வானம் சிவக்கப் பாடிய கவிஞன் புதுவை இரத்தினதுரை நினைவலைகள்! - வி. ரி. இளங்கோவன் -

ஈழத்திலும் எம்மவர் புலம்பெயர்ந்த நாடுகளிலும் நன்கு அறியப்பட்ட கவிஞர் புதுவை இரத்தினதுரை. இவர் எழுதிய எழுச்சிப் பாடல்கள் உலகெங்கும் எம்மவர் பலரது வீடுகளிலும் விரும்பிக் கேட்கப்பட்டன. அன்று எழுபதுகளில் இவர் எழுதிய புரட்சிகரக் கவிதைகள் பேராசிரியர் கைலாசபதி முதல் மூத்த எழுத்தாளர்கள் செ. கணேசலிங்கன், கே. டானியல்இ சில்லையூர் செல்வராசன், டொமினிக் ஜீவா உட்படப் பலரையும் கவர்ந்தது.
அவரது சிறிய தந்தையார் கந்தசாமி இலங்கையில் சிறந்த சிற்பாசாரியார். அவரது வீடும் சிற்பாலயமும் திருநெல்வேலி காளி கோவில் முன்பாக இருந்தது. சிற்பாசாரியார் கந்தசாமி அன்று மொஸ்கோ சார்புக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர். சிறிய தந்தையாரின் சிற்பாலயத்தில் இரத்தினதுரையும் சேர்ந்து பணியாற்றி வந்தார். நாட்டில் பல கோவில்களுக்கான சித்திரத் தேர்களைச் செய்யும் வேலைகளை அவர்கள் மேற்கொண்டார்கள்.
இரத்தினதுரை புத்தூர் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வரதலிங்கம் - பாக்கியம் தம்பதிகளின் மகனாக 1948 -ம் ஆண்டு மார்கழி மாதம் 3ஆம் திகதி பிறந்தவர். 1972 -ம் ஆண்டு முதல் சில வருடங்கள் யான் அவருடன் நெருங்கிப் பழகியுள்ளேன். கே. டானியலின் தொழிலகத்தில்தான் முதன்முதலில் சந்தித்துக்கொண்டோம். அன்றுதொட்டு நெருங்கிய தோழர்களானோம். 1973 - 1974 காலப்பகுதியில் சில மாதங்கள் இரத்தினதுரை எனது ஊரான புங்குடுதீவில் தங்கியிருந்தார். புங்குடுதீவு கிழக்குக் கலட்டிப் பிள்ளையார் கோவில் தேர் வேலையில் அவர் ஈடுபட்டிருந்தார்.



உக்ரைன்-ரஷ்ய மோதலானது, உலகின் முகத்தைத் தீவிரமாக மாற்றியமைப்பதில் வெற்றிகண்டுள்ளது எனச் சிலர் கருதுவர். இன்னும் சிலர் இதனை ஒரு நிரந்தர மாற்றம் எனவும் வாதிப்பர். மேலும் சிலர் இது Uni Polar World என்பதிலிருந்து Multi Polar World என்ற உலகை நோக்கிய ஒரு பயணம் எனவும் விவரிப்பர்.






பாரதி வந்தார் பற்பல பாடினார்
முன்பு வாரத்திற்கு ஒரு தலைப்பு வைரலாகிக் கொண்டிருந்த நிலையில், இப்போதெல்லாம் வாரத்துக்கு குறைந்தது நான்கைந்து தலைப்புகள் Trendingஇல் இடம்பெற்று ஆகிவிடுகின்றன. நீங்கள் செய்யும் எப்பேர்பட்ட தவறும் மிக விரைவில் மறக்கடிகப்படும், அல்லது வேறு ஒரு பிரச்சனையின் காரணமாக ஓரங்கட்டப்படும் என்பது எத்தனை ஆபத்தான ஒன்று. அப்படி நீங்கள் எத்தனை மோசமான ஒரு வழக்கில் சிக்கினாலும், நீங்கள் மிக விரைவில் மக்களால் மறக்கப்படுவிர்கள். அப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு ஓவியாவின் வீடியோவும், அதில் கமெண்ட் அடித்தவர்களுக்கு அவர் கொடுத்த பதில்களும் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக சில நாட்கள் இருந்தது. அதையே மறந்துபோகும் அளவுக்கு A2D என்ற சானல் வைத்திருக்கும் நந்தா அதன் பின்னர் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியிருந்தார். அதன் பிறகு தொடர்ந்த அடுத்தடுத்த வைரல் செய்திகளால் அப்படி ஒரு நிகழ்வே நடந்தது போன்ற தடையம் இப்போது இல்லை என்றாகிவிடுகிறது.





கன்னங்கரியாய் அப்பி நின்ற இருளுடன்,




மொழி என்பது சமூகத்தின் விளைச்சல்களில் ஒன்று. சமூகத்தின் இயக்கத்தோடு இணைந்து மொழியும் இயங்குகின்றது. சமூக வளர்ச்சியோடு இணைந்து மொழியும் வளர்ந்தோங்குகின்றது. சமூகம் மறையும்போது மொழியும் மறைந்துவிடும். மொழியின் பரிணாம வளர்ச்சி என்பது சமூக சமூகப் பரிணாம வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்த ஒன்றாகும். நூலகத்திலேயே மூழ்கியிருந்த கார்ல் மார்க்ஸின் நூலினை வாசித்த போது மொழியை சிந்தனையின் உடனடி வெளிப்பாடு என்று கூறுகின்றார். சிந்தனை தோன்றிய காலத்திலேயே மொழி தோன்றிவிட்டது என்றும் மொழி என்பது சிந்தனையை நடைமுறைப்படுத்துகிறது என்பதையும் நாம் உய்த்து அறிகின்றோம்.
’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி, அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று சுவை அணி அணியாகும். தண்டியலங்காரத்தின் சுவை அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.