தற்கால சிறுகதை, புதினங்களில் காலத்தின் சுவடுகள்! - (மாலினி அரவிந்தன் – பீல்பிரதேச கல்விச்சபை, கனடா) -
- தமிழ்நாட்டில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப்பண்பாட்டு மையம் நடத்திய 11 ஆவது பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டு, ‘தற்கால இலக்கியங்களில் காலத்தின் சுவடுகள்’ என்ற பன்னாட்டு ஆய்வு நூல் - 2020 இல் இடம் பெற்ற கட்டுரை. -
சிறுகதை என்பதை மையக்கருவினைக் கொண்ட, திருப்பங்கள் உடைய அனுபவங்களை, நல்ல நடையில் சுருக்கமாக சொல்லும் உரைநடை இலக்கிய புனைவென்று எடுத்துக் கொள்ளலாம். வாசகரின் மனதில் சிறிய தாக்கத்தையாவது ஏற்படுத்தினால் அது நல்ல சிறுகதைக்கு அடையாளமாகும். புதினம் என்ற இலக்கிய வடிவத்தை எடுத்துப் பார்த்தால் உரைநடையில் அமைந்த நீண்டபுனைகதை என்று சொல்லலாம். அனேகமான புனைவுகளில் தளத்தையும், காலத்தையும் ஓரளவு அறிந்து கொள்ள முடியும்.
முன்பெல்லாம் வெளிநாட்டுக் கதைகளைத் தமிழில் மொழி மாற்றம் செய்தால்தான் அனேகமான வாசகர்களால் வாசிக்க முடியும். ஆனால் தற்போது அந்த நிலை மாறி, அதுபோன்ற தரமான கதைகளைத் தங்கள் அனுபவம் மூலம் தமிழில் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களே தருவதற்குத் தொடங்கி விட்டார்கள். இதனால் ‘புலம்பெயர் இலக்கியம்’ என்னும் இலக்கியத்தை தமிழ் உலகுக்குத் தந்தார்கள். தற்கால இலக்கியத்தில் காலத்தின் சுவடுகளை எடுத்துக் காட்டுவதற்காக, தீவிரவாசகி என்ற வகையில் இங்கே எழுத்தாளர் குரு அரவிந்தனின் சிறுகதைகள், புதினங்களில் இருந்து காலத்தின் சுவடுகளைக் காட்டும் சில சிறுகதைகளையும், புதினங்களையும் எடுத்துக் காட்ட விரும்புகின்றேன்.
தமிழ் இலக்கிய உலகிற்கு யுத்த காலச் சூழலில் எழுந்த கதைகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில் குரு அரவிந்தனின் புனைவுகள் பல பிரபல ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இந்தியா நாட்டுக்குத் தெற்கே அமைந்துள்ள இலங்கைத் தீவில் 1983 ஆம் ஆண்டு யூலை மாதம் ஏற்பட்ட இனவொழிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக ஈழத்தமிழர்கள் பலர் தங்கள் பாரம்பரிய மண்ணான வடக்குக், கிழக்குப் பிரதேசங்களை விட்டுப் பல்வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தார்கள். அப்படிப் புலம் பெயர்தவர்களில் எழுத்தாளர் குரு அரவிந்தனும் ஒருவராவார். போர்ச் சூழலில் அவர் தாய் மண்ணில் வாழ்ந்த காலத்தையும், கனடா நாட்டுக்குப் புலம்பெயர்ந்த பின், 2009 ஆண்டு மே மாதம் இலங்கையில் போர் ஓய்ந்தபின் நடந்த சில சம்பவங்களையும் தனது அனுபவங்களைக் கருப்பொருளாகக் கொண்டு புனைவுகள் மூலம் பதிவு செய்திருக்கின்றார். தமிழகத்தில் இருந்து வெளிவரும் லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகும் விகடன், கல்கி, குமுதம், கலைமகள், கணையாழி, இனிய நந்தவனம், யுகமாயினி மற்றும் இலங்கை, கனடா போன்ற நாடுகளில் இருந்து வெளிவரும் இதழ்களில் வெளிவந்த இவரது ஆக்கங்கள் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைத் தனக்கென உருவாக்கிய இவரது சிறுகதைகள், நாவல்கள் சிலவற்றையும் எடுத்துப் பார்ப்போம்.

அஞ்சலிக் குறிப்பு
புதுமைக்கவிஞர் , புதுயுகக்கவிஞர், புரட்சிக்கவிஞர், என்றெல்லாம் போற்றப்படும் நிலையில் உயர்ந்து நிற்வர்தான் பாரதியார். இவர் எட்டயபுரத்தில் பிறந்து எல்லோரையும் பார்க்கவைத்தார். வறுமையில் வாடினாலும் பெறுமதியாய் பாடிநின்றார். பொறுக்கும் இடத்தில் பொறுத்தார். பொங்கும் இடங்களில் பொங்கிப் பிரவாகித்தார். தலைகுனிந்து வாழுவதை தரக்குறைவாய் நினைத்தார். தலை நிமிர்ந்துவாழ தான் எழுதி நின்றார். காலத்தின் குரலாக அவரின் கருத்துகள் எழுந்தன. வீரமும் , மானமும், ரோஷமும் , உணர்ச்சியும் , அவரின் சொத்துக்களாய் அமைந்தன. சிறுமை கண்டு சீறினார். வறுமைகண்டு பொங்கினார். அடிமையென்னும் சொல்லை வாழ்வில் அகற்றிவிட எண்ணினார். சுதந்திரமாய் மூச்சுவிட துணிந்து பல கூறினார். பக்தியைப் பேசினார். பண்பினைப் பேசினார். புத்தியைத் தீட்டிட புகட்டினார் பலவற்றை. வையத்துள் வாழ்வாங்கு வாழுவதை விரும்பினார். தெய்வத்தை நம்பினார். நல்ல நம்பிக்கைகளுக்கு வரவேற்பளித்த பாரதி மூட நம்பிக்கைகளுக்கு சாவுமணியடிக்கவும் தவறவில்லை. திருந்திய வாழ்வும் சிறப்பான சமூகமும் அமைய வேண்டும் என்னும் பேரவா பாரதியின் உள்ளத்தில் உறைந்த காரணத்தால் அதை நோக்கிய அவரின் செயற் பாடுகளும் அவரின் சிந்தனையால் வந்த பல படைப்புகளும் அமைந்தன என்பது மனங்கொள்ளத் தக்கதாகும். 
இலக்கிய வித்தகர், கலாபூசணம், ஓய்வுநிலைக் கல்விப் பணிப்பாளர் த. துரைசிங்கம் (84) திங்கட்கிழமை மாலை (23 - 08 - 2021) கொழும்பில் காலமானார். ஈழத்து இலக்கியப் பரப்பிலும், கல்விப் புலத்திலும் நன்கு அறியப்பட்ட புலமையாளர் த. துரைசிங்கம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆறு தசாப்தங்களுக்கு மேலாக, எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டு அமைதியாகச் செயற்பட்டு வந்தவர்.
கலை, இலக்கியத்தின் பல்வகை வடிவங்களிலும் பங்களித்து வருபவரும் கவிஞரும், சமூக அரசியற் செயற்பாட்டாளருமான வ.ஐ.ச.ஜெயபாலனுடனான நேர்காணலொன்று 'நடு' இணைய இதழில் வெளியாகியுள்ளது. 'நடு; இணையை இதழின் ஆசிரியரான கோமகன், ஏப்ரில் 2019இல் நடத்திய நேர்காணலிது.

‘பிம்பங்கள் வழியே’ எனும் அமைப்பின் ஏற்பாட்டிலான, ‘ஆளுமை பற்றிய ஓர் உரையாடல்’ என்ற தொடரில், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பொதுச்செயலாளர் அமரர் பிரேம்ஜி ஞானசுந்தரம் அவர்கள் பற்றிய இன்றைய இணையவழிக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருக்கும் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்!
ஈழத்து இலக்கியப் பரப்பில் சிறுகதை எழுத்தாளர்கள் அதிகம். கவிதையென எழுதிக் குவிப்போர் ஏராளம். நாவல் எழுதுவோர் மிகக் குறைவு எனலாம். அன்றும் இன்றும் இதே நிலை தான். அன்று கிராமத்தை அடிப்படையாக வைத்து நாவல் எழுதுவோர் மிகக் குறைவாக இருந்த காலகட்டத்தில், ஒருவர் கிராமத்தைக் களமாகக்கொண்டு நாவல் எழுதினார். குரும்பசிட்டி என்னும் கிராமத்தில் பிறந்து வளர்ந்த அவர், கிராம மக்களின் வாழ்க்கையை, அவர்தம் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக நாவலை எழுதினார். 'நடமாடும் நூல்நிலையம்' எனப் போற்றப்பட்ட 'இரசிகமணி' கனக செந்திநாதன் எழுதிய 'விதியின் கை' என்ற இந்நாவல் 05 - 07 - 1953 திகதியிலிருந்து 'ஈழகேசரி'ப் பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. அக்காலத்தில் ஈழத்தில் பிரபல சிறுகதை எழுத்தாளர்களாக விளங்கிய இலங்கையர்கோன், சி. வைத்திலிங்கம், சம்பந்தன், சோ. சிவபாதசுந்தரம், அ. செ. மு., வரதர், சு. வே., அ. ந. கந்தசாமி ஆகியோரும் நாவல் எழுதவில்லை. (*
- குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய சிறுகதை, நாவல் திறனாய்வுப் போட்டி – 2021 இல் 14 நாடுகளில் இருந்து வந்த நூற்றுக்கு மேற்பட்ட திறனாய்வுக் கட்டுரைகளில் இருந்து தெரிவாகி முதலாவது பரிசு பெற்ற திறனாய்வுக்கட்டுரை. -
- 18.7.21 'மெய்நிகர்' - திருப்பூர் கனவு இலக்கியப் பேரவை நிகழ்வுக்கான பதிவு -
உலகிலே பிறக்கின்ற மனிதரெலாம் உயர்வு நிலையினை அடைந்து விடுவதுமில்லை. இலட்சியம் பற்றிச் சிந்திக்கும் நிலை பலரிடம் காணப்படுவதும் இல்லை. பிறந்தோம் வாழுகிறோம் என்னும் பாங்கில் இருப்பவர்கள்தான் பல பேர்களாக இருக்கிறார்கள். வாழும் காலத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள இயலாமல் பிரச்சினைகள் வழியில் சென்று அதனுடன் ஒத்துப்போய் இருப்பவர்களும் இருக்கிறார்கள். அதேவேளை நமக்கு ஏன் இந்தப் போராட்டம். வருகின்ற பிரச்சினைகளை புறந்தள்ளி விட்டு விட்டு தானாக ஒதுங்கி நமக்கேன் இந்தச் சிக்கல் ? ஒதுங்குவதுதான் மேலென எண்ணி இருப்பவர்களும் இருக்கிறார்கள். என்னதான் பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு அவற்றுக்குத் தீர்வு கண்டு அந்தப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினைக் காணும் முயற்சியில் ஈடுபட்டு முற்போக்காளர்களாக சமூகச் சிந்தனையாளர்களாக இருப்பவர்களும் இருக்கிறார்கள்.
- எழுத்தாளர் – ஊடகவியலாளர் - சமூகச்செயற்பாட்டாளர் முருகபூபதிக்கு ஜுலை 13 இல் அகவை எழுபது! அதனையொட்டி வெளியாகும் கட்டுரையிது. முருகபூபதி அவர்களுக்குப் பதிவுகள் இணைய இதழும், வாசகர்களும் தம் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றார்கள். பதிவுகள் இணைய இதழுக்குத் தொடர்ச்சியாகப் பல்லாண்டுகளாகப் பங்களித்து வரும் அவருக்கு இத்தருணத்தில் நன்றியினையும் பதிவுகள் தெரிவித்துக்கொள்கின்றது. - பதிவுகள்.காம் -
யாழ்ப்பாணம் பற்றி எத்தனையோ கவிஞர்கள் கவிதைகள் பல இயற்றியிருக்கின்றார்கள். ஆனால் கவிஞர் மஹாகவியின் 'யாழ்ப்பாணம்' பற்றிய வரிகளைப்போல் இதுவரை வேறெவரும் எழுதியதாக எனக்கு நினைவில்லை. அவ்வரிகளைக் கீழே தருகின்றேன். இவ்வரிகள் அவரது புகழ் பெற்ற காப்பியமான 'கண்மணியாள் காதை'யில் இடம் பெற்றுள்ளன.
எழுத்தாளர் முருகபூபதியின் பார்வையில் : "சூரியகுமாரி பஞ்சநாதன் யாழ். பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் சிவத்தம்பி, நுஃமான் , சித்திரலேகாவின் மாணவி. அத்துடன் கவிஞர் சிவரமணியின் தோழி. சூரியகுமாரி கிழக்கு பல்கலைக்கழகத்தில் துணை விரிவுரையாளராகவும் சிறிதுகாலம் பணியாற்றியவர். பின்னர் கொழும்பில் வீரகேசரியில் துணை ஆசிரியராக பணியாற்றினார். தற்போது துபாயில் பணியாற்றுகிறார். அங்கு சென்றபின்னர், எழுதுவதும் குறைந்துவிட்டது. சிறந்த ஆற்றல் மிக்க விமர்சகர்."
‘உங்கள் ஈரல் பல காலம் ஓவர்டைம் செய்த ஈரல்’என்று எஸ்.பொ. மரணிப்பதற்கு சில கிழமைகள் முன்பு அவர் ‘ஈரலில் பிரச்சினை’என்றபோது கூறினேன்.
அறுபதுகளின் முற்பகுதி..
கி.ராஜநாராயணனின் ‘கோபல்லகிராமம் ‘ நாவலின் முடிவை நினைவிருக்கிறதா ? கோபல்ல கிராமத்துக்கு மேல் வெள்ளையர் ஆதிக்கம் உருவாகும் காலம். அவர்களை எப்படி எதிர்கொள்வது என்று வயது முதிர்ந்து பழுத்து உதிரும் நிலையில் இருக்கும் , இரு நூற்றாண்டுகளைக் கண்ட, தொட்டவ்வாவிடம் கேட்கிறார்கள். வெள்ளைக்காரன் பெண்களை பலாத்காரம் செய்கிறானா, கொள்ளையடிக்கிறானா என்று அவள் கேட்கிறாள். இல்லை என்று சொல்கிறார்கள்.அப்படியானால் அவர்களை நாம் வரவேற்போம், அவர்களுடன் சேர்ந்துகொள்வோம் என்று அவள் பதில் சொல்கிறாள்.
இலங்கையின் தென்பகுதியில் கொக்கலை என்ற சிங்களக் கிராமத்தில் 1890 ஆம் ஆண்டு பிறந்த மார்ட்டின் விக்கிரமசிங்கா, சிங்கள இலக்கிய உலகில் புகழ்பெற்ற படைப்பாளி. அவர் இலக்கியத்தின் அனைத்து துறைகளிலும் 90 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருப்பவர். அவற்றில் குறிப்பிடத்தகுந்த படைப்புகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மாத்திரமன்றி ருஷ்ய மொழியிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் அவரது நாவல்கள் சில திரைப்படங்களாகியுள்ளன. 1914 ஆம் ஆண்டில் தனது முதலாவது நாவலாக லீலா என்ற புதினத்தை வெளியிட்டிருக்கும் மார்ட்டின் விக்கிரமசிங்கா 1976 ஆம் ஆண்டு தமது 86 ஆவது வயதில் மறைந்தார். அன்னாரின் நினைவாக இலங்கையில் மல்லிகை இதழும் சிறப்பு மலர் வெளியிட்டுள்ளது.
மு.தளையசிங்கத்தின் 'தியாக' மரணம் பற்றி இப்போது கேள்வி எழுந்துள்ளது. சு.வில்வரத்தினம் மு.த.பற்றிய போலீஸ் தாக்குதலைப்பற்றிப் பேசினால் உணர்ச்சியின் எல்லைக்கே போய்விடுவார் என்பதெல்லாம் அவர் மு.த.பற்றி கொண்டிருந்த உணர்வுபூர்வமான ஈடுபாட்டைக் குறிப்பதாகும். அவர் புங்குடுதீவில் அஹிம்சை வழி நின்று போராடிய நிகழ்வு வணக்கத்திற்குரியது. ஆனால், அவருடைய மரணம் குறித்து கேள்வி எழுந்ததும் சென்டிமென்டல் கூச்சல் போடவேண்டியதில்லை. புத்தர்பிரான் மறைவு குறித்தே அவர் food poisoning இல் இறந்தாரா, அவர் தானம் பெற்று உண்ட உணவு பற்றி இன்று ஆய்வுகள் நடக்கின்றன.புத்தர் இலங்கை வந்தது எப்படி என்றால், பவுத்த பிக்குகள் உங்களை அறைவார்கள். அக்கேள்வியை எழுப்பினாலே அவர்கள் உணர்ச்சியின் எல்லைக்கே சென்று விடுவார்கள். உணர்ச்சியின் எல்லைக்கு போவது ரொம்ப லேசு. அது புத்தி செயல்படும் நேரமில்லை. Anthony Burns என்ற கறுப்பின அடிமையானவர் தப்பிச்சென்று , பின் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் வைக்கப்பட்ட நிலையில் அவரைச் சிறையிலிருந்து மீட்க அடிமை முறையினை எதிர்த்தவர்கள் முயன்றபோது, அவருக்குக் காவலில் இருந்த James Batchhelder சுட்டுக்கொல்லப்பட்டபோது, அவரின் autopsy மரணவிசாரணை அறிக்கை பற்றி இன்றும் பேசப்படுகிறது. இந்நிகழ்ச்சி நடந்தது 1854 ஆம் ஆண்டு.. இன்றைக்கு 167 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம். இந்த மருத்துவச் சான்றிதழ் முக்கியமானதுதான். பாரதியார் யானை தாக்கி மரணமுற்ற நிகழ்ச்சி பற்றி மு.புஷ்பராஜன் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.அந்த விளக்கத்திற்கு புஷ்பராஜனிடம் தான் மருத்துவச் சான்றிதழ் கேட்கவேண்டும். விஷயம் தெரியாதவன் கேள்வி கேட்டால், அவனிடம் போய் மரணமடைந்தவர் பற்றி நீ ஆதாரம் தா என்று கேட்பது எந்த ஊர் நியாயம் என்று தெரியவில்லை. 
பதிவுகள் இணைய இதழ் மற்றும் முகநூலில் தொடரும் எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய விவாதங்களில் ,தன் கருத்துகளை இங்கு பகிர்ந்துகொள்கின்றார் இலண்டனில் வசிக்கும் சமூக, அரசியற் செயற்பாட்டாளரான ராகவன்.
- தற்போது முகநூலில், பதிவுகளில் இடம் பெறும் எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய விவாதங்களில் இடம் பெறும் கருத்துகளையிட்டு , எழுத்தாளர் நந்தினி சேவியர் தனது கருத்துகளை அனுப்பி வைத்துள்ளார். அவற்றையும் இங்கு பகிர்கின்றோம். - பதிவுகள் -

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









