" புலம்பெயர் எழுத்தாளர்களது எதிர்காலத் தலைமுறைகள் தமிழில் இலக்கியம் படைக்கப்போவதில்லை"
- அவுஸ்திரேலியா, மெல்பனில் நடந்த 17 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவில் இலங்கை ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் " ஈழத்து இலக்கியத்தின் இன்றைய நிலை" என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையின் முழுவடிவம். 'பதிவுகள்' இணைய இதழுககு அனுப்பியவர் எழுத்தாளர் முருகபூபதி-
ஈழத்தில் இடம்பெற்ற போர்காரணமாக, ஈழத்து இலக்கியத்தின் இயங்குநிலை இருவேறு தளங்களில் இயங்கிவருவதை அவதானிக்க முடிகிறது. ஒன்று, ஈழத்தின் தேசிய புவியியல் மற்றும் வாழ்வியல் அமைவுகளுக்கு ஏற்ப படைக்கப்படும் இலக்கியம். இது ஈழத்தின் உள்ளே வாழ்ந்து கொண்டிருக்கும் இலக்கியவாதிகளால் படைக்கப்படுவது. மற்றது, போர்காரணமாக ஈழத்தில் இருப்பது பாதுகாப்பில்லை என்று அஞ்சி பல்வேறு நாடுகளுக்கும் சென்ற ஈழத்தவர்கள் படைக்கும் இலக்கியம். இது புலம்பெயர் இலக்கியம் என அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு ஈழத்து இலக்கிய இயங்குதளங்கள் பற்றியும் இவற்றின் இன்றைய நிலை பற்றியும் விளக்குவதே இந்த உரையின் நோக்கமாகும். முதலில் புலம்பெயர் இலக்கியத்தின் இன்றைய நிலைபற்றிக் கூறுவது இந்த உரையின் ஒட்டுமொத்தமான உட்பொருளை விளங்கிக் கொள்வதற்கு ஏதுவாக இருக்கும் என நம்புகிறேன்.
புலம்பெயர் இலக்கியமானது ஈழத்து இலக்கியத்தின் நீட்சி எனக்கொள்ளப்படுகிறது. அதாவது ஈழத்து இலக்கியம் ஈழத்து இலக்கியமாக மட்டுமில்லாமல் புலம்பெயர் இலக்கியமாகவும் உள்ளது. இது ஈழத்தமிழர்கள் படைக்கும் இலக்கியமாக இருக்கிறதேயொழிய இந்தியத் தமிழர்களின் இலக்கியமாக இருப்பதில்லை. ஆரம்பகாலத்தில் புலம்பெயர் எழுத்தாளர்கள் தமது நாட்டினைப்பிரிந்த ஏக்கத்தினையும் சென்றடைந்த நாடுகளில் தமக்கு ஏற்பட்ட துன்ப அனுபவங்களையும் பதிவு செய்த இலக்கியமாக புலம்பெயர் இலக்கியம் இருந்தது. புலம்பெயர் இலக்கியம் என்ற அடையாளப்படுத்தல் உருவான காலப்பகுதியில் இருந்த சூழல் இன்று இல்லை. பலநாடுகளிலும் புகலடைந்தவர்கள் அங்கு காலூன்றி நிலைத்துவிட்டார்கள். இவர்களுக்கு அறிவு விருத்தி, அனுபவ விசாலம், தொழில் நுட்பத்தோர்ச்சி, பொருளாதார அபிவிருத்தி, கலாசாரப்புரிந்துணர்வு முதலியன ஏற்பட்டுள்ளன. இவற்றிற்கேற்ப படைப்புகளின் உள்ளடக்க அம்சங்கள் மாற்றம் பெறத் தொடங்கிவிட்டன. ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் பலர் இன்று தமிழ்ப் படைப்புலகில் முன்னணி வகிக்கிறார்கள். இவர்கள் படைக்கும் இலக்கியங்களுக்கு தமிழ்மக்களிடையே உலகளாவிய ரீதியில் மதிப்பு இருக்கிறது. தமிழகப் பத்திரிகைகள் இந்தப் புலம்பெயர்ந்தோர் இலக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிக்கின்றன.
நடேசன், ஆசி கந்தராஜா, கே. எஸ். சுதாகர், முருகபூபதி, பார்த்திபன், ஷோபாசக்தி, அ. முத்துலிங்கம், தேவகாந்தன், இ. தியாகலிங்கம், கருணாகரமூர்த்தி, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், விமல் குழந்தைவேல், வி.ஜீவகுமாரன், மாத்தளை சோமு, அகில், குரு அரவிந்தன், வ.ந.கிரிதரன், இரா உதயணன், ஸ்ரீரஞ்சினி , இப்படியாக ஒரு நீண்ட பட்டியலே தயாரிக்கலாம். ஈழத்தவர்களாகிய நாம் இந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களையிட்டு பெருமை அடைகிறோம். இவை எம்மவர்களின் எழுத்துக்கள் எனக் கொண்டாடுகிறோம்.

சுஜாதா (மே 3, 1935 – பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார்.
எழுத்தாளர் மேமன்கவியையும் இலங்கைத்தமிழ் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க முடியாது. இத்தனைக்கும் இவரது தாய்மொழி தமிழ் அல்ல. தமிழ்மொழி தாய் மொழி இல்லாதபோதும் , தமிழ் மொழிக்குத் தன் எழுத்தால் வளம் சேர்த்தவர், சேர்ப்பவர். எழுத்தாளர் மேமன்கவி. இவரது மணிவிழா எதிர்வரும் மே 6 அன்று கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெறவுள்ளது. அதனையொட்டித் தமிழ் விக்கிபீடியாவில் இவரைப்பற்றிய தகவல்களை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். எழுத்தாளர் மேமன்கவி இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க வரலாற்றை இவரைத்தவிர்த்துக் கூற முடியாது என்னுமளவுக்கு அச்சங்கச்செயற்பாடுகளில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டவர். எழுத்தாளர் மேமன்க்வி அவர்களின் மணிவிழா சிறப்புய் அமையவும், தொடர்ந்தும் இவரது இலக்கியச்சேவை சிறக்கவும் வாழ்த்துகிறோம்.







குடிவரவாளன் கனடிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனுக்குப் புனைகதையைப்பொறுத்தவரையில் மிகப்பெரிய பாய்ச்சல். இந்நூலானது அந்நிய நாடொன்றில் எல்லா வகையான முயற்சிகளும் தோல்வியுற்ற நிலையில் , இருப்புக்கான இன்னல்களை எதிர்கொள்ளும் ஒரு மனிதனைப்பற்றிக்கூறுவதால் மிகவும் கவனத்துடனும் கருத்தூன்றியும் வாசிக்க வேண்டிய ஒன்று, இக்கதையானது ஒவ்வொருவரினதும் இதயத்தையும் எழுச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. இக்கதையின் நாயகனான இளங்கோ என்னும் மனிதனின் தப்பிப்பிழைக்கும் போராட்டத்தை அதிகமாக இப்படைப்பு வலியுறுத்தியபோதிலும், தற்போதும் அனைத்துலகத்தையும் சீற்றமடையைச்செய்துகொண்டிருக்கும், மிகவும் கொடிய ,ஈவிரக்கமற்ற ஶ்ரீலங்காவின் இனப்படுகொலையினைத்தாங்கிநிற்கும் பலமான வாக்குமூலமாகவும் விளங்குகின்றது. கதாசிரியர் வ.ந.கிரிதரன் தன் சொந்த அனுபவங்கள் மூலம் எவ்விதம் தமிழ் மக்கள் சிங்களக்காடையர்களின் கொடுமைகளால் பாதிக்கப்பட்டார்கள் என்பதை இந்நூலில் வெளிப்படுத்தியிருக்கின்றார். இலங்கையில் நடைபெற்ற 1983 ஜூலைக் இனக்கலவரத்தில் தம் உயிர்களை, உடமைகளை, நாட்டை மற்றும் மானுட அடையாளத்தைக்கூட இழந்த மக்களுக்கான தனித்துவம் மிக்க அஞ்சலியாகவும் இந்நூல் இருக்கின்றது. நாவலின் ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றில் , கதாசிரியர் , கலவரத்தினுள் அகப்பட்ட இளங்கோ என்னும் இளைஞனின் நிலையினை உயிரோட்டத்துடன் விபரிக்கின்றார். தன் சொந்த மண்ணில் இனத்துவேசிகளால் சிக்கவைக்கப்பட்டுள்ளதாக உணரும் இளங்கோ அந்தப்பூதங்களிலிருந்து தன்னால் முடிந்த அளவுக்குத்தப்புவதற்கு முயற்சி செய்கின்றான். இப்படைப்பானது கலவரத்தைப்பற்றிய , இளங்கோ என்னும் மனிதனின் பார்வையில் , நெஞ்சினை வருத்தும் வகையிலான ஆசிரியரின் விபரிப்பாகும்.
“தீவகம் தொட்டுத் துறைபனிச் சாரலும்
ஆயிரத்தித் தொழாயிரத்தித் தொண்ணூறுகளில் மல்லிகைப் பந்தல் வெளியீடாகக் கவிஞர் தில்லைச்சிவன் 'நான்’ என்றொரு கையடக்கப் புத்தகத்தை வெளியிடுகிறார். அந்தப் புத்தகம் என்னிடம் கனடாவில் இருக்கிறது. வேலணை, வங்களாவடிச் சந்தியை மையமாக வைத்து, ஒரு மூன்றுமைற் கற்கள் விட்டத்தில் ஒரு ஆரை கீறினால், அதற்குள் வரலாறாக இருக்கும் ஐம்பது புலவர்கள் என்ற பதிவைக் கொண்ட 'வேலணைப் புலவர்கள் வரலாறு" தான் அந்த நூல். அந்நூல் வெளிவந்த உடனேயே விற்றுத் தீர்ந்தது என்ற தகவலையும், கவிஞர் தில்லைச்சிவன் எனக்குத் தந்தார்.
(அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கமும் கன்பரா கலை இலக்கிய வட்டமுமATLAS Function04் இணைந்து 04-06-2016 அன்று நடத்திய விழாவில் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரனது கெளரவிப்பு நிகழ்வின்போது ஆற்றிய உரை)
தமிழ்ச் சிறுகதை என்னும் இலக்கியம் தோன்றி ஒரு நூற்றாண்டு கடந்து விட்டது. செய்யுள் வடிவாக இருந்த தமிழ் இலக்கியம் மேலைத் தேயத்தவர் வருகையால் உரைநடை இலக்கியம் என்ற புதிய வடிவத்தையும் பெற்றுக் கொண்டது. அந்த வடிவம் இன்று மக்களிடையே செல்வாக்குப் பெற்றுள்ளது. செய்யுள் இலக்கியம் படிப்பதற்குக் கடினமானது என்ற எண்ணமும் ஏற்பட்டுள்ளது. அதனால் சிறுகதை இன்று தமிழ் வாசகர்களிடையே வாசிப்புப் பழக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஊடகங்களும் பேருதவியாக உள்ளன. நாளேடுகள், பருவ இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி என்பன சிறுகதை என்னும் இலக்கிய வடிவத்தை மக்களுக்கு விரைவாக அறிமுகம் செய்தன. பல சிறுகதை ஆக்கங்கள் உருவாகின. அவற்றை எழுதிய எழுத்தாளர்கள் தொகையும் பல்கிப் பெருகியது.
[எழுத்தாளர் ஆ.சி.கந்தராஜா 'ஆசிகந்தராஜாவின் முற்றம்' என்னும் தனது வலைப்பதிவில் பகிர்ந்துகொண்டிருந்த இக்கட்டுரையினைப் 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம் ஒரு பதிவுக்காக. - பதிவுகள் -]
- 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் அறிஞர் அ.ந.கந்தசாமி பற்றிய அந்தனி ஜீவாவின் இக்கட்டுரைத் தொடர் ஈழத்தில் தினகரன் வாரமஞ்சரியில் 12-02-1984 அன்றிலிருந்து தொடராக வெளிவந்த கட்டுரைத் தொடராகும். 'பதிவுகள்' இணைய இதழிலும் மே 2003இலிருந்து அக்டோபர் 2003 வரை தொடராக மீள்பிரசுரம் செய்யப்பட்டது. தற்போது அ.ந.க.வின் நினைவு தினத்தினை ஒட்டி மீள்பிரசுரமாகின்றது. பெப்ருவரி 14, 1968 அவர் அமரரான நாள். - பதிவுகள் -
“பொதுசன நூலகங்களில் இருக்கின்ற கனமான புத்தகங்கள் எனக்கு வாழ்வின் பல மோசமான உண்மைகளை கற்று தந்திருக்கின்றன” – இது நாம் அதிகம் அறிந்திராத தனது இளவயதில் மரணித்த ஈழத்து எழுத்தாளர் முனியப்பதாசன் ஒரு தடவை கூறிய வாசகம். இதனை வாசித்ததிலிருந்து கனமான தடித்த புத்தகங்களை காணும்போதெல்லாம் இந்த வாசகம் மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஆயினும் அவையனைத்துமே வாழ்வின் மோசமான உண்மைகளைக் கற்று தருபனவாக இல்லாதிருந்த போதிலும் விதிவிலக்காக ஒரு சில புத்தகங்கள் சில வேளைகளில் அமைந்ததுண்டு. அவற்றில் அண்மையில் வெளிவந்த தேவகாந்தனின் ‘கனவுச்சிறை’ எனும் மகா நாவலைக்குறிப்பிடலாம். அது கடந்த பல தசாப்த காலமாக நீடித்த ஈழப்போரின் பின்னணியில் மறைந்திருந்த பல மோசமான உண்மைகளையும் வரலாற்றையும் விபரித்துக் கூறிச்சென்றது. இப்போது சயந்தனின் ‘ஆதிரை’ எனும் 664 பக்ககங்கள் அடங்கிய கனமான தடித்த நாவலொன்று எமது பார்வைக்கு கிட்டியுள்ளது. இது வாழ்வு குறித்தும் வரலாறு குறித்தும் எத்தகைய உண்மைகளை வெளிக்கொணரப் போகின்றது என்ற ஆவலுடனேயே இந்நூலினில் நாம் உள் நுழைகிறோம்.

இலங்கையில் இலக்கியம் பேசி எழுதி வாழ்ந்த ஒருவரை அந்நியதேசத்தில் கொண்டு சென்றுவிட்டால், அது கண்ணைக்கட்டி காட்டில் விட்டதற்கு சமம் என்று சொல்வார்கள். இலங்கையில் அவ்வாறு இதழ்களிலும் வானொலியிலும் தனது பெயரை ஆழமாகப்பதித்திருந்த அருண். விஜயராணி கணவருடன் மத்திய கிழக்கு, இங்கிலாந்து என்று பயணித்து இறுதியில் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபொழுது இங்கும் கண்ணைக்கட்டிய வாழ்க்கைதானோ...? என யோசித்திருப்பார்.
- கடந்த வருடக் (2015) கடைசியில் ரொறன்ரோவில் நடைபெற்ற திரு. என்.கே. ரகுநாதன் அவர்களது ‘ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி’ நூலறிமுக நிகழ்வில் வழங்கிய உரையின் எழுத்துருவம். -
எமது ஊரில் சவரத்தொழில் செய்து வாழ்ந்துவந்த குடும்பம் ஒன்றின் கதையை, எழுத்தாளர் தெணியான் அவர்கள் ‘குடிமைகள்’ என்ற பெயரில் ஒரு நாவலாக எழுதியிருந்தார். அதற்கான அறிமுக நிகழ்வு ஒன்றினை, கடந்த வருடம் அவரது நண்பர்கள் கொழும்பில் நடத்தியிருந்தனர். அதில் கலந்துகொண்ட கொழும்புவாழ் கனவான்கள் சிலர், ”சாதியம் செத்துப்போன இன்றைய நிலையிலும், இது போன்ற படைப்புக்களுக்கான அவசியந்தானென்ன?” எனக் கேட்டு, ’அரியண்டப்’ பட்டிருந்தனர். இதே கேள்வியை திரு. என்.கே. ரகுநாதன் அவர்களது இந்த நூல் குறித்து, ஒருசில தமிழ்க் கனடியக் கனவான்கள், கல்விமான்கள் கேட்டுக் கறுவிக்கொண்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!
தமிழர்களின் வாசிப்பனுவத்தில் வானதி பதிப்பகத்துக்கு முக்கியமானதோரிடமுண்டு. இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் , மிகவும் அழகான முறையில் , நேர்த்தியாக வெளிவரும் வானதியின் நூல்கள் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டவை. வாண்டுமாமாவின் சிறுவர் படைப்புகள் , பிலோ இருதயநாத்தின் ஆதி வாசிகளுடனான பயண அனுபவங்கள், ராஜாஜியின் வியாசர் விருந்து , சக்கரவர்த்தித்திருமகன் போன்ற ஆத்மீகப்படைப்புகள் எனத்தொடங்கி சாண்டில்யன், கல்கி, அகிலன், ஜெகசிற்பியன் போன்றோர் படைப்புகள் வரையில் அழகான அட்டைப்படங்களுடன் பல்வகை நூல்களைத் தனது வானதி பதிப்பக வெளியீடுகளாக, பல வருடங்களாகத்தந்தவர் 'வானதி' திருநாவுக்கரசு அவர்கள். இப்பதிகத்தின் நூல்களைப்பொறுத்தவரையில் அவை பெரும்பாலும் வாசகர்களால் அதிகம் விரும்பப்படும் வெகுசனப்படைப்புகளாகவேயிருக்கும். இவர் தனது வாழ்வில் சந்தித்தவர்களைப்பற்றிய தனது பதிப்பகத்துறை அனுபவங்களை ஒரு நூலாக எழுதி வெளியிட்டிருக்கின்றார்.
(இக் கட்டுரை என் அண்மையில் மறைந்த மனைவியார் வைத்தியை சீதாதேவியுடன் செய்த ஒரு கூட்டு இலக்கிய முயற்சியே. பாரதியார், பெண்ணுரிமை எனும் விடயத்தில் என்னவெல்லாம் எழுதியுள்ளார் என ஒரு வாரமாகக் கூடி ஆராய்ந்து, ஆணுரிமையையும் விட்டுக் கொடுக்காமல் தர்க்கித்தே முடிவுகளை எடுத்தோம். -- கூட்டாசிரியர் கோ-ம.)
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது ( இயல் விருது ) இம்முறை தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் திரு இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17வது இயல் விருது ஆகும்.
ஆங்கில ஆண்டின் நிறைவு மாதமாக விளங்கக்கூடிய டிசம்பர் மாதத்திற்கு நிறைய சிறப்புகள் காணக்கிடைக்கின்றன.அவற்றில் மிக சிறப்பான ஒன்றாக அனைவராலும் கருதப்பெறுவது, யேசு கிறிஸ்துவின் பிறப்பு. இந்த மாதத்தில்தான் பாரதியாரும் பிறந்தார். அவர், தன்னைச் சக்திதாசனாகக் கருதிக் கொண்ட போதிலும் அவர், ஒருபோதும் தன்னைப் பிற மத துவேசியாகக் காட்டி வாழாத மகாகவியாகவே வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துக் காட்டியுள்ளார். சமயச் சார்பின்றி ஒரு சமய நல்லிணக்கவாதியாக விளங்கியுள்ளார். அதை அவரின் பல்வேறு பாடல்கள் மெய்ப்பிக்கின்றன.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









