மீள்பிரசுரம்: “டேவிட் ஐயா எங்கே”
இந்தமுறை இந்தியப் பயணத்தின் போது டேவிட் ஐயாவை சந்திப்பது என தீர்மானித்திருந்தோம். எனது அரசியலும் அவர் மீதான மதிப்பும் நான் அவரை சந்திப்பதற்கான காரணமாகும். ஆனால் துணைவியாருக்கு தூரத்துச் சொந்தம். இருவரது பூர்வீகமும் கரம்பன். ஆகவே அவர் எங்கிருக்கின்றார் என்பதை அவரை முன்பு நேர்காணல் கண்ட அருள் எழிலன் மற்றும் சயந்தன் ஆகியோர் ஊடாக கேட்டு அறிந்து கொண்டோம். டேவிட் ஐயா அவர்கள் அண்ணா நகரில் இருக்கின்றார் எனவும் அங்கே எங்கிருக்கின்றார் என்ற தகவலையும் அருள் ஏழிலன் குறிப்பிட்டார். நன்றி அருள் எழிலன். குறிப்பிட்ட அந்த இடத்திற்கு பாண்டிபாஜாரிலிருந்து பயணத்தை ஆட்டோவில் ஆரம்பித்தோம். அவர் குறிப்பிட்ட இடத்தில் இருந்த தேநீர் கடை முடியிருந்தது. மீண்டும் அவருடன் தொடர்பு கொண்டபோது முன்னால் உள்ள பார்மசியில் மருந்துக் கடையில் கேட்கச் சொன்னார். அவர்களுக்கு தெரியாது என்றார்கள். மீண்டும் புதிய குறிப்பு ஒன்றைக் கூறி பாடசாலைக்கு அருகிலுள்ள விட்டிற்குள் சென்று விசாரிக்க கூறினார். அதேநேரம் வீதியில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடமும் விசாரித்தோம்… “இந்த இடத்தில் தாத்தா ஒருவர் இருக்கின்றாரா.. நீண்ட வெள்ளைத் தாடியுடன்… அவர் ஆங்கில வகுப்புகளும் எடுப்பார்” எனக் கேட்டோம்.




Ottawa, February 6, 2014 – The Honourable Jason Kenney, Minister for Multiculturalism, issued the following statement after the official launch event for Black History Month at the Canadian War Museum:


Nelson Mandela
[விடுதலைப் புலிகளின் தலைவரின் இறுதி மாவீரர் நாள் உரையிது. நவம்பர் 2008 மாவீரர் நாளையொட்டி ஆற்றிய உரையிது. அந்த வகையில் இவ்வுரைக்கு முக்கியத்துவமுண்டு. ஒரு பதிவுக்காக அவ்வுரை மீள்பிரசுரமாகின்றது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் முன்னர் பிரிந்திருந்த பல தமிழர் விடுதலை அமைப்புகள் இன்று அரசியல்ரீதியாக ஒன்றுபட்டிருக்கின்றன. அதுபோல் இதுவரை காலமும் ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக போராடிய, மடிந்த போராளிகள், அரசியல் தலைவர்கள், பல்வேறு வகையான தாக்குதல்களாலும் மடிந்த மக்கள் ,உள்/புற முரண்பாடுகளுட்பட , அனைவருமே நினைவு கூரப்பட வேண்டும். இதுவரைகாலத் தமிழர்களின் போராட்ட வரலாறு முறையாக, எந்தவிதப் பாரபட்சமுமற்று ஆய்வு செய்யப்பட வேண்டும். அதிலிருந்து பாடங்களைப் படிக்க வேண்டும். மாற்றுக் கருத்துகள் காரணமாகப் படுகொலைசெய்யப்பட்ட அனைவரும் இந்த நினைவு கூரலில் உள்ளடக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் ஒற்றுமைக்கு இது மிகவும் உதவியாகவிருக்கும். தொடர்ந்தும் இனவாதத்தைக் கிளப்பி அரசியல் செய்யும் போக்கு கைவிடப்பட வேண்டும். உண்மைகளின் அடிப்படையில் (உணர்ச்சிகளின் அடிப்படையில் அல்ல) அரசியல் செயற்பாடுகள் அமைய வேண்டும். - 

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









