சஞ்சிகை:புதுசுகலாநிதி நா. சுப்பிரமணியன்இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றில் 'புதுசு' சஞ்சிகையின் பங்களிப்பும் முக்கியமானது. எழுத்தாளர் நா.சபேசனை நிர்வாக ஆசிரியராகவும், எழுத்தாளர்களான இளவாலை விஜேந்திரன், பாலசூரியன், அ.ரவி ஆகியோரை உள்ளடக்கிய ஆசிரியர் குழுவையம் கொண்டு வெளியான சஞ்சிகை. காலாண்டிதழாக ஆரம்பித்த 'புதுசு' பல்வேறு சிக்கல்கள் காரணமாக ஒழுங்காக வெளிவரவில்லையென்று அறிகின்றோம். 'புதுசு'சஞ்சிகையில் கவிதைகளே அதிகமாகவே இடம் பெற்றிருக்கின்றன. கவிதைகள் தவிர கதை, கட்டுரை என 'புதுசு'வின் பங்களிப்பு பன்முகப்பட்டது. சமூக, அரசியலை உள்ளடக்கிய கட்டுரைகள் 'புதுசு'வில் வெளிவந்துள்ளன. இலங்கைத்தமிழர் விடயத்தில் , அவர்தம் உரிமைப்போராட்டத்தில் சரியான நிலைப்பாட்டை எடுக்க இடதுசாரிகள் தவறிவிட்டனர் என்பதை வெளிப்படுத்தும் கட்டுரை, மலையகத்தமிழ் மக்களின் பிரச்சனைகள் எனப் 'புதுசு' சஞ்சிகையும் இலங்கைத்தமிழர்கள் அனைவரினதும் பிரச்னைகள் பற்றிய கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

'புதுசு' பற்றிய கலாநிதி நா.சுப்ரமணியனின் 'ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றில் 'புதுசு'வின் பண்பும் பணிவும்' என்னும் கட்டுரையினை ஈழநாடு வாரமலரில் எழுதியுள்ளார். 30.3.1986 அன்று வெளியான மலரில் இடம் பெற்றுள்ள அக்கட்டுரையை தொடராக மேலுமிரு ஈழநாடு வாரமலர்களில் வெளியாகியுள்ளது. அவற்றை வாசிப்பதற்குரிய இணைய இணைப்புகளைக் கீழே தருகின்றேன்.

ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றில் 'புதுசு'வின் பண்பும் பணிவும் - கலாநிதி நா.சுப்பிரமணியன் (ஈழநாடு வாரமலர் 30-3-1986) - http://noolaham.net/project/256/25502/25502.pdf
இனப்பிரச்னை இடதுசாரிகள் - 'புதுசு' - கலாநிதி நா.சுப்பிரமணியன் (ஈழநாடு வாரமலர் - 6-4-1986- http://noolaham.net/project/256/25509/25509.pdf
ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றில் 'புதுசு'வின் பண்பும் பணிவும் - கலாநிதி நா.சுப்பிரமணியன் (ஈழநாடு வாரமலர் - 20-4-1986
http://noolaham.net/project/256/25521/25521.pdf எழுதியவர் பெயர் தவறுதலாக நா.சுப்பிரமணியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றில் 'புதுசு'வின் பண்பும் பணிவும் - நா.சுப்பிரமணியன் (ஈழநாடு வாரமலர் - 27-4-1986 - http://noolaham.net/project/256/25528/25528.pdf எழுதியவர் பெயர் தவறுதலாக நா.சுப்பிரமணியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்களின் 'புதுசு' பற்றிய 'ஈழநாடு' வாரமலர்க் கட்டுரை.
'நூலகம்' தளத்தில் 'புதுசு' சஞ்சிகைகளை வாசிக்க:

Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R