பதிவுகள் முகப்பு

'நந்தலாலா' ஜோதிகுமார் பார்வையில் இலங்கை அரசியல் நகர்வுகள்! (பகுதி 2) - எல். ஜோதிகுமார் -

விவரங்கள்
- எல். ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
06 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



6

ரஜீவ் கொலை விடயங்கள் தொடர்பில் இந்தியா மறந்து விட்டாலும், விக்னேஸ்வரன் ஐயாவை சந்திக்க மோடி அவர்கள் மினக்கெட்டு வந்தபோது, விக்னேஸ்வரன் ஐயா நீட்டிப்பிடித்த பிரேமானந்தாஜீயின் விடுவிப்பு கோரிக்கையை மறப்பது சற்றே கடினமானது.

இப்போக்குகள் வடக்கின் நம்பகதன்மை தொடர்பான ஒரு கேள்விக்குறியை எழுப்புவது சகஜமாகின்றது–அதாவது, இவ் ஈழ அரசியல்வாதிகள், உண்மையில், தம் மக்கள் நலனை பிரதிபலிக்கின்றனரா அல்லது பல்வேறு கையூட்டல்களை பெற்று வெறும் உசுப்பேத்தும் நிகழ்ச்சி நிரலில் ஈடுபடுகின்றனரா என்பது இந்தியாவின் கேள்வியானது. இதற்கு ஏற்றாற் போல், முன்னரே குறிப்பிட்ட நேட்டோ அரூஸ் மற்றும் திபாகரன் போன்றோர் முன்வைக்கும் விடயங்கள் மக்கள் சார்பானதாக இல்லாமலும் ஊறு விளைவிப்பதாய் இருப்பதையும் இந்தியா கண்டு கொள்கின்றது.

இவ் வரப்பிரசாதங்கள் மொத்தத்தில், எமது புலம்பெயர் சமூகத்தின் ஒத்தாசையால்தான் நடந்தேறியுள்ளன – அதாவது நாம் வெறும் சந்தேக பேர்வழிகளாக மாறியுள்ளோம் என்பது நிதர்சனமாகின்றது. இப்போக்கினை, மேலும் நிரூபிப்பதாகவே, ராமநாதன் அர்ச்சுனா போன்றோர் தேர்ந்தெடுக்கப்படுவதும் இதற்கு புலம் பெயர் அரசியலின் ஆரவாரமும் உசுப்பேத்தலும் எவ்வாறு களைக்கட்ட உதவின என்பதும் குறிக்கத்தக்கது. இத்தகைய ஓர் குளறுபடியான சூழலில் தான் அர்ச்சுனா மலையகத்துக்கும் இன்று படையெடுக்க எண்ணியுள்ளார் என்ற அவரது அறிவிப்பும் வந்து சேர்கின்றது.

மேலும் படிக்க ...

செ.கணேசலிங்கம் அவர்களின் முதல் மூன்று நாவல்கள் - காலமும் கருத்தும் - பேராசிரியர் வீ.அரசு --

விவரங்கள்
- பேராசிரியர் வீ.அரசு --
இலக்கியம்
06 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[எழுத்தாளர் செ.கணேசலிங்கனின் நினைவு தினம் டிசம்பர் 4. அவர் நினைவாக  பேராசிரியர் வீ.அரசு அவர்களின்   கீற்று இணையத்தளத்தில் வெளியான இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. ]

“பத்மாவதி சரித்திரத்தின் முதற்பாகத்தைப் படித்து வந்தோம். கதாசாரத்தையும் அதிலடங்கிய விஷயங்களையும் ஆராயுங்கால் நூலாசிரியரின் கல்வித்திறம் புகழத்தக்கதென நன்கு புலப்படும். அவரது நடை வெகு தெளிவாகவும் சரளமாகவு மிருப்பினும் சிற்சில இடங்களில் ஆங்கிலேய பாஷையின் போக்கை யனுசரித்திருக்கின்றது. இலக்கண விதிக்கு மாறான சில முடிவுகளும் காண்கிறோம். கதைப்போக்கின் தன்மையைப் பார்க்குங்கால் அவர் அதன்பொருட்டு நடந்தவை களை நடந்தவாறே எழுதினாற் போலுமிருக்கிறது. நம்மவர் இடையிடையே பெண்கல்வி முதலிய விஷயங்களைப் பற்றி உபந்நியாசம் செய்யப் புகும் விதமானது நம்மனதிற்கு ஒவ்வாததாக விருக்கின்றது. படிப்போர்க்குப் புகட்டக் கருதும் பலவித நீதிகளும் அறங்களும் எள்ளுக்குள் எண்ணெய் போலச் சம்பாஷணையிலிருந்து திரட்டிக் கொள்ளும் படியாக விருத்தலேயியல்பு” (விவேக சிந்தாமணி:ஜுன்:1898)

“இதுகாலை நமது தமிழ்நாட்டில் வெளிவந்து உலாவும் நாவல்கள் எண்ணிலாதன. நாவல்கள் பல்கி வருவதைப் போல் நாவலாசிரியர்களும் ஆயிரக் கணக்காகப் பெருகி வருகின்றார்கள். நாவல்களை விரும்பிப் படிப்போரும் லக்ஷக்கணக்காக இருக் கின்றார்கள். இவர் பெண்டிர், மாணவர், அனை வரும் நாவல் வெள்ளத்தில் திளைக்க நனி விரும்பு கிறார்கள். புத்தகக் கடைகளிலும் நாவல் வெள்ளம் பெருகிக்கொண்டேயிருக்கின்றது. அவ்வெள்ளம் புகாத வீடுகள் அரிதாகவே இருக்கின்றன. ஆகவே நாவல் வெள்ளம் மக்கள் பலரைக் கொள்ளைகொண்டு வருதல் இனிது புலப்படும். இவ்வெள்ளம் இவ்வாறு பெருகி வருதன் காரணம் என்ன? கதைகளெல்லாம் பெண்மக்கள் வடிவநலன்களைப் பெரிதும் அளவு கடந்து வருணித்துக் காமக் கிளர்ச்சியை எழுப்புவனவாக இருத்தலே முதற்பெருங்காரண மாகும். இரண்டாவது காரணம் கல்விப் பெருக்க மின்மையாகும்”. (கட்டுரை: நாவல்வெள்ளம்: வாசீக பக்தன்: குமரன்: சங்கை:2: தை: 1923:24)

மேலும் படிக்க ...

பாரிஸ் மாநகரில் இலக்கிய மாலை..! பத்து நூல்களின் அறிமுக நிகழ்வு..! மூத்த எழுத்தாளர்கள் வி. ரி. இளங்கோவன் பத்மா இளங்கோவன் நூல்கள் அறிமுகம்.! - இளநிலா -

விவரங்கள்
- இளநிலா -
நிகழ்வுகள்
06 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பாரிஸ் மாநகரில் நடைபெறவுள்ள இலக்கிய மாலையில் பத்து நூல்களின் அறிமுக நிகழ்வு இடம்பெறவுள்ளது. பாரிஸ் மாநகரில் வாழும் மூத்த எழுத்தாளர்களான வி. ரி. இளங்கோவன் - பத்மா இளங்கோவன் ஆகியோரின் பத்து நூல்கள் அறிமுக நிகழ்வு - இலக்கிய மாலை 07 - 12 - 2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பாரிஸ் - லாச்சப்பலுக்கு அருகிலுள்ள 'பஜோல்" மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

'இளங்கோவன் படைப்புகள்,  ஈழத்து இலக்கியச் சிற்பிகள்,  வெயிலும் பனியும்,  போர்க்காலக் கதைகள்,  மக்கள் எழுத்தாளர் கே. டானியல்" ஆகிய வி. ரி. இளங்கோவனின் ஐந்து நூல்களும்,  'சிறுவர் தமிழ் அமுதம்,  சிறுவர் இலக்கிய நுட்பங்கள்,  சிறுவர் கதைப் பாடல்கள்,  பாலர் கதைப் பாடல்கள், கொரோனாவின் தடங்களில்.." ஆகிய பத்மா இளங்கோவனின் ஐந்து நூல்களும் அறிமுக நிகழ்வில் இடம்பெறுகின்றன.

மூத்த கவிஞர்இ மொழிபெயர்ப்பாளர் க. வாசுதேவன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில்இ ஊடகவியலாளர் இ. கந்தசாமி,  எழுத்தாளர் சு. கருணாநிதி, கலைஞர் கே. பி. லோகதாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குவர்.

கலை இலக்கியப் படைப்பாளிகளான க. முகுந்தன்இ என். கே. துரைசிங்க,  பொலிகை கோகிலா,  க. தேவதாசன்,  பிரியா லவன்,  கே. உதயகுமார், இ நிஷா பீரிஸ் ஆகியோர் நூல்கள் குறித்துக் கருத்துரை வழங்குவர். ஏற்புரைகளை நூலாசிரியர்கள் வழங்குவர். ஊடகவியலாளர் எஸ். கே. ராஜென் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவார்.

எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் சிறுகதை,  கவிதை, கட்டுரை, திறனாய்வு தமிழர் மருத்துவம் ஆதியாம் துறைகளில் இருபத்திமூன்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். பத்துக்கு மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்தும் வெளியிட்டுள்ளார்.

பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ள இவரது நூல்களின் அறிமுக நிகழ்வுகள்இ இலங்கையின் பல பகுதிகளிலும்,ஐரோப்பிய நாடுகளிலும், கனடாவிலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க ...

ஒடுக்குமுறை, பாகுபாடு, மனித உரிமை மீறல்கள் பற்றிய என் கருத்துகளும், என் கருத்துகள் பற்றிய செயற்கை நுண்ணறிவின் கருத்துகளும்... - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
அரசியல்
06 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



இலங்கையில் இருந்த காலத்தில்  எஸ்கிமோ, நீக்ரோ, செவ்விந்தியர் போன்ற சொற்பதங்களால் அவை குறிப்பிடும் இன மக்களை நாமெல்லாரும் அழைத்து வந்தோம்.  இங்கு வந்தபின்பும் ஆரம்பத்தில் அவ்விதமே அழைத்து வந்தோம்,. ஆனால் காலப்போக்கில் அப்பெயர்கள் அம்மக்களை இழிவு படுத்தும் , இனத்துவேசம் மிக்க பெயர்கள் என்பதை அறிந்து அவற்றைப் பாவிப்பதை நிறுத்தி விட்டோம்.  

இவை ஏன் அம்மக்களை இழிவு படுத்தும் சொற்பதங்கள் என்பதைப் பார்ப்போம்.

எஸ்கிமோ (Eskimo)  இந்தச்சொல்லின் உண்மையான் அர்த்தம் Algonquin மொழியில் இருந்து பெறப்பட்டது.  'பச்சை மாமிசம் சாப்பிடுபவர்கள் என்பது பெயர். இச்சொல் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவைக் குறிக்கவில்லை.  ஆர்க்டிக் இனக்குழுக்களான (Inuit, Yupik, Iñupiat போன்றவர்களை ஒரு சேர அழைக்கப்பாவிக்கப்பட்டது.  தற்போது கனடாவில் "Inuit" (இனியுட்), அலாஸ்காவில் Yupik" (யுபிக்) வ் "Iñupiat" (இனுபியாட்) போன்ற பெயர்கள் பாவிக்கப்படுகின்றன. அனைவரையும் உள்ளடக்கி  "First Nation" என்னும் சொற்பதமும் பாவிக்கப்படுகின்றது.

இது போல் செவ்விதியன் (Red Indian) என்னும் பெயர் அமெரிக்காவைக் கண்டு பிடித்த கொலம்பஸ் அதனை இந்தியா என்று தவறாக முடிவு செய்த வரலாற்றுத்தவறினால் உருவானது.  அமெரிக்காவின் ஆதிக்குடிகளைக்  (Native Americans / Indigenous Peoples)   இந்தியர்களாகக் கருதி , அவர்களின் நிறத்தையும் சேரத்துச் செவ்விந்தியர் என்றழைக்கப்பட்டனர்.  இது நிறவெறி மிக்க ஒரு சொற்பதம்.  இதனை இப்போது பாவிப்பதில்லை.  இன்று பொதுவாக Native American", "American Indian" (அமெரிக்கன் இந்தியன்), அல்லது  "Indigenous Peoples" (சுதேசிய மக்கள்)  என்றே இம்மக்கள் அழைக்கப்படுகின்றனர்.
அத்துடன்  Cherokee, Navajo, Sioux  போன்ற இனக்குழுப் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றனர்.

மேலும் படிக்க ...

பாரதியின் கல்வி சிந்தனைகள்! - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை(சுழற்சி – 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை. -

விவரங்கள்
- முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை(சுழற்சி – 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை. -
ஆய்வு
05 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


முன்னுரை

மகாகவி பாரதியார் அனைத்துத் துறைகளிலும் சொல், பொருள், வளம், கலை ஆகியவற்றைப் புதிய நோக்கில் தமது படைப்புகளில் தமிழுலக்கு அறிமுகப்படுத்தினார். தாம் வாழ்ந்த முப்பத்தொன்பது ஆண்டுகளில் (1882 - 1921) தமிழ் மொழிக்குப் புதுப்பொலிவையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தினார். இத்தகைய பரிமாணங்களோடு விளங்கிய இக்கவிஞரிடம் காணப்படுகின்ற மற்றொரு வியத்தகு ஆற்றல் வடிவமே கல்வி குறித்து அவர் கொண்டிருந்த சிந்தனைகளாகும்.

நாடு பூரண முன்னேற்றம் காணுவதற்கு அடிப்படையாது கல்வி மட்டுமே என்பதை வலியுறுத்தி அக்கல்வியை மக்கள் அனைவரும் பெறுவதற்கான கொள்கைகளையும் வழிமுறைகளையும் சிந்தனைகளின் வாயிலாக வெளிப்படுத்துகிறார்.

தாய்த்திரு நாட்டையும், தாய் மொழியையும் பெறுவதற்கான முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற தணியாத தாகம் கொண்டிருந்தவர் பாரதி. அதற்கு கல்வியே அடிப்படையானது என்பதை உணர்ந்து அக்கல்வியை மக்கள் அனைவரும் வழிமுறைகளைத் தனது சிந்தனையினின்று கவிதை வாயிலாக வெளிப்படுத்தியவர். பாரதியின் கல்வி குறித்த சிந்தனையில் புதுமை மிகுந்திருக்கிறது. அவர் எடுத்துரைத்துள்ள கல்வி தொடர்பான கருத்துக்களை ஆராய்ந்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பழந்தமிழ் இலக்கியங்களில் கல்வி

கல்வியின் சிறப்பு, பெருமை, பயன், கல்வி கற்கும் முறை இவற்றை மையப்படுத்திப் பழந்தமிழ் இலக்கியங்களில் சான்றாக, ஏராளமான செய்யுள்கள் உள்ளன. சான்றாக,

மேலும் படிக்க ...

சினிமா: காற்றில் அசைந்தாடும் பார்லி கதிர்கள்! - வெங்கி -- (3)

விவரங்கள்
- வெங்கி --
கலை
04 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

புதிய கற்கால யுகத்திலிருந்து அயர்லாந்தின் வேளாண்மையில் முக்கிய இடம் பிடிப்பது பார்லியும், கோதுமையும். பார்லி கால்நடைகளுக்காகவும் மேய்ச்சல் நிலங்களில் அதிக அளவில் பயிரிடப்பட்டது. நாட்டில் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்காங்கே சிறியதாய் ஆரம்பித்த அயர்லாந்து சுதந்திர வேட்கையின் குரல்கள் 20-ம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் தணலாய் கனன்று 1916 முதல் நெருப்பாக கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. 

1920. பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தின் கீழிருக்கும் அயர்லாந்தின் தெற்கு மாகாணமான மன்ஸ்டெரில் கார்க் கோட்டத்தில் வசிக்கிறார்கள் பதின்பருவ இறுதி வயதுகளில் இருக்கும் சகோதரர்கள் டெட்டியும், டேமியனும். டெட்டி, அயர்லாந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் 'அயர்லாந்து குடியரசு இராணுவ'த்தின் அங்கமான உள்ளூர் இரகசிய 'பறக்கும் படை'க் குழு ஒன்றின் தலைவன். டேமியன், தன் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு லண்டனில் ஒரு மருத்துவமனையில் வேலை செய்ய கிளம்பும் உத்தேசத்திலிருக்கிறான்.

மேலும் படிக்க ...

'நந்தலாலா' ஜோதிகுமார் பார்வையில் இலங்கை அரசியல் நகர்வுகள்! (பகுதி 1) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
04 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

16.11.2025, ஞாயிறு வீரகேசரி, தன் முன் பக்கத்திலேயே, பெரிய அளவில், இரு படங்களை வெளியிட்டது. முதலாவது படம்: இந்திய உயர்ஸ்தானிகர் (சந்தோஷ் ஜா சுமந்திரன்-சாணக்கியன் ஆகியோரை சந்தித்து அளவலாவுவது. இரண்டாவது: விடுதலை சிறுத்தைகளின் தலைவரான தொல்.திருமாவளவனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குழு சந்தித்து ‘சமஷ்டி'யை’ வலியுறுத்துவது. மேற்படி இரு படங்களும், ஒருபுறமிருக்க, ஜேவிபி அரசானது தான் நிறைவேற்ற போவதாய் கூறியுள்ள, புதிய அரசியல் அமைப்பில், 13வது திருத்தத்தை (அதாவது மாகாண சபையினை) உள்ளடக்குவதா அன்றி தூக்கி வீசுவதா என்று தீவிரமாய் சிந்தித்து வரும் இந்நிலையில் ‘சமஷ்டி’ உச்சரிக்கப்படுவது, முக்கியத்துவம் வாய்ந்தது.

மறுபுறத்தில், இந்தியாவை கத்தரிக்க வேண்டுமென்றால், 13ஐ கத்தரித்தாக வேண்டும் என்பது முதல் விதி. மேலும், தமிழ் மக்களை தொடர்ந்து கனவு நிலையிலேயே ஆழ்த்தி வைத்திருக்க வேண்டுமென்றாலும், முதலில் 13ஐ கத்தரித்தாக வேண்டும், என்பது இரண்டாவது விதி. இவ்விரு விதிகளுமே, எமது புலம்பெயர் அரசியலுக்கு உவப்பானது என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், 13ஐ தூக்கியெறிவது, மறுபுறத்தில் ‘சமஷ்டி’யை உள்ளடக்கவே செய்யும். மொத்தத்தில், இவை அனைத்தையும் சுருக்கினால், அது சமஷ்டியா அல்லது 13 என்றா என்பதில்தான், ஒருவகையில், முடியும். இப்பின்னணியிலேயே, இவ்விரு சந்திப்புகளும் முக்கியத்துவம் பெறுவன.

ஆக, இவ் இழுபறிகள், அனைத்துமே, வடக்கு அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு உவப்பாக இருந்துள்ளதோ, அதுபோலவே, எமது தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கும் இவ்விழுபறிகள், உவப்பானதாகவே இருக்கின்றன. காரணம், இந்நாட்டின், மாபெரும் அரசியல் தலைவர்கள் ஆட்சிக்கு வந்ததும் அவ் ஆட்சியை வலிதான முறையில் அவர்கள் தக்க வைத்து கொண்டதும் மேற்படி அரசியல் சார்ந்தது என்பதில் ஐயமில்லை.

மறுபுறம், இப்போக்குகள், அதாவது, சமஷ்டியை வலியுறுத்துவதும் (பொன்னம்பலம் குழுவினர்) மற்றும், இதற்கெதிராய் மாகாண சபைகளை அல்லது மாகாண சபை தேர்தலை வலியுறுத்தும் சுமந்திரன் போன்றோர், ஆகிய இருவருமே, இந்தியாவுக்கு இஷ்டப்பட்டவர்களாகவே தோற்றுவர். இருந்தும், இம்முரண்களை அடிப்படையாக கொண்டு, இயங்கும் இந்தியாவின் இந்திய-இலங்கை வெளியுறவு கொள்கையை கண்ணோட்டமிடுமிடத்து, அங்கே சிற்சில மாற்றங்கள் அண்மை காலங்களில் ஏற்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

மேலும் படிக்க ...

கவிதை: நாளை நன்கு விடியும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கவிதை
03 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வரலாற்று நதி எப்போதுமே அமைதியாக, இனிமையாக,
ஆடி , அசைந்து நடை பயில்வதில்லை.
சில வேளைகளில் நதி ஆக்ரோசம் மிக்கதாக,
பொங்கிப் பெருகி, கோரத்தாண்டவம் ஆடுவதுமுண்டு.
கோரத்தாண்டவம் ஆடிச் செல்லும் நதியின் சீற்றம் 
எம்மை ஒரு போதும் அடி பணிய வைப்பதில்லை.
அபாயங்கள்,  துயரங்கள் எமக்கும் பாடங்களைப் போதிக்கும்
குருமார்கள். ஆசிரியர்கள். வழிகாட்டிகள்.
வீழும் ஒவ்வொரு தடவையும்
எம்மை எழ வைக்கும் உறுதியை,
எதிர்கால நம்பிக்கையை,
எமக்குத் தருபவர்கள் அவர்களே! அவைகளே!

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரனின் குழந்தைகளுக்கான புனைகதை 'சாவித்திரியின் பெரு விருப்பம்'

விவரங்கள்
- வ.ந.கி -
நூல் அறிமுகம்
02 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
குழந்தைகளின் குழந்தைப்பருவத்தில் இணைந்த குடும்பங்களின் அவசியத்தை விபரிக்கும் குழந்தைகளுக்கான புனைகதை 'சாவித்திரியின் பெரிய விருப்பம்' என்னும் இந்நூல்.
மேலும் படிக்க ...

இலங்கை வானத்தில் உறைந்த மூச்சுகள்! - ம .ஆச்சின் -

விவரங்கள்
- ம .ஆச்சின் -
கவிதை
30 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அலை இல்லை…
கடல் அமைதியாக உள்ளது,
ஆனால் அதில் ஒரு மௌனம் குரல் போல ஒலிக்கிறது
ஒரே நேரத்தில் ஆயிரம் உயிர்களின்
கடைசி மூச்சு,
காற்றில் மிதந்து செல்லாமல்
மண்ணின் மீது விழுந்த கனவுகள்
மண்ணோடு கலந்து கரைந்தன.

காற்று கூட சோகமாய் அமைதியாக இருந்தது,
மழை கூட கண்ணீராக மாறி
வீட்டுக்களில் சிதறிய நினைவுகளை நனைய வைத்தது.
தாய் மடியில் நடுங்கிக் கொண்டிருந்த
குழந்தையின் நொறுங்கிய குரல்,
மொய்க்கப்பட்ட உறவுகளின் மௌன கூச்சலாக மாறின.

வெள்ளம் மட்டும் உயரவில்லை
இதயம் முழுவதும் துயரம் பெருகியது.
குடும்பங்கள் சிதறின,
நெருங்கிய உறவுகள் தொலைந்தன,
மண்ணின் ஒவ்வொரு கோணமும்
ஒரு அழுகிய கதை சொல்கிறது.

மேலும் படிக்க ...

மெய்யியல், அழகியல் அடிப்படையில் எம்.ஏ.நுஃமான் கவிதைகள்! - ஈழக்கவி -

விவரங்கள்
- ஈழக்கவி -
ஆய்வு
30 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

               [டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG] 

பேராசிரியர் எம்.ஏ.நுஃமான், ஈழத்துத் தமிழ்க் கவிதை உலகில் ஒரு முக்கிய ஆளுமை. அவர் ஒரு கவிஞராக மட்டுமன்றி, மொழியியலாளராக, இலக்கியத் திறனாய்வாளராகவும் அறியப்படுகிறார். அவரது கவிதைகள் சமூக அரசியல் விழிப்புணர்வு, மனிதநேயச் சிந்தனைகள், மற்றும் மொழி பற்றிய ஆழ்ந்த பார்வை ஆகியவற்றைத் தாங்கி நிற்கின்றன. அவரது கவிதைகளை மெய்யியல், அழகியல் அடிப்படையில் அலசும் ஆய்வாக இது அமைந்துள்ளது.

மெய்யியல் அடிப்படைகள் (Philosophical Foundations)

பேராசிரியர் நுஃமான் கவிதைகளில் ஆழமாகப் பதிந்துள்ள சில முக்கிய மெய்யியல் கூறுகள்:

I.i மார்க்சியச் சார்பு மற்றும் முற்போக்குச் சிந்தனைகள்:

நுஃமான் அடிப்படையில் ஒரு முற்போக்கு எழுத்தாளர். அவரது ஆரம்பகாலத் தொடர்புகள் மற்றும் திறனாய்வு அணுகுமுறைகள் மார்க்சியச் சித்தாந்தங்களின் தாக்கத்தைக் காட்டுகின்றன. அடக்கப்பட்ட மக்களின் குரல் மற்றும் சமூக சமத்துவத்திற்கான தேடல் அவரது கவிதைகளின் மையச் சரடாகும்.

I.ii ஈழத்து அரசியல், இன மோதல் மற்றும் மனிதநேயம்:

இலங்கையில் நிகழ்ந்த இன மோதல்கள், அரச ஒடுக்குமுறைகள் மற்றும் யுத்தம் ஆகியவை இவரது கவிதைகளின் மெய்யியலுக்கு அடிப்படையாக அமைகின்றன. "துப்பாக்கிக்கு மூளை இல்லை" போன்ற அவரது கவிதைகள், வன்முறைக்கு எதிரான ஆழமான அகிம்சைவாத (pacifist) மெய்யியலை வெளிப்படுத்துகின்றன. மனிதாபிமானத்தின் முக்கியத்துவத்தையும், இன, மத வேறுபாடுகளைத் தாண்டிய சமூக நல்லிணக்கத்திற்கான தேடலையும் அவரது படைப்புகளில் காணலாம்.

மேலும் படிக்க ...

பெருமழையும் பெருவெள்ளமும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
29 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG] 

இயற்கை அன்னையின் சீற்றம் பெருமழையாகப் பொழிகின்றது. மானுட குலத்திற்கு ஒரு சேதியினையும்  சொல்லுகின்றது. பெருவெளியில் சிறு குமிழாய் விரையுமிந்த நீலவண்ணக் கோளம் எம் வீடு!  இங்குள்ள உயிரினம் அனைத்தினதும் இல்லம். இதனைக் கவனமாக, பத்திரமாக, தேவையற்ற சேதங்களுக்கு உள்ளாகாத வகையில் பராமரிப்பது நம் கடமை. அதனைச் செய்யத்தவறியதன் விளைவே முறையற்ற காலநிலை மாற்றங்களும், இயற்கை அனர்த்தங்களும், இவ்விதமான பெருமழையும், பெருக்கெடுத்தோடும் வெள்ளமும் எம் காலத்தில் நாம் கண்டதில்லை.  அவ்வப்போது பெரும் புயல்கள் தாக்குவதுண்டு. அவையும்  அரியவை. ஆனால் தற்காலத்தில் இது போன்ற பெரு மழையும், பெரு வெள்ளமும் அனைத்து நாடுகளுக்கும் பொதுவானதொரு விடயமாக அமைந்திருப்பதை அவதானிக்க  முடிகின்றது.

இவ்விதமான பெருவெள்ளத்திற்குக் காரணங்களில் ஒன்றாக  அதிகரித்து வரும் நகர மயப்படுத்தலும்,  பெருகும் கட்டடக்காடுகளும் இருந்து வருவதையும் ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. உலகின் பாதுகாப்பு அரண்களாகத் திகழ்ந்து வரும் பெருவனங்களைப் பேராசை மிக்க மனிதர் அழித்து வருகின்றார்கள். இம்மாமர அழிவு பெரிய அளவில் இந்நீலவண்ணக் கோளின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்குகின்றது. அவற்றை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான உயிரினங்களின் வாழ்க்கையைச் சீரழிப்பதுடன், இயற்கைச் சமநிலையினையும் சீர்குலைக்கின்ற்து. 

மேலும் படிக்க ...

சிறுகதை; சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
சிறுகதை
29 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- திண்ணை.காம், பதிவுகள், ஞானம் (புலம்பெயர் சிறப்பிதற் தொகுப்பு) & ஈழநாடு (கனடா)  ஆகியவற்றில் வெளியான சிறுகதை.  [டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG] 

இந்த அப்பா எப்பொழுதுமே இப்படித்தான். Harry Potter and The Goblet of fire புத்தகத்தைக் கடைசியில் ஒரு மாதிரி வாங்கித் தந்து விட்டார். ஜெ.கெ.ராவ்லிங்கின் ஹரி பாட்டர் தொடர் புத்தகங்கள் எனக்குப் பிடித்த தொடர்களிலொன்று. ஆனால் இந்தப் புத்தகத்தை மட்டும் அப்பா ஒவ்வொருமுறையும் வாங்குவதற்குச் சாக்குப் போக்குச் சொல்லி இழுத்தடித்துக் கொண்டு வந்தார். காரணம் இதன் விலைதான் தான். முப்பத்தைந்து கனடியன் டொலர்கள். சென்ற முறை சாப்டர்ஸ்ஸிற்குக் கூட்டிப் போனபோது இந்தப் புத்தகத்தை வாங்கித் தருவதாகத் தான் கூட்டிப் போனார். ஆனால் வழக்கம் போல் இறுதியில் கையை விரித்து விட்டார். 'உனக்கம்மா இந்த ஒரு புத்தகத்திற்குப் பதிலாக இரண்டு 'துரதிருஷ்ட்டவசமான சம்பவங்கள்' ( The unfortunate events ) புத்தகங்களை வாங்கித் தருகிறேன்' என்று வாங்கித் தந்து விட்டார். லெமொனி சினிக்கெட்டின் 'துரதிருஷ்ட்டவசமான சம்பவங்கள்' தொடரும் எனக்கு மிகவும் விருப்பமான தொடர் தான். இந்ததொடரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் மிஸ் எலிஸபெத். எனது கிளாச் டீச்சர். தாய் தகப்பனில்லாத வயலட், கிளாஸ், குழந்தை சனியை பொல்லாத ஓலாவ் படுத்தும் பாடிருக்கிறதே. பாவம் அவர்கள். அவர்களது அப்பா அம்மாவை இந்தப் பொல்லாத ஓலாவ்தான் கொன்று விட்டான். இப்பொழுது இவர்களின் சொத்தினை அடைவதற்கும் முயன்று கொண்டிருக்கின்றான். திரு. போ (Mr.Poe) மட்டுமில்லையென்றால் இவர்களது பாடு இன்னும் அதிகத் துன்பம் நிறைந்ததாகவிருந்திருக்கும். இந்தப் புத்தகங்களென்றால் எனக்கு ரொம்பவும் உயிர். அப்பாவுக்கும் தான். எந்த நேரமும் புத்தகம் புத்தகமாய் வாங்கி வருவார். ஆனால் ஒவ்வொருமுறையும் இந்தத் தொடர் புத்தகங்களை வாங்கித் தருவதற்கு மட்டும் அப்பா எப்பொழுதுமே முதலில் தயங்கத் தான் செய்கிறார். அது தான் ஏனென்று இன்னும் எனக்குப் புரியவில்லை. 

மேலும் படிக்க ...

மெல்பேர்னில் ‘2025ஆம் ஆண்டின் சிறந்த தென் ஆசியர்’ விருது! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
நிகழ்வுகள்
27 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மெல்பேர்ன், 22 நவம்பர் 2025:

மெல்பேர்னில் வளர்ந்து வரும் தென் ஆசிய சமூகத்தினர், திரு பந்து திசாநாயக்காவுக்கு " 2025ல் சிறந்த தென்ஆசியர் " விருதை அளித்தார்கள். திரு பந்து திசாநாயக்கா நான்கு வருடங்கள் இலங்கையின் விக்ரோரியா மானில கௌரவ கொன்சல் ஜெனரலாக இருந்தவர். அத்துடன் பகான என்ற சமூக பத்திரிகை,விஷ்வவாகனி என்ற தொலைகாட்சியையும் நடத்துகிறார். பந்து திசாநாயக்கா அவுஸ்திரேலியா சவுத்ஏஷியா சொசைட்டியின் (ASAS) நிறுவுநராகவும் போஷகராகவும் உள்ளார்.

மேலும் படிக்க ...

'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்லதொரு வழிகாட்டி

விவரங்கள்
Administrator
நூல் அறிமுகம்
26 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்நூலை வாங்குவதற்கான இணைப்பு - https://amzn.to/4pBxaFn

'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்லதொரு  வழிகாட்டி

கனடாவில் வெற்றிகரமான பயணத்தை கனவு காணும் சர்வதேச மாணவரா நீங்கள், சரியான கல்வி நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது முதல் உங்கள் தொழில் வாழ்க்கையைத் தொடங்குவது வரை பயனுள்ள வழிகாட்டியாகத் திகழ்கிறது    'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'.

மேலும் படிக்க ...

இலங்கையில் இனவாதம் பற்றிய சிந்தனைகளும், செயற்கை நுண்ணறிவுடன் அது பற்றிய உரையாடலும்! - நந்திவர்மப்பல்லவன் -

விவரங்கள்
- நந்திவர்மப்பல்லவன் -
அரசியல்
26 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

இலங்கை ஜனாதிபது அநுர குமார திசாநாயக்க அரசு இனவாதத்துக்கெதிராக் குரல் கொடுத்து வருகின்றது. பதவி பறிபோன சிங்கள அரசியல்வாதிகள் எப்படியாவது இழந்ததை மீளப்பெறுவதற்காக இனவாதத்தைக் கையிலெடுக்கின்றார்கள். அநுர அரசின் செல்வாக்கினால் பாதிப்புக்குள்ளாகிய தமிழ் அரசியல்வாதிகளும், ஜேவியின்  கடந்த கால வரலாற்றைக் கூறி, இவர்களும் இனவாதிகள், நம்ப முடியாது என்று செயற்பட்டு வருகின்றார்கள். இவ்விரண்டு குழுவினரும் இப்படித்தான் செயற்படுவார்கள். 

உண்மையில் இவர்களைப் பொருட்படுத்தாமல் அநுர அரசு இனவாதத்துக்கு எதிராக உறுதியாக செயற்பட்டால், அதன் பலன்கள் வெளித்தெரிகையில் தம் முயற்சியில் தோல்வியுற்ற எதிர்கட்சி அரசியல்வாதிகளும் தம் பாதையை மாற்றும் சந்தர்ப்பம் உண்டு. 

அடுத்தது உண்மையில் இனவாதம் தோற்கடிக்கப்பட வேண்டுமென்றால், அரசு இனவாதப் பெளத்த பிக்குகளையும் சிங்கள மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்ட வேண்டும். மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இவ்விதப் பிக்குகளை இலங்கையின் சட்டம் கையாளும் நிலையை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இதனைச் செய்வது இனவாதத்தை ஒழிப்பதற்கான உறுதியான படியாக அமையும். அவ்விதம் செய்யாவிட்டால் பெளத்த பிக்குகள் சிலரின் இனவாதத்துக்கு அரசு அடி பணிந்தால் ஒரு போதுமே இனவாதத்தை அரசால் நாட்டிலிலிருந்து ஒழிக்க முடியாது  போய்விடும். 

ஒவ்வொரு தடவை இனவெறி பிடித்த பிக்குகள் செயற்படும் தருணங்களில் எல்லாம் சட்டம் தன் கடமையைச் செய்யும் நிலை ஏற்பட வேண்டும். அத்தகைய சந்தர்ப்பங்களில் அரசு தென்னிலங்கை மக்களுக்கு அவர்கள் இனவாதிகள் என்பதை எடுத்துரைக்க வேண்டும்.மக்கள் புரிந்து கொள்வார்கள். அரசுக்கு ஆதரிப்பார்கள். இவ்விதம் செய்யாமல் அரசும் இனவாதப் பிக்குகளின் தந்திரத்துக்கு அடிபணிந்தால் ,இறுதியில் அதன் அரசியல் எதிர்காலமும் அபாயத்துக்கு உள்ளாகி விடும்.

மேலும் படிக்க ...

சு.தமிழ்ச்செல்வியின் படைப்புகளில் பெண்களும், சமூகமும்! - அ.சிந்தியா தேவி, முனைவர் பட்ட ஆய்வாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-3 -

விவரங்கள்
- அ.சிந்தியா தேவி, முனைவர் பட்ட ஆய்வாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-3 -
ஆய்வு
25 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நெறியாளர்: முனைவர் மு.சுதா, பேராசிரியர்,தமிழ்த்துறை,  அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-3

முன்னுரை

“வருணன் மேய பெருமணல் உலகமும்” (தொல்.அகம்.5)

என்று வருணனைக் கடவுளாகக் கொண்ட பெருமணல் பரப்பினையுடைய கடலும், கடல்சார்ந்த இடத்தையும் உடைய நெய்தல் நிலத்தினை மையமாகக் கொண்டு எழுந்தது ‘அளம்’ என்னும் புதினமாகும். இந்நிலத்தின் முக்கியத் தொழிலாக மீன்பிடித்தல், உப்புவிளைவித்தல், முத்து எடுத்தல் மற்றும் கடல் வணிகம் போன்றவை காணப்படுகின்றன. அவற்றில் உப்புவிளைவித்தல் பற்றிய செய்திகளைப் பற்றிப் பேசக்கூடிய சு.தமிழ்ச்செல்வியின் இரண்டாவது படைப்பான ‘அளம்’ புதினத்தில் காணலாகும் பெண்மாந்தர் படைப்புகள் குறித்தும் அவற்றின் வழியாக அறியலாகும் பெண்களைச் சுற்றிய சமூகச்சூழல்களையும் எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

படைப்பாளர் அறிமுகம்
“அளம்” புதினத்தின் ஆசிரியரான சு.தமிழ்ச்செல்வி திருவாரூர் மாவட்டம் கற்பகநாதர்குளம் என்ற ஊரைச் சேர்ந்தவர். “தி.ஜானகிராமனின் படைப்புகள் தஞ்சைமாவட்டத்தையும், ஆர். சண்முகசுந்தரத்தின் கதைகள் கொங்குநாட்டையும் பின்னணியாகக் கொண்டவை. மு.வ.வின் கதைகளை கொங்குநாட்டுப் பின்னணியிலும், தி.ஜானகிராமனின் கதைகளை நெல்லை மாவட்டப் பின்னணியிலும் சொல்லமுடியாது. எனவே, குறிப்பிட்ட கதைமாந்தர்களின் கதையைச் சொல்லும்போது அவர்கள் வாழும் அவர்களுக்கே உரிய பின்னணியில்தான் சொல்லமுடியும். ஏனெனில் மனிதவாழ்க்கை அந்த அளவுக்கு அவர்கள் வாழும் மண்ணிலேயே வேர்கொண்டிருக்கிறது. மண்ணின் மணமே புதினத்தின் பின்னணியில் நின்று படிப்போரை ஈடுபடுத்துகின்றது.”(மா.இராமலிங்கம், நாவல்இலக்கியம், ப,28) என்று மா.இராமலிங்கம் படைப்புகளின் பின்னணி குறித்துக் கூறுவதற்கேற்ப சு. தமிழ்ச்செல்வியின் படைப்புகளும் கீழ்த்தஞ்சைமக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் விதமாக அந்தந்த நிலமக்களின் வாழ்க்கை முறையோடு மண்மணம் கமழ அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க ...

புகழ்பெற்ற நர்த்தகி குமாரி கமலாவும் மறைந்தார். ஆழ்ந்த இரங்கல்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
கலை
25 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பாவை விளக்'கில் குமாரி கமலா: 'நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ?':

நான் முதன் முதலாக குமாரி கமலாவை அறிந்துகொண்டது என் அப்பா, அம்மா மூலமே. இருவருக்கும் குமாரி கமலாவின் மீது மிகுந்த விருப்பமுண்டு. எப்பொழுதும் அவரின் நடனத்திறமையினைச் சிலாகித்து உரையாடுவார்கள். அவர் பிரபல கேலிச்சித்திரக்காரரான ஆர்.கே.லக்சுமணனை முதலில் திருமணம் செய்த விடயத்தையும், ஆர்.கே.எல் அவர்கள் அப்பாவுக்குப் பிடித்த பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான ஆர்.கே.நாராயணனின் சகோதரர் என்னும் விடயத்தையும் அப்பா மூலமே முதன் முதலில் அறிந்தேன். அப்பாவிடம் ஆர்.கே.என்னின் ஆங்கில நாவல்களின் சேகரிப்பிருந்தது. கூடவே ஆர்.கே.என்னை மேற்குலகுக்கு அறிமுகப்படுத்திய எழுத்தாளர் கிறகாம் கிறீனின் நாவற் சேகரிப்புமிருந்தது.

'நாம் இருவர்' திரைப்படத்தில் குமாரி கமலா பாரதியாரின் இந்திய சுதந்திர வேட்கைப்'பாடல்களுக்குச் சிறப்பாக ஆடியதையும் அவர்கள் நினைவு கூர்ந்திருக்கின்றார்கள். அவற்றிலொன்றான 'ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே' என்னும் பாடலையும் அம்மா பாடிக்காண்பித்திருக்கின்றார்.

நான் பார்த்த குமாரி கமலாவின் முதற் திரைப்படம் 'பாவை விளக்கு'. றீகலில் பழைய தமிழ்ப் படமாக எழுபதுகளில் வெளியானபோது , இரவு இரண்டாம் காட்சியாகப் பார்த்திருக்கின்றேன். பார்ப்பதற்கு முன்னரே அகிலனின் 'பாவை விளக்கு'நாவலை வாசித்திருந்ததால் நீண்ட நேரமாக ஓடிய அப்படத்தை விருப்புடன் பார்த்து இரசித்தேன். நாவலில் வரும் செங்கமலம் பாத்திரமாகத் திரையில் வருவார் குமாரி கமலா. அவருக்கு மிகவும் பொருத்தமான பாத்திரம்.

'பாவை விளக்கு' திரைப்படத்தில் வரும் 'நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ'என்னுமிப் பாடல் எனக்குப் பிடித்த பாடல்களிலொன்று. மிகவும் பிடித்த குமாரி கமலாவின் திரைப்பட ஆடற்காட்சியும் இதுதான். கவிஞர் அ.மருதகாசியின் வரிகளுக்கு இசையமைத்திருப்பவர் கே.வி.மகாதேவன்.

https://www.youtube.com/watch?v=gxTM8X0OprM

மேலும் படிக்க ...

அஞ்சலி: தமிழ்ப் பணியாளர் சிவாப்பிள்ளை சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார்..! - வி.ரி. இளங்கோவன் -

விவரங்கள்
- வி.ரி. இளங்கோவன் -
சமூகம்
25 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வாழ்நாள் முழுவதும் தமிழ்ப்பணியென அயராதுழைத்த  இலண்டன் சிவாப்பிள்ளை (சிவகுருநாதபிள்ளை - வயது 83) கம்போடியா - அங்கோர் நகரில் நடைபெற்ற 'கடாரம் கொண்டான் இராசேந்திர சோழன்" 1000 ஆண்டு நினைவு விழாவில் கலந்துகொண்டவேளை> சிந்திப்பதை நிறுத்திக்கொண்டமை அதிர்ச்சியையும் மிகுந்த கவலையையும் தருகிறது. அவரது பூதவுடல் லண்டனுக்கு எடுத்துவரவிருப்பதாகத் தெரியவருகிறது.

1966 -ம் ஆண்டு முதல் யான் நன்கறிந்த மனிதர். அடுத்த   சில வருடங்களில் அவர் பொறியியல் படிப்பிற்காக லண்டன் வந்தார். கணினித்துறையில் கற்று வல்லுநராகத் திகழ்ந்தார். கணினியில் தமிழ் எழுத்துக்களை உருவாக்குவதில் அன்றே முயற்சி மேற்கொண்டவர்.

யாழ்ப்பாணம் கட்டப்பிராயைப் பிறப்பிடமாகக்கொண்ட அவர் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி> யாழ் இந்துக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் யான் கல்வி கற்ற காலத்தில் (க. பொ. த.) சில மாதங்கள் எமக்குத் தமிழ்ப் பாட ஆசிரியராகவும் கடமையாற்றியவர். அவரது மனைவி எனது வகுப்புச் சக மாணவர்.

யான் பிரான்ஸ் வந்த காலத்தில் (1991) அவருடன் மீண்டும் தொடர்பு கிடைத்தது. இலண்டனில் எனது நூல்கள் அறிமுக நிகழ்வுகளில் அவர் கலந்துகொண்டு உரையாற்றத் தவறியதில்லை. எனது நூல்கள் அறிமுக நிகழ்வுகளை  அங்கு ஒழுங்குசெய்து உதவியவர். வீட்டிற்கும் அழைத்து அன்பாக உரையாடி உபசரித்த பெருந்தகை. மூத்த சகோதரர்போல் என்னுடன் பாசமாகப் பழகிய அன்புள்ளம்.

மேலும் படிக்க ...

'படுபட்சி' நாவல் பற்றிய எழுத்தாளர் இளங்கோவின் முக்கிய விமர்சனக் குறிப்புகளும், அவரது இறுதியான புரிதலும் பற்றி... - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நூல் அறிமுகம்
24 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் இளங்கோ (டிசெதமிழன்) படுபட்சி நாவல் பற்றி முன் வைக்கும் முக்கியமான விமர்சனக்  குறிப்புகள் இவை,. இவை அவரது முகநூற் பக்கத்தில் வெளியான பதிவிலிருந்து பெறப்பட்டவை. இக்குறிப்புகள் அவரிடத்தில் ஒரு கேள்வியை எழுப்பியிருக்க வேண்டும். உண்மையில் டிலுக்ஸன் மோகனின் நூல் சுய அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட புனைவா? அல்லது சுய அனுபவம் என்னும் பெயரில் உருவாக்கப்பட்ட புனைவா?  ஏனென்றால் இளங்கோவின் இப்புரிதல்கள் நியாயமானவை. ஆனால் இவ்விதம் நூலைப் புரிந்து கொண்ட அவருக்கு நூலின் நம்பகத்தன்மை பற்றிக் கொஞசமும் சந்தேகம்  ஏற்படவில்லை.  அவர் இறுதியில் வந்தடைந்துள்ள முடிவுகள் வருமாறு:

மேலும் படிக்க ...

சிறுகதை: மதுரை மருக்கொழுந்து வாசம்! - வீரவநல்லூர் ஸ்ரீராம் விக்னேஷ் (கல்லிடைக் குறிச்சி) -

விவரங்கள்
- வீரவநல்லூர் ஸ்ரீராம் விக்னேஷ் (கல்லிடைக் குறிச்சி) -
சிறுகதை
24 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

“செக்கூரட்ரி.... மதுரையிலயிருந்து வசந்தன் வந்தால், காம்பவுண்டுக்குள்ளை எலவுட்பண்ண வேண்டாம்.... இதோ உங்க ரூம்ல அவன் ட்ரெஸ்சு வெச்சிருக்கிற சூட்கேசை வெச்சிருக்கேன்.... இந்தா பாருங்க, உங்க டேபிள்ள ரூவா ஐயாயிரம் வெச்சிருக்கேன்....

இந்த ரெண்டையும் அவன் கையில குடுத்து, திருநெல்வேலிக்குப் போயி, அவுங்க வீட்டிலயே இருக்கச் சொல்லுங்க.... இனி, கனவிலகூட இந்தக் கல்லிடைக்குறிச்சியை நெனைச்சும் பாக்கவேண்டாம்னு, ஓனர் அம்மா சொன்னாங்கன்னு சொல்லியிடுங்க....”

வெளியே காம்பவுண்டு வாசல் காவலாளியிடம் என் மனைவி மீனாட்சி சத்தமாகச் சொல்லிவிட்டு வேகமாக வீட்டுக்குள்ளே வந்து வாசல் கதவை பலமாக அடித்துச் சாத்தினாள்.

குளித்துவிட்டு வந்து வேட்டியை மாற்றிக்கொண்டிருந்த நான், குரல் கொடுத்தேன்.

“மீனு....என்ன பண்றே.... விடிஞ்சு ஏழு மணிதானே ஆகுது.... அந்தப்பையன் நேத்து மதியந்தானே மதுரைக்கு கெளம்பினான்.... போன வேலையை முடிச்சிட்டு, நைட்டோடு நைட்டா ரிட்டன் ஆகிறப்போ ட்ராவலிங் புராப்ளெம் இருந்தா, கொஞ்சம் முன்னப்பின்ன லேட் ஆகத்தானே செய்யும்.... அவசரப்பட்டு அவனை வேலையவிட்டு அனுப்பணும்னு முடிவு பண்ணிட்டியே.... ஒரு மாலைக்காக மதுரைக்கு அனுப்பி அவங்க பணக்காரத் திமிரைக் காட்டிப்புட்டாங்கண்ணு நாலுபேரு சொல்றமாதிரியா பண்ணிப்புட்டியே....”

“என்ன பேசிறிய.... கோயில்ல அம்பாளுக்கு கச்சிதமா சாத்துறத்துக்கு, இத்துனூண்டு பட்டு வாங்க இந்தக் கல்லிடைக்குறிச்சி உள்ளூரிலயோ பக்கத்தில அம்பாசமுத்திரத்திலையோ ஜவுளிக்கடையே கெடையாதா....?

மேலும் படிக்க ...

பயணத்தொடர் : ஐஸ்லாந்து (3) - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
24 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எங்கள் பயணம் ஐஸ்லாந்தின் தென் திசையிலிருந்து கிழக்குத் திசையில் அதாவது நோர்வே பக்கம் இருந்தது .நோர்வேயையும் ஐஸ்லாந்தையும் பிரிப்பது அத்திலாந்திக் சமுத்திரம். இதைக் கடந்து தான் வைக்கிங் குழுவினர் அக்காலத்தில் பாய்மரக்கப்பல்களில் ஐஸ்லாந்து மட்டுமல்ல, கிறின்லாந்து மற்றும் அமரிக்காவரை சென்றார்கள். ஐஸ்லாந்தில் ஆயிரம் வருடங்கள் முன்பாக குடியேறினார்கள்

இதுவரை காலமும் நியூசிலாந்து உலகத்தில் கடைசியாக உருவாகிய நிலப்பகுதி என நினைத்த எனக்கு 64 மில்லியன் வருடங்கள் முன்பு ஐஸ்லாந்து உருவாகியது எனக் கேட்டபோது வியப்பளித்தது. அதைவிட ஐஸ்லாந்தின் மத்தியபகுதி இன்னமும் இளையது. பூமியில் கிட்டத்தட்ட இமய மலைத்தொடர் உருவாகியது (50மில்லியன்.) இதே காலத்தில்தான் .

இப்படி பூமியின் பல பகுதிகள் பல்வேறு காலங்களில் உருவாகியது என்பதை பாறைகளின் வயதால் விஞ்ஞானிகள் கணித்துள்ளார்கள். ஆனாலும் பைபிளில் சொல்லப்பட்டது போல ஒரே நாளில் புவி இறைவனால் உருவாக்கப்பட்டதென கிட்டத்தட்ட 5-6 பில்லியன் மக்கள் நம்புகிறார்கள். உண்மையும் நம்பிக்கையும் இருளையும் ஒளியையும் போன்றது . ஒன்றின் இடத்தில் மற்றது இருப்பது கிடையாது.

நாங்கள் சென்ற ஐஸ்லாந்தின் கிழக்குப் பகுதியில் அதிக மிருகங்கள் உள்ளன. அத்துடன் மனித குடியேற்றமும் இந்தப் பகுதியாலே ஆரம்பத்தில் நடந்தது.

ஆரம்பத்தில் ஐஸ்லாந்துக்கு ஆதி குடியேற்றவாசியாக இருந்த ஒரே மிருகம் துருவ நரி மட்டுமே. அவை, பனியால் நிலமும் கடலும் இணைந்திருந்த காலத்தில் நடந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. 11, 700 வருடங்கள் முன்பாக பனிப்பாறைகள் விலகியதால் இங்கேயே தங்கிவிட்டன. நரிகள், ஆணும் பெண்ணும் ஜோடியாக வாழ்வதுடன் மீன்கள், இறந்த சீல்கள் மற்றும் பறவைகளின் முட்டைகள் என பலதையும் உண்பதால் இங்கு தொடர்ந்து வாழ்ந்தன.

மேலும் படிக்க ...

நூல் வெளியீடு: 'அ.முத்துலிங்கம் எழுத்துலகு'

விவரங்கள்
- தகவல்: அ.முத்துலிங்கம் -
நிகழ்வுகள்
23 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இருள் சூழ்ந்த உலகின் நிலவு நீ! - ம.ஆச்சின் -

விவரங்கள்
- ம.ஆச்சின் -
கவிதை
23 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் மறைவையொட்டிய இரங்கற் பா. கவிஞரின் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரில் 'பதிவுக'ளும் பங்கு கொள்கிறது. -



தமிழ் மனங்களின் மேடையில்
மின்னல் போல வந்தவன் நீ,
தெளிந்த சிந்தனைத் தீபமாய்
தலைமுறைகளின் தெருவொளி ஆனாய்.
காலம் களைந்த போதிலும்
காரணம் காற்றில் நிற்க,
உன் எழுத்தென்றால்
எரியும் விளக்கு.
உன் உரையென்றால்
உயிர்க்குரல்.

நூல் எழுதிய கையை நிறுத்தினாலும்
நூறு தலைமுறையைக் கிளர்த்தும்
அந்த ஒலிகள் இன்னும் உயிரோடு.
இருள் சூழ்ந்த உலகில்
நிலவென ஒளிர்ந்த நீ,
ஏன் சொற்கள் குறைந்தாலும்
உன் மவுனமே ஒரு பாடலாயிற்றே.
மனக் காயம் மறைத்த போதும்
மக்கள் நெஞ்சில் நீ இருந்ததே உண்மை.

மேலும் படிக்க ...

பைந்தமிழ்ச்சாரல் வழங்கும் இரு நூல்களின் திறனாய்வு: எழுத்தாளர். விமல் பரம் அவர்களின் சிறுகதைத்தொகுப்பு " தீதும் நன்றும்" - பவானி -

விவரங்கள்
- தகவல்: பவானி -
நிகழ்வுகள்
22 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting  Meeting ID: 864 8891 1310 | Passcode: 1965

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. 'எடிட்டிங்கும் தமிழ் இலக்கியமும் பற்றி ஒரு தர்க்கம்! - வ.ந.கிரிதரன் -
  2. வள்ளுவர் சுட்டும் சட்டநெறிகள்! - திருமதி வீ.வெள்ளைத்துரைச்சி, உதவிப்பேராசிரியா், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டா்டு ஃபயா்ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -
  3. கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது விழா! - தகவல்: குரு அரவிந்தன் -
  4. வவுனியாப் பல்கலைக்கழகத்துக்கு நூல்கள் அன்பளிப்பு!
  5. கம்பராமாயணத்தில் பல சொல் ஒரு பொருள் - கால்! - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061 -
  6. சிறுகதை - வேலைகள் - சுப்ரபாரதிமணியன் -
  7. புதுமைப்பித்தனின் செல்லம்மாள்: எளிய மனித வாழ்வின் அங்கீகரிக்கப்படாத அவலத்தின் குறியீடு! - ஈழக்கவி -
  8. புகலிடச்சிறுகதை: ஆபிரிக்க அமெரிக்கக் கனேடியக் குடிவரவாளன்' - வ.ந.கிரிதரன் -
  9. மனிதம் பேசும் எழுத்துப் படையல்! - தாமரைச் செல்வி -
  10. 'கோஸ்ட் ரைட்டிங்' பற்றி என் இயந்திர மனித நண்பனுடன் ஓர் உரையாடல்! - உரையாடியவர் வ.ந.கிரிதரன் -
  11. முனைவர் புட்பா கிறிட்டியின் 'நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் தமிழ், சமய, சமூகப்பணிகள்' ஆய்வு நூல் வெளியிடு!
  12. ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்: “நமது அன்றாடத் தமிழ் மொழிப் பயன்பாட்டில்திருத்திக்கொள்ளப்படவேண்டிய பிழைகள்”
  13. சிந்தனைக்களம்(இசை-நடனம்)-3 - ‘கர்நாடக இசையின் எதிர்காலம்’
  14. பயணத்தொடர்: ஐஸ்லாந்து (2) - நடேசன் -
பக்கம் 3 / 120
  • முதல்
  • முந்தைய
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • அடுத்த
  • கடைசி