[வ.ந.கிரிதரன் பாடல் - சக்தியும் , பொருளும்! வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5. ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி.  இப்பாடலை யு டியூப்பில் 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' சானலில் கேட்டு மகிழலாம். அதற்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/watch?v=EmO3UvN7Cl4  ' வ.ந.கிரிதரன் பாடல்கள் ' சானலை 'Subscribe' செய்வதன் மூலம் உங்கள் வாசலுக்குப் புதிய பாடல்கள் விரைவாக வந்து சேரும். உங்கள் ஆதரவு 'சான'லின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவிருக்கும்.]


சக்தியும் , பொருளும்!  

கண்ணம்மா, என் கண்ணில் உன்தோற்றம்
எண்ணத்தின் விளைவா? இல்லையா கண்ணே!

பொருளென்று ஒன்றும் இல்லை என்றுகூறும்
பவுதிகத்தின் வழிநின்று பார்த்தால் கண்ணே!
அடிப்படைத் துணிக்கைகளும் சக்தியன்றோ கண்ணம்மா!
சக்தியின் நாட்டியமா நம்மிருப்பும் கண்ணம்மா!

கண்ணம்மா, என் கண்ணில் உன்தோற்றம்
எண்ணத்தின் விளைவா? இல்லையா கண்ணே!

சக்தியைப் பொருளெனப் பார்க்கும் அந்தகரா நாம்!
சொல்லம்மா என் கண்ணம்மா! சொல்லம்மா!
நாமிருவர் வேறல்ல ஒன்றுகலந்த சக்தியன்றோ!
சக்தி கலந்தநிலை காலவெளியா கண்ணம்மா!

கண்ணம்மா, என் கண்ணில் உன்தோற்றம்
எண்ணத்தின் விளைவா? இல்லையா கண்ணே!

மண்ணில் எம்வாழ்வு எல்லாம் கண்ணம்மா!
திண்ணம்மிகு பொருளல்ல சக்திமயமா கண்ணம்மா!
நீயும் நானும் வேறல்ல கண்ணம்மா!
நாமிருவர் ஒன்றே சக்தியில் கண்ணம்மா!

கண்ணம்மா, என் கண்ணில் உன்தோற்றம்
எண்ணத்தின் விளைவா? இல்லையா கண்ணே!

https://www.youtube.com/watch?v=EmO3UvN7Cl4


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்