கனடா மகாஜனாக்கல்லூரி & நடேஸ்வராக்கல்லூரி பழைய மாணவர் சங்க ஒன்றுகூடல் - 2022 - குரு அரவிந்தன் -

கனடாவில் இயங்கிவரும் மகாஜனாக்கல்லூரி பழைய மாணவர் சங்க அங்கத்தவர்களும், கல்லூரி நலன்விரும்பிகளும் சென்ற ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவின் மக்கோவான் - ஸ் ரீல் சந்திக்கு அருகே உள்ள பூங்காவில் ஒன்றுகூடிக் கொண்டாடினார்கள். கோவிட் - 19 காரணமாக இரண்டு வருடங்கள் தள்ளிப் போடப்பட்ட இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாக இம்முறை நடைபெற்றது. கனடா தேசிய கீதம், தமிழ்வாழ்த்து, கல்லூரிக்கீதம், கொடிவணக்கம், மற்றும் எம்மைவிட்டுப் பிரிந்தோருக்கான அகவணக்கம் போன்றவற்றுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதைத் தொடர்ந்து காலை உணவு வழங்கப்பட்டது. அதன்பின் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று மதிய உணவு வழங்கப்பட்டது.
மதிய உணவைத் தொடர்ந்து, சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்குமான ஓட்டப்போட்டி, பந்தெறிதல், கயிறு இழுத்தல், வேகநடை போன்ற பலவிதமான விளையாட்டுகளும் இடம் பெற்றன. அங்கத்தவர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதன் மூலம் உளரீதியாகவும் ஒன்றுகூடி மகிழ்வதே இந்த நிகழ்வின் நோக்கமாக இருந்தது. நீண்ட நாட்களின்பின் ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்வோடு உரையாட முடிந்தது. இந்த நிகழ்வில் பிரான்ஸ், நோர்வே, அமெரிக்கா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் இருந்தும் வந்திருந்த பழைய மாணவர்கள் சிலர் கலந்து கொண்டிருந்தனர். போட்டியில் பங்கு பற்றி வெற்றி பெற்றவர்களுக்கு மாலை 5:00 மணியளவில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களால் பரிசுகள் வழங்கப்பட்டன. மாலை 6:00 மணியளவில் நிகழ்வு நிறைவுபெற்றது.


எமது அண்டை நாடான பாரத தேசத்தில் பிறந்த மூவர் நமது இலங்கையில் தங்களது சிந்தனைகள் , செயல்களால் செல்வாக்கு செலுத்தினார்கள். அவர்களில் கௌதம புத்தர் முதன்மையானவர். அவர் இலங்கைக்கு வந்தாரோ, இல்லையோ, அவரது உபதேசங்கள் இலங்கையில் தேர வாத பௌத்த சமயமாக இரண்டாயிரம் வருடங்கள் முன்னதாக ஆழமாக வேரூன்றியது. இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் மோகனதாஸ் கரம் காந்தி இலங்கைக்கு வந்ததுடன், அவரது அரசியல் கருத்து போராட்ட வழி முறைகள் இலங்கையில் செல்வாக்குச் செலுத்தியது. உண்ணாவிரதம், அகிம்சை வழி, கடையடைப்பு என இங்கும் தமிழர், சிங்களவர் என இரு இனத்தவரும் அத்தகைய போராட்ட வடிவங்களை முன்னெடுத்தார்கள். ஆனால், இலங்கைக்கு வராதபோதிலும் பட்டி தொட்டி எங்கும் தமிழ் பேசும் மக்களால் கொண்டாடப்படுபவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். மற்றைய இருவரிலும் பார்க்க, இவர் ஒரு விடயத்தால் முக்கியத்துவமாகிறார்.
ஒவ்வொரு மாதத்திலும் காயத்திரி தேவதையாகிப் போன நாளில் பிள்ளையார் கோவிலுக்கு போய் வருவதை வழக்ககமாகக் கொண்டிருக்கிறான் . முகத்தில் மஞ்சள் பூசி கட்டிலில் படுத்திருந்ததை மறக்க முடியவில்லை . அன்று அவள் அதிகமாக சோர்ந்திருந்தது போல தெரிந்தது . நித்திரையிலிருந்து தானாக எழட்டும் என வீட்டை துப்பரவாக்குவதில் ஏடுபட்டான் .இடையிடையே வந்து எட்டிப் பார்த்துக் கொண்டுமிருந்தான் . எழுவதைக் காணவில்லை . வழக்கத்திற்கு மாறாக தூங்குறாளோ? ...புன்சிரிப்பு சந்தேகத்தை ஏற்படுத்த மூக்கில் கையை வைத்துப் பார்த்தான் . அனுங்கலையும் காணவில்லை .எப்படியும் அவளிடமிருந்து சிறு சத்தம் வந்து கொண்டிருக்கும் . மூச்சு நின்று விட்டதை உறுதிப்படுத்தவே சிறிது நேரம் எடுத்தது ." என்னடி ஒரேயடியாய் போய் விட்டாயா ? " இலங்கை ராணுவத்தின் முன் நிராயுதபாணியாய் எல்லாத்தையும் இழந்து கையறுயற்று நிற்பது போல , ஒரேயடியாய் தளர்ந்து போனான் . அவளை தூக்கி நிறுத்துகிற ஒவ்வொருவாட்டியும் ஒரு சிரிப்பு சிரிப்பாளே . இனி அதைக் காண முடியாது . அவனுடைய ஆவியும் வெளியேறி காயத்திரியின் கைப் பிடித்து கூட்டிக் கொண்டு மேலே போனால் எவ்வளவு நல்லாய் இருக்கும் . அன்றிலிருந்து மூன்று வருசமாக அவள் சென்ற நாளில் ஒவ்வொரு மாசத்திலும் கோவிலை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறான் . இன்று அவளின் நினைவு நாள் ! . 
பெலோஸ்கியின் விஜயம் நடந்துமுடிந்த, 12வது தினமே, செனடர் எட் மார்கியின்; தலைமையின்கீழ், செனட் குழு ஒன்று தாய்வானுக்கு விஜயம் மேற்கொண்டது (16.8.2022). இது அமெரிக்கா அணுகுமுறையின் தீர்மானகரமான நிலைமையினை புலப்படுத்தியது. மறுபுறுத்தே, ஏற்கனவே நூற்றுகணக்கான விமானங்களையும், பத்துக்கு குறையாத கப்பல்களையும் அனுப்பி, அதற்கூடு, தாய்வானுக்கென்று, உண்மையில், சொந்தமாக, வான்பரப்பு என்று ஒன்று உண்டா என்று சர்வதேச ஆய்வாளர்களை கேள்வி கேட்க வைத்த சீனத்தின் நடவடிக்கைகள் கட்டுக்கடங்காமல், இன்றும்,இன்னமும் தொடர்வதாகவே இருக்கின்றது. 

பெற்றவர்களிடம் கற்றதையும் சமூகத்திடம் பெற்றதையும் வாழ்வியல் அனுபவமாக்கி, ஊடகத்துறையின் நுட்பங்களை உள்வாங்கி செய்தியாளராக பரிமளிக்கும் தேர்ந்த இலக்கிய வாசகர் சிற்சபேசன் அவர்களை எமது வாசகர் முற்றத்திற்கு அழைத்து வருகின்றோம். யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், தன்னுடைய தந்தையார் அதிபராகவிருந்த அனுராதபுரம் விவேகானந்த தமிழ் மகாவித்தியாலயத்திலும் கற்றவர். பின்னர் உயர்கல்வியை தமிழ்நாட்டில் தொடர்ந்தவர். 

நான் நூல்களை ஒரு தடவை மட்டும் வாசிப்பதுடன் நின்றுவிடுவதில்லை. 'நவில்தொறும் நூல் நயம்' என்பதற்கொப்ப வயதுக்கேற்ப நூலொன்றின் புரிதலும், சுகித்தலும் பரிணாமடையும் என்பதை உணர்ந்தவன். நம்புபவன். அனுபவபூர்வமாக உணர்ந்தவன்.
நினைவுகளின் தடத்தில் - 23


தம்பிமுத்துச் சம்மாட்டியின் இயந்திரப் படகுகள் ஆழ்கடலில் ஓடத் தொடங்கியபின் களங்களில் விரிக்கப்பட்ட தங்கள் படுப்பு வலைகளில் மீன் பிடிபாடு குறைந்துவிட்டதென்ற உண்மை, ஒரு சிலருக்கு அதிக நாட்களுக்குப் பின்பே தெரிய வந்தது.
முன்னுரை

செப்டம்பர் 7, 1936ம் ஆண்டு; ஆஸ்திரேலியாவின் தஸ்மேனிய மாநிலத்தில் இருந்த ஹோபார்ட் பேமொறிஸ் மிருகக்காட்சிச்சாலை அன்றும் என்று போல் விடிந்தது. ஆனால் அன்று ஒரு சோகநாள்! அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த உலகின் கடைசி .தஸ்மேனியன் புலி (Tasmanian Tiger) இனி இல்லை. முதுமை காரணமாக தன் இறுதி மூச்சைவிட்டது. உலகு ஒரு உயரினத்தை நிரந்தரமாக இழந்தது நின்றது!
தொல்பழங்காலந்தொட்டு தமிழ்நிலத்தில் சிறந்த பண்பாட்டு நெறிகள் வளர்ந்தோங்கியுள்ளன. தூய தமிழ் மரபுகள், வாழ்க்கை நெறிகள் காலந்தோறும் தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யப் பெற்றுள்ளன. ‘பண்புடையார்ப் பட்டுண்டுண்டு உலகம்’ என்பது திருக்குறள் விதித்த விதியாகும். உலகின் மூத்த நாகரிகங்களில் முதன்மையானது தமிழ் நாகரிகமாகும். தமிழ் மக்களின் பண்பாட்டியற் கூறுகளில் ஒன்றான விருந்தோம்பல் பண்பாடுப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









