நீடித்த இயற்கை சூழல் என்பது கனவா? - சுப்ரபாரதிமணியன் -
நீடித்த இயற்கை சூழல் என்பது பூஜ்ஜியம் கழிவு மேலாண்மையில் மட்டுமே சாத்தியப்படும் .
திருப்பூர் பின்னலாடை துறை சார்ந்த இரண்டு நிறுவனங்கள் 2020 பிப்ரவரியில் ஒரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள். பின்னலாடை துறையில் வெளியேறும் சாயக்கழிவுகள் பற்றிய விமர்சனங்கள் எப்போதும் உண்டு .ஆனால் அவர்கள் அந்த கழிவுகளை சார்ந்து பல்வேறு ஆய்வுகளை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இப்போது நாம் பயன்படுத்திய பழைய போத்தல்களை பயன்படுத்தி சட்டை தயாரிக்கும் பணியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நாம் வீசி எறியும் தண்ணீர் போத்தல்கள் பேருந்து நிலையங்களில் குவிந்து கிடக்கும் அவற்றின் மலைத் தன்மை போன்றவை நம்மை எப்போதும் பயமுறுத்தும். அந்த தண்ணீர் போத்தல்களை எடுத்து அதிலிருந்து பைபர் நூலை பிரித்து பின்னலாடை துறையில் பயன்படுத்த இரண்டு நிறுவனங்கள் வெற்றி கண்டிருக்கிறார்கள் .ஒன்று சுலோச்சனா நிட் என்ற ஒரு நிறுவனம். இன்னொன்று சிண்டிகேட் இம்பெக்ஸ். இவர்கள் இருவரும் வெளிநாட்டு தொழில் நுட்பத்தை முன்வைத்து குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளில் அடிப்படையில் தண்ணீர் போத்தல்களில் இருந்து பைபர் நூலை பிரித்தெடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்று பின்னர் ஆடைகளை உற்பத்தி செய்திருக்கிறார்கள் .அது ஆஸ்திரேலியாவின் உலக ஓபன் டென்னிஸ் போட்டிகளின் போது பயன்படுத்தப்பட உள்ளது .இந்தப் போட்டியின் போது பந்துகளை சேகரிக்கும் தரும் சிறு பையன்கள் பயன்படுத்துகிற பின்னலாடை ஆகியுள்ளன. இந்த தண்ணீர் போத்தல்கள் டீசர்ட்டுகளாக மாறியுள்ளன .உலகத்தில் முதல் முயற்சி இது .அந்த டீ சர்டுக்களை அடிக்கடி துவைக்க வேண்டியது இல்லை .


வீட்டை அடைந்த பிறகு , தில்லை மறுபடியும் தேனீர் அருந்தினான் . ஜெயந்திக்கும் , பூமலருக்கும் ரிம் கொட்டனே போதுமாகவிருந்தது . 
வணக்கம், இவ்வாரம் வெள்ளிக்கிழமை (04/11/2022) லண்டன் நேரம் இரவு 08.15இற்கு(இரவு 8.00 மணி பிரதான செய்திக்குப்பிறகு) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலியில் (www.ilctamilradio.com) இலக்கியப்பூக்கள் இதழ் 267 ஒலிபரப்பாகும்.


நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசர், நாட்டியம் மாத்திரம் ஆடவில்லை. அதற்கும் அப்பால் சென்று பல கலைஞர்களை உருவாக்கிய ஆளுமை. கார்த்திகா ஏனைய நடன நர்த்தகிகளிடமிருந்து வேறுபட்டிருப்பதற்கு அவரிடமிருக்கும் ஆற்றலும், தேடலும் மாத்திரம் காரணம் அல்ல. நாட்டியக்கலை தொடர்பாக அவர் நீண்டகாலம் ஆய்வுசெய்து நூல்களும் எழுதியிருக்கும் எழுத்தாளரும் ஆவார். நடன நர்த்தகியாக மாத்திரமன்றி தமது ஆய்வின் வெளிப்பாடாக நாட்டியக் கலாநிதியாகவும் மிளிர்ந்தவர். இதுவரையில் தமிழர் வளர்த்த ஆடற்கலைகள், காலம் தோறும் நாட்டியக்கலை, இந்திய நாட்டியத்தின் திராவிட மரபு, நாட்டியக்கடலில் புதிய அலைகள் முதலான நூல்களை வரவாக்கியிருப்பவர. இந்த ஆண்டு தனது பவளவிழாக்காலத்தில் மற்றும் ஒரு நூலை அவர் வரவாக்கியிருக்கிறார். நூலின் பெயர் இந்து மதத்தின் பரிணாமச் சிந்தனைகள்.
தமிழ் எழுத்தாளர்கள் பொதுவாக விருதுகளுக்கு அடிமையானவர்களாகத்தான் நடந்துகொள்கின்றார்கள். கன்னட எழுத்தாளரான எம்.எம். கல்பூர்கி அவரது சமய மூட நம்பிக்கைகள் பற்றிய கருத்துகளுக்காகப் படுகொலை செய்யப்பட்டபோது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள் தாம் பெற்ற சாகித்திய விருதுகளைத் திருப்பிக் கொடுத்தார்கள். ஆனால் ஒரு தமிழ் எழுத்தாளர் கூடத் தனது விருதினைத் திருப்பிக் கொடுக்கவில்லை. இலங்கையில் நீண்ட காலம் தமிழ் மக்கள் மீதான அடக்கு ஒடுக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த போர்ச்சூழலில் கூட ஒருவர் கூட தாம் பெற்ற சாகித்திய விருதினைத் திருப்பிக் கொடுக்கவில்லை. எழுத்தாளர் நெல்லை க.பேரனின் குடும்பமே இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டது. அப்பொழுதும் யாரும் பெற்ற விருதினைத் திருப்பிக் கொடுக்க எண்ணவில்லை. புதியதை வாங்குவதை நிறுத்தவுமில்லை. 'மாமனிதர்' சொக்கன் கூடத் தான் பெற்ற சாகித்திய விருதுகளைத் திருப்பிக் கொடுக்கவில்லை. முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த பேரழிவைத் தொடர்ந்த ஆண்டுகளில் கூட வழக்கம்போல் விருதினை வாங்கிக்கொண்டுதானிருந்தார்கள். தேசிய விடுதலைப்போருக்காகக் குரல் கொடுத்துக்கொண்டு, இலங்கை அதிபரிடமிருந்து விருதுகளை தொடர்ந்தும் வாங்கிக்கொண்டுதானிருந்தார்கள். 








மனமகிழ மனநிறைய கொண்டாடி நிற்க
“வேதமனைத்துக்கும் வித்து“ என்று போற்றப்படுவது ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை. இனிமையான பக்தி சுவை மிக்க பாசுரங்களைக்கொண்டது. கண்ணன் மேல் ஆண்டாள் கொண்டிருந்த எல்லையற்ற அன்பினைப் பாசுரங்கள் வழி பாய்ந்தோடச் செய்வன. கண்ணனை அடையும் பொருட்டு ஆண்டாள் மேற்கொண்ட நோன்புதான் “பாவை நோன்பு“.பாவை நோன்பிற்காத் தனது தோழியர்களை அழைத்தல், விடியலை அறிவித்தல், இயற்கை வர்ணனை என்று ஆண்டாள் தனது உணர்வுகளை புலப்படுத்தும் விதமே அழகியல் தன்மையுடையது. மனித மனத்தின் ஆழமும், பரப்பும் அறிய முடியா இயல்பும் பொதுவாக கவிதைகளில் மிளிர்வதைக் காணலாம். அழகியல் என்பது படைப்புகளை ஆராய்ந்து ஒற்றை வரியில் இது அழகானது, இது அழகற்றது என்று சொல்லிவிடுவதல்ல. ஒரு படைப்பின் முழுமையை அறிந்து, அப்படைப்பின் படைப்புத்தன்மையில் உள்ள கலைத்துவத்தை அப்படியே வெளிப்படுத்துவது. இவ்வகையில் ஆண்டாள் பாசுரங்களில் காணப்படும் அழகியலை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
-
தென்னிந்தியாவிலே சோழப் பேரரசு தோன்றிய காலம், வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலப் பகுதியாகும். கிருஷ்ணா நதிக்குத் தெற்கே உள்ள நிலப்பகதிகள் யாவும் முதன் முறையாக வலுவுள்ள தமிழ்ப் பேரரசொன்றின் கீழ் அமைந்து சிறப்புமிக்க மாவட்டங்களாக ஒரு குடைக் கீழ் ஆளப்பட்டன. சோழப் பேரரசின் புகழ் உச்ச நிலையில் பட்டொளி வீசிய போது கங்கையும் கடாரமும் கலிங்கமும் இலங்கையும் அதன் அடிபணிந்து நின்றன. அராபியரும் žனரும் அதன் வாணிபச் சிறப்பிற் பங்கு கொண்டிருந்தனர் இத்தகைய சிறப்புமிக்க காலப்பகுதியிலேதான் தமிழகத்திலே "சைவ சித்தாந்தம்" என்னும் பெருந்தத்துவம் சாத்திர வடிவம் பெற்றது. சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு. அவற்றுள் தலையாயது எனக் கொள்ளப்படும் சிவஞானபோதம் பதின்மூன்றாம் நூற்றாண்டிலே எழுந்தது. மெய்கண்டார் காலம் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டென்பது யாவரும் ஒப்பமுடிந்த உண்மை1. திருவுந்தியர், திருக்களிற்றுப் படியார் என்னும் இரண்டனைத் தவிர, ஏனைய சித்தாந்த சாத்திர நூல்கள் பதினொன்றும் சிவஞான போதத்தின் வழி வந்தனவே. எனவே தென்னகத்திலே சைவ சித்தாந்தத்தின் முறையான வரலாறு ஒருவிதத்தில் இங்குதான் தொடங்குகிறது எனக் கொள்ளலாம்.2 பேரரசு ஒன்று நிலவிய காலத்திலே பெருந்தத்துவம் ஒன்றும் வடிவம் பெற்றவை குறிப்பிடத்தக்கவை உண்மையாகும்.
பிரதேசங்கள், நாடுகள் என்ற எல்லையைத்தாண்டி தமிழின் ஈடிணையற்ற எழுத்தாளராக அங்கீகாரம் பெற்ற தெளிவத்தை ஜோசப் அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய வானில் கருந்திரையைப் போர்த்தியிருக்கிறது. தெளிவத்தை என்ற தோட்டத்துப்பெயரைத் தன் பெயரோடு இணைத்து, தமிழ் இலக்கிய உலகில் அவர் அடைந்த வெற்றிச் சாதனைக்காக மலையகம் பெருமிதம் கொள்கிறது.மலையக மக்களது வாழ்வின் துயர்க்கோலங்களை, சுரண்டலின் அகோரத்தை, அவலப்பட்டுப்போன சமூகக்கூட்டத்தின் கதையை அழியாத கல்வெட்டாய் தமிழ் இலக்கிய உலகில் பொறித்துவைத்துவிட்டுப்போன பெருமகன் தெளிவத்தை ஜோசப்பிற்காக இன்று தமிழ் இலக்கிய உலகம் கண்ணீர் சிந்தி நிற்கிறது. மலையக இலக்கியம் என்ற பச்சை மண்ணில் தெளிவத்தை ஜோசப்பின் தசைநார்கள் நெய்யப்பட்டிருக்கின்றன என்று சொன்னால் அது சரியாய் இருக்கும். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்து இலக்கிய உலகின் தனி சாம்ராட்டாக உலாவந்த இலக்கியத்தலைமகன் இன்றில்லை எனும் செய்தி நம் நெஞ்சில் துயர அலைகளை எழுப்பி நிற்கிறது.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









