'தமிழ்ப் புனைகதைகளில் பெண்; பாத்திரப் படைப்பு'.
26.6.2020.
அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி,தமிழ்த்துறை,தமிழ் ஆய்வு மையம் மூன்று நாட்களாக இங்கு நடந்துகொண்டிருக்கும் 'தமிழில் புனைகதைகள்' என்ற கருத்தரங்கில் என்னையும் இணைத்துக் கொண்டதற்கு எனது நன்றியை,முனைவர் செ. அசோக் அவர்களுக்கும்,அத்துடன்,
திரு.கி.அபிரூபன் தாளாளர், முனைவர் ந.அருள்மொழி-இணை ஒருங்கிணைப்பாளர், முனைவர்க.சிவனேசன், தலைவர்,தமிழ்த்துறை மையம், திரு பா .இராமர், உதவிப் பேராசிரியர், கணனி அறிவியற் துறை, தொழில் நுட்ப உதவியாளர், முனைவர்.சோ.முத்தமிழ்ச் செல்வன் ஒருங்கிணைப்பாளர், அவர்களுக்கும் இந்த மூன்று நாள் நிகழ்வுகளில் அளப் பெரிய உரையாற்றிய ஆளுமைகள் அத்தனைபேருக்கும்,இந்த நிகழ்ச்சியல் கலந்து கொண்டிருக்கும், ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் எனது அன்பான காலை வணக்கம்.
புனைகதைகளில் 'பெண்பாத்திரப் படைப்பு' என்ற தலையங்கத்தில் ஆய்வு செய்ய முனையும் இலக்கிய ஆர்வமுள்ள மாணவர்கள் ஒரு மிகப் பிரமாண்டமான ஆராய்ச்சி ஒன்றைச் செய்யலாம். பெண்பாத்திரங்கள் இல்லாமல் புனைகதைகள் படைப்பது அரிது.'புனைகதைகள'; என்பவை யாரோ ஒருத்தரால் 'புனையப் பட்டிருந்தாலும்' அவை ஒட்டுமொத்தமான 'கற்பனைக் கதைகள்' அல்ல. கதை எழுதியவரின் கால கட்டத்தில் நடந்த அல்லது அவருக்குத் தெரிந்த ஒரு சம்பவத்தை அப்படியே உண்மையாகப் பதிவிடாமல் அவர் சில, கற்பனைகளையும் உள்ளடக்கி ஒரு விடயத்தை மற்றவர்களுக்குச் சொல்ல வருகிறார் என்பது எனது அபிப்பிராயம்.அந்த விடயம் பல வடிவங்களில் அங்கு புனையப் பட்டிருக்கலாம்.அந்தப் புனைகதைகள் எக்கால கட்டத்தில் யாரால் எழுதப் பட்டது,என்ன விடயத்தைச் சொல்கிறது, என்று ஆரம்பிப்பதிருந்து அது யாருக்காக எழுதப்பட்டது என்பதையும் பொறுத்து அந்தத் தலையங்கத்தின் ஆய்வைத் தொடரலாம்.
ஏனென்னறால்,ஒரு எழுத்தாளன் எப்போதும் அவனின் சிந்தனையைத் தூண்டும்; தன்னைச் சுற்றிய உலகத்தைப் பற்றியே ஆரம்பத்தில் எழுதத் தொடங்குவான்.ஆனாலும் அந்த எழுத்தாளனின் படிப்பு நிலை, வாழ்க்கைத் தரம்,சமூக அடையாளம். அரசியலுணர்வு, அத்துடன் எழுத்தானின் சமுதாயக் கண்ணோட்டங்கள் என்பன அவனது படைப்புக்கு உருவமும் உணர்வும் கொடுக்கிறது என்பது எனது கருத்து.

முன்னுரை
- அண்மையில் முகநூலில் அஞ்சலி' சஞ்சிகையின் ஆகஸ்ட் 1971 இதழில் வெளியான கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் 'ஒரு வரலாறு ஆரம்பமாகின்றது' சிறுகதை பற்றிய பதிவொன்றினையிட்டிருந்தேன். இங்கும் பதிவு செய்திருந்தேன்.அதற்கான ஜெயபாலனின் அவரது முகநூற் பக்கத்தில் வெளியான எதிர்வினையிது. - வ.ந.கி -

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் மையத் தமிழ்ப்பிரிவின் சார்பாக 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் “உலக, இந்திய மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் - என்ற பொருண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் வாசிக்கப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
கடல் ஓரத்திலே கடற்கரை மணலிலே படம் வரையும் சிறு நண்டுகளின் அற்புதமான கற்பனைப் படங்களை, கடற்கரையின் குளிர் காற்றை அனுபவிக்கச் சென்றவர் பலரும் பார்த்து மகிழ்ந்திருப்பர். அந்தப் படம் வரையும் சிறு சிறு நண்டுகள் தமது உள்ளத்து எண்ணங்களை ஓவியமாக மணலிலே அழகாக வரைகின்றன. ஆனால் சில வேளைகளில்…….!? கடல் அலைகள் பெருமூச்சுடன் கரையில் வந்து மோதி, சிறு நண்டுகளின் மாதிரிப் படங்களை மட்டும் அல்ல, அந்த நண்டுகளையுமே அடித்துச் சென்றுவிடும். இதை தமது கவித்திறனால் அன்று தமிழ் செய்தவர் அன்று வாழ்ந்த கவிஞர் (இன்று அமரர்) மஹாகவி உருத்திரமூர்த்தி. அவரின் பாடலடிகளை நான் ஏன் தற்போது நினைவுட்டுகிறேன் தெரியுமா.. ? ஆமாம்…. முன்பு, ஈழத்திரு நாட்டில் வாழ்ந்து பின்பு பிரான்ஸ் நாட்டில் குடியேறி வாழ்ந்த எனது நீண்ட கால நண்பரும் கலை ஆசனுமாகிய இரகுநாதனுக்கும் அப்பாடல் அடிகள் மிகவும் பொருத்தமாக உள்ளன.


இலியட் ஒடிஸி எனும் கிரேக்க காவியத்தில் ஹோமர் படைத்த பாத்திரம் யூலிசஸ். ஹெலன் எனும் அரச குமாரியை மீட்க பத்து ஆண்டுகள் கிரேக்கத்தில் நடை பெற்ற போர் பிரசித்தமானது. கிரேக்க மக்களின் பண்டைய வீரயுக வாழ்வோடு அது சம்பந்தமாக எழுந்த கதைகள் பின்னிப் பிணைந்தவை. பத்து ஆண்டுகள் போரிலும் பத்து ஆண்டுகள் பிரயாணத்திலும் கழித்தவன் யுலிஸஸ். ஓய்வு என்பதே அறியாதவன், சும்மா இருக்கத் தெரியாதவன். புதிய, புதிய அனுபவங்களைத் தேடுபவன். புதிய புதிய திசைகளை நோக்கிச் செல்ல விரும்புவன். தேடல் நோக்கு அவனோடு பிறந்த ஒன்று. கிழப்பருவமெய்திய யூலிசஸ் நாட்டுக்கு மீள்கிறான்.

எழுத்தாளர் த.இந்திரலிங்கம் பற்றி..


காப்பியத் தலைவியின் பெயரையே இந்நுாலுக்கு ஆசிரியர் சூட்டியுள்ளார். ஆனால் அன்றைய காலகட்டத்தில் சமூகத்தில் வெறுத்து ஒதுக்கப்பட்ட இனத்தில் பிறந்தவரை காப்பியத் தலைவியாக அமைத்தது சாத்தனாரின் சிறப்பாகும். கணிகை மகளை காப்பியத் தலைவியாக்கியதுடன் திறன் அவருடைய பெயரையே நூலுக்கு சூட்டுவது என்பது ஒரு புரட்சி. மனிதனின் வாழ்வியல் சிந்தனைகள் மணிமேகலையில் மிகுதியாக உள்ளன. அத்தகைய வாழ்வியல் சிந்தனைகளை விளக்குவதே கட்டுரையாகும்.
பல முதல்களின் முதல்வராகிய வெற்றிமணியின் ஆசிரியரும் சிவத்தமிழ் சஞ்சிகையின் ஆசிரியருமான கலாநிதி மு.க.சு.சிவகுமாரன் செய்யும் தொழிலும் செயலும் திறம்பட வேண்டுமானால், செய்பவர் திறமை திறம்பட இருக்க வேண்டியது அவசியம். கருவி அற்புதமானால், கருத்தா கருவிக்கு ஆற்றிய அர்ப்பணிப்பும் போற்றப்படவேண்டியதும் புரியப்பட வேண்டியதுமாகும். படைப்பாளியின் திறமை அறியப்பட்டாலேயே அந்தப் படைப்பின் வெற்றி புரியப்படும் வெற்றிமணியான விபரமும் புரியும். 
அவுஸ்திரேலியப் புகலிட எழுத்தாளராகிய முருகபூபதி அவர்கள், ஈழத்து இலக்கியம் மற்றும் ஊடகத்துறை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளார். பல்வேறு இலக்கிய வடிவங்களுக்கூடாக தனது இலக்கிய ஆளுமையை வெளிப்படுத்திய இவர், இருபதுக்கு மேற்பட்ட நூல்களை இலக்கிய உலகிற்கு தந்துள்ளார். முருகபூபதியின் அயராத முயற்சியினால் இலங்கையில் பாரதி என்ற ஆய்வு நூல், முகுந்தன் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இலங்கையில் பாரதி , மகாகவி பாரதி பற்றிய பல்வேறு விடயங்களை நீண்ட காலமாக தேடித்தொகுத்து ஆராய்ச்சி பூர்வமாக எழுதப்பட்டுள்ள ஆய்வு நூலாகும்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









