ரொறன்ரோவில் பரதநாட்டிய அரங்கேற்றம். - குரு அரவிந்தன் -

சென்ற சனிக்கிழைம யூலை மாதம் 27 ஆம் திகதி 2024 அன்று மலை 6:00 மணியளவில் ரெறன்ரோவில் உள்ள சீன கலாச்சாரமண்டபத்தில் செல்வி சாக்ஸவி திலீபனின் பரத நாட்டிய அரங்கேற்றம் சிறப்பாக நடந்தேறியது. நண்பர் திலீபனின் அழைப்பை ஏற்று நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். இது போன்ற பரதநாட்டிய, இசை அரங்கேற்றங்கள் சிலவற்றுக்குச் சிறப்பு விருந்தினராக நான் கலந்து கொண்டிருந்தாலும், அன்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டது போல இசை, நடன ஆசிரியர்களை நான் ஒரு போதும் இப்படியான நிகழ்வுகளில் சந்திக்கவில்லை. இந்த நிகழ்வில் பல புதிய இசை, நடன ஆசிரியர்களையும் சந்தித்து உரையாடவும் முடிந்தது குறிப்பிடத் தக்கது.
சாக்ஸவியின் தாயார் ஸ்ரீமதி சுதர்சினி அவர்கள் நடன ஆசிரியராக இருப்பதும் இவர்களின் வருகைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அண்ணாமலை கனடா வளாகத்தைச் சேர்ந்த டாக்டர் சூரியகலா சந்திரிகா ஜீவானந்தன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்த அரங்கேற்ற நிகழ்வுக்கு அற்புத நர்த்தனாலய அதிபர் ஸ்ரீமதி அற்புதராணி கிருபராஜ் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் தனது உரையில் ‘செல்வி சாக்ஸவி திலீபன் மிகவும் திறமை உள்ள பாத்திரலட்சணங்கள் பொருந்திய அன்பும், அடக்கமும், பணிவும் உள்ள சிறந்த மாணவி. நல்ல அங்கசுத்தம், சிறந்த வயப்பிடிப்பு, உணர்ந்த பாவம் என்பனவற்றை சாக்ஸவியின் இந்த நடனத்தில் கண்டு மகிழ்ந்தேன். இந்த அரிய கலையைப் புலம்பெயர்ந்த இந்த மண்ணில் உள்ள அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய பொறுப்பு சாக்ஸவி போன்றவர்களிடமே இருக்கிறது, அவரது எதிர்காலம் சிறக்க எனது வாழ்த்துக்கள்’ என்று தனது உரையில் குறிப்பிட்டார்.



ஈழக்கவி என்னும் புனைபெயரில் எழுதிவரும் ஏ. எச். எம். நவாஷ் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மெய்யியலில் சிறப்புப் பட்டம் பெற்றவர்; சிறிதுகாலம் மெய்யியல் துறையில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். நீண்டகாலம் ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றி அண்மையில் பணி ஓய்வு பெற்றிருக்கிறார்.
சற்றே மாற்றி பாடினால் இவ்வாறுதான் அமையும். ஆனால் இயற்கை அடிப்படையில் மாறாது எனில், மனிதன் இயற்கையோடு தொடுக்கும் போரும் மாறாது. (சாராம்சத்தில்).

கடந்த ஆனி மாதம், சீக்கிய மத முறையிலான திருமணம் ஒன்றைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. இது நான் பார்த்த முதலாவது வேற்று இன, மத திருமணம் என்பதால் அது சம்பந்தமான எனது மன உணர்வுகளை உங்களுடன் பகிரலாம் என்று நினைக்கிறேன். 

இலக்கியங்கள் குறிப்பிட்ட காலத்தைச் சோ்ந்த படைப்பாளிகளால் படைக்கப்படுவதாகும். ஆதலால் இலக்கியங்கள் யாவும் அவை தோன்றிய காலத்தில் ஏற்படும் மாற்றங்களை, முழுமையாக சுவீகரித்துக் கொள்ளும் என்று கூறுவா். இதனால் இலக்கிய உருவாக்கத்தில் வரலாற்றுப் பின்னணியின் முதன்மை இடத்தை உணர முடிகின்றது. வரலாற்றிற்குப் பலமுகங்கள் உள்ளன. அரசியல் வரலாறு, சமுதாய வரலாறு, கலை வரலாறு, அறிவியல் வரலாறு, பண்பாட்டு வரலாறு எனப்படும் பல முகங்களுக்கும் அடிப்படையானது – அனைத்துத் துறைகளிலும் தாக்கம் ஏற்படுத்தக் கூடியது அரசியல் வரலாறு ஆதலால் படைப்பு, படைப்பாளா் வரலாறு அறிவதற்கும், அரசியல் வரலாறு அவசியமாகின்றது. இலக்கியம் உருவாகி வளா்ந்திட்ட, தமிழகத்தின் அரசியல் வரலாறாகிய படைப்புச்சூழல், படைப்பாளா் வரலாறு அறியப்பட்டால் பக்தி இலக்கியங்களைச் செம்மையாக அறிந்து கொள்ள முடியும். அவ்வகையில் மாணிக்கவாசகா் வரலாறையும் படைப்புச் சூழலையும் ஆராய்வதாக இவ் ஆய்வுக் கட்டுரை அமைகின்றது.

பூலோகத்தின் சொர்க்கம் என வர்ணிக்கப்பட்ட இலங்கைக்கும் இராமாயணத்திற்கும் தொடர்பு இருப்பதை ஐதீகக் கதைகள் மூலம் அறிகின்றோம். இராமாயணத்தில் வரும் இராவணன் தமிழனாகவும் இராமன் ஆரியனாகவும் சித்திரிக்கப்படுகிறார்கள். இந்த இரண்டு பாத்திரங்களின் குணவியல்புளை வைத்து இன்றும் பட்டிமன்றங்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். வால்மீகி இராமாயணம் – கம்பராமாயணம் ஆகியன குறித்தும் மாறுபட்ட கதைகள் தொடருகின்றன.



இலங்கை வானொலி மற்றும் லண்டன் பி. பி. சி . யில் முன்னர் சேவையாற்றியவரும் இலங்கை நாடாளுமன்றில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியவருமான புகழ் பூத்த அறிவிப்பாளர் ( அமரர் ) சுந்தா சுந்தரலிங்கம் அவர்களின் அன்புத் துணைவியாரும், சுபத்திராவின் பாசமிகு தாயாரும், குலசேகரம் சஞ்சயனின் அன்பு மாமியாரும், சேந்தன், சேயோன் ஆகியோரின் பிரியத்திற்குரிய பேத்தியாருமான திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் அவர்கள் இம்மாதம் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலையில் அவுஸ்திரேலியா சிட்னியில் அமரத்துவம் எய்திவிட்டார் என்ற துயரச் செய்தியுடன்தான் அன்றைய நாளின் காலைப்பொழுது எனக்கு விடிந்தது.




தொலைபேசி ஒலித்த விதம் மது அழைக்கிறாள் என்பதை யசோவுக்குச் சொல்லாமல் சொன்னது. வேகமாகச்சென்று அதைக் கையிலெடுத்தவள், “ஓ, ரண்டு பேருமா இருக்கிறியள், எல்லாம் ஓகேயா?” ஆங்கிலத்தில் கேட்டாள்.







பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









