[இச்செய்திகளை எடுத்துரைத்தவர் இத்தளத்தில் அகழாய்வை வழிநடத்திய பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான 'அருங்கலைச் சொல் அகரமுதலி' உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரி]

இச்செய்திகளை எடுத்துரைத்தவர் இத்தளத்தில் அகழாய்வை வழிநடத்திய பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான 'அருங்கலைச் சொல் அகரமுதலி' உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரிதிருவேற்காடு சென்னைக்கு அருகே பூந்தண்மல்லி பெங்களூர் நெடுஞ்சாலையில் இருந்து சில அயிர் மாத்திரிகள் (kilo meter) கிளைத்துப் பிரியும் சாலை வழியே கூவம் ஆற்றின் கரைமேல் இடம் கொண்டுள்ளது. இது அன்றாடம் பல்லாயிரம் பக்கதர்களை ஈர்க்கும் தேவி கருமாரி அம்மன் கோவிலில் இருந்தும் மிக அருகில் தான் உள்ளது. இத்தளத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பண்டை வரலாறு மற்றும் தொல்லியல் துறையால் பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தியின் வழிகாட்டுதலில் 1996 முதல் 2000 வரை பற்பல பருவங்களுக்கு அகழாய்வுகள் நடத்தப்பட்டன.  

ஆற்றின் மேற்பரப்பு முழுமையிலும் பானைஓடுகள், தாழித் துண்டுகள் மற்றும் செங்கல் வில்லைகள் சிதறிக் கிடக்கின்றன. அவை ஆற்றுக் கட்டமைப்பிலும் புதைந்து காணப்படுகின்றன. இத்தளத்தின்  பழமையைச் சுட்டும் படியாக அவை இன்றும் கூட திறந்த நிலையில் கட்புலனாகும்படி கிடக்கின்றன.       

வெவ்வேறான  இடங்களில் தோண்டப்பட்ட சில அகழிகள் பெரும் எண்ணிக்கையில் கருப்பு - சிவப்பு மட்கலங்கள், கருப்பு மட்கலங்கள், சிவப்பு மட்கலங்கள் முதலாயவற்றை ஈட்டித் தந்தன. கண்ணாடி மணிகள், வளையல்கள் போன்ற பழம்பொருள்கள், சுடுமண் வடிவுகள், சங்குகள் முதலாயன அகழாய்வின் செல்வழியில் கண்டெடுக்கப்பட்டன. இத்தளத்துடனான உரோமத் தொடர்புகளைச் சுட்டுகின்ற உரோம வனைதொழில் (pottery) பானை ஓடுகள் சிலவும் அகழாவில் இருந்து திரட்டப்பட்டுள்ளன. The antiquities from the site throw a volume of light on the material culture of the people of this region.  இது தொடக்க இரும்புக் காலத்தின், தொடக்க வரலாற்றுக் காலத்தின் ஒரு நல்ல வாழிடத் தளம் ஆகும். இத்தளத்தில் கிட்டிய  தொல்பொருள்கள் இவ்வட்டார மக்களின் பொருள் சார் பண்பாடு பற்றி விளக்குகின்றன.    

இத்தளம் தொடக்க இரும்புக் காலத்திலிருந்து அப்படியே இறங்கி இக்காலம் வரையில் ஒரு தொடர்ச்சியான வரலாற்றை பெற்றிருந்திருக்கிறது   சோழர் காலத்ததாக நாள்குறிக்கத்தக்க ஒரு தொன்மையான இடைக் காலத்து சிவன் கோவில் இங்கு உள்ளது. இந்நாளைய தேவி கருமாரி அம்மன் கோவில் உயிர்ப்புள்ளதாகவும், அதோடு பெண்மக்களிடையே மிகவும்  பெயர்பெற்ற ஒரு கோவிலாகவும் உள்ளது. இத்திருக்கோவில் அன்றாடம் பெரும் கூட்டத்தை ஈர்க்கின்றது,அதிலும் சிறப்பாக வெள்ளி மற்றும் ஞாயிறுகளில். இது சென்னை மற்றும் அதன் புறநகர் வாழ் மக்களுக்கு ஏறக்குறைய ஒரு திருச்செலவு தளமாகவே உள்ளது.  

அனுப்பியவர்: சேசாத்திரி
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R