பயணியின் பார்வையில் (2): உலகத்தில் 'சுத்தமான' தலைவர் அமிர்! ஊடகப் பயணத்தில் நிகழ்ந்த சுவாரசியமான சம்பவம்! - முருகபூபதி -
இலங்கையில் அமிர்தலிங்கம் அவர்கள் எதிர்க்கட்சித்தலைவராக இருந்த காலப்பகுதியில், அவரது உரைகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் வழங்கின. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அப்போது ஒரு தமிழர் எதிர்க் கட்சித்தலைவராக தெரிவாகியிருந்தார். அவரது நாடாளுமன்ற உரைகளை சபாநாயகர் ஆனந்த திஸ்ஸ டீ அல்விஸின் துணைவியாரும் பார்வையாளர் கலரியில் அமர்ந்திருந்து செவிமடுத்து , அமிர் அவர்களுக்கு பாராட்டு கடிதங்களும் எழுதியிருக்கிறார்.
ஒரு தடவை வெளிவிவகார அமைச்சர் ஏ. ஸி. எஸ். ஹமீது தொடர்பாக ஏரிக்கரை இல்லம் ( Lake House ) வெளியிட்ட ஒரு செய்தி பாரதூரமான சர்ச்சைகளை உருவாக்கிவிட்டது. நாடாளுமன்றிலும் விவாதிக்கப்பட்டது. குறிப்பிட்ட பத்திரிகையின் ஆசிரியர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர். அவரை நாடாளுமன்றம் அழைத்து பகிரங்கமாக மன்னிப்பு கோர வைத்தது. அதனைக் கண்டித்து, அந்தச் சிங்கள சிரேஷ்ட ஊடகவியலாளருக்காக குரல் கொடுத்தவர் அமிர்தலிங்கம். அவர் மூவினத்தையும் சேர்ந்த ஊடகவியலாளர்களிடம் நன்மதிப்பினைப் பெற்றிருந்தவர்.










உலகில் எந்தப் பாகத்திற்குச் சென்றாலும், அஞ்சலிக் குறிப்பு எழுதும் எனது வேலைக்கு மாத்திரம் ஓய்வு கிட்டாது போலிருக்கிறது. கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல்விருது விழாவுக்கு கடந்த ஜூன் 01 ஆம் திகதி மெல்பனிலிருந்து புறப்படும்போதே எனக்கு நன்கு தெரிந்த இரண்டு அன்பர்கள் இறந்துவிட்டனர். கனடா வந்து சேர்ந்தபின்னர் மற்றும் ஒரு சகோதரி திருமதி புஸ்பா சிவபாலன் மெல்பனில் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. புஸ்பா எமது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் உறுப்பினர். கலை, இலக்கிய ஆர்வலர். எமது எழுத்தாளர் விழாக்களிலும் இலக்கிய சந்திப்புகளிலும் பங்கேற்பவர்.


















பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









