கோவிலில் சிலையை படம் பிடிக்கக் கூடாதாம்! கூடாதா?கோவிலில் சிலையை படம் பிடிக்கக் கூடாது என்பது ஒரு முழு மூடநம்பிக்கை. இதை ஆதரிக்க சரியான  காரணத்தை எவராலும் கூறமுடியாது. இந்த மூடநம்பிக்கையை வலுவாக நடைமுறைப்படுத்தவே கோவிலில்  உள்ள பிற கல்வெட்டுகளை புடைய்ப்புத்தூண் சிற்பங்களைக் கூட  படம் பிடிக்கக் கூடாது என்று சட்டத்திற்கும்  மக்கள் உரிமைக்கு புறம்பாக தடை போடுகிறார்கள். அதேநேரம் சில கோயில் நிர்வாகத்தார் விரும்பினால்  உரூ.50/- அல்லது 100/-  பெற்றுக் கொண்டு படம் பிடிக்க அனுமதிக்கிறார்கள். இதுவே இந்த நம்பிக்கையில் விழுந்த ஓட்டை தான். கோவிலில் படம்பிடிக்கக் கூடாது என்பதற்கு அரசியல் யாப்பின் அடிப்படையில் எந்த சட்ட பிணிப்பும் இருப்பதாகத் தோன்றவில்லை.  உன் வீட்டில் எவரேனும் படம்பிடிக்க அனுமதிப்பாயா? அப்படித் தான் கோவிலும் என்கின்றனர். இதை ஆழ்ந்து சிந்திக்கும் கால் கோவில் என்பது வீடு போல அகம் (personal) சார்ந்த  முறையல்ல. அது ஒரு பொது முறை. மேலும், உற்பத்தி ரகசியம் சார்ந்த தொழிற்சாலையில்  படம்பிடித்தால் உற்பத்தி இரகசியம் வெளியாகிவிடும் என்ற நிலையும் இல்லாதது   கோவிலென்பது. மாறாக மக்களின் பக்தி உணர்வு, பண்பாட்டு உணர்வு, வரலாற்று உணர்வு ஆகியவற்றால் பின்னிப்பிணைந்து தான கோவில் என்ற அமைப்பு. ஆகவே மக்கள் தம்மை அதனோடு அடையாளப்படுத்திக் கொள்ள அங்கு படம் பிடித்துக்கொள்ளவே விரும்புவர்.

இப்படி எல்லாம் சொன்னாலும் கோவில் பூசகர்கள் கோவில் கல்வெட்டுகளில் எங்கெங்கே அரசர்கள் தங்கம், வைரம் போன்ற விலைமதிக்க முடியாத பொருளை  எங்கே சேமித்து வைத்திருக்கின்றனர் என்று கல்வெட்டாக வடித்துள்ளனர். அதை படித்து சிலர் அவற்றை கவரக்கூடும். நாம் நமது பொக்கிஷங்களை பாதுகாக்க வேண்டும். எனவே கல்வெட்டுகளை படம்பிடிக்க அனுமதிக்க முடியாது எனற பொய்க் கருத்தை பரப்புகின்றனர். இந்திய தொல்லியல் துறை மாநில தொல்லியல்;துறை ஆகியன ஏற்கனவே கல்வெட்டுகள் பற்றி பல நூல்களை வெளியிட்டுள்ளனர்  பொக்கிஷம் திருடுவோர் அவற்றை படிக்காமலா இருப்பார்கள். எனவே  கல்வெட்டுகளால் நாட்டின் பழங்கால பொக்கிஷங்களுக்கு ஆபத்து என்பது ஒரு முழு கற்பனை. சில கோவில்களில்  பெண்கள் அனுமதிக்கப்படாதது பற்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு அரசியல் அமைப்பில் அனைவரும் சமம் என்று தீர்ப்பு கூறி அங்கெல்லாம் இப்போது பெண்கள் நேரில் சென்று வழிபடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல தமிழக கோவில்களில் சீருடை ஒழுங்கு முறை (Dress code) அமலான போது அது தனிநபர் உரிமைக்கு எதிரானது எனவே செல்லாது என்று நீதிமன்றம் அதற்கு தடை விதித்தது.. இவ்வாறக  இன்றைய உலக நடப்பு மாறிக்கொண்டு இருக்கும் போது கோவில்களில் படம்பிடிக்கக் கூடாது என்ற முழு மூடநம்பிக்கை  மட்டும் நிலைத்திருப்பது சரிதானா என்று மக்களாகிய நாம் சிந்திக்க வேண்டும். இந்த தேவையற்ற கட்டுப்பாடு ஒழிவதற்கு, ஒழிப்பதற்கு நாம் அதற்கான நடவடிக்கையில் திட்டமிட்டு செயற்பட வேண்டும்.    எல்லாவற்றிலும் மக்கள் விருப்பமே வெற்றிபெறுகிறது. 

ஏனென்றால் இந்த புறம்பானத்  தடையைக்  காரணம் காட்டி மீறிபடம்பிடிப்பவர்களின் சட்டை, pant ஆகியவற்றில்  கையை விட்டு அடாவடியாக   கைபேசியை பறிக்கிறார்கள். இது ஒரு அத்துமீறல் ஏனென்றால் இன்று கைபேசி என்பது வெறும் கைபேசி மட்டும் அல்ல  அது கையடக்க கணினி.அதில் பலதனிப்பட்ட தகவல்கள், செய்திகள் சேமிக்கப்படுகின்றன. அது ஒருவரது  தனிச் சொத்து (personal property).அப்படியிருக்க கைபேசியை தமது அத்துமீறிய செயலால் கோவில் பணியாளர்கள்  கைப்பற்றுகிறார்கள் . அதோடு நில்லாமல் கண்டபடியாக திட்டுகிறார்கள்.  கைபேசியை  சிலமணி நேரம் வைத்திருந்து  காக்க வைத்து அதிகாரி வந்ததும் அதில் பிடித்த படத்தை Delete செய்கிறார்கள்.   நாங்களாவது delete செய்து கொடுத்து விடுகிறோம் மற்ற கோயில்களில் cell phone உண்டியில் போடப்படுகிறது என்று அதட்டுகிறார்கள்.   இந்த செயல் ஏற்கத்தக்கதாய் இல்லை..இம்மாதிரியான  செயல்களை செய்து ஒரு மூட நம்பிக்கையை தூக்கிப்பிடிக்கிறார்கள். கைபேசி பறிக்கப்பட்டவர்கள் எப்படியாவது கைபேசி வந்தால் போதும் என்று கெஞ்சிக் கொண்டிருக்கும் பரிதாப நிலை. இதைத்  தகர்க்க மக்கள் அனைவரும் கைகோர்க்க வேண்டும். காசு கொடுத்தால் படம்பிடிப்பது தப்பில்லை என்பதும் கோவில் தான்  என்பதை நினைவில் வைக்க வேண்டும்.  இந்த மூடநம்பிக்கை ஒழிக்க முன்வரவேண்டும்.  இன்று விதைத்தால் தான் சில நாள்கள் கழித்து காயும் கனியும் கிட்டும். அதே போல்த்  தான் இந்த படம்பிடிப்பு தடையிலும் எதிர்பார்த்த பயன் கிட்டும்.   இதை நான் எனது கசப்பான அனுபவத்தால் சொல்லுகின்றேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R