நூல் அறிமுகம்: யானிஸ் வருஃபாகிஸ் (Yanis Varoufakis)‘பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்’ (Talking to My Daughter: A Brief History of Capitalism ) - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -

‘பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்’ என்ற கிரேக்க இடதுசாரிப் பொருளியலாளார் யானிஸ் வருஃபாகிஸ் அவர்களது நூல் குறித்து பேச உள்ளேன். இதனை எஸ்.வி. ராஜதுரை தமிழில் மிகச் செழுமையாக மொழிபெயர்த்து க்ரியா வெளியீடாக 2020 இல் வெளிந்துள்ளமை மிகப் பாராட்டுக்குரியதாகும். 203 பக்கங்களை அடக்கியுள்ள இந்நூல் மிக நேர்த்தியாக, அடிக்குறிப்புகளோடு அச்சிட்டிருப்பது வாசகனை வாசிப்பில் ஆவல்கொள்ளச் செய்கிறது. பொருளாதாரம் பற்றிய புத்தகம் என்ற தலைப்பைப் பார்த்தபோது சிரத்தை எடுத்துப் படிக்க முடியாத வகையில் மிகவும் கடினமாக இருக்குமோ அல்லது சலிப்பைத் தரக்கூடியவிதமாக இருக்குமோ என்று எண்ணினேன். பொருளாதாரத்துறை சார்ந்த வல்லுநர்கள்தான் அதனை வாசித்து விளங்குவார்கள் என்றும் சிந்தனையைக் குழப்பிக்கொண்டிருந்தேன். ஆனால் இப்புத்தகத்தை வாசித்தபோது சாதாரண நடைமுறை விஷயங்களிலிருந்து மிக உன்னதமான விஷயங்கள்வரை எல்லாவற்றையும் பொருளாதார முடிவுகள்தான் தீர்மானிக்கின்றன என்றும், வாழ்க்கைச் சம்பவங்களோடும், கலைச் சொற்களோடும் யானிஸ் அவர்கள் மகள் ஸீனியாவுக்கு அளிக்கும் விளக்கம் அற்புதமானது. மகளுக்கு பொருளாதாரம் பற்றி விளக்குவதுபோல் சுவையாக விவரிப்பது விநோதமான முயற்சியாகவும் எனக்குத் தென்பட்டது.
கோவிட் -19 தொற்று உலக நாடுகள் எல்லாவற்றிலும் பேசிச்கொண்டிருக்கும் இந்த வேளையில், நாம் இதனைப் பேசுவது பொருத்தமா என்று எண்ணும்போது உலக மக்கள் முற்றிலும் வேறுபட்ட கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பார்கள் என்ற சில அறிஞர்களின் கருத்தும் இந்நூலில் எனக்குக் கிடைத்தது. இதுவரை அனுபவித்து வந்த வசதிகளில் பெரும்பாலானவை வரலாறாக மாறப்போவதையும் காணப்போகிறோம் என்ற ஒரு கருத்தும் உண்டு. கொரோனா நோய்த் தொற்று எப்படி மனித வாழ்க்கையின் ஒரு பகுதியோ அதே போலத்தான் புத்தகக் வெளியீட்டுச் செயற்பாடுகள் இன்னொரு பகுதி என்று கூறியவர் க்ரியா ராம் அவர்கள். அவர் கோரோனா தாக்கத்தால் மறைந்தாலும், அவரையும் இவ்வேளை என் மனதில் நினைந்து அஞ்சலித்து இதனை விதைக்கிறேன். உண்மையில் இலக்கியப் படைப்புக்கள், கவிதைகள், அறிவியல் புனைகதைத் திரைப்படங்கள் போன்றன இல்லாவிட்டால்; நிகழ்காலத்தைப் புரிந்து கொள்வது கடினம்.


பேராசிரியர் பத்தக்குட்டி சந்திரசேகரம் பற்றி அண்மையில்தான் சரியாக அறிந்துகொண்டேன். பேராசிரியர்கள் கைலாசபதி, கா,சிவத்தம்பி, மெளனகுரு, பாலசுந்தரம், நா.சுப்பிரமணியன், சபா.ஜெயராசா, எம்.ஏ. நுஃமான் போன்றோரை அறிந்த அளவுக்கு இவரை நாம் பெரிதாக அறிந்திருக்கவில்லை. பல்கலைக்கழக மட்டத்தில் அறிந்திருந்த அளவுக்கு பொதுமக்கள் மத்தியில் இவரை அதிகமாக அறிந்திருக்கவில்லையென்றே கருதுகின்றேன். இதற்கு முக்கிய காரணங்கள் இவருடன் பழகிய சக பேராசிரியர்கள் போதுமான அளவில் ஊடகங்களில் இவரைப்பற்றி அதிகம் எழுதாததும், இவரது படைப்புகளைத் தாங்கிய நூல்கள் அதிக அள்வில் வெளிவராததும் என்று கருத வேண்டியுள்ளது.
சுப்ரபாரதிமணீயனின் இரு நூல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியீடு கோவையில் வெள்ளி அன்று கோவை பீளமேடு கிளஸ்டர் மீடியா கல்லூரியில் நடைபெற்றது. மாலு மற்றும் 1098 என்ற திருப்பூர் வாழ் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் நாவல்கள் Notch, 1098 என்ற பெயர்களில் மொழிபெயர்ப்பாகி வெளிவந்துள்ளன Notch நாவலை கோவையைச் சார்ந்த பேரா .பாலகிருஷ்ணன் மொழிபெயர்த்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நேற்று 26 ஆம் திகதி உடல்நலக்குறைவால் மறைந்துவிட்ட தோழர் தா. பாண்டியன் அவர்கள், முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் – அதாவது 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதியே இறந்திருக்கவேண்டியவர் ! இதனை வாசிக்கும் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா..? அந்தத் திகதியை எவரும், ஏன் முழு உலகமுமே மறந்திருக்காது. அந்தநாள் எத்தகையது என்பதை தா. பாண்டியனின் வாக்குமூலத்திலிருந்தே இங்கே தருகின்றேன். அந்த வாக்குமூலத்தை அவர் தமது 69 வயதில்தான் பதிவுசெய்துள்ளார்.
கொஞ்ச நாளாய் தான் அந்த இயற்கை எழில் சூழ்ந்த ,அதாவது பச்சை மரங்கள் செடிகள் கொண்ட நடைபயிலுகிற பூங்கா என்று சொல்ல முடியாத, காடு என்றும் சொல்ல முடியாத பச்சை வளையப்பகுதியிலே நடக்கிறான். எல்லாம் கொரானாவின் கதவடைப்பால் வந்த உபயம். இதற்கு முந்தியும் பறவைகள் கீச்சிடும் அந்த பகுதி இருந்தது தான்.இறங்கி இருக்கவில்லை.வீட்டிலேயே கனநாள் கிடைக்கையில் ஏற்பட்ட உடல் மூட்டுகளில் வலியோடு ஏற்பட்ட கீரீச் கிரீச் என்ற சத்தங்களிற்குப் பிறகு,நடப்போம் என இறங்கி இருக்கிறான்.இந்த நாட்டில் எல்லாப் பகுதியிலும் பாம்பு போல போற இந்த பச்சை வழிப்பாதைகள் கிடக்கின்றன. எவ்வளவு பேர்களுக்குத் தெரியுமோ?, நாம் குளிக்கிற , பாத்திரம் கழுவுற தண்ணீர் , சலவை செய்கிற நீர், மழை, பனி நீர் எல்லாம் வீதிகளில் வலையமைப்பில் ஓடுற குழாய்க்கால்களில் ஓடி ,அடைப்புகள் ஏற்பட்டால் கிடக்கிற மனிதர் இறங்கி வேலை செய்கிற துளைகள் போன்ற கட்டமைப்புகளுடன் சேர்கின்றன.பிறகு இவை ஓடி வந்து பெரிய ஏரிகளை அடைகின்றன. இந்தக் கட்டமைப்பில் தொழிற்சாலைப் பகுதியிலிருந்து வெளியேறுகிற நீரை வடிகட்டி இரசாயன கலப்பில்லாது விட வேண்டும் என்ற விதிகளை சிலர் மீறி விடுகிறார்கள். பிறகென்ன நாம் குடிக்கிற நீரில் நஞ்சு கலந்து விடுகிறது. ஏரி நீரைத் தான் நாம் எல்லோருமே குடிக்கிறோம். சில பகுதிகள் பாதிக்கப் பட்டுக் கிடக்கின்றன. அவை பெரும்பாலும் முதல்குடி மக்களின் பகுதிகளாக கிடப்பது தான் பரிதாபம். தொழிற்சாலைகளுக்கும் வடிகட்டும் விசேச நிலையங்கள் இருக்க வேண்டும். அவற்றை அரசாங்கள் செய்யாது அவர்களே செய்ய வேண்டும் என தட்டிக் கழித்து விட்டதாலேயே தவறுகளும் கணிசமாகி விட்டிருக்கின்றன. மனிதக்கழிவு நீர்களுக்கு வடிகட்டும் விசேச நிலையங்கள் இருக்கின்றன. அதில் வடிகட்டி உர உப்புகள் கூடத் தயாரிக்கப்படுகின்றன. வடிகட்டிய நீரும் இதே வாய்க்காலிலே விடப்படுகின்றன. இலங்கை. இந்தியா போன்ற நாடுகளில் குடிமனைகளில் பரவி சேதம் ஏற்படுத்துபவை இங்கே ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன . இந்த வாய்க்கால்கள் சில நதிகள் என்றும் கூட அழைக்கப்படுகின்றன. நீளம் கூடியதால் அழைக்கிறார்களோ? மழைக்காலத்தில் பெருமளவு நீர் பெருக்கெடுத்து ஓடுறதும் ஏற்படுகின்றது.


படித்தவர்கள் பலர் பிற நாடுகளில் வாழ்ந்து , தம் பொருள் வளம் பெருக்குவதையே நோக்காகக்கொண்டு வாழ்கையில், இவர் தான் கற்றதை, அறிந்ததைத் தன் மண்ணுக்கு வழங்குவதற்காக வந்தார். தன் மண்ணின் அனர்த்தங்களை எதிர்கொண்டு , சமூக, அரசியல் ரீதியிலும் அவற்றைக் களையத் தன் பங்களிப்பினைச் செய்தார். அதற்கு இவருக்கு எம் மண் கொடுத்த பரிசு? தூக்கிப் போற்றிப் பாதுகாத்திருக்க வேண்டிய மண் புழுதியிலே போட்டு மிதித்துச் சீரழித்தது. எம் மண்ணின் வரலாற்றின் அவமானம் இம்மண்ணின் மகளின் மடிவு! முடிவு! தானிழைத்த வரலாற்றுத் தவறினை, இவரை நினைவில் வைப்பதன் மூலம் ஓரளவு தீர்த்துக்கொள்கிறது. எந்தக் கல்வி நிலையத்துக்காக இவர் தன் வாழ்வையே அர்ப்பணித்தாரோ அந்தக் கல்வி நிலையம் இதுவரை இவரை நினைவு கூர்ந்திட என்ன செய்தது? ஒரு சிலை கூட வைத்ததா? நினைவு கூர்ந்ததா? மிகவும் வெட்கக்கேடான விடயமென்னவென்றால் .. இவரிடம் கல்வி கற்றவர்களில் சிலரே இவரின் முடிவுக்கும் காரணமாக இருந்தார்களென்ற தகவல்கள்தாம்.
ஈழத்து இலக்கியத்தோப்பில் வைரம்பாய்ந்த தனி விருட்சமாக, ஆழ வேரோடி, பரந்தகன்ற கிளை விரித்து, குளிர்நிழல் பரப்பிநிற்கும் தனித்த ஆளுமைதான் கே.எஸ். சிவகுமாரன். இந்த பெரும் இலக்கிய வியக்திக்கு இணைசொல்ல இங்கே யாருமில்லை. நூறு கவிஞர்களைக் காட்ட முடியும்; நூறு நாவலாசிரியர்களைக் காட்ட முடியும்; நூறு கட்டுரையாளர்களைக் காட்ட முடியும். கே.எஸ். சிவகுமாரனுக்கு நிகரான பல்துறைசார்ந்த ஓர் எழுத்தாளனை ஈழத்து இலக்கியப்பரப்பின் கடந்த அறுபது ஆண்டுகால எல்லையில் காண்பதற்கில்லை. இந்த அறுபதாண்டுகாலத்தில் தொடர்ந்த வாசிப்பே அவரது சுவாசமாக இருந்திருக்கிறது. அந்த வாசிப்பின் வியாபகம் அசலானது. அயராத எழுத்துப்பணியே அவரின் மூச்சாக இருந்திருக்கிறது. இவரின் எழுத்துக்கள் 5,000 பக்கங்களில், முப்பத்தேழு நூல்களாக மலர்ந்திருக்கின்றன. ஆங்கிலத்திலும் தமிழிலுமாக இன்னும் நூல் வடிவம் பெறாத இவரின் எழுத்துக்கள், இன்னும் ஓர் ஆயிரம் பக்கங்களை மிக எளிதாகத் தாண்டிவிடும். இந்தளவு பல்துறை சார்ந்து, ஆங்கிலத்திலும் தமிழிலுமாக எழுத்தை ஓர் இயக்கமாக எண்ணிச் செயற்பட்ட வேறு ஒருவரை என்னால் சொல்ல முடியவில்லை.
கவிஞர் முத்துலிங்கத்தின் சிந்தையை வசியம் செய்யும் வரிகள், மெல்லிசை மன்னரின் இசை, கே.ஜே.ஜேசுதாஸ் & வாணி ஜெயராமின் குரல், எம்ஜிஆர் & லதாவின் சிறப்பான நடிப்பு , என்.பாலகிருஷ்ணனின் ஒளிப்பதிவு எல்லாமே நன்கிணைந்து எனைக் கவர்ந்த கானமிது. கவிஞர் முத்துலிங்கத்தின் வரிகளை ஒவ்வொன்றாக இரசித்தவாறே, அவற்றைப் பாடும் பாடகர்களின் குரல்களையும், அபிமான நடிகர்களின் நடிப்பையும் இரசித்துப்பாருங்கள் நிச்சயம் நீங்கள் உங்களையே மறந்து விடுவீர்கள். இப்பாடலின் பொருளை விளங்கி அமைக்கப்பட்டுள்ள இசை, அதையுணர்ந்து அனுபவித்துப் பாடும் பாடகர்களின் குரலினிமை , விளங்கி நடிக்கும் நடிகர்களின் நடிப்பு எல்லாமே என்னை ஈர்த்தனவென்பேன்.
தற்போதுள்ள தமிழ் எழுத்தாளர்களில் ஷோபா சக்தியின் எழுத்து மிகவும் வலிமையானது. ஷோபாசக்தி சிறந்த கதைசொல்லி என்றாலும், அவரது படைப்புகளில் பாவிக்கப்படும் மொழியே அக்கதை சொல்லலில் பிரதான பங்கினை வகிக்கின்றது. அந்த வலிமையான மொழியே அப்படைப்புகளில் வரும் பாத்திரங்களை முதல் வாசிப்பிலேயே நீண்ட காலத்துக்கு மறக்க முடியாதபடி செய்து விடுகின்றது. தனிப்பட்டரீதியில் நான் இவ்வகை மொழியின் உபாசகனல்லன். எனக்குத் தெளிந்த நீரோடை போன்ற , சிக்கலான விடயங்களையும் சிந்திக்க வைக்கின்ற எழுத்து நடையே விருப்பத்துக்குரியது. டால்ஸ்டாய், ஃபியதோர் தத்யயேவ்ஸ்கி போன்றோரின் படைப்புகளில் பாவிக்கப்பட்டுள்ள மொழி எனக்கு விருப்புக்குரியது. ஷோபா சக்தியின் மொழி எனக்கு யூதரான ஜேர்ஸி கொஸின்ஸ்கியின் 'நிறமூட்டப்பட்ட பறவைகள்', வால்டேயரின் 'கண்டிட்', ஜெயமோகனின் 'ஏழாவது உலகம்' போன்ற நாவல்களில் பாவிக்கப்பட்டுள்ள மொழியினை நினைவு படுத்தும்.
அமுதா போட்டிருந்த செருப்பை ரோட்டில் தேய்த்து கொண்டே அவள் ஓட்டி வந்த ஸ்கூட்டியை நிறுத்த முயன்றாள். கைகளில் பிடித்து நிறுத்தும் பிரேக் இருந்தும் அமுதாவிற்கு கால்களால் நிறுத்துவதே பரிச்சியமான ஒன்று.
மழையிருள் இறுக்கிய வானத்தில் அவ்வப்போது எங்கோ வெட்டிய மின்னலின் ஒளிக்கீறுகள் ஓடி மறைந்து கொண்டிருந்ததைக் கண்டபடி, தோளில் துவாயைக் போர்த்தி குளிரை மறைத்துக்கொண்டு ஜன்னலோரத்தில் வெளிபார்த்து நின்றிருந்தாள் குசுமவதி. தேசத்தின் நிலைபோல, காலநிலையும் நன்னிமித்தம் ஏதுமற்று இருண்டு விறைத்த குளிருக்குள் கிடப்பதாய்ப்பட்டது அவளுக்கு. நான்கு நாட்களாக மழை பெய்துகொண்டிருந்தது. கூதல் காற்று தகரக் கூரையைப் பிய்த்தெறியும் மூர்த்தண்யத்துடன் ஓங்காரமாய் அலைந்தடித்தது.




பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









