும் ஆளுமைகள். ஆனால், அவரது அனுபவம், கற்கை ஆகியன வெறுமனே வீரகேசரியை மாத்திரம் மையம் கொண்டவை அல்ல. அதனையும் கடந்து தான் பிறந்த மண்முதல் தான் இப்போது வாழும் ஆஸ்திரேலியா வரை உலகெங்கும் அவர் கண்ட அனுபவங்கள் அவரது எழுத்தில் தெரியும்.
எனக்குப் பிடித்த விடயங்களிலொன்று
பழைய புத்தகக் கடைகளில் புத்தகங்கள் வாங்குவது.
புதுக் கடைகளில் வாங்குவதை விடப்
பழைய புத்தகக் கடைகளில் வாங்குவதிலுள்ள
இன்பமே தனி.
பழைய புத்தகக் கடைகளில் கிடைப்பதைப்போல்
எல்லாவகைப் புத்தகங்களும்
புதுப்புத்தகக் கடைகளில் கிடைப்பதில்லை.
உதாரணத்துக்கு ஒன்று கூறுவேன்.
உங்களால் பழைய புத்தகக் கடைகளில்
வாங்குவதைப்போல்
புதுப்புத்தகக் கடைகளில்
பால்ய பருவத்தில் பிடித்தமான இதழொன்றில்
தொடராக வெளியான,
ஓவியங்களுடன் கூடிய , அழகாக 'பைண்டு' செய்யப்பட்ட
நூல்களை ஒருபோதுமே பெற முடியாது.
அந்நூல்களைக் கைகளால் அளைகையிலுள்ள சுகம்
இருக்கிறதே
அதுவொரு பெரும் சுகமென்பேன்.
அவ்வகையான சுகத்தினை ஒருபோதுமே உங்களால்
புதுப்புத்தகக் கடைகளில் பெற முடியாது.
எழில் இனப் பெருக்கம்
முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதியிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது.
ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை வாலிபக் காதலருக்கு மட்டுமின்றி அனுபவம் பெற்ற முதிய காதலருக்கும் எழுதியுள்ள ஷேக்ஸ்பியரின் ஒரு முதன்மைப் படைப்பாகும். அந்தக் காலத்தில் ஈரேழ்வரிப் பாக்கள் பளிங்கு மனமுள்ள அழகிய பெண்டிர்களை முன்வைத்து எழுதுவது ஒரு நளின நாகரிகமாகக் கருதப் பட்டது. ஷேக்ஸ்பியரின் முதல் 17 பாக்கள் அவரது கவர்ச்சித் தோற்ற முடைய நண்பனைத் திருமணம் செய்ய வேண்டித் தூண்டப் பட்டவை. ஆனால் அந்தக் கவர்ச்சி நண்பன் தனக்குப் பொறாமை உண்டாக்க வேறொரு கவிஞருடன் தொடர்பு கொள்கிறான் என்று ஷேக்ஸ்பியரே மனம் கொதிக்கிறார். எழில் நண்பனை ஷேக்ஸ்பியரின் ஆசை நாயகியே மோகித்து மயக்கி விட்டதாகவும் எண்ணி வருந்துகிறார்.. ஆனால் அந்த ஆசை நாயகி பளிங்கு மனம் படைத்தவள் இல்லை. அவளை ஷேக்ஸ்பியர் தன் 137 ஆம் ஈரேழ்வரிப் பாவில் “மனிதர் யாவரும் சவாரி செய்யும் ஒரு வளைகுடா” (The Bay where all men ride) – என்று எள்ளி இகழ்கிறார்.
இந்த நாட்டில் இரவில் வானில் நட்சத்திரங்களைப் பார்க்க முடியாது.தவிர பகலில் முகில்கள் வரையும் பல்வேறான அழகிய தோற்றங்களைப் பார்க்க முடியும்.இருள் பிரியாத காலைவேளையில் மணி,இடையிடையே வானில் முகில்களின் அழகையும் பார்த்தவாறு அவசரமில்லாமல் நடந்து வந்து கொண்டிருந்தான்.சில நாட்களாக முன்னால் நடந்து போற அண்ணர்,பார்த்தாலேயே தெரியும்,ஈழத்தமிழர் என்று.அணியிற ஆடையிலே துப்பரவாக அக்கறை இல்லை.தோய்த்து தூய்மையாய் அணிந்தாலே போதும் என்ற மாதிரி சிறு கசங்கலுடன் சேர்ட்,காற்சட்டைக்குள் விடாது பறக்க விச்ராந்தியாக கை விரலில் ஒரு சிகரட் புகைய ...யாராய் இருக்கும்?மணிக்கு அறியும் ஆவல் கிளரவேச் செய்தது.அவன் இன்னும் சிறிய தூரம் நடக்க வேண்டும்.அவர் ஓடுற சிற்றூர்ந்து கராஜ்ஜுக்குள் நுழைந்தார்.ஓடு பாதையிலும்,பக்கத்திலிருந்த சிறு காணித்துண்டிலும் இறுக்கமாக சில சிற்றூர்ந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன.இவனுடைய கராஜ்ஜுக்கு பெரிய வளவு இருந்தது.தவிர இருபதுக்கு மேலே ...நிற்பது வழக்கம்.
இவர் சிற்றூர்ந்து ஓட்டுனர் ,தெரிகிறது.இவன் ஓரே இடத்திலேயே நீண்ட காலமாக எடுத்து ஓடுறதாலே மற்றவற்றுக்குள் போய் பார்த்திருக்கவில்லை.அவன் வரும் பேருந்திலே சிலவேளை வருவார். முதலிலும் வந்திறங்கி இருப்பார்.விறு விறு நடை.அடிக்கடி ஒரு சிகரட் புகைகிறது.சங்கிலியாக புகைப் பிடிப்பவரா?நடக்கவிட்டு பின்னால் துரத்தி வருகிறான். ஒரு நாளும் எட்டி நடைப் போட்டு அவருடன் கதைத்ததில்லை.நடைப் பயிற்சி நடை பெறுகிறது.அவனுக்கு உடல்ப் பயிற்சி தேவை என வேளைக்கே இறங்கி நடக்கிறான்.தவற விட்ட போது அவர் விடுப்பில் நின்றிருக்கலாம்.நடந்த பிறகு ஓடுறது புத்துணர்ச்சியாக இருக்கிறது.நம்ப மாட்டீர்கள்.இப்படி இரண்டு,மூன்று மாசங்கள் ஓடி விட்டன.வாழ்க்கையில் தான் எத்தனைப்பாடங்கள்?உயர் வகுப்பைப் போல பாடங்களைக் குறைத்து விட வேண்டும் தான்.தலையில்.... கொதிக்கிற பிரச்சனைகளை இலேசிலே இறக்கி வைக்க முடியிறதில்லை.நிதானமும் வேண்டும் என்று நடக்கிறான்.வேலை முடிந்த பிறகும் இரவில் தூங்கி ஒரு விழிப்பு வருகிற போது பத்மாசனமும் போட்டு கையில் சிறிய றபர் உருண்டைகளை வைத்து 'சாந்தி,சாந்தி"என உருவும் போடுறான் .சிந்தனைகள் ஒழுங்காய் வர போராட வேண்டியிருக்கிறது.
உலகில் சிந்தனையாலும் பண்பாட்டாலும் வளர்ச்சியடைந்த தொல்குடி தமிழ்ச்சமூகம். இதற்கு இரண்டாயிரமாண்டு கால சிந்தனை மரபு உண்டு. வாழ்தல் சார்ந்த, உழைப்பு சார்ந்த செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் அம்மாக்களின் சிந்தனையிலும் மாற்றங்களை உருவாக்குகின்றன. ஒரு சமூகத்தின் சிந்தனை மாற்றத்தை அறிந்து கொள்ள ஒவ்வொரு கால கட்டத்திலும் உருவான பனுவல்களே தக்கச் சான்றாக அமைகின்றன. அந்த வகையில் தமிழரின் மழை சார்ந்த பகுத்தறிவு சிந்தனை எப்படி கருத்துமுதல்வாதச் சிந்தனைக்குச் சென்றது அதற்கான சமூகக் காரணங்களை இலக்கியத்தில் இருந்ததும் சமூக அரசியல் பொருளாதாரச் சூழலில் இருந்தும் முன்வைத்து ஒரு உரையாடலை கட்டமைப்பதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
வரலாறு அறியும் காலம் சங்க காலம். சங்க கால மக்களின் வாழ்வியலை அறிந்து கொள்ள தொல்லியல் சான்றுகள் தொடங்கி பல சான்றுகள் கிடைக்கின்றன. என்றாலும் சங்க இலக்கியம் புனையும் வாழ்க்கைச் சித்திரம் முழு நம்பகத்தன்மை கொண்டதாக விளங்குவதை இந்திய சமூக ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். சங்கப் பனுவல்களுக்கு மூலமாக விளங்கியது தொல்காப்பியம். ஒரு சமூகத்தின் முதற் பொருள் என்பது நிலமும் பொழுதும் என்ற வரையறை தமிழ்ச் சிந்தனை மரபின் உச்சாணி கொம்பு. அனைத்து நிலத்திற்கும் பொதுவானது மழை. மழை பெய்யும் காலத்தைக் கார் காலம் என்று கூறும் முறையில் தமிழர்ச் சிந்தனை வியந்து நிற்கிறது. இதனை,
“ மல்லிகை ஜீவா அவர்கள் ஈழத்து தமிழ்த்தேசிய இலக்கிய வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர். ஈழத்து எழுத்தாளர்கள் பலருக்கு களம் வழங்கி ஈழத்து இலக்கிய செல்நெறிக்கு உந்துசக்தியாக விளங்கியவர். சாதாரண அடிநிலை சமூகத்தில் பிறந்து அச்சமூகத்தின் குரலாக இலக்கியத்தில் ஒலித்தவர். ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு வளம்சேர்ப்பதற்காக யாழ்ப்பாணத்தில் 1966 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மல்லிகை மாசிகையை ஆரம்பித்தவர். இடையில் போர்க்காலம் தோன்றியவேளையிலும் சளைக்காது குறைந்த வளங்களுடன் மல்லிகையை வெளிக்கொணர்ந்தவர். இலங்கையில் தமிழ் படைப்பு இலக்கியத்திற்கு முதல் முதலில் தேசிய சாகித்திய விருதும் பெற்றவர். அத்துடன் தேசத்தின் கண் என்ற உயரிய விருதையும் சாகித்திய இரத்தினா விருதையும், கனடா இலக்கியத்தோட்டத்தின் "இயல்விருது “ உட்பட பல விருதுகளும் பெற்றவர். மூவின இலக்கியவாதிகளால் பெரிதும் மதிக்கப்பட்டவர். இன நல்லிணக்கத்திற்காக மொழிபெயர்ப்பு இலக்கியங்களுக்கும் தமது மல்லிகை இதழில் முன்னுரிமை வழங்கியவர். நூற்றுக்கணக்கான மூவின கலை, இலக்கிய ஆளுமைகள் மற்றும் சமூகப்பணியாளர்கள் மற்றும் இலக்கிய பேராசிரியர்களின் படங்களை மல்லிகை இதழ்களின் முகப்பில் பதிவுசெய்து பாராட்டி கௌரவித்து மல்லிகை இதழிலே அவர்கள் பற்றிய கருத்துச்செறிவு மிக்க ஆக்கங்களையும் வெளிவரச்செய்தவர். இலங்கையின் அனைத்து பிரதேச எழுத்தாளர்களுக்கும் மல்லிகையில் சிறந்த களம் வழங்கியவர்.
அத்துடன் மல்லிகை ஜீவாவின் சிறுகதைகள் பல்கலைக்கழக மாணவர்களினால் இலக்கிய ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளன. மல்லிகை ஜீவாவின் சிறுகதைகள் சிங்கள – ஆங்கில மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. அவருடைய சுயசரிதையும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளதுடன், சில கதைகள் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தனி நூலாகவும் வெளிவந்துள்ளது. மல்லிகை இதழ்கள் பல்கலைக்கழக கலைப்பீட தமிழ்த்துறை மாணவர்களுக்கு உசாத்துணையாகவும் விளங்கியவை. 1966 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டுவரையில் வெளியான மல்லிகை இதழ்களை நூலகம் ஆவணகத்தில் பார்வையிடமுடியும். “
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களின் மறைவுச் செய்தியினை முகநூல் கொண்டு வந்தது. அவரது மறைவு துயரினைத் தந்தாலும் அவரது நிறைந்த வாழ்வு மகிழ்ச்சியைத் தந்தது. அவர் பூரணமான, நிறைந்ததொரு வாழ்வினை வாழ்ந்து முடித்துள்ளார். தான் விரும்பியதை, விரும்பியவாறு எவ்வித சமரசங்களுக்கும் இடங்கொடுக்காது செய்து , வரலாற்றில் ஆழமான தடத்தினைப் பதித்துச் சென்றுள்ளார். அது மகிழ்ச்சியைத் தந்தது.
எழுத்தாளராக, இதழாசிரியராக, அறச்சீற்றம் மிக்க சமூக, அரசியற் செயல் வீர்ராக அவரது இருப்பு பெருமைப்படத்தக்கதோர் இருப்பு. எத்தனை பேருக்கு இவ்விதமானதோர் இருப்பு அமையும்?
இருப்பில் நிலவிய சமூக, அரசியல் பிரச்சினைகளை, வர்ண, வர்க்க வேறுபாடுகளைக்கண்டு ஒதுங்கிச் செல்லாமல் , இறுதிவரை உறுதியாக, தெளிவாகத் தனது எழுத்துகளூடு, இதழினூடு , தத்துவார்த்த அடிப்படையில் , சமரசங்கள் எவற்றுக்கும் இடங்கொடாது முடிந்தவரை போராடிச் சென்றார். இதிலிருந்து நாம் படிக்க வேண்டியவை பற்பல. தன் இருப்பினூடு மானுட இருப்புக்கான அர்த்தம்தனை அனைவருக்கும் எடுத்துக் காட்டியவர் டொமினிக் ஜீவா அவர்கள்.
'மல்லிகை' மூலம் அவர் இலக்கியத்தில் விழுதுகள் பலவற்றை உருவாக்கிய ஆலமரம்! அந்த ஆழமரம் தந்த நிழலில் இளைப்பாறியவர்கள்தாம் எத்தனை! எத்தனை!