பதிவுகள் முகப்பு

இலங்கையின் முன்னோடிப் பெண் நிலவடிவமைப்புக் கலைஞர் ஹெஸ்டர் பஸ்நாயக்கவும் அவரது நிலவடிவமைப்புகலை (Landscaoe Architecture) பற்றிய சிந்தனைகளும்! - வ.ந.கிரிதரன்

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
17 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டடக்கலை பற்றி அறிந்த அளவு பொதுவாக நிலவடிமைப்புக் கலை (Landscaoe Architecture)  பற்றிப் பலர் அறிந்திருப்பதில்லை. உண்மையில் கட்டடக்கலை, நகர அமைப்புக் கலையுடன் பின்னிப் பிணைந்த இன்னுமொரு கலைதான் நிலவடிவமைப்புக் கலை. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் சரித்திரச் சின்னங்கள் நிலவடிவமைப்புக் கலை எவ்வளவுதூரம் நகர அமைப்பில் முக்கிய இடத்தை வகித்தது என்பதை  உணர்த்தும் சான்றுகள். உதாரணத்துக்குச் சிகிரியா நகர அமைப்பில் நிலவடிவமைப்புக் கலையின் பங்களிப்பு வெளிப்படை. இது போல் பழமை வாய்ந்த விகாரைகள், அரச முக்கியத்துவம் மிக்க கட்டடங்கள், ஆலயங்கள் இவற்றிலெல்லாம் நிலவடிவமைப்புக் கலையின் தாக்கத்தைக் காணலாம். இன்று இத்துறை ஒரு பட்டப்படிப்பாக மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கபப்ட்டு வருகின்றது. இந்நிலையில் இலங்கையின் நிலவடிவமைப்புக் கலையில் முன்னோடிகளில்  ஒருவரான திருமதி ஹெஸ்ட்ர பஸ்நாயக்க பற்றிச் சுருக்கமாக அறிந்து கொள்வதே  இப்பதிவின் நோக்கம். 

மேலும் படிக்க ...

மனோ கணேசனின் 'குடியேற்றத்திட்டமும்' , 'துருவப்படுத்தும் அரசியலும்' பற்றிய நோக்கு! - எல். ஜோதிகுமார் -

விவரங்கள்
- எல். ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
16 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில், எமது மனோ கணேசன் அவர்கள், மலையக மக்களுக்கென ஒரு தீர்வு திட்டத்தை முன் வைத்திருந்தார்: “காணி வழங்கப்படாவிடின், மலையக மக்கள், வட-கிழக்கில் குடியேறுவது சிறந்தது”.

நடந்து முடிந்த இயற்கை சீற்றத்தை அடுத்து அன்னாரால் முன்வைக்கப்பட்டுள்ள இத்திட்டம் பலருக்கும் அதிர்ச்சியை உண்டுப் பண்ண கூடியதுதான். “புலம் பெயர் நண்பர்களின் ஆதரவுடன் இத்திட்டத்தை செயல்படுத்த, அவர் உத்தேசிருப்பதாயும் தெரிவித்துள்ளார்” (சூரியன் செய்தி சேவை: 09.12.2025).

இதனை ஆதரித்து, திரு.சுமந்திரன் அவர்களும் அறிக்கை விட்டிருப்பதாய் தெரிகின்றது. (தமிழ்வின்: 11.12.2025). இது, அண்மைக்காலமாய் வீசத் தொடங்கியுள்ள ஜேவிபியின் அலைகளில், வட-கிழக்கின் தேசியம் அள்ளுண்டு போகாமல் இருக்க தெரிவிக்கப்படும் ஒரு கூற்றாகவும் இருக்கலாம்.

இருப்பினும், இன்று உண்மையாகவே வற்ற தொடங்கிவிட்ட வடக்கின் ஜனத்தொகையை, இப்படி குடியேற்றுவதன் மூலம் பெருபிக்கும் செயல்திட்டமும் இதில், அடங்குவதாகவும் இருக்கலாம். ஆனால், மனோ கணேசனின் அறிக்கையில், இத்தகைய சமூக நலன்கள் கருத்தில் எடுக்கப்பட்டுள்ளனவா என்பது கேள்வியாகின்றது. காரணம், அன்னார் அவர்களின் கடந்த கால நிலைப்பாடுகள், பல சந்தர்ப்பங்களில் மிக மோசமான எதிர்விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளதை நாம் கண்ணார கண்டிருக்கின்றோம். (சென்ற கட்டுரையில் கூட, அன்னார் அவர்கள், மரண ஊசி விசாரணை என, ஐயா விக்னேஸவரன் அவர்களுடன், அமெரிக்க படையினருடன் இணைந்தபடி, விமானம் மூலமாக, வடக்குக்கு விரைந்து சென்றது தொடர்பில் சுட்டி காட்டியிருந்தோம்).

மேலும் படிக்க ...

புகலிடச் சிறுகதை: மான் ஹோல்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
சிறுகதை
14 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


- இச்சிறுகதை முதலில் தேடல் (கனடா) சஞ்சிகையில் வெளியானது. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பகம் மற்றும் மங்கை பதிப்பகம் (கனடா) வெளியீடாக வெளியான 'அமெரிக்கா'த் தொகுப்பிலும் இச்சிறுகதை பிரசுரமாகியுள்ளது. -


ஜெயகாந்தனின் ரிஷிமூலத்தில் வரும் ராஜாராமனைப் போல்தாடி மீசை வளர்த்திருந்தான். கால்களில் ஒன்றினைச் சப்பணமிட்ட நிலையிலும் மற்றதை உயர்த்தி மடக்கி முழங்காலினை வலது கையினால் பற்றியிருந்தான். இடதுகையை பின்புறமாக நிலத்தில் ஊன்றியிருந்தான். முடிநீண்டு வளர்ந்து கிடந்தது, வாயினில் பாதித்துண்டு சிகரட் புகைந்த படியிருந்தது. கண்களில் மட்டும் ஒரு விதமான ஒளி வீச்சு விரவிக் கிடந்தது. மான் தோலில் அமர்ந்திருக்கும் சாமியாரைப் போல மான் ஹோலின் மேல் அமர்ந்திருந்தவனின் தோற்றமிருந்தது. இவன் நடைபாதை நாயகர்களிலொருவனென்றால் நான் ஒரு நடைபாதை வியாபாரி. "கொட் டோக்" (Hot Dog) விற்பது என் தொழில். வடக்கில்'தொலைவில் ஒண்டாரியோ பாராளுமன்றக் கட்டடம் தெரிந்தது. எமக்குப் பின்புறமாக புகழ்பெற்ற குழந்தைகளிற்கான வைத்தியநிலையம், 'சிக்கிட்ஸ்'ஹாஸ்பிடல் அமைந்து கிடந்தது சிறிது நேரம் சாமியார் ஒண்டாரியோ பாராளுமன்றத்தையே பார்த்தபடியிருந்தான். பிறகு சிரித்தான். 'ஏன் சிரிக்கிறாய்' என்றேன்.

'பார்த்தாயா காலத்தின் கூத்தை. '

'காலத்தின் கூத்தா...'

'காலத்தின் கூத்தில்லாமல் வேறென்ன'

சிறிது நேரம் ஆகாயத்தைப் பார்த்தான், அதில் முழுமதியை ரசித்தான்.

நேரத்துடனேயே இருட்டத் தொடங்கிவிட்டது. இன்னமும் மாநகரத்தின் பரபரப்பு குறையவில்லை. ஆளுக்கு ஆள் அரக்கப் பரக்க நடந்துகொண்டிருந்தார்கள். இதற்கிடையில், எனக்கும் ஒரு சில 'கஸ்டமர்'கள் வந்தார்கள். எனது வாடிக்கையாளர்களில் ஒருவனான நைஜீரியா டாக்ஸி டிரைவர் டாக்ஸியை வீதியோரம்நிறுத்திவிட்டு வந்தான்.

மேலும் படிக்க ...

சிறுகதை: யாதுமானவள்! - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
சிறுகதை
14 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இதுதான் நான் தனித்துச் செல்லும் முதல் பயணம். விமானத்தின் பின்பகுதியில்தான் என் இருக்கை இருந்தது. சூட்கேசை என்னுடன் இழுத்துக்கொண்டு சென்ற நான் என் இருக்கையில் கைப்பையை வைத்துவிட்டு, சூட்கேசை மேல் இறாக்கையில் வைப்பதற்குப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தேன். எட்டக்கூடிய உயரத்தில் அது இல்லையே என எனக்குக் கவலையாக இருந்தது. என் இருக்கையின் பக்கத்தில் இருந்த இளம் பெண் எழுந்து, உதவிவேண்டுமா என ஆங்கிலத்தில் கேட்டபடி உதவிசெய்ய முன்வந்தா. கேட்காமலேயே உதவிசெய்ய முன்வந்த அவவுக்கு வாயாராவும் மனதாரவும் நன்றிகூறியபடி ஆசுவாசத்துடன் அமர்ந்துகொண்டேன்.

சற்றுநேரத்தில், “நீங்க சுவிற்சிலாந்திலா இருக்கிறீங்க?” என அவவிடம் கேட்டேன்.

“ஓம், ஒரு medical conferenceக்காக ரொறன்ரோவுக்கு வந்தனான். நீங்க இங்கையா இருக்கிறீங்க?” அவவும் பேச்சைத் தொடர்ந்தா.


“ஓ, ரொறன்ரோ உங்களுக்குப் பிடிச்சிருந்ததா? 20 வருஷமா நான் இங்கைதான் இருக்கிறன். ஆனா, என்ர சொந்த நாடு, இலங்கை. அங்கை எனக்குப் படிப்பிச்ச ஒரு ரீச்சரின்ர 75வது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக உங்கட நாட்டுக்கு வாறன்.”

“ரொறன்ரோவுக்கு ஒரு wow சொல்லலாமெண்டால், உங்களுக்கு மிகப் பெரிய wow சொல்லலாம். ஆசிரியர்களுடனான உறவை அவ்வளவு தூரத்துக்கு நீங்க பேணுவீங்களா?” முகத்தில் விழுந்த சுருட்டை மயிரைக் காதோரம் ஒதுக்கியவாறு புருவங்களை உயர்த்தினா அவ.

“மிசிஸ் பரம் வித்தியாசமான ஒரு ரீச்சர். அவ என்ர அபிமானத்துக்குரிய ரீச்சர் மட்டுமில்ல, அவ எனக்கொரு role model.”

“ஓ!”

“சின்ன வயசில இலங்கையின்ர தலைநகரான கொழும்பிலதான் நாங்க இருந்தனாங்க. அங்கை அப்பா ஒரு புடவைக் கடை வைச்சிருந்தவர். 77ம் ஆண்டு நடந்ததொரு கலவரத்தில அவர் கொலைசெய்யப்பட்டிட்டார். அதாலை பிறகு நாங்க யாழ்ப்பாணத்துக்குப் போகவேண்டியிருந்தது. அப்ப நான் ஏழாம் வகுப்பு....”

மேலும் படிக்க ...

பண்டையத் தமிழர் வாணிகத்தில் பூம்புகார்! - முனைவர் பீ. பெரியசாமி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கலைக் கல்லூரி, ஆரணி, திருவண்ணாமலை- 632317 -

விவரங்கள்
- முனைவர் பீ. பெரியசாமி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கலைக் கல்லூரி, ஆரணி, திருவண்ணாமலை- 632317 -
ஆய்வு
13 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ORCID - https://orcid.org/0000-0002-7395-9699

ஆய்வுச் சுருக்கம்

பூம்புகார் என்பது காவிரிப்பூம்பட்டினத்தின் மற்றொரு பெயர். இது சிறந்த வாணிகத் தலமாகவும், துறைமுகமாகவும் பண்டைய காலத்தில் விளங்கியுள்ளது. இத்துறைமுகத்தின் வழியே நாட்டின் பலபகுதிகளுக்கும் சென்று உள்நாட்டு வாணிகத்தில் வாணிகர்கள் ஈடுபட்டனர். அதுமட்டுமன்றி சீனா, இலங்கை, சாவகம் உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்றும் வணிகம் செய்துள்ளனர். அதுமட்டுமன்றி அவர்கள் இத்துறைமுகப் பட்டினத்திற்கு வந்து தங்கியும் வாணிகத்தில் ஈடுபட்டுள்ளனர்.இங்கு பாய்மரக்கலங்களும், கப்பல்களும் பொருட்களை ஏற்றி வந்தவண்ணம் இருந்துள்ளன. அதுமட்டுமன்றி இந்நகரில் சிறந்த வாணிகர்களுக்கு எட்டி முதலான பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான சிறப்புகளை உடையதாக விளங்கிய பூம்புகார் காப்பிய காலத்தில் கடல்சீற்றத்தால் அழிவுக்குள்ளானது. அதன் விளைவால் இன்று சிறிய கிராமமாக திகழ்கின்றது என்பதை இக்கட்டுரை ஆராய்ந்துள்ளது.

முக்கியச்சொற்கள்

வாணிகம், பூம்புகார், உள்நாட்டு வாணிகம், வெளிநாட்டு வாணிகம், காவிரிபூம்பட்டினம், துறைமுகம், கடல்வாணிகம்

முன்னுரை

பண்டைய தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் சோழர்களின் கடற்கரை பட்டினமாக விளங்கியது காவிரிப்பூம்பட்டினம் எனும் பூம்புகார். இந்நகரில் பல்வேறு வாணிகங்கள் சிறப்பாக நடந்துள்ளன. அதிலும் குறிப்பாக பல்வேறு நாடுகளைச் சார்ந்தவர்களும் இந்த பட்டினத்திற்கு வந்து தங்கி வாணிகம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத் தகுந்தது. அதனை விரிவான இக்கட்டுரை ஆராய்கின்றது.

மேலும் படிக்க ...

தாத்தாவின் உலகம்! - கவிஞர் சாய்சக்தி சர்வி -

விவரங்கள்
- கவிஞர் சாய்சக்தி சர்வி -
கவிதை
13 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



அலமாரியில் ஓரமாக வைக்கப்பட்டிருந்த மூக்கு கண்ணாடியில்  

திட்டு திட்டாகப் படிந்திருந்தன 
ஞாபக மறதிகள்

இரவில் தவிர்த்த மாத்திரைகளாகவும் 
மளிகை கடையில் தவறவிட்ட பாக்கிகளாகவும் 
மேஜையில் விட்டுச்சென்ற சாவிகளாகவும் ஆங்காங்கே படிந்திருக்க
கோடுகளாகத் தென்பட்ட நிராகரிப்புகளுக்கும் மறதிகளுக்கும் இடையே

தெரிந்த பார்வையில் 
சுழன்று கொண்டிருந்தது 

தாத்தாவின் உலகம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banada) உதவி : VNG]

ஈழக்கவி கவிதைகள்: புலம்பெயர்வு!

விவரங்கள்
- ஈழக்கவி -
கவிதை
13 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



பாகம் 1: அடையாள இழப்பு

நான் இருந்த நாடு ஒரு புகைப்படமாக மட்டும் உள்ளது,
தலைகீழாக பிணையத்தில் மிதந்துவந்தது,
அதனுள் என் பாட்டியின் சீராடை,
ஒரு விழா மேடையில் மறைந்து போன என் நாமம்.
இப்போது என் பெயர் ஒத்த ஒலி,
புதுமொழிகளில் பிறரால் தவறாக உச்சரிக்கப்படும் நினைவுச்சின்னம்.

பாகம் 2: தொழிலின் வேதனை

இங்கே என் கை தொழிலாளியின் கை,
ஆனால் என் கனவுகள் கத்திக்கும் குரல்கள்.
சுத்திகரிக்க வேண்டிய வாடை,
பொதுமுடிச்சுகளுள் சிக்கிக்கொண்ட வரிகளாக.
அந்த நாடு எனக்கு வீடு தரவில்லை,
ஆனால் அந்த அறை எனக்கு அடிமைத்தனம் தந்தது.

மேலும் படிக்க ...

நெஞ்சைத்தொட்ட ஒரு பயண அனுபவம்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
12 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


படைப்பிலக்கியவாதி ஒருவர் எழுதும் பயண அனுபவங்களுக்கும், சாதாரணமான ஒருவர் எழுதும் பயண அனுபவங்களுக்குமிடையில் அதிக வித்தியாசம் இருக்கும். படைப்பிலக்கியவாதி எழுதும் அனுபவங்களில் இலக்கியச் சுவை இருக்கும். உணர்வுகளின் வெளிப்பாடு இருக்கும். அதனால் அவை இலக்கியத் தரம் மிக்கதாக அமைந்து விடுகின்றன. 

உதாரணத்துக்கு எழுத்தாளர் நடேசன் எழுதும் பயண அனுபவங்களைக் குறிப்பிடலாம். தற்போது  பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ள அவரது இந்தியப் பயணத்தொடரில் இம்முறை மத்திய பிரதேசத்திலுள்ள  பீம்பேத்கா (Rock Shelters of Bhimbetka) குகை ஓவியங்களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார். ஆதி மனிதர்களால் பல்வேறு காலகட்டங்களில் வரையப்பட்ட ஓவியங்களை உள்ளடக்கிய குகைகள். 

இவ்வோவியங்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவருக்கு ஆதி மனிதர்களின் அக்குகை ஓவியங்களைப் பார்ப்பதில் அவ்வளவு ஆர்வமில்லை. இஷ்ட்டமில்லை. ஆனாலும் மனைவிக்கு விருப்பமென்பதால் அவர் அவர் பின்னால் அவர் போன இடமெல்லாம் பின் தொடர்ந்து செல்கின்றார்.  அவ்விதம் செல்லும் அவரது அந்த நிலை அவருக்குச் சங்கப்பாடலொன்றின் வரிகளை நினைவூட்டுகின்றன.  

மேலும் படிக்க ...

இந்தியப் பயணத்தொடர்: ஆதிமனிதர்கள் குகைகள் – பீம்பேத்கா (Rock Shelters of Bhimbetka)! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
12 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மத்தியப் பிரதேசத்திற்கு போனால் பீம்பேத்கா (Bhimbetka) என்ற இடத்தை கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்று நண்பர் கூறியபோது, அதன் முக்கியத்துவம் எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. என் பயண முகவர் கூட அதை முதலில் குறிப்பிடவில்லை. ஆனால் இறுதிநேரத்தில் கேட்டபோது, "நிச்சயமாக ஏற்பாடு செய்கிறோம்" என்றார்.

போபாலிலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில், விந்திய மலைத்தொடரின் தெற்கு பகுதியில், காடு சூழ்ந்த 15 சதுர கிலோமீட்டர் பரப்பில் இந்த குகைகள் அமைந்துள்ளன.

என்ன விசேஷம்?

இந்தியாவில் கற்காலம், இடைக்காலம், பிற்காலம் என மனிதன் வாழ்ந்த பல்வேறு சமூகங்களின் ஆதாரங்கள் ஒரே இடத்தில் காணப்படும் அற்புதமான சான்றுகள்தான் இங்கு உள்ள குகை ஓவியங்கள். "பீமனின் ஓய்விடம்" அல்லது "பீமனது குன்று" என்ற பெயருடன் தொடர்புபடுத்தி அழைக்கப்படுகிறது.

உள்ளூர் மக்கள் இதனை மகாபாரதத்தின் பீமன் வாழ்ந்த இடமாக நம்பினாலும், இன்று இதன் வரலாற்றுப் பெருமைக்காக யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாகப் பாதுகாக்கப்படுகிறது.

எனது அனுபவம்

நாங்கள் சென்ற நாள் வெப்பம் 40 செ. அடித்தது. மத்தியப் பிரதேசத்தின் வழியாக கடகரேகை (Tropic of Cancer) செல்கிறதால், கோடைகால வெயில் நேரடியாகத் தலையில் தாக்குகிறது. அங்கு நான் சுமார் பத்து குகைகளைப் பார்த்தேன்.

மேலும் படிக்க ...

இலக்கியமும் விமர்சனமும்! - எஸ் அகஸதியர் -

விவரங்கள்
- எஸ் அகஸதியர் -
இலக்கியம்
12 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

-  எழுத்தாளர் நவஜோதி யோகரட்னம்  "இலங்கையின் பிரபல முற்போக்கு எழுத்தாளர் எஸ்.அகஸ்தியர்  எம்மை விட்டுப் பிரிந்த நினைவு தினம்  டிசம்பர் 8.  அவர் எழுதிய இக்கட்டுரை வாசகர்களுக்கு பயனளிக்கும் " என்று குறிப்பிட்டு,  எமக்குத் தம் தந்தையாரின் நினைவு தினத்தையொட்டி அனுப்பி வைத்த அமரர் அகஸ்தியரின் கட்டுரையிது. -


    சமூகவியற் படைப்பாளிகளும், விமர்சகர்களும், வாசகர்களும் எதிர்பார்த்தவாறு தமிழ் இலக்கியம் பற்றி ஐரோப்பாவிலும் தற்போது பேசப்படுவதற்கு இங்கு வெளிவரும் மாத, முத்திங்கள், வார இரு வாரப் பத்திரிகை சஞ்சிகைகள், சிறு நூல் வெளியீட்டுப் பதிப்பகங்கள், ஆண்டு மலர்கள், கலை இலக்கிய நிகழ்வுகள், நூல் விற்பனை நிலையங்கள் காரணமாக அமைந்தமை மனங் கொள்ளத்தக்கது. ‘ஐரோப்பாவில் தமிழ் இலக்கியம்’ என்ற கட்டுரையில் விரிவாக எழுதியதால் இதில் அவற்றைத் தவர்த்துள்ளேன்.

    ‘நடை பயில முன் படைப்புகள் பற்றி விமர்சனம் செய்வது இளம் படைப்பாளிகளைச் சோர்வடையச் செய்துவிடும்’ என்று சொல்லப்படுகிறது. இப்படிச் சொல்வதே படைப்பாளிகளை அவமதிப்பதாகும். படைப்பாளி மட்டுமன்றி, வாசகனும், விமர்சனத்திற்குள்ளாக்கப்படும் ஆரம்பப் படைப்பாளியும் இதனால் சிறந்த படைப்பாளர்களாகத் திகழ முடியும். படைப்பாளி படைப்புகள் பற்றி ஏதோ ஒரு வகையிலேனும் தன்னையே விமர்சிப்பதாலும் விமர்சிக்கப்படுவதாலும் படைப்புகள் பட்டை தீட்டப்படும் தங்கம் போலாகின்றன. எனவே, விமர்சனத்தைக் கண்டு, எந்தப்  படைப்பாளனும் தன் பேனாவைக் கீழே போடக்கூடாது. மனச்சோர்வு அடையவும் கூடாது. எனெனில், நேர்மையாக விமர்சிக்கின்றவன்தான் படைப்பாளியின் உண்மையான இலக்கிய நண்பனாகத் திகழ்கின்றான்.   உதாரணத்திற்கு  ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிடல் பொருத்தம் என்று கருதுகின்றேன்.

மேலும் படிக்க ...

சூழலை மீறிய பெருங்கவிஞன் , விடுதலைக் கவிஞன் பாரதி! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
இலக்கியம்
11 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



டிசம்பர் 11, மகாகவி பாரதியாரின் பிறந்ததின நினைவு தினம்! 

"மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்;
மற்றும் இந்தப் பிரமத் தியல்பினை
ஆய நல்லருள் பெற்றிலன்;தன்னுடை
அறிவி னுக்குப் புலப்பட லின்றியே
தேய மீதெவ ரோசொலுஞ் சொல்லினைச்
செம்மை யென்று மனத்திடைக் கொள்வதாம்
தீய பக்தி யியற்கையும் வாய்ந்திலேன்.' - பாரதியார் -

என்னைக் கவர்ந்த, பாதித்த மகாகவிஞர் பாரதியார். தன் குறுகிய இருப்பில் இவர் சாதித்தவை அதிகம். ஆச்சரியமூட்டுபவை. தன் இருப்பைப்பற்றி, தன் பிறந்த மண்ணைப் பற்றி, தன் நாட்டைப்பற்றி,  தான் வாழ்ந்த சமுதாயச் சூழல் பற்றி, அதன் சீர்கேடுகள் பற்றி, பெண் விடுதலை பற்றி, தேசிய, வர்க்க, சமூக விடுதலை பற்றி, மானுட விடுதலை பற்றி, மார்க்சிய அரசியல் தத்துவங்கள் பற்றியென்று இவர் சிந்திக்காத விடயமெதுவுமில்லை. 

மேலும் படிக்க ...

எழுத்தாளர் சுகுணா திவாகரின் , எழுத்தாளர் இரா முருகவேளின் 'நக்சல்பாரி' நூல் பற்றிய முகநூற் குறிப்பு!

விவரங்கள்
- சுகுணா திவாகர் -
நூல் அறிமுகம்
11 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் இரா முருகவேளின் 'நக்சல்பாரி' இயக்கத்தைப்பற்றிய 'நக்சல்பாரி' நூல் பற்றிய நல்லதோர் அறிமுகத்தைத் தருகின்றது எழுத்தாளர் சுகுணா திவாகரின் இந்த முகநூற் பதிவு.  நக்சல்பாரி இயக்கத்தை  முன்னெடுத்தவர் சாரு மஜூம்தார் . நக்சல்பாரி என்பது மேற்கு வங்கக் கிராமம் ஒன்றின் பெயர். இப்பதிவை முழுமையாகக் கீழே தந்துள்ளோம் -


சுகுணா திவாகர் எழுதிய முகநூற் பதிவு:

2022ல் ஆனந்த விகடனில் சாரு மஜூம்தாரைப் பற்றி ஒரு விரிவான கட்டுரை எழுதினேன். சாரு கொல்லப்பட்ட 50வது ஆண்டு அது. மார்க்சிய-லெனினிய இயக்கத்தில் இருந்த, இருக்கும் பல தோழர்களுக்கு சாரு மஜும்தார் பற்றிய கட்டுரை ஆனந்த விகடன் போன்ற ஒரு வெகுஜன இதழில், அதுவும் நான்கு பக்கங்களுக்கு வெளியானது ஓர் இன்ப அதிர்ச்சி. பலரும் நெகிழ்ச்சியுடன் தொடர்புகொண்டு பாராட்டினர்.

மேலும் படிக்க ...

இளைஞர் குழுக்களும், வன்முறையும் தொலையப்போகும் எதிர்காலமும்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
அரசியல்
10 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் இளைஞர் குழுக்களின் வன்முறை பற்றிய செய்திகள் அதிகமாக ஊடகங்களில் வெளியாகின்றன.  இதை  ஒரு சமூக விரோதப்பிரச்னையாகக் கருதாமல் , சமூகப் பிரச்சனையாகக் கருத வேண்டும். இளைஞர் குழுக்களின் அட்டகாசம் என்பது மேற்கு நாடுகளின் பெரு நகரங்களில் காணப்படும் ஒன்று. இலங்கையில் முன்பும் சண்டியர்கள் இருந்தார்கள்.  ஆனால் அப்போது சண்டியர்கள் பொதுவாக ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து உருவானார்கள், சில சமயங்களில் ஆதிக்க சமூகங்களிலிருந்தும் உருவானார்கள்.  ஒடுக்கும் சமுதாயத்தினரின் கையாட்களாகப் பயன்படுத்தப்பட்டார்கள். ஒடுக்கும் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தமக்குள் முட்டி மோதிக்கொள்கையில் இக்கையாட்களைத் தம் சார்பில் பயன்படுத்திக்கொள்வார்கள்.

தற்போது இளைஞர்கள் குழுக்கள் அக்காலச் சண்டியர்களின் இடத்தைப் பிடித்துள்ளன.  இவர்ககள் ப்லவேறு சமூகப் பிரிவுகளிலிலிருந்தும் குழுக்களாக ஒன்றிணைபவர்கள். இவர்களை அரசியல்வாதிகள் , மேல் தட்டு வர்க்கத்தினர், புகலிடப் புதுப் பணக்காரர் எனப் பலரும் பயன்படுத்திக்கொள்கின்றார்கள்.

மேலும் படிக்க ...

சமூகத்தினை அலசிய மையங்கள்! எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் கதைகள் நூலை முன்வைத்து ஓர் ஆய்வு! - முத்தழகு கவியரசன் -

விவரங்கள்
- முத்தழகு கவியரசன் -
ஆய்வு
10 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மூகம் - சமுதாயம் என்ற இருநிலையை நாம் முதலில் புரிந்துகொள்ளுதல் அவசியம். ஒரு குறிப்பிட்ட இனக்குழுவில் வாழும் மக்களின் பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகள், சடங்குகள் எனத் தனிப்பண்பாட்டு அடையாளங்களின் நிலைப்பாடுகளை முன்நிறுத்துவதால், அவர்கள் ஒரு சமுதாயத்திற்கு உட்பட்ட மக்களாக மாறுகிறார்கள். ஒவ்வொரு சமுதாயத்தில் வாழும் மக்களின் வாழ்வியல் முறைகள் அவர்களின் பண்பாட்டுக் கூறுகளுக்கு ஏற்றார்போல் மாற்றமடைந்தும் காணப்படுகின்றது. ஆனால் சமூகம் என்பது இச்சமுதாயத்தை எல்லாம் உள்ளடக்கிக் கொள்வது. சமுதாயத்தில் ஏற்படக்கூடிய கலவரங்கள் அவை வெளியுலகிற்கு வரும்போது சமூகத்தின் நீட்சியாக உருவெடுக்கிறது. இந்நீட்சி எல்லைகளற்ற தீர்வாகவும், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் சிறுகதைகளான சுவர், நசுக்கம், எதிர்ப்பதியம் போன்ற கதைகளிலிருக்கக்கூடிய சமூகச்சூழல் எவற்றை நோக்கி பயணிக்கிறது. அப்பயணிப்பில் மக்களின் பங்களிப்பு எவ்வகையில் உலவுகின்றது – அதற்கானக் காரணங்களும், சமூக மாற்றம் யாரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற முனைப்பில் இக்கட்டுரை முன்னெடுக்கப் பட்டிருக்கிறது.

மேலும் படிக்க ...

சிறுகதை: நீர்க்குழி! - டீன் கபூர் -

விவரங்கள்
- டீன் கபூர் -
சிறுகதை
10 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பனித்துளி மேலிருந்த பசுமையான இலைக்கண் மீது பட்டு விழுந்த நீர்க்குழி, அசைவின்றி சில கசிவுகளுடன் நின்றது. அது போலத்தான் றஹீமின் உள்ளமும். அவன் மனசு எப்போதும் கேட்கும் ஒரு கேள்வி: "இந்த வாழ்க்கை நம்மிடம் என்ன கேட்கிறது?"

பள்ளத்தாக்கில் பெருகும் சின்னஞ்சிறு நதி வழியாக, இரவு மெல்ல முந்தைய இருளிலிருந்து விடியும் பொழுது காலத்தை நோக்கி நகர்ந்தது. அவன் மௌனத்தைத் தவிர்க்க முடியவில்லை. ஏற்கனவே பழைய நினைவுகளின் ஜாலம் அவனை பிழிந்து, கண்ணீர் போல மனசில் சின்னஞ்சிறு நிழல் கொண்ட ஒற்றைக் குழியாக மாறியது.

நீர்க்குழி போல இருந்த அவனுடைய எண்ணங்கள், ஒவ்வொரு தடவையும் மெல்ல நகர்ந்து நீரோட்டத்தில் கரைந்தது போல சிதறின. "சில விஷயங்கள் முழுமையாக புரியவில்லை" என்று நினைத்தான். அவன் எதுவும் முடிவாக இல்லாத மனசாட்சியை கவனித்துக்கொண்டிருந்தான்.

பகலின் ஒளியில் அழகாக விளங்கும் இந்த நீர்க்குழிகள், எப்போதும் மறைந்துவிடும், ஒழிந்துவிடும். ஆனால் அது எதற்காக வந்தது என்ற கேள்வி அவனை தொடர்ந்து துரத்தியது. ஏன் இந்த மனநிலை இப்படி ஒரு குழிக்குள் விழுந்தது என்று றஹீம் அறியவில்லை.

சூரியனின் கதிர்கள் விழுந்து நீர்க்குழி காய்ந்து போனது போல, றஹீமின் மனசு கூட வேறொரு பாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. ஏன் இத்தனை காலமாக அவன் மனசு வெறுமையிலிருந்து விடுபடமுடியாமல், கேள்விகளின் நிழலில் சிக்கியிருந்தது? அவன் வாழ்க்கை முழுவதும் ஒரு நீர்க்குழி போல, மெல்லக் கசிந்து போவதுதானா?

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கத்தின் வாசிப்பு அனுபவப் பகிர்வு! - தகவல்: நடேசன் -

விவரங்கள்
- தகவல்: நடேசன் -
நிகழ்வுகள்
10 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

'டொராண்டோ' தமிழ்ப் புத்தகக் கண்காட்சியிலிருந்த (Toronto Tamil Book Fair 2025) 'நூலகம்' சாவடி! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
நிகழ்வுகள்
10 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'டொராண்டோ'  தமிழ்ப் புத்தகக் கண்காட்சியிலிருந்த 'நூலகம்' சாவடியில் நூலகம் நிறுவனத்தின் கனடாக் கிளையில் இயங்கும், சமூக, அரசியற் செயற்பாட்டாளர் மீரா பாரதி நிற்கும் காட்சி.  எண்ணிம நூலகமான 'நூலகம்'  நிறுவனம் மிகப்பெரிய பணியினைச் செய்து வருகின்றது. நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், நினைவு மலர்கள், பல்வகைச் சிறப்பு மலர்கள், புகைப்படங்கள், காணொளிகள், பல்வகையான குறுவட்டுகள், இறுவட்டுகள் எனப் பலவற்றைச் சேகரித்து வருகின்றது. நூலகமாகவும், ஆவணக்காப்பகமாகவும் நூலகம் ஆற்றிவரும் பணி தமிழர்களைப் பொறுத்தவரையில் முக்கியமானது. 

ஏன் இவ்விதமான நிறுவனங்கள் தேவை?

ஒரு காலகட்டத்து வரலாற்று, கலை, இலக்கிய  ஆவணங்களைப் பாதுகாத்து எதிர்காலத்  தலைமுறையினருக்குக் கடத்துவதென்பது  ஓர்  இனத்தின் வரலாற்றை முறையாகப்பதிவு செய்யும் முக்கியமானதொரு செயற்பாடு. அரிய பணி.  அறிவினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் அரிய பணியினையும் இத்தகைய நிறுவனமொன்று செய்கின்றது.  பல்வகை ஆய்வுகளுக்கும் உசாத்துணைகளாக இவ்விதம் பேணப்படும் ஆவணங்கள் விளங்குகின்றன.  இனக்குழுக்களின் சமூக, தனிநபர் அடையாளங்களை இவை தலைமுறை கடந்து கடத்துகின்றன.  இவை முக்கியமான காரணங்கள்.  இதனால் தமிழர்களான எம்மைப் பொறுத்தவரையில் எம் மத்தியில் இவ்விதப் பணிகளைச்  செய்யும் நூலகம் நிறுவனத்தின் சேவை தொடர்வது அவசியமானது.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் பூங்கோதை (கலா ஶ்ரீரஞ்சன் ) மறைந்தார! ஆழ்ந்த இரங்கல்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
இலக்கியம்
09 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

எழுத்தாளர் பூங்கோதையை   முகநூல் வாயிலாகவே அறிவேன். ஆசிரியர்.  ஐக்கிய இராச்சியத்தில் வசித்து வந்தவர். என் நட்பு வட்டத்திலுள்ளவர். 'அபத்தம்' இணைய இதழில் தொடர்ச்சியாக எழுதியவர். கட்டுரைகள், சிறுகதைகள் என எழுதிக்கொண்டிருந்தவர் குழந்தைகள் இலக்கியத்திலும் தீவிரமாக இயங்கியவர்.  ஷோபா பீரிஸ் (Shobha Peries) சிங்கள மொழியில் எழுதிய குழந்தைக்கதை ஒன்றை 'ஒரு குட்டிக் குரங்கின் கதை' என்று தமிழுக்குக் கொண்டுவந்தவர்.

பதிவுகள் இணைய  இதழிலும் பூங்கோதை என்னும் பெயரில் 'நீர்கொழும்பு மான்மியம்- ஒரு சந்திப்பும் சில நினைவுகளும்!' என்னுமொரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் அவர் தன் குடும்பத்தினரின் நீர்கொழும்பு அனுபவங்களுடன் , எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் பற்றியும் நினைவு கூர்ந்திருந்தார்.

'இடுக்கண் வருங்கால் நகுக'  என்றார் வள்ளுவர். 'துன்பம் நேர்கையில் யாழ் மீட்டி இன்பம் சேர்  ' என்றார் பாரதிதாசன். இவ்விதமே வாழ்ந்தவர் எழுத்தாளர் பூங்கோதை (இயற்பெயர் - கலா ஶ்ரீரஞ்சன்)

கடந்த சில வருடங்களாகத்  தன்னைப் பாதித்திருந்த நோயுடன் சிரித்த முகத்துடன் போராடி வந்தவர். அவரது ஆரோக்கியமான , நேர்மறை ஆளுமை அவரை மீட்குமென்று முகநூல் நண்பர்கள் பலரும் எண்ணியிருந்தோம். எம் நம்பிக்கை  பொய்த்துப்போனது. ஆனால் இறுதி வரை அவர் கலங்கி நின்றதில்லை. நம்பிக்கையுடன் எதிர்நீச்சலிட்டு வந்தார். அந்த நம்பிக்கையின் , எதிர்நீச்சலின் குறியீடாக அவர் விளங்குவார். 

மேலும் படிக்க ...

இந்தியப் பயணத்தொடர்: மத்தியப் பிரதேசத்தில் உள்ள கஜுராஹோ (Khajuraho) ஆலயங்கள்! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
07 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மத்தியப் பிரதேசத்தில் நான் போனது இதுவே முதல் தடவை என்றாலும், இது முக்கிய வரலாற்றுச் சின்னங்கள் செறிந்த இடமாகத் தெரிந்தது.

மத்தியப் பிரதேசத்தின் கஜுராஹோ ஆலயங்களைச் சுற்றிப் பார்க்கும்போது எனக்குள் ஏற்பட்ட உணர்வுகளை இங்கு குறிப்பிடவேண்டும். காதலர் தினம் கொண்டாட மறுக்கப்படுவதும், முத்தக் காட்சிகள் திரைப்படத்தில் வரும் போது முணுமுணுக்கும் இக்கால இந்தியாவில் உள்ள சுதந்திரத்துடன் ஒப்பிடும்போது, 1200 ஆண்டுகள் முன்பாக கற்சிற்பிகளுக்கு இப்படியான நிர்வாண பாலியல் உறுப்புகளை செதுக்க படைப்புச் சுதந்திரம் கொடுத்த சந்தேலா (Chandelas) அரசர்கள் உன்னத புருஷர்களாகத் தெரிந்தார்கள். இந்தியாவில் மட்டுமல்ல; தற்போதைய ஐரோப்பிய நாடுகளிலும் இப்படியான சுதந்திரம் கிடைக்காது.

எனக்குப் ஏற்பட்ட அடுத்த உணர்வு—இந்த கோவில்கள் இஸ்லாமிய அரசர்களிடமிருந்து எப்படித் தப்பின என்பதே. வாசித்தபோது சில கோயில்கள் சிக்கந்தர் லோதி (Sikander Lodi, 1495) மூலம் அழிக்கப்பட்டதாகவும், பின்னர் இது சிறிய கிராமமாகக் இருந்ததால் கவனிக்கப்படாமல் அழிந்து  போயிருந்ததாகவும் கூறப்பட்டது. அந்த நிலையே இன்று இதைக் காண நமக்கு வாய்ப்பளித்துள்ளது.

மேலும் படிக்க ...

'சொல்லின் செல்வ'ரும் சொல்லிக்கொள்ளாமலே சென்று விட்டார். ஆழ்ந்த இரங்கல்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
அரசியல்
07 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கைத்  தமிழ் அரசியல் தலைவர்களில் முக்கியமான ஒருவரும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் மட்டக்களப்புப் பாராளுமன்ற உறுப்பினரும் , மட்டக்களப்பு மாநகரசபையின் முதலாவது நகர பிதாவும் , எழுத்தாளருமான திரு. செல்லையா இராசதுரை அவர்கள் தனது 98ஆவது வயதில் , தமிழகத்தில் மறைந்த செய்தியினை முகநூல் வாயிலாக அறிந்தேன். ஆழ்ந்த இரங்கல்.

தமிழரசுக் கட்சியின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவராக விளங்கியவர் இராசதுரை அவர்கள். அதன் காரணமாகவே சொல்லின் செல்வர் என்றும் அழைக்கப்பட்டவர். வசீகரம் மிக்க தோற்றமுள்ள அரசியற் தலைவர்களிலொருவர். இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட கிழக்கு மாகாண தமிழ் அரசியற் தலைவர்களில் முக்கியமானவர். தமிழர் போராட்ட அரசியற் செயற்பாடுகளுக்காகச் சிறை சென்றவர். தந்தை செல்வாவுக்குப் பின்னர் இவருக்குத்தான் தலைமைப்பொறுப்பு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைக்கவில்லை. 

மேலும் படிக்க ...

'நந்தலாலா' ஜோதிகுமார் பார்வையில் இலங்கை அரசியல் நகர்வுகள்! (பகுதி 2) - எல். ஜோதிகுமார் -

விவரங்கள்
- எல். ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
06 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



6

ரஜீவ் கொலை விடயங்கள் தொடர்பில் இந்தியா மறந்து விட்டாலும், விக்னேஸ்வரன் ஐயாவை சந்திக்க மோடி அவர்கள் மினக்கெட்டு வந்தபோது, விக்னேஸ்வரன் ஐயா நீட்டிப்பிடித்த பிரேமானந்தாஜீயின் விடுவிப்பு கோரிக்கையை மறப்பது சற்றே கடினமானது.

இப்போக்குகள் வடக்கின் நம்பகதன்மை தொடர்பான ஒரு கேள்விக்குறியை எழுப்புவது சகஜமாகின்றது–அதாவது, இவ் ஈழ அரசியல்வாதிகள், உண்மையில், தம் மக்கள் நலனை பிரதிபலிக்கின்றனரா அல்லது பல்வேறு கையூட்டல்களை பெற்று வெறும் உசுப்பேத்தும் நிகழ்ச்சி நிரலில் ஈடுபடுகின்றனரா என்பது இந்தியாவின் கேள்வியானது. இதற்கு ஏற்றாற் போல், முன்னரே குறிப்பிட்ட நேட்டோ அரூஸ் மற்றும் திபாகரன் போன்றோர் முன்வைக்கும் விடயங்கள் மக்கள் சார்பானதாக இல்லாமலும் ஊறு விளைவிப்பதாய் இருப்பதையும் இந்தியா கண்டு கொள்கின்றது.

இவ் வரப்பிரசாதங்கள் மொத்தத்தில், எமது புலம்பெயர் சமூகத்தின் ஒத்தாசையால்தான் நடந்தேறியுள்ளன – அதாவது நாம் வெறும் சந்தேக பேர்வழிகளாக மாறியுள்ளோம் என்பது நிதர்சனமாகின்றது. இப்போக்கினை, மேலும் நிரூபிப்பதாகவே, ராமநாதன் அர்ச்சுனா போன்றோர் தேர்ந்தெடுக்கப்படுவதும் இதற்கு புலம் பெயர் அரசியலின் ஆரவாரமும் உசுப்பேத்தலும் எவ்வாறு களைக்கட்ட உதவின என்பதும் குறிக்கத்தக்கது. இத்தகைய ஓர் குளறுபடியான சூழலில் தான் அர்ச்சுனா மலையகத்துக்கும் இன்று படையெடுக்க எண்ணியுள்ளார் என்ற அவரது அறிவிப்பும் வந்து சேர்கின்றது.

மேலும் படிக்க ...

செ.கணேசலிங்கம் அவர்களின் முதல் மூன்று நாவல்கள் - காலமும் கருத்தும் - பேராசிரியர் வீ.அரசு --

விவரங்கள்
- பேராசிரியர் வீ.அரசு --
இலக்கியம்
06 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[எழுத்தாளர் செ.கணேசலிங்கனின் நினைவு தினம் டிசம்பர் 4. அவர் நினைவாக  பேராசிரியர் வீ.அரசு அவர்களின்   கீற்று இணையத்தளத்தில் வெளியான இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. ]

“பத்மாவதி சரித்திரத்தின் முதற்பாகத்தைப் படித்து வந்தோம். கதாசாரத்தையும் அதிலடங்கிய விஷயங்களையும் ஆராயுங்கால் நூலாசிரியரின் கல்வித்திறம் புகழத்தக்கதென நன்கு புலப்படும். அவரது நடை வெகு தெளிவாகவும் சரளமாகவு மிருப்பினும் சிற்சில இடங்களில் ஆங்கிலேய பாஷையின் போக்கை யனுசரித்திருக்கின்றது. இலக்கண விதிக்கு மாறான சில முடிவுகளும் காண்கிறோம். கதைப்போக்கின் தன்மையைப் பார்க்குங்கால் அவர் அதன்பொருட்டு நடந்தவை களை நடந்தவாறே எழுதினாற் போலுமிருக்கிறது. நம்மவர் இடையிடையே பெண்கல்வி முதலிய விஷயங்களைப் பற்றி உபந்நியாசம் செய்யப் புகும் விதமானது நம்மனதிற்கு ஒவ்வாததாக விருக்கின்றது. படிப்போர்க்குப் புகட்டக் கருதும் பலவித நீதிகளும் அறங்களும் எள்ளுக்குள் எண்ணெய் போலச் சம்பாஷணையிலிருந்து திரட்டிக் கொள்ளும் படியாக விருத்தலேயியல்பு” (விவேக சிந்தாமணி:ஜுன்:1898)

“இதுகாலை நமது தமிழ்நாட்டில் வெளிவந்து உலாவும் நாவல்கள் எண்ணிலாதன. நாவல்கள் பல்கி வருவதைப் போல் நாவலாசிரியர்களும் ஆயிரக் கணக்காகப் பெருகி வருகின்றார்கள். நாவல்களை விரும்பிப் படிப்போரும் லக்ஷக்கணக்காக இருக் கின்றார்கள். இவர் பெண்டிர், மாணவர், அனை வரும் நாவல் வெள்ளத்தில் திளைக்க நனி விரும்பு கிறார்கள். புத்தகக் கடைகளிலும் நாவல் வெள்ளம் பெருகிக்கொண்டேயிருக்கின்றது. அவ்வெள்ளம் புகாத வீடுகள் அரிதாகவே இருக்கின்றன. ஆகவே நாவல் வெள்ளம் மக்கள் பலரைக் கொள்ளைகொண்டு வருதல் இனிது புலப்படும். இவ்வெள்ளம் இவ்வாறு பெருகி வருதன் காரணம் என்ன? கதைகளெல்லாம் பெண்மக்கள் வடிவநலன்களைப் பெரிதும் அளவு கடந்து வருணித்துக் காமக் கிளர்ச்சியை எழுப்புவனவாக இருத்தலே முதற்பெருங்காரண மாகும். இரண்டாவது காரணம் கல்விப் பெருக்க மின்மையாகும்”. (கட்டுரை: நாவல்வெள்ளம்: வாசீக பக்தன்: குமரன்: சங்கை:2: தை: 1923:24)

மேலும் படிக்க ...

பாரிஸ் மாநகரில் இலக்கிய மாலை..! பத்து நூல்களின் அறிமுக நிகழ்வு..! மூத்த எழுத்தாளர்கள் வி. ரி. இளங்கோவன் பத்மா இளங்கோவன் நூல்கள் அறிமுகம்.! - இளநிலா -

விவரங்கள்
- இளநிலா -
நிகழ்வுகள்
06 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பாரிஸ் மாநகரில் நடைபெறவுள்ள இலக்கிய மாலையில் பத்து நூல்களின் அறிமுக நிகழ்வு இடம்பெறவுள்ளது. பாரிஸ் மாநகரில் வாழும் மூத்த எழுத்தாளர்களான வி. ரி. இளங்கோவன் - பத்மா இளங்கோவன் ஆகியோரின் பத்து நூல்கள் அறிமுக நிகழ்வு - இலக்கிய மாலை 07 - 12 - 2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பாரிஸ் - லாச்சப்பலுக்கு அருகிலுள்ள 'பஜோல்" மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

'இளங்கோவன் படைப்புகள்,  ஈழத்து இலக்கியச் சிற்பிகள்,  வெயிலும் பனியும்,  போர்க்காலக் கதைகள்,  மக்கள் எழுத்தாளர் கே. டானியல்" ஆகிய வி. ரி. இளங்கோவனின் ஐந்து நூல்களும்,  'சிறுவர் தமிழ் அமுதம்,  சிறுவர் இலக்கிய நுட்பங்கள்,  சிறுவர் கதைப் பாடல்கள்,  பாலர் கதைப் பாடல்கள், கொரோனாவின் தடங்களில்.." ஆகிய பத்மா இளங்கோவனின் ஐந்து நூல்களும் அறிமுக நிகழ்வில் இடம்பெறுகின்றன.

மூத்த கவிஞர்இ மொழிபெயர்ப்பாளர் க. வாசுதேவன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில்இ ஊடகவியலாளர் இ. கந்தசாமி,  எழுத்தாளர் சு. கருணாநிதி, கலைஞர் கே. பி. லோகதாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குவர்.

கலை இலக்கியப் படைப்பாளிகளான க. முகுந்தன்இ என். கே. துரைசிங்க,  பொலிகை கோகிலா,  க. தேவதாசன்,  பிரியா லவன்,  கே. உதயகுமார், இ நிஷா பீரிஸ் ஆகியோர் நூல்கள் குறித்துக் கருத்துரை வழங்குவர். ஏற்புரைகளை நூலாசிரியர்கள் வழங்குவர். ஊடகவியலாளர் எஸ். கே. ராஜென் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவார்.

எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் சிறுகதை,  கவிதை, கட்டுரை, திறனாய்வு தமிழர் மருத்துவம் ஆதியாம் துறைகளில் இருபத்திமூன்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். பத்துக்கு மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்தும் வெளியிட்டுள்ளார்.

பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ள இவரது நூல்களின் அறிமுக நிகழ்வுகள்இ இலங்கையின் பல பகுதிகளிலும்,ஐரோப்பிய நாடுகளிலும், கனடாவிலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க ...

ஒடுக்குமுறை, பாகுபாடு, மனித உரிமை மீறல்கள் பற்றிய என் கருத்துகளும், என் கருத்துகள் பற்றிய செயற்கை நுண்ணறிவின் கருத்துகளும்... - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
அரசியல்
06 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



இலங்கையில் இருந்த காலத்தில்  எஸ்கிமோ, நீக்ரோ, செவ்விந்தியர் போன்ற சொற்பதங்களால் அவை குறிப்பிடும் இன மக்களை நாமெல்லாரும் அழைத்து வந்தோம்.  இங்கு வந்தபின்பும் ஆரம்பத்தில் அவ்விதமே அழைத்து வந்தோம்,. ஆனால் காலப்போக்கில் அப்பெயர்கள் அம்மக்களை இழிவு படுத்தும் , இனத்துவேசம் மிக்க பெயர்கள் என்பதை அறிந்து அவற்றைப் பாவிப்பதை நிறுத்தி விட்டோம்.  

இவை ஏன் அம்மக்களை இழிவு படுத்தும் சொற்பதங்கள் என்பதைப் பார்ப்போம்.

எஸ்கிமோ (Eskimo)  இந்தச்சொல்லின் உண்மையான் அர்த்தம் Algonquin மொழியில் இருந்து பெறப்பட்டது.  'பச்சை மாமிசம் சாப்பிடுபவர்கள் என்பது பெயர். இச்சொல் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவைக் குறிக்கவில்லை.  ஆர்க்டிக் இனக்குழுக்களான (Inuit, Yupik, Iñupiat போன்றவர்களை ஒரு சேர அழைக்கப்பாவிக்கப்பட்டது.  தற்போது கனடாவில் "Inuit" (இனியுட்), அலாஸ்காவில் Yupik" (யுபிக்) வ் "Iñupiat" (இனுபியாட்) போன்ற பெயர்கள் பாவிக்கப்படுகின்றன. அனைவரையும் உள்ளடக்கி  "First Nation" என்னும் சொற்பதமும் பாவிக்கப்படுகின்றது.

இது போல் செவ்விதியன் (Red Indian) என்னும் பெயர் அமெரிக்காவைக் கண்டு பிடித்த கொலம்பஸ் அதனை இந்தியா என்று தவறாக முடிவு செய்த வரலாற்றுத்தவறினால் உருவானது.  அமெரிக்காவின் ஆதிக்குடிகளைக்  (Native Americans / Indigenous Peoples)   இந்தியர்களாகக் கருதி , அவர்களின் நிறத்தையும் சேரத்துச் செவ்விந்தியர் என்றழைக்கப்பட்டனர்.  இது நிறவெறி மிக்க ஒரு சொற்பதம்.  இதனை இப்போது பாவிப்பதில்லை.  இன்று பொதுவாக Native American", "American Indian" (அமெரிக்கன் இந்தியன்), அல்லது  "Indigenous Peoples" (சுதேசிய மக்கள்)  என்றே இம்மக்கள் அழைக்கப்படுகின்றனர்.
அத்துடன்  Cherokee, Navajo, Sioux  போன்ற இனக்குழுப் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றனர்.

மேலும் படிக்க ...

பாரதியின் கல்வி சிந்தனைகள்! - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை(சுழற்சி – 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை. -

விவரங்கள்
- முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை(சுழற்சி – 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை. -
ஆய்வு
05 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


முன்னுரை

மகாகவி பாரதியார் அனைத்துத் துறைகளிலும் சொல், பொருள், வளம், கலை ஆகியவற்றைப் புதிய நோக்கில் தமது படைப்புகளில் தமிழுலக்கு அறிமுகப்படுத்தினார். தாம் வாழ்ந்த முப்பத்தொன்பது ஆண்டுகளில் (1882 - 1921) தமிழ் மொழிக்குப் புதுப்பொலிவையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தினார். இத்தகைய பரிமாணங்களோடு விளங்கிய இக்கவிஞரிடம் காணப்படுகின்ற மற்றொரு வியத்தகு ஆற்றல் வடிவமே கல்வி குறித்து அவர் கொண்டிருந்த சிந்தனைகளாகும்.

நாடு பூரண முன்னேற்றம் காணுவதற்கு அடிப்படையாது கல்வி மட்டுமே என்பதை வலியுறுத்தி அக்கல்வியை மக்கள் அனைவரும் பெறுவதற்கான கொள்கைகளையும் வழிமுறைகளையும் சிந்தனைகளின் வாயிலாக வெளிப்படுத்துகிறார்.

தாய்த்திரு நாட்டையும், தாய் மொழியையும் பெறுவதற்கான முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற தணியாத தாகம் கொண்டிருந்தவர் பாரதி. அதற்கு கல்வியே அடிப்படையானது என்பதை உணர்ந்து அக்கல்வியை மக்கள் அனைவரும் வழிமுறைகளைத் தனது சிந்தனையினின்று கவிதை வாயிலாக வெளிப்படுத்தியவர். பாரதியின் கல்வி குறித்த சிந்தனையில் புதுமை மிகுந்திருக்கிறது. அவர் எடுத்துரைத்துள்ள கல்வி தொடர்பான கருத்துக்களை ஆராய்ந்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பழந்தமிழ் இலக்கியங்களில் கல்வி

கல்வியின் சிறப்பு, பெருமை, பயன், கல்வி கற்கும் முறை இவற்றை மையப்படுத்திப் பழந்தமிழ் இலக்கியங்களில் சான்றாக, ஏராளமான செய்யுள்கள் உள்ளன. சான்றாக,

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. சினிமா: காற்றில் அசைந்தாடும் பார்லி கதிர்கள்! - வெங்கி -- (3)
  2. 'நந்தலாலா' ஜோதிகுமார் பார்வையில் இலங்கை அரசியல் நகர்வுகள்! (பகுதி 1) - ஜோதிகுமார் -
  3. கவிதை: நாளை நன்கு விடியும்! - வ.ந.கிரிதரன் -
  4. வ.ந.கிரிதரனின் குழந்தைகளுக்கான புனைகதை 'சாவித்திரியின் பெரு விருப்பம்'
  5. இலங்கை வானத்தில் உறைந்த மூச்சுகள்! - ம .ஆச்சின் -
  6. மெய்யியல், அழகியல் அடிப்படையில் எம்.ஏ.நுஃமான் கவிதைகள்! - ஈழக்கவி -
  7. பெருமழையும் பெருவெள்ளமும்! - வ.ந.கிரிதரன் -
  8. சிறுகதை; சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை! - வ.ந.கிரிதரன் -
  9. மெல்பேர்னில் ‘2025ஆம் ஆண்டின் சிறந்த தென் ஆசியர்’ விருது! - நடேசன் -
  10. 'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்லதொரு வழிகாட்டி
  11. இலங்கையில் இனவாதம் பற்றிய சிந்தனைகளும், செயற்கை நுண்ணறிவுடன் அது பற்றிய உரையாடலும்! - நந்திவர்மப்பல்லவன் -
  12. சு.தமிழ்ச்செல்வியின் படைப்புகளில் பெண்களும், சமூகமும்! - அ.சிந்தியா தேவி, முனைவர் பட்ட ஆய்வாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-3 -
  13. புகழ்பெற்ற நர்த்தகி குமாரி கமலாவும் மறைந்தார். ஆழ்ந்த இரங்கல்! - வ.ந.கி -
  14. அஞ்சலி: தமிழ்ப் பணியாளர் சிவாப்பிள்ளை சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார்..! - வி.ரி. இளங்கோவன் -
பக்கம் 4 / 121
  • முதல்
  • முந்தைய
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • அடுத்த
  • கடைசி