ஆய்வு: தமிழக அரசமைப்பு முறையில் ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும்
ஆய்வு முன்னுரை
தமிழிக அரசியல் சரித்திரத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட அரசியல் சார்ந்த அறநெறிகளை ஆராய்ந்தோமானால் உலக நாடுகள் முழுவதற்கும் இலக்கியப் பேராறு மூலம் ஒரு நாட்டையாளும் அரசனுக்குரிய அறங்களை மிக நேர்த்தியோடு எடுத்துச்சொன்ன பெருமை தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் உண்டு. தமிழக வரலாற்றில் தமிழ் மண்ணில் ஏற்பட்ட பல்வேறு போர்களாலும், பூசலாலும் காலந்தோறும் வெவ்வேறு ஆட்சிமுறைகள் வழக்கத்தில் இருந்து மக்களாட்சி முறையே இன்று நிலைத்துள்ளது. அரசன் என்பவன் அரச பரம்பரை அல்லது வாரிசுரிமையின் காரணமாகவோ, கணக்கற்ற படைவலிமையின் காரணமாகவோ, மக்களை ஆளும் இறைமையைப் பெற்றுக் கொண்டு அவர்களை அரசாண்ட வரலாறுகளின் அனுபங்களிலிருந்தே இன்றைய அரசியல்வாதிகள் அறநெறிகளை கற்றுக்கொண்டு மேடை தோறும் பேசிக்கொண்டிருக்கின்றனர். ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ என மோசிகீரனாரும், ‘குடியுயரக் கோன் உயர்வான்’ என்றுரைத்த ஓளவையார் போன்ற தமிழ்ப் புலவர்களும் அறிஞர்களும் காலந்தோறும் ஆய்ந்தறிந்து தமிழக அரசியல் அறங்களை செவ்வனே எடுத்துரைத்துள்ளனர். அதன்வழி நின்று அரசனுடைய அங்கங்களாகத் திகழும் ஐம்பெருங்குழு, எண்பேராயம் போன்ற அரசவைக்குழுவின் வழிகாட்டுதல்களையும், செயற்பாட்டம்சங்களையும் தமிழிலக்கியங்கள் வாயிலாக எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.
ஐம்பெருங்குழு எண்பேராயம்
“ஐம்பெருங்குழு அமைப்பில், ‘அமைச்சர் (Chief Minister)> புரோகிதர் (Priest)> சேனாபதியர் (Commender - in - Chief)> தாவாத் தொழில் தூதுவர் (Ambassador)> சாரணர் (Intelligence Officer) ஆகியவர் அடங்கிய குழுவே ஐம்பெருங்குழு எனப்படும். இவ்வைந்து கூட்டத்தை பஞ்சாயம் என்றும் அழைப்பர். கரணத்தியலவர் (Chief Executive Officer)> கருமகாரர் (Priests)> கனகச் சுற்றம் (Treasury Officials)> கடைகாப்பாளர் (Guards)> நகரமாந்தர் (Great Men of the City)> படைத்தலைவர் (Captains of Troops)> யானைவீரர் (Elephant -Warriors )> இவுளிமறவர் (Cavalry - Officers) ஆகிய இவர்கள் எண்பேராயத்தில் இடம்பெற்றிருப்பார்கள்’ என்பர் அ.கி.பரந்தாமன்.” (வரலாற்றுக் கட்டுரைகளும் பிறவும். ப.101) அரசியலில் அரசனுக்குத் துணையாக அமைவன ஐம்பெருங்குழுவும், எண்பேராயமும் என்பதனை,
“ஆசான் பெருங்கணி அருந்திறல் அமைச்சர்
தானைத் தலைவர் தம்மொரு குழிஇ”
(சிலம்பு.வஞ்சிக்காண்டம் கால்கோள்காதை.2-3)

முன்னுரை:
முன்னுரை
மனிதன் அவனைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழலைக் கண்டு மகிழத் தொடங்கிய அன்றே அழகுணர்ச்சியும் அரும்பியது எனலாம். அழகு என்ற சொல்லாட்சியின் வீச்சும், பயன்பாடும் பரந்துபட்டது. அழகு என்ற சொல், பொருள் வரையறைக்கு உட்படாதது. ""அழகு என்பது காண்டலும் கற்பனை அனுபவமுமே''1 என்று அழகியல் கொள்கையாளர் கூறுவர். (அப்ப் க்ஷங்ஹன்ற்ஹ் ண்ள் ண்ய் ல்ங்ழ்ஸ்ரீங்ல்ற்ண்ர்ய் ர்ழ் ண்ம்ஹஞ்ண்ய்ஹற்ண்ர்ய்) இந்த அடிப்படைக் கருத்தை இடைக்கால உரையாசிரியரான "பேராசிரியர்' மிகவும் தெளிவாய்க் கூறியுள்ளார் அவர், ""திரு என்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை, நோக்கம் என்றது அழகு''2 ஆகும் என்று கூறுகின்றார். அழகியல் என்ற சொல் அழகான பொருளை மட்டும் குறிப்பதன்று. ஒவ்வொருவரின் பார்வையிலும் அழகு வேறுபடலாம். ""அழகு என்பது ஆழந்த பொருளில் இல்லை; ஆழந்த உள்ளத்தில் இருக்கிறது'' 3என்று வாழ்வியல் களஞ்சியம் பொருள் தருகிறது. மேலும், ""அழகு என்பது அனுபவமே அல்லாது அநுபவிக்கப்படும் பொருள் அன்று. அது காணப்படும் பொருளில் இல்லை. காண்பவர் தம் கருத்தில் இருக்கிறது...''4 என்பர். அழகியல் இன்பமயமான உள்ளக் கிளர்ச்சியை ஏற்படுத்துவது. புனையப்படும் பொருளின் அழகையோ, அழகின்மையையோ சார்ந்ததன்று; தனிப்பட்ட மனிதனின் உள்ளத்தைச் சார்ந்தது. அத்தகையவனைக் கலைஞன் என்று கூறுவர்.
முன்னுரை
தமிழகம் நன்கறிந்த பாவலராகவும் தமிழ்வளர்ச்சிக்குப் பாடுபடுபவராகவும் இன்று நம்மிடையே வாழ்ந்து வருபவர்; ம.இலெனின் தங்கப்பா (08.03.1934). பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர், பாவலர், படைப்பாளர், தமிழ்ப்போராளி எனப் பல தளங்களில் பயணிப்பவர். பன்மொழி அறிஞர் இளமையிலேயே தன் தந்தையாரிடம் தமிழ்க்கவிதை பற்றியும், பகுத்தறிவுப் பார்வை பற்றியும் அறிந்து கொண்ட இவர் இன்றுவரை அவற்றைக் கடைப்பிடித்து வருகிறார். உயர்நிலைப்பள்ளியில் பதினான்கு ஆண்டுகள் வரலாறும், ஆங்கிலமும் பயிற்றுவித்த இவர், கல்லூரியில் இருபது ஆண்டுகள் தமிழ்இலக்கியம் கற்பித்தார். இளமைக்காலத்தில் ஆங்கிலத்தை விரும்பிக்கற்றார். இயல்பாகவே இயற்கை எழிலில் மிகுந்த நாட்டம் கொண்டவராதலால் 'ஷெல்லி', கீட்ஸ், வோர்ஸ்வொர்த் ஆகியவர்களின் பாடல்கள் இவரை ஈர்த்தன.
“அழுதேன்….! அவனையும் அவனது தாய் தந்தையரையும் நினைத்து, உண்மையில்…. நான் வாய்விட்டு அழுதேன்!” 
புதுக்கவிதைகளின் படைப்பு முறை உத்திகளில் படிமம் ஒன்றாகும். ‘Image’ என்னும் சொல்லில் இருந்து உருவெடுத்தது இதுவாகும். கவிஞர் எஸ்ரா பவுண்டு புனைவியக்கக் கொள்கையினை எதிர்த்த இளம் கவிஞர்களை ஒன்று திரட்டி ஒரு அமைப்பை நிறுவினார். பிற கவிஞர்களிடமிருந்து அவர்களை பிரித்துக் காட்டுவதற்காக படிமக் கவிஞர்கள் (Imagist) எனப் பெயர் சூட்டினார். படிமக் கவிஞர்களின் கொள்கையாக பின்வருவனவற்றை வெளியிட்டார். இக்கொள்கை படிமத்தின் இயல்பினை வரையறைகளை விளக்கும் வகையில் அமைகின்றது.
இலக்கியம் என்பது நாம் வாழும் சமுதாயத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி ஆகும். சங்க இலக்கியத்தின் மூலம் சங்க காலமக்களின் வாழ்வியல், சமூகம், பண்பாடு, கலாச்சாரம், முதலானவற்றை அறியலாம். சங்க காலமக்கள் வாழ்வு அகம், புறம் என இரண்டாகப் பிரித்திருந்தனர். அகவாழ்வு களவு, கற்பு என இரண்டாக பிரிக்கப்பட்டு இருந்தன. திருமணத்திற்கு முந்தைய வாழ்வினை களவு என்றும், திருமணத்திற்கு பின் அமையும் வாழ்வினை கற்பு வாழ்வு என காரணத்தின் பெயர்கொண்டு பிரித்திருந்தனர். ஒழுக்க நெறி என்பது சங்க கால மக்களின் வாழ்வில் இரண்டரக் கலந்து விட்ட நிலையினை சங்க இலக்கியம் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
பாட்டியல் நூல்களால் வரையறுத்துக் கூறப்பட்ட சிற்றிலக்கிய வகைகளுள் பிள்ளைத்தமிழும் ஒன்று.
சங்க காலத்தில் மாந்தர்களிடையே நிலவிய அகப்புற உணர்வுகளை உணர்த்துவதற்குத் தேவையான புலப்பாட்டு முறைகளையும் கொள்கைகளையும் வரையறை செய்துகொண்டு அவற்றிற்கிணங்க இயற்றப்பட்ட தமிழ் இலக்கிய மரபினை எடுத்துரைக்கும் பகுதி பொருளிலக்கணமாகும். இப்பொருளிலக்கணத்தில் தொல்காப்பியர் தன் காலத்தில் நிலவிய இலக்கியங்களைத் தரவுகளாகக் கொண்டு செய்யுளியலில் இலக்கியத்தின் வடிவம், உள்ளடக்கம், உத்திகள், வகைமை ஆகியவற்றைப் படைத்துள்ளார் எனலாம். பிற்காலத்தில் இவைகள் அனைத்தும் இலக்கியக் கோட்பாடுகளாகத் தோற்றம் பெற்றன. செய்யுளியலின் உறுப்புகள் இலக்கியக் கோட்பாடுகளாகத் திகழ உரையாசிரியர்களின் உரைகள் நமக்கு ஏதுவாக அமைகின்றன. தொல்காப்பியரின் பயன் கோட்பாடு சங்க காலச் சமூக இயங்கியல் தளத்தில் தலைவன், தலைவி காதல் வாழ்வில் நிகழ்ந்த மாற்றம் மற்றும் சமுதாயத்திற்குத் தேவையான நற்பயன்களை இலக்கியம் படிக்கும் வாசகனைச் சென்றடையும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் இன்றைய நவீன இலக்கியங்களான நாவல், கவிதை, சிறுகதை போன்றவைகளிலும் தொல்காப்பியரின் பயன் கோட்பாட்டினைப் பொருத்திப் பார்க்கலாம் என்பது இக்கட்டுரையின் நோக்கமாகும். ஓவ்வொரு இலக்கிய வகையும் ஏதோ ஒரு பயனைச் சமுதாயத்திற்கு விட்டுச்செல்கிறது அவற்றினை இனம்கண்டு வெளிக்கொண்டு வரலாம்.
உலகமொழிகள் எல்லாம், வார்த்தைகளுக்கு தடுமாறிக் கொண்டிருந்த பொழுது நம் தமிழ் மொழியானது இலக்கண இலக்கியங்களை தன்னகத்தே உருவாக்கி செழிப்புற்றிருந்தது. அதில், குறிப்பாக உலகப்பொதுமறை எனப்போற்றப்படும் திருக்குறள் எல்லா துறைகள் பற்றிய உள்ளடக்கத்தையும் கொண்டிருந்தது. அண்மைக்காலத்தில் உலகநாடுகளில் அரசு மற்றும் தனியார் துறைகளில் வெற்றிக்குரிய தொழிலாக போற்றப்படும் வணிகம், வர்த்தகம், நிர்வாகம், நிதிமேலாண்மை போன்றவற்றின் அடிப்படைக்கொள்கைகள் நூற்றுக்கும் மேற்பட்ட உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளில் இடம்பெற்றுள்ள கருத்துகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
முன்னுரை:

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









