தேவகாந்தனின் கனவுச் சிறை!

[எழுத்தாளர் தேவகாந்தனின் 'கனவுச்சிறை' நாவல் ஜனவரி 3 , 2015 அன்று தமிழகத்தில் காலச்சுவடு பதிப்ப வெளியீடாக வெளிவரவிருக்கின்றது. நீண்ட நாள்களாக அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நாவலான 'க்னவுச்சிறை' நூலுருப்பெற்று வெளிவருவது மகிழ்ச்சியளிப்பது. வாழ்த்துகிறோம். அதனையொட்டி 'கனவுச்சிறை' நாவல் பற்றி வெளியான எழுத்தாளர்கள், திறனாய்வாளர்கள் சிலரின் கருத்துகள் சில இங்கு பதிவாகின்றன. - பதிவுகள்-]
முனைவர் நா.சுப்பிரமணியன்:
நாவலிலக்கியம் என்பது ஒரு சமூகத்தின் இயங்குநிறையின் வரலாற்று வடிவம் ஆகும். அதில் கதை இருக்கும். ஆனால் கதை கூறுவது தான் அதன் பிரதான நோக்கம் அல்ல. சமூகத்தின் அசைவியக்கத்தின் பன்முகப் பரிமாணங்களையும் இனங்காட்டும் வகையில் குறிப்பிட்ட ஒரு காலகட்ட வரலாற்றுக் காட்சியைத் துல்லியமாக எழுத்தில் வடிப்பதே நாவலாசிரியனொருவனின் முதன்மை நோக்கம் ஆகும். இந்த நோக்கினூடன செயற்பாங்கின் ஊடாக ஒரு கதை முளை கொண்டு வளர்ந்து செல்லும். இக்கதை குறித்த ஒரு சில மாந்தரை மையப் படுத்தியதாகவும் அமையலாம் அல்லது சமூகத்தின் பன்முக உணர்வுத்தளங்களையும் இனங்காட்டும் வகையில் பல்வேறு மாந்தர்களின் அநுபவ நிலைகளையும் பதிவு செய்யும் வகையில் விரிந்து பல்வேறு கிளைப்பட்டு வளர்ந்தும் செல்லலாம். இவ்வாறு விரிந்தும் வளர்ந்தும் செல்லும் கதையம்சங்களினூடாக ஈழத்துத் தமிழர் சமூகத்தின் ஒரு காலகட்ட - கடந்த ஏறத்தாழ கால் நூற்றாண்டுக் காலகட்ட - வரலாற்றுக் காட்சியை நமது தரிசனத்துக்கு இட்டு வரும் செயற்பாங்காக அமைந்த முக்கிய படைபாக்கம் தேவகாந்தன் அவர்களின் கனவுச்சிறை என்ற இந்த மகாநாவல்.

ஓட்டோடு ஒட்டிஉறவாட மனமில்லாமல் ஓட்டைவிட்டு ஒதுங்கி நிற்கும் புளியம்பழம் போல் வாழ்க்கையை ஒட்டியும் ஒட்டாமலும் முன்னிறுத்திப் பார்க்கின்றன ந.பிச்சமூர்த்தியின் இன்சுவைக் கவிதைகள். தொலைந்ததைத் தேடும்போதுதான், தொலைத்தும் தேடாத பலவும் கிடைப்பதைப் போல் ந.பிச்சமூர்த்தியின் கவிதைகளுக்குள் கவித்துவம்,மனிதம், நம்பிக்கை ஆகியவற்றைத் தேடும்போது நாம் தேடினாலும் கிடைக்காத பல பொக்கிஷங்கள் காணக் கிடைக்கின்றன. காணாமல்போனவனைத் தேடிப்போனவனும் காணாமல்போன கதையாய் ந.பிச்சமூர்த்தியைப் படிக்கும் வாசகன் அவர் கவிதைவெளிக்குள் காணாமல் போகிறான்.அறிமுகமாகாத இடத்திற்குள் நுழைந்துவிட்ட ஒருவன் அந்த இடத்தைவிட்டகல அவசரமாய் நுழைவாயிலைத் தேடித் தவிப்போடும் தயக்கத்தோடும் நகர்கிற உணர்வை ந.பிச்சமூர்த்தியின் கவிதைகள் ஏற்படுத்துகின்றன.மகாகவி பாரதியின் வசனகவிதை வடிவமுயற்சிகளும், வால்ட்விட்மனின் ‘புல்லின் இதழ்களும்’ ந.பிச்சமூர்த்தியின் புதுமைமுயற்சிகளுக்குக் காரணமாக அமைந்தன. யாப்பின் அழகில் இலயித்துக் கவிதைகள் படைத்த ந.பிச்சமூர்த்தி, வசனகவிதைகள் படைத்தபோதும் அவற்றையும் ஓர் வடிவஒழுங்கோடே படைத்தார்.இருள்மண்டிக்கிடந்த பரந்த வெளியில் திடீரெனக் குறுக்கே பாய்ந்து பரவசப்படுத்தும் மின்மினிப் பூச்சியாய் சிலருக்கு ந.பி.தெரிந்தார்.இடியோடு இணைந்து வந்து வானத்தைக் கீறியபடி சட்டென்று வெட்டிச்செல்லும் மின்னலாய் சிலருக்குத் தெரிந்தார்.உண்மையில் தேடல் மிக்க கலைஞானியவர்.
சங்க இலக்கியம் அச்சமூக மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிப்பதாக அமைகின்றது. மடலேறுதல், என்பது அக்காலச் சமூக நடைமுறை வழக்காறுகளுள் ஒன்றாக இருந்து வந்துள்ளது. இம்மடலேற்றத்தில் மடல், மடல் ஏறுபவன் தோற்றம், மடல் ஏறுபவரின் நோக்கம் மற்றும் அதன் சூழல் ஆகியவை முதன்மை இடம்பெறுகின்றன. அவ்வகையில் மடலேறுதல், எவ்வகையில் வன்முறையாகக் காட்சியளிக்கிறது என்பது குறித்துச் சங்கப் பாடல்களை முன்வைத்து ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
ஓரு சில விஷயங்களில் மட்டும் கருத்து முரண்பாடு கொண்டு நாம் விமர்சித்தவர்கள் அகால மரணமடைகிறபோது நமக்கு ஏற்படும் உணர்வு முதலில் குற்றவுணர்வாகவே இருக்கிறது. அவர்கள் நாம் கண்டு பேசி நம்மை உபசரித்தவர்கள், நம்மோடு கனிவுடன் உரையாடியவர்கள் என்கிறபோது நமது விமர்சனம் அவர்களது இறுதிநாட்களில் அவர்களைச் சிறிதேனும் துன்புறுத்தி இருக்குமா என நினைக்கிறபோது எழுதுவதையும் விவாதிப்பதையும் சிந்திப்பதையும் கூட விட்டுவிடலாமா என்று சமயத்தில் நமக்குத் தோன்றும். தென் ஆசிய இலக்கியம் பயிற்றுவிக்கும் பேராசிரியர், ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர் எனப் பன்முக ஆளுமை கொண்ட கனடிய நண்பரான செல்வா கனகநாயகத்தின் மரணத்தைக் கேள்வியுற்றபோது இவ்வாறான மனநிலைக்கே நான் ஆட்பட்டேன்.
அருள் ஞானக்கன்று, திராவிட சிசு, ஆளுடைய பிள்ளை, காழியர்கோன், தமிழாகரர் போன்ற பல சிறப்புப் பெயர்களுக்கு உரியவர் ஞானசம்பந்தர். அவர் தம் திருமுறைப்பாடல்களில் சமுதாய உணர்வு மேலோங்கப் பாடியுள்ளார். ஆன்மா கடைத்தேறுவது என்ற நிலையில் ஓர் உயிர் மட்டும் கடைத்தேறுவது என்பது எவ்வளவுதான் பெருமை பெற்றது என்றாலும், அது சுயநலம் சார்ந்ததாகிவிடுகின்றது. ஆனால் தன்னுடன் இணைந்த அத்தனை பேரையும் சிவகதிக்கு உள்ளாக்கும் வழிகாட்டியாக அமைந்து, குருவாக அமைந்துச் சமுதாயத்தைக் கடைத்தேற்றும் நாயகராக ஞான சம்பந்தப் பெருமான் விளங்குகின்றார்.
அகவாழ்க்கையைப் பெண்டிர் அடுக்களைகளிலே பெரிதும் கழிக்கின்றனர். அங்கு அவர்கள் அடையும் இன்னல்கள் அளப்பறியன. அவ்வின்னல்களைப் பொருட்படுத்தாது உணவு ஏற்பாடு செய்து தம் கணவரின் பசியைப் போக்கும் மாண்புடையவர்களாகவே விளங்குகின்றனர். அதனைத் தமிழில் குறுந்தொகையும் பிராகிருதத்தில் காதா சப்த சதியும் அறைகூவுகின்றன. இவ்விரு நூல்களில் குறுந்தொகையின் நூற்று அறுபத்தேழாம் பாடலும் காதா சப்த சதியின் பன்னிரண்டாம் பாடலும் மணஉறவுப் பெண்டிரின் அடுக்களைநிலைகளைக் குறிப்பிடுகின்றன. இங்கு அவ்விரு பாடல்களின் ஒத்த சிந்தனைகளையும் வேறுபட்ட சிந்தனைகளையும் இனங்காணப்படுகின்றன.
கலை , இலக்கியம், வானொலி, தொலைக்காட்சி, சினிமா, நாடகம், மற்றும் விளம்பரம் முதலான துறைகளில் தனது ஆற்றல்களை வெளிப்படுத்தி நீண்ட காலமாக இயங்கிய காவலூர் ராஜதுரையின் மறைவு ஈடுசெய்யப்பட வேண்டிய இழப்பு என்று அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கின்றோம். தமது பூர்வீக ஊருக்குப்பெருமை சேர்க்கும் வகையில் தனது இயற்பெயருடன் ஊரின் பெயரையும் இணைத்துக்கொண்டு நீண்ட நெடுங்காலமாக கலை, இலக்கியம் சார்ந்த பல்வேறு துறைகளில் தனது ஆற்றலையும் ஆளுமையையும் வெளிப்படுத்திவந்த காவலூர் ராஜதுரை தமது 83 வயதில் அவுஸ்திரேலியா சிட்னியில் காலமாகிவிட்டார் என்பதை அறிந்து எமது சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவிக்கின்றோம். காவலூர் ராஜதுரை இலங்கையில் மட்டுமல்ல அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரும் தாம் சார்ந்திருந்த துறைகளில் ஆக்கபூர்வமாக உழைத்தவர். ஈழத்து இலக்கிய வளர்ச்சியைப்பொறுத்தவரையில் நான்கு தலைமுறைகாலமாக அவர் குறிப்பிடத்தகுந்த பங்களிப்புகளை வழங்கியவர். சிறுகதை, விமர்சனம், நாடகம், வானொலி ஊடகம், இதழியல், திரைப்படம், தொலைக்கட்சி, விளம்பரம் முதலான பல்வேறு துறைகளில் அவர் தொடர்ச்சியாக ஈடுபட்டுவந்துள்ளார்.
தமிழ் எழுத்துலகில் பெண் எழுத்தாளராக புகழுடன் வலம் வந்த ராஜம் கிருஷ்ணன் திங்கள் கிழமை இன்று இரவு மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 90. 1925ல் திருச்சிக்கு அருகே உள்ள முசிறியில் பிறந்தவர் ராஜம் கிருஷ்ணன். 15 வயதில் கிருஷ்ணன் என்பவருடன் திருமணமானது. பள்ளி சென்று முறையான கல்வி பயிலாவிடினும், மின் பொறியாளரான கணவர் உதவியால் புத்தகங்களைப் படித்து, தாமே கதைகள் எழுதத் துவங்கினார். 1970ல் தூத்துக்குடி சென்று அங்குள்ள மீனவர்களின் நிலையைக் கண்டு 'கரிப்பு மண்கள்' என்ற நாவலை எழுதினார். பீகார் கொள்ளைக்கூட்டத் தலைவன் 'டாகுமான்சி'யை சந்தித்து, அதன் விளைவாக 'முள்ளும் மலரும்' என்ற நாவலை எழுதினார். பெண் சிசுக் கொலை உள்ளிட்ட சமூக அவலங்கள் குறித்து எழுதியுள்ளார். கலைமகள் இதழில் கதைகள் பல எழுதியுள்ளார். அதன் ஆசிரியர் கி.வா.ஜகன்னாதனால் எழுத்துலகில் வளர்க்கப்பட்டவர். 1953ல் கலைமகள் விருது, 73ல் சாகித்ய அகாதெமி விருது, 91ல் திருவிக விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது கணவர் கிருஷ்ணனுக்கு பக்கவாதம் வந்து நடக்க இயலாமல் தம் 90ம் வயதில் காலமானார். இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. பின்னர் முதுமையில் வறுமையால் வாடிய சென்னையில் விஷ்ராந்தி ஆதரவற்றோர்-முதியோர் இல்லத்தில் தங்கினார். கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று இரவு அவர் காலமானார்.
பிரான்ஸ் நாட்டு எழுத்தாளர் பேட்ரிக் மோடியானோ 2014ம் ஆண்டிற்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மோடியானோவின் "தொலைந்த மனிதன் (Missing Person)' நாவல் இப்பரிசினைப் பெற்றுள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது, நாஸிக்களின் ஆக்ரமிப்பு வன்முறையால் பிரான்ஸ் அடைந்த துயரங்களைக் குறித்த விரிவான ஆய்வுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் பேட்ரிக் மோடியானோ., பிரெஞ்சு நாட்டை ஜெர்மனியின் நாஸிப் படைகள் இரண்டாம் உலகப்போரில் ஆக்கிரமித்த காலக்கட்டத்தின் நிகழ்வுகளை தனது படைப்பாற்றல் மூலம்வெளிப்படுத்தி யுள்ளார்.. அன்னிய ஆக்கிரமிப்பின் பிடியில் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை மோடியானோவின் எழுத்துகள் அச்சு அசலாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன .அதன்மூலம், யாரும் புரிந்து கொள்ள முடியாத உலகுக்கு மனித உணர்வுகளை இட்டுச் செல்லும் கலை நயத்துக்காக மோடியானோவிற்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது என்று ஸ்விடனில் இருக்கும் நோபல் பரிசு தேர்வுக்குழு தெரிவித்துள்ளது. இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெறும் பிரஞ்சு படைப்பாளிகளின் வரிசையில் மோடியானோ 11 ஆவது நபராக இடம் பெறுகிறார்.


பாயிரங்கள் மொழிகளின் ஆக்கத்திற்கு ஏற்ப காலந்தோறும் அமைப்பு, பொருள் உருப்பெருக்கம் என்ற தன்மையில் பெருகி வருகின்றன. மரபிலிருந்து மாற்றம் பெறாமல் உறுப்புக்களை ஏற்றம் பெறச்செய்கிறது. நன்னூல், தொல்காப்பியம் பாயிர இலக்கணத்தில் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் சிறப்புப் பெருவது போல் நூற்றொகை விளக்கத்தில் பொதுவியல் சிறப்பு பெருகிறது. பொதுவியல் கட்டமைப்பில், நன்னூலரின் பொதுப்பாயிரக் கட்டமைப்பினைப் போல் தொடக்கத்திலே அறிவு, நூல் ஆகியவற்றை சூத்திரமாகக் கட்டமைத்துள்ளார் ஆசிரியர். இது தொல்காப்பிய மரபிலிருந்து மாற்றம் பெற்று காணப்படுகிறது. ஏனெனில் தொல்காப்பியர் மரபியலில் நூலினைப் பற்றி கூறியுள்ளார். அவற்றை ஒப்பிடுவதோடு, அறிவு, நூல், நூலின்வகை அதற்கான பொது இலக்கணம் மற்ற நூல்களிலிருந்து ஆசிரியர் மாற்றம் பெறுவதற்கான காரணம் ஆகியவற்றைப் பற்றி ஆராய்கிறது இக்கட்டுரை.
கிராமியப் பாடல், நாட்டுக் கூத்து , இசை, நடனம், கவிதை, நாடகம், சினிமா, இசைக்கருவி என்னுங் கலை வடிவங்கள் விஞ்ஞானம், வரலாறு, மனித உழைப்பு, ஆய்வு, விமர்சனம், பகுப்பாய்வு ஆகிய வகைப்படுத்தலால் சிறப்படைகின்றன. எல்லயற்ற ஆய்வுக்கு மனிதனால் அனைத்தும் உட்படும்போது உன்னதமடைகின்றன. கலை இலக்கிய உலகில் இந்த உன்னதமும் ஓர் எல்லையற்றிருக்கிறது. பூமி, சந்திரன், சூரியன், வெள்ளி ஆகிய சகல கோளங்களும் சுழற்சி ஓசையினூடு லய பாவத்துடன் சுருதி கலந்து இயங்குவதுபோலவே, ஒலி, ஒளி, காற்று என்பனவும் லய சுருதியோடு இயங்குகின்றன. ஜடப்பொருட்களின் இயக்கத்தில் மாத்திரமின்றி , சகல உயிரினங்களின் இயக்க முறைமைகளும் நாடித்துடிப்புகளும் அவ்வாறே பிசகின்றி இயல்பாகவே இவ்வாறு சுருதி லயப் பிசகின்றி இயங்குவதாலேயே அனைத்தும் எதிலும் துவைச்சல் பெருக்கெடுத்துக் குமுறுகிறது. கடல் வடுப் பெயர்ந்து அடங்கிக் குமுறுகிறது. அடங்கி, எழுந்து, சீறி, உயர்ந்து, தாழ்ந்து, சமமாகும் தன்மை ஜடப்பொருட்களிலும் லய பாவத்தோடு நிகழ்கின்றன.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









