பனைமரக்காடு!ஈழத்து திரைப்படங்களில் ஒன்றான பனைமரக்காடு என்ற திரைப்படத்தின் முதலாவது காட்சி மெல்பேர்ணில் எதிர்வரும் ஒக்ரோபர் 6 ஆம் திகதி மாலை 3 மணிக்கும், சிட்னியில் ஒக்ரோபர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணிக்கும், பின்னர் மாலை 5 மணிக்கும் என இரண்டு காட்சிகளாகவும் திரையிடப்படவுள்ளது. அதேவேளை ஒக்ரோபர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தின் ராஜா திரையரங்கில் சிறப்பு விருந்தினர்களுக்கான மூன்று காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து ஈழத்தின் அனைத்து பகுதிகளிலும் தமிழர் புலம்பெயர் தேசங்களிலும் திரையிடுவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மெல்பேர்ண் காட்சி விபரம்
காலம்: ஒக்ரோபர் 6 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு
இடம்: Menzies Building E365, Monash University, Wellington Road, Clayton Victoria
அன்பளிப்பு: $10 வெள்ளிகள்

தாயகத்திலிருந்து புதிய வெளியீடாக கேசவராஜனின் இயக்கத்தில் வெளிவரும், பனைமரக்காடு என்ற முழுநீள திரைப்படமானது போரிற்கு பின்னரான காலத்தில், தமிழ்மக்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். ஈழத்து படைப்புக்களமானது உரியவகையில் ஆதரவு வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்படாது போனால், எமது தாயகத்தின் உயிர்ப்பான வரலாறுகள் மறைக்கப்பட்டுவிடும். இருக்கின்ற இடைவெளியில் எமது மக்களின் உணர்வுகள் சிலவற்றை சொல்லலாம், சிலவற்றை சொல்லாமல் சொல்லலாம் எனச்சொல்லும் இயக்குநர், 1986 இல் “தாயகமே தாகம்” என்ற திரைப்படத்துடன் அறிமுகமாகி, தமிழீழ திரைப்படத்துறையின் ஊடாக பிரபலமான “பிஞ்சுமனம்”, “திசைகள் வெளிக்கும்”, கடற்புலிகளின் “கடலோரக்காற்று”, “அம்மா நலமா” என்ற திரைப்படங்களையும் பல குறும்படங்களையும் இயக்கியவர்.

இருநூறுக்கும் மேற்பட்டவர்களின் உழைப்பில் உருவாகி வெளியாகும் 'பனைமரக்காடு' என்ற திரைப்பட உருவாக்கத்தின் போது, தாயகத்தில் பல்வேறு அரசியல், பாதுகாப்பு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தே இத்திரைப்படம் முழுமையாக்கப்பட்டிருக்கிறது. இத்திரைப்படத்தின் வெளியிடலில் கிடைக்கப்பெறும் நிதியை, முழுமையாகவே ஈழத்து படைப்புத்துறையை வளர்க்கும் நோக்குடன் இயக்குநரிடமே நேரடியாக வழங்கப்படவுள்ளது. அனைவரும் முழுமையான ஆதரவை வழங்கி ஒத்துழைக்குமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Media (மெல்.த.ஊ.பிரிவு) <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R