ரத்தக்காட்டேரிகள் பசியோடு உலவிக்கொண்டிருக்கும்.
நிலவும் அமைதியை அவற்றால் அங்கீகரிக்க
முடியாது.
அவற்றைப் பொறுத்தவரை
வெறுப்பும் விரோதமுமே வாழ்வியல்பு.
தலைகள் அறுபட்டு விழுந்தால்தான் அவற்றைப்
பொறுக்கியெடுத்து சூனி்யக்காரர்களின் வசியத்திறத்தோடு
அவற்றை ஆட்டியாட்டிக் காட்டி
அக்கம்
பக்கத்திலிருப்பவரை அச்சத்திலாழ்த்தி
தினமுமான குறையாத தீனிக்கு
வழிசெய்துகொள்ள முடியும்.
ரத்தக்காட்டேரிகள் நாவறள உலவிக்கொண்டிருக்கும்.
நிலவும் அமைதியை ஏற்றுக்கொள்ள முடியாமல்.
அது பயத்தால் விளைந்தது என்று
நாளும் சொல்லிச்சொல்லி உருவேற்றப்பார்க்கும்.
நயத்தக்க நாகரிகமும் நட்பும் நேசமும்
தன் துட்ட நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி
விடும்
என்று ரத்தக்காட்டேரிகளுக்குத் தெரியாதா என்ன?
அறைக்குள் பாதுகாப்பா யமர்ந்தபடி
சுற்றுவட்டாரத்திலேதேனும்
சின்னச்
சண்டை நடக்குமா என்று
சதா
கண்களை இடுக்கித்
துருவிக்கொண்டிருக்கும் அவை.
ஒரு பொறி போதும் கவிதை உருவாக என்பது
உண்மையோ பொய்யோ
அய்யோ அதுபோதுமே ரத்தக் காட்டேரிகளுக்கு.
தறிகெட்டோடி யனைத்தையும் உருக்குலைக்க.
.யாருடைய கரங்களாவது யாருடைய
குரல் வளைகளையாவது
கடித்துக்குதறிக்கொண்டேயிருக்கவேண்டும்.
வழியும் ரத்தம் நின்றுவிடாதிருக்க அதுவே வழி.
பருகும் குருதியே பிரதானம்
ரத்தக்காட்டேரிகளுக்கு.
கலவரமுண்டாகிக் கைகால்கள் பிய்த்தெறியப்
படாவிட்டால்
பின் எப்படி குருதி குடிப்பது?
புத்தியைத் தீட்டிச் சில வித்தைகளைச் செய்யும்.
சித்தங்கலங்காமல்
அதன் பாட்டில் அமைதியாயிருக்கும் ஊரின்
ரத்தம் வழியச்செய்யும் வழி பிடிபடாவிடில்
முட்டும் வெறியில்
திட்டமிட்டுப் படுகொலையைச் செய்யும்
தன் கூற்றில் கவிதையில் கலந்துரையாடலில்.
அண்டசராசரமும் சொந்தமாயிருப்பவனிடம்
நான் தருகிறேன் அரைக்காணி யென்று
அறியாமையால் அறைகூவி அவசர
அவசரமாய்
பொதுவழியைக் கழிப்பறையாக்கிக்கொள்ளும்
ரத்தக்காட்டேரியிடம்
சுத்தம் பற்றி யார் பேசுவது?
மக்களே போல்வர் மாக்களென்பார்
மக்கள் மத்தியிலிருக்கும் இரத்தக்காட்டேரிகள்
மனித உருவில்.
ஹாம்லெட்டும் ஆம்லட்டும்
ஒலிக்கக்கூடுமொருபோலெனில்
இருவேறிரண்டுமென்றறிதல் வேண்டும்.
ரத்தக்காட்டேரிகளுக்குச் கரங்களுண்டோ -
தெரியாது,
சிறகுகள் உண்டோ - தெரியாது்…
எனில் _
கண்டிப்பாக இருக்கும்
மனசாட்சியிருக்கவேண்டிய இடத்தில்
மிகப்பெரிய வெற்றிடம்.
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Next > |
---|