டாக்டர் ப.விக்கினேஸ்வரா ஈராண்டு நினைவாக நூல் வெளியீடு !- ஐங்கரன் விக்கினேஸ்வரா -

டாக்டர் விக்கினேஸ்வராவின் ஈராண்டு நினைவாக “கலாநிதி த.கலாமணி அணிந்துரைகள்" எனும் நூல் தற்போது ஈழத்தில் வெளிவருகிறது.
சுன்னாகம் புகழ் டாக்டர் ப. விக்கினேஸ்வரா மண்பயனுறச் சேவை நல்கிய மக்கள் மருத்துவர் ஆவார். இடர்காலத்தில் அவர் நல்கிய மருத்துவப் பணிகளை யாழ்ப்பாணம் மண்ணும், மக்களும் என்றும் நினைவில் கொள்வர்.
சுன்னாகத்தில் நாற்பது ஆண்டுகள் மருத்துவ பணியாற்றிய வைத்தியர் ப. விக்கினேஸ்வரா அவர்கள் அமரராகி (22/2/22) இரு வருடமாகிறது. ஆனால் அவரிடம் சிகிச்சைபெற்ற மக்கள் இன்றும் அவரது திறமைகளையும், சேவைகளையும் புகழ்ந்து நினைவு கூருகின்றனர்.













குழந்தைகளை அடிப்பது கொடூர வன்முறைச் செயல். காலத்திற்கும் குழந்தைகளுக்கு உளவியல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. சக குழந்தை அடிவாங்குவதைக் கையறுநிலையில் பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தை யும் மனரீதியாக பாதிப்படையும் என்று பல உளவியல் ஆராய்ச்சிகள் எடுத்துரைக்கின்றன.
புதிதாய் பிறந்த வருடத்தின் ஆரம்பநாளில் பூமராங் எனும் காலாண்டு மின்னிதழ் வெளிவந்திருக்கிறது. அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வெளியீடாக வந்திருக்கும் இவ்விதழ், முதற்பார்வையிலேயே எமது கவனத்தை ஈர்த்துக் கொள்கிறது. அட்டை வடிவமைப்பு இதழை ஆவலோடு புரட்ட வைக்கிறது. 

(நான் காதல் என்றேன், அவள் டேற்ரிங் என்றாள்.


அண்மையில் நடந்த நிகழ்வுகளில் இரண்டு விடயங்கள், முக்கியமானவையாக காணப்படுகின்றன:
கடந்த 10 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை நான் வதியும் புறநகரத்திலிருந்து மெல்பன் நோக்கி பயணத்தை தொடங்கிய வேளையில், சிட்னியிலிருந்து இலக்கிய நண்பரும் வானொலி ஊடகருமான கானா. பிரபா தொலைபேசியில் தொடர்புகொண்டு, நண்பர் கலாமணி மறைந்துவிட்டார் என்ற துயரச்செய்தியை பகிர்ந்துகொண்டபோது அதிர்ந்துவிட்டேன். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 02 ஆம், 03 ஆம் திகதிகளில் எனது சில பொழுதுகள் வடமராட்சியில் அவருடன் கரைந்தது. அவர் தனது இரண்டாவது புதல்வனின் வீட்டிலிருந்து, மூத்த புதல்வன் பரணீதரனின் இல்லத்தில் நடந்த எனது 'சினிமா: பார்த்ததும் கேட்டதும்' புதிய நூலின் ( ஜீவநதி வெளியீடு ) வெளியீட்டு அரங்கிற்கும் வருகை தந்தார்.


யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சமூகத்தினருக்கு வணக்கம்,


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









