மூத்த எழுத்தாளர் காவலூர் இராஜதுரை நினைவுகள்..!
இலங்கையின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான காவலூர் இராஜதுரை அவுஸ்திரேலியா சிட்னி நகரில் 14 -ம் திகதி (14 - 10 - 2014) செவ்வாய்க்கிழமை மாலை காலமான செய்தி மனவருத்தத்தைத் தருகிறது. பொதுசனத் தொடர்புத் துறையில் ஈடுபடுவோர் பலர். ஆயினும், அத்துறையின் பலத்தையும் பலவீனத்தையும் மட்டுமல்ல, அதன் நுட்பங்களையும் உணர்ந்து, தம் முத்திரை பதிப்போர் ஒரு சிலரே. அந்த ஒரு சிலருள் 'பல்கலைவேந்தர்" சில்லையூர் செல்வராசன், காவலூர் இராஜதுரை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இருவரும் இரட்டையர்கள் போன்று மிகுந்த நட்புடன் இயங்கி வந்தவர்கள். 'விளம்பரத்துறை" என்ற தனது நூலில், 'விளம்பரத் துறையில் சில்லையூர் செல்வராசன்" என்ற தலைப்பில் காவலூர் இராஜதுரை எழுதியுள்ள கட்டுரை ஊடகத்துறையில் ஈடுபடுவோர்க்கு விளம்பரத்துறை குறித்த தகவல் தரும் சிறந்ததோர் கட்டுரையாகும்.
காவலூர் இராஜதுரையின் கதை வசனத்தில் அவரது மைத்துனர் தயாரித்து புகழ்பெற்ற இயக்குனர் தர்மசேன பத்திராஜா இயக்கிய 'பொன்மணி" திரைப்படம் இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களில் கவனத்திற்குரியதாகும். சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் இத்திரைப்படம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத் தயாரிப்பின்போது யாழ்நகரில் காவலூர் இராஜதுரையோடு சில நாட்கள் செயற்பட்டமை ஞாபகத்தில் நிற்கிறது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக எழுபதுகளில் அவர் கடமையாற்றியபோது 'கிராமவளம்" மற்றும் கிராமிய நிகழ்ச்சிகளுக்காக, அவருக்கு உதவியாக நெடுந்தீவு, நயினாதீவு, புங்குடுதீவு முதல் வடபகுதியின் பல கிராமங்களுக்கும் சென்று ஒலிப்பதிவுகளை மேற்கொண்டமையும், புங்குடுதீவில் எங்கள் வீட்டில் அவர் தங்கியிருந்து 'பொன்மணி" திரைப்படத் தயாரிப்புக் குறித்தும் கலை இலக்கிய விடயங்கள் குறித்தும் நிறையவே பேசிக்கொண்டமையும் இன்றும் மனதில் பசுமையாக இருக்கின்றது.




பாயிரங்கள் மொழிகளின் ஆக்கத்திற்கு ஏற்ப காலந்தோறும் அமைப்பு, பொருள் உருப்பெருக்கம் என்ற தன்மையில் பெருகி வருகின்றன. மரபிலிருந்து மாற்றம் பெறாமல் உறுப்புக்களை ஏற்றம் பெறச்செய்கிறது. நன்னூல், தொல்காப்பியம் பாயிர இலக்கணத்தில் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் சிறப்புப் பெருவது போல் நூற்றொகை விளக்கத்தில் பொதுவியல் சிறப்பு பெருகிறது. பொதுவியல் கட்டமைப்பில், நன்னூலரின் பொதுப்பாயிரக் கட்டமைப்பினைப் போல் தொடக்கத்திலே அறிவு, நூல் ஆகியவற்றை சூத்திரமாகக் கட்டமைத்துள்ளார் ஆசிரியர். இது தொல்காப்பிய மரபிலிருந்து மாற்றம் பெற்று காணப்படுகிறது. ஏனெனில் தொல்காப்பியர் மரபியலில் நூலினைப் பற்றி கூறியுள்ளார். அவற்றை ஒப்பிடுவதோடு, அறிவு, நூல், நூலின்வகை அதற்கான பொது இலக்கணம் மற்ற நூல்களிலிருந்து ஆசிரியர் மாற்றம் பெறுவதற்கான காரணம் ஆகியவற்றைப் பற்றி ஆராய்கிறது இக்கட்டுரை.
கிராமியப் பாடல், நாட்டுக் கூத்து , இசை, நடனம், கவிதை, நாடகம், சினிமா, இசைக்கருவி என்னுங் கலை வடிவங்கள் விஞ்ஞானம், வரலாறு, மனித உழைப்பு, ஆய்வு, விமர்சனம், பகுப்பாய்வு ஆகிய வகைப்படுத்தலால் சிறப்படைகின்றன. எல்லயற்ற ஆய்வுக்கு மனிதனால் அனைத்தும் உட்படும்போது உன்னதமடைகின்றன. கலை இலக்கிய உலகில் இந்த உன்னதமும் ஓர் எல்லையற்றிருக்கிறது. பூமி, சந்திரன், சூரியன், வெள்ளி ஆகிய சகல கோளங்களும் சுழற்சி ஓசையினூடு லய பாவத்துடன் சுருதி கலந்து இயங்குவதுபோலவே, ஒலி, ஒளி, காற்று என்பனவும் லய சுருதியோடு இயங்குகின்றன. ஜடப்பொருட்களின் இயக்கத்தில் மாத்திரமின்றி , சகல உயிரினங்களின் இயக்க முறைமைகளும் நாடித்துடிப்புகளும் அவ்வாறே பிசகின்றி இயல்பாகவே இவ்வாறு சுருதி லயப் பிசகின்றி இயங்குவதாலேயே அனைத்தும் எதிலும் துவைச்சல் பெருக்கெடுத்துக் குமுறுகிறது. கடல் வடுப் பெயர்ந்து அடங்கிக் குமுறுகிறது. அடங்கி, எழுந்து, சீறி, உயர்ந்து, தாழ்ந்து, சமமாகும் தன்மை ஜடப்பொருட்களிலும் லய பாவத்தோடு நிகழ்கின்றன.
நூறு முறையாவது படித்திருப்பேன் நகுலன் கவிதைகளை..ஒரு மூச்சுக்கும் அடுத்த மூச்சுக்கும் இடைப்பட்ட காலம்தான் மனிதஆயுள் என்று புத்தர் சொன்னதுபோல் நகுலனும் சொல்கிராறோ என்று நினைக்கத் தோன்றும்.வாழ்வைத் தத்துவ நோக்கோடு பார்த்தவர்கள் நகுலனும் மௌனியும்..இருவரும் சுருக்கமாக ஆனால் சுருக்கென்று தைக்க எழுதியவர்கள். கனமான அரிசி மூட்டையை லாவகமாகக் கொக்கியால் குத்தித்தூக்கி முதுகில் ஏற்றி இடம் மாற்றும் தொழிலாளியின் நேர்த்தியான லாவகம் நகுலன் கவிதைகளில் உண்டு. அவர் கவிதையின் கனம் வாசிக்கும் வாசகனின் மனதில் இடம்மாறி மனதை ஒரு வினாடியில் பாராமாக்கும்.இறந்துபோன வண்ணத்துப்பூச்சியை இரக்கமில்லாமல் இழுத்துச் செல்கிற எறும்பைப்போல் காலம் நம்மை இழுத்துச்செல்லும் கோலத்தை நகுலன் கவிதைகள் அப்பட்டமாய் சொல்கின்றன. நகுலனின் வரிகளில் சொல்லவேண்டுமானால்



இன்று அறிவியல் எனும் விந்தையால் புதிது புதிதாக ஆயிரமாயிரம் கருவிகளையும் புழங்குப் பொருட்களையும் கண்டுபிடித்து வருகின்றோம். அவற்றிற்கிடையே பழஞ்சொத்துக்களையும் இழந்து வருகின்றோம் என்பதையும் மறந்துவிடலாகாது. ஊர்ப்புறம் (கிராமம்) என்றாலே அது நெல் விளைச்சலின் சொத்து. எனவே அது நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்கின்றது எனும் கருத்து வலுப்பெற்றது. அது இன்று விலை நிலங்களின் இருப்பிடமாக மாறி வருகின்றது. அதனைப் போன்றே அவ்வுழவர்கள் பயன்படுத்திய குதிரின் பயன்பாடும் மறைந்து வருகின்றது. இத்தன்மை அப்பயன்பாட்டின் மீதான அக்கறை இல்லை என்பதைக் காட்டுகின்றது. குதிர் எனும் சொல் நெல் போன்ற தானிய வகைகளைச் சேகரிக்கப் பயன்படும் ஒருவகை கலம் என அகராதிகள் பொருள் கொள்கின்றன. இதன் பயன்பாடு பயிர்த்தொழில் கண்டுபிடிக்கப்பட்ட காலம் தொட்டே தோன்றிற்று எனலாம். அத்தொழில் புரிந்து வந்த மாந்தன் தேவைக்குப் போக மீதமிருந்தவற்றை எதிர்கலத் தேவைக்காக சேமிக்க குதிரைக் கண்டறிந்தான். அதற்கு நெற்குதிர் எனப் பெயரிட்டான். பின்பு பல தானிய வகைகளையும் சேமித்து வைக்கவும் கற்றுக் கொண்டான். முழுமையான கட்டுரை 













பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









