ஆய்வு: கனடாவில் தமிழ் இலக்கியம்

ஈழத்து இலக்கியப் பரம்பலின் முக்கிய வகிபாகமாக விளங்குவது புலம்பெயர் இலக்கியம். அதன் வகை தொகையற்ற பெருக்கம்;; அவற்றை நாடுகள் ரீதியாகப் பிரித்துப் பார்க்கவேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. புலம்பெயர் இலக்கியத்தின் ஆழ்ந்தகன்ற வெளிப்பாடு மட்டுமன்றி அவற்றின் களம், பேசுபொருள் ஆகியவையும் அவை பற்றிய தனித்தனியான பார்வையின் அவசியத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்தவகையில் கனடா தமிழ் இலக்கியம், அவுஸ்ரேலியா தமிழ் இலக்கியம், நோர்வே தமிழ் இலக்கியம், இங்கிலாந்து தமிழ் இலக்கியம், பிரான்ஸ் தமிழ் இலக்கியம்; என நாடுகளை எல்லையாகக் கொண்டு புலம்பெயர் படைப்பிலக்கியம் வகுக்கப்படுகிறது.
கனடா புலம்பெயர் படைப்பிலக்கியத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் கனடாவில் வாழும் மூத்த எழுத்தாளர்களுடன் புதிய இளம் எழுத்தாளர்களும் கைகோர்த்து பெரும் படைப்பிலக்கியத் துறையாக கனடா தமிழ் இலக்கியம் விரிவுகண்டிருக்கிறது. சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை, நாடகம், கூத்து, திரைப்படம், சிறுவர் இலக்கியம், பத்தி எழுத்து என பல்வேறு வடிவங்களில் படைப்பாளிகள் தமது பங்களிப்பை வழங்கிவருகிறார்கள்.
கனடா தமிழ் இலக்கியம் பற்றிய ஆரம்பக் கட்டுரையாக, என்னால் முடிந்தவரை கனடாவில் படைப்பிலக்கியத்துறையில் ஈடுபட்டிருக்கின்ற சகலரையும், சகல படைப்புக்களையும் பதிவுசெய்யும் ஒரு முயற்சியாக இக்கட்டுரை அமைகிறது.
கவிதை:
மரபுக்கவிதை, புதுக்கவிதை, நவீனகவிதை, ஹைக்கூகவிதை எனப் பல பரிணாமங்கள் கண்ட கவிதை வரலாறு புகலிடக் கவிதை என்னும் புதியகவிதைக் களத்தில் சர்வதேசத் தன்மையோடு முற்றிலும் மாறுபட்ட புத்துலகக்கவிதையாய் இன்று நெடிதுயர்ந்து நிற்கிறது. இழப்புக்கள், வேதனைகள், விசும்பல்கள், விரக்தி, பெருமூச்சுக்கள், பொருமல்கள், காணாமல்போதல்கள், அகதிப்பயணம், கடத்தல்கள், எல்லைதாண்டிய பதுங்கல்கள், அந்நியதேசம், புரியாதமொழி, புதுக்கலாச்சாரம், பழக்கப்படாத காலநிலை என்று புலம்பெயர் ஈழத்தமிழனின் வாழ்வின் பல்வேறு அனுபவ அங்கங்களும் அவனுடைய இலக்கியத்தின் கச்சாப்பொருளாகவும் வெளிப்படுகின்றன. கவிதை அதற்கு அனுசரணையான வடிவமாக பெரும்பாலும் கையாளப்பட்டிருக்கிறது. மதுக்கோப்பையில் மிதந்தோடும் மதுவைப் போல புலம்பெயர் படைப்பாளிகளின் கவிதைகளின் உணர்வுகளும் பொங்கிப் பிரவாகிப்பன.
கனடாவின் இலக்கிய, சமய விழாக்களில் பெரிதும் களைகட்டி நிற்பது கவியரங்க நிகழ்வுகள்தான். புலம்பெயர் வாழ்வின் அவதியில் கிடைக்கின்ற சிறுபொழுதுக்குள் கவியரங்கக் கவிதைகள் படைப்பதும் இலகுவாகவே இருக்கிறது. கவிதையின்பால் ஈடுபாடு கொண்டவர்கள் இணைந்து கவிதை வகுப்புக்கள், கவிதை எழுதுவது எப்படி என்பது தொடர்பான கருத்தரங்குகள் என்பனவும் அவ்வப்போது நடாத்துவார்கள். வானொலி நிகழ்வுகளிலும் கவிதைக்குத் தனியிடம் இருக்கிறது. கனடாவில் வாழும் கவிஞர்களின் தொகையும் அதிகம்தான். அந்தவகையில் கவிஞர் வி.கந்தவனம், தீவகம் வே.இராஜலிங்கம், அனலை ஆறு இராசேந்திரம், சேரன், செழியன், திருமாவளவன், சக்கரவர்த்தி, இரா. சம்பந்தன், இராஜமீரா இராசையா, சபா அருள்சுப்பிரமணியம், மா.சித்திவினாயகம், வீணைமைந்தன் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

சமுதாயம்,, சமூகம் - விளக்கம்
மனித வாழ்வியல் நெறிகளுள் முதன்மையானது அறம். அறமே நிலையற்ற வாழ்க்கையை நிலைபேறுடையதாக மாற்றும் கருவி. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் 11 அறநூல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் முதன்மையாக விளங்கும் சிறப்புடையது திருக்குறள். திருக்குறளைப் பாகுபடுத்திய வள்ளுவப் பெருமான் அறத்துப்பாலை முதலில் வைத்து பொருட்பாலையும் காமத்துப்பாலையும் அதற்கு அடுத்து கூறியிருப்பதிலிருந்து அறத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளமுடிகின்றது. அறத்தின் பல்வேறு வடிவாக்க நிலைகளை ஆராய்வதே கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.
ஊரில் ஒரு கொஞ்சக் காலம் நான் ஒரு வாத்தியாராக வாழ்ந்திருந்தேன். அந்த மரியாதையின் நிமித்தமோ தெரியாது, இப்போதும் என் கண்முன்னே சிலர் என்னை ’மாஸ்ரர்’ என்று கூப்பிடுவர். கண்காணாத் தருணங்களில் சிலர் ‘வாத்தி’ என்றும், வேறு சிலர் ’சட்டம்பி’ என்றும் குறிப்பிடுதல் சாத்தியம்! என்னைப் பொறுத்தவரை, என் சொந்தப் பெயரைவிட இனிமையான வேறெந்த சொல்லையும் நான் இதுவரை கேட்டதில்லை! ஆகையால் மாஸ்ரர் என்ற அடைமொழி எனக்குப் பொதுவாகப் பிடிப்பதில்லை. நான் எதிலும், எவர்க்கும், எப்போதும் ஒரு மாஸ்ரராக இருந்ததில்லை என்பதுடன் - இருப்பதில் எனக்கு விருப்பும் இல்லை என்பது பிடிப்பின்மைக்கான பிரதான காரணங்களுள் ஒன்று. இதேவேளை, இந்த மாஸ்ரர் எனும் வார்த்தைக்குப் பின்னால், வரலாற்று அடிப்படையில் இன்னொரு மாசு படிந்த பக்கமும் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டி, அதன் தோற்றுவாயையும், சமகால சமூகத்தில் அது தோற்றுவித்துவரும் தொல்லை-தொந்தரவுகளையும் தொட்டுக்காட்டுவதே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும்.
தற்காலப் பெண்ணியவாதிகள் பாலுறவை முன்னிறுத்தியே பெண்விடுதலைக்கான போராட்டத்தை துவக்கியுள்ளனர். பாலியல் அடிமைத்தனமே அனைத்துச் சிக்கலுக்கும் காரணம் என்பது இவர்களின் வாதமாகும். ஆதலால், ‘புனிதப்படுத்தப்பட்ட’, ‘மர்மப்படுத்தப்பட்ட’ ஆண் - பெண் அந்தரங்கம் பாடுபொருளாக கட்டமைக்கப்பட்டுள்ளது. தந்தை வழிச் சமூகம் ‘குடும்பம்’ என்ற நிறுவனத்தின் மூலமாகப் பெண்ணின் பாலியலை அமுக்கி வந்ததாகக் கருதியே பாலுறவைப் பாடவிளைந்துள்ளனர்.
ஈழத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெரும்புலவரான சிவசம்புப் புலவர் காலம் தொடர்பாக ஆராய்ச்சியாளர்களிடையே மாறுபாடான கருத்துகள் நிலவுகின்றன. புலவரது நூல்கள் அச்சாகி வெளிவரத் தொடங்கிய காலத்திலிருந்து, அச்சாகி வெளிவந்த நூல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதிய எழுத்துக்களில் புலவரது காலம் பற்றிய பல்வேறுபட்ட கணிப்புக்களை அவதானிக்க முடிகின்றது. புலவரின் செய்யுட்களை அவர் வாழ்ந்த காலப்பின்புலத்தில் வைத்து ஆராய்வதற்கு அவரது காலம் பற்றிய சரியான கணிப்பு அவசியமாகும். இத்தேவை கருதியே புலவரின் காலம் தொடர்பாக இச்சிறுகட்டுரை ஆராய முனைகிறது. 
“தமிழில் மாதிரி உரைநடை நவீனம் பொது மக்களுக்கு இதுவரை அளிக்கப்படவில்லை. ஆகையால் இந்நூல் வாசகர்களுக்கு சுவை பொருந்தியதாகவும் போதனை நிறைந்ததாகவும் இருக்கும் என எதிர்பார்க்கின்றேன்” என தமிழுக்குப் புதிய உரைநடை நவீனமான நாவலெனும் இலக்கிய வடிவம் வேதநாயகம்பிள்ளையினால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டதிலிருந்து. நாவல் எனும் இலக்கிய வடிவம் பல்வேறு வளர்ச்சிக்கு உட்பட்டு இந்நூற்றாண்டிலும் செல்வாக்குப் பெற்ற இலக்கிய வடிவமாகவும் மிளிர்கின்றது. 
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளையில் பிறந்த முல்லைமணி என்னும் புனைபெயரைக் கொண்ட வே.சுப்பிரமணியம் இலங்கைப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் சிறப்புக்கலைமாணிப் பட்டத்தைப் பெற்றதோடு இவரது கலை இலக்கிய ஆய்வுப்பணிகளை அங்கீகரித்து 2005ல் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப் பட்டத்தையும் வழங்கியது. பாடசாலை அதிபராகவும், ஆசிரியகலாசாலை விரிவுரையாளராகவும், பிரதம கல்வி அதிகாரியாகவும், மாவட்டக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றிய இவர் நாடகம், சிறுகதை, நாவல், கவிதை, வரலாற்று ஆய்வுகள், இலக்கியத்திறனாய்வு போன்ற துறைகள் மூலம் தமிழ் எழுத்துலகில் கால் பதித்தார். இவர் மல்லிகைவனம், வன்னியர்திலகம், மழைக்கோலம், கமுகஞ்சோலை போன்ற நாவல்களைப் படைத்துள்ளார். இவற்றுள் “கமுகஞ்சோலை” என்னும் நாவல் இங்கு அலசப்படுகிறது.
மனித சமூகம் இனக்குழு வாழ்க்கை முறையில் இருந்து குடிமைச் சமூக நாகரிகத்தை ( civic society ) நோக்கி வளா்ந்த ஒரு வளா்ச்சிக் கட்டத்தை சங்ககாலம் என்று குறிப்பிடுவா்.இச்சங்க கால வாழ்க்கை முறைகளைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.சங்கம் மருவிய கால இலக்கியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள சிலப்பதிகாரத்தில் சங்க இலக்கியப் பதிவுகள் சில இடங்களில் அவ்வாறேயும் சில இடங்களில் மாற்றம் பெற்றும் காணப்படுகின்றன. அவற்றை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
முன்னுரை
முன்னுரை
ஒவ்வொரு காலகட்ட சமூக, அரசியல், கல்வி மற்றும் மொழி மாற்றங்கள் சார்ந்த அழுத்தங்களின் வெளிப்பாடே இலக்கண நூல்களை உருப்பெறச் செய்கின்றன. இலக்கணம் சமூகத்தின் உற்பத்திப் பொருளாக உள்ளது. சமூகத்தின் அடையாளப்படுத்தும் தன்மை இதில் வெளிப்படும். இலக்கணம் புனிதமானது; மாறாதது என்னும் கருத்தாக்கத்தை யதார்த்த நிலையில் காணும் பொழுது கட்டுடைத்தலுக்கு உள்ளாகின்றது. தமிழ் இலக்கண மரபில் தோன்றிய தொல்காப்பியம், வீரசோழியம், பிரயோக விவேகம் போன்றவை அந்த நூல்கள் எழுந்த காலகட்டத்தின் சமூக நிலையையே பிரதிபலிக்கின்றன. மரபை ஒட்டிய இலக்கணப் பெருக்கத்தில் ஐரோப்பியர் வருகையினால் உருப்பெற்ற இலக்கணங்கள் வேறொரு புரிதலுக்குள் கொண்டு சென்றன. இலக்கணநூல் உருவாக்கத்தில் எளிமையாக்கமும் புதுமையாக்கமும் செயல்படுத்தப்பட்டது. பதினெழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் மரபை அடிப்படையாக வைத்துக் கொண்டு தமிழ் இலக்கண நூல்கள் உருப்பெற்ற அதே காலகட்டத்தில் ஐரோப்பியரால் மரபை மீறிய இலக்கண நூல்கள் படைக்கப்பட்டன. ஐரோப்பிய சிந்தனையில் இலக்கணம் படைக்க விழைந்த கிறித்துவ பாதிரிமார்களுக்கு தமிழின் நீண்ட இலக்கணமரபை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தமிழ் இலக்கண மரபின் முன்னோடிகளான அகத்தியர், தொல்காப்பியர், பவணந்தியாரின் துணை தேவையாக இருந்துள்ளதை ஐரோப்பியர் இயற்றிய தமிழ் இலக்கண நூல்களின் முகவுரையின் வழி அறியலாகின்றது.

மனிதப் பண்பாட்டின் அனைத்துக் கூறுகளும் இடம், காலம், சூழல் என்னும் பௌதிகத்திற்குள் ஒன்றிணைந்து செயலாற்றி வருகிறது. இதில் பண்பாட்டினை அனைத்து நிலைகளிலும் வெளிப்படுத்திக் காட்டுவது காலமும் சூழலுமே ஆகும். அதே போன்று சங்ககால மக்களின் வாழ்வியல் பின்புலங்களைத் தற்காலச் சூழலில் இனங்காணுவதற்கு மூலப்பனுவல்கள் தேவையான ஒன்றாகிறது. இப்பனுவல்கள் எழுத்தாக்கம் பெறும்போது தொகுப்பாக்கம் பெறவில்லை. மாறாக வாய்மொழி மரபுத்தன்மையில் மக்களாலும், பாண்மரபுகளாலுமே அவை பாடப்பட்டு, பின்னர் அவை கவிதையாக்கம் பெற்றன. இந்நிலையிலிருந்து சங்கப் பனுவல்களைப் பார்க்கும்போது சூழல்த் தன்மையும் காலவரையறையும் வெளிப்பட்டு நிற்கிறது.
தமிழ் இலக்கியங்களில் இறைவழிபாடு முறையில் நோக்கிடும்போது தமிழகமக்களின் பழமையும், ஆய்வுக்குட்பட்ட பல செய்திகளும் புலப்படுகின்றன. வழிபாடு என்பது பின்பற்றுதல் என்ற பொருளினைத் தரும். பலதரப்பட்ட கடவுள்களைச் சைவசமயத்தினர் வணங்கி வருகின்றனர். இறைவனை நேரில் காண இயலாததாகி இருப்பினும் இறைவனுக்குப் படையல் இடுவதும், தன்னையும், தமது குடும்பத்தாரையும் காக்கும் சக்தியாக எண்ணியும் வழிபட்டு வருகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தெய்வமாக அமையப்பெற்ற அய்யனார் வழிபாடு குறித்து இவ்வாய்வுக்கட்டுரை அமையப்பெறுகிறது.
மனித வளர்ச்சியினால் பண்பாட்டில் ஆண் x பெண் உருவாக்கம், சமூக உருவாக்கம், சமுதாய வளர்ச்சி என அனைத்தும் சுழற்சி முறையில் ஒன்றையொன்று சார்ந்து இயங்கி இனப்பெருக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு அடித்தளமாக நிலைகொண்டிருப்பவள் ஒரு பெண். இப்பெண் மனித தோற்றத்திற்கான உயிராகவும் ஆயுதமாகவும் இருந்து வருகிறாள். தொடக்க காலத்தில் உயிர் உற்பத்திக்கே தன்னை ஆட்படுத்திக்கொண்ட பெண் பின்பு விவசாய உற்பத்திக்கான தொடக்கம், பொருளாதார உற்பத்தியில் உபரியைப் பெருக்குதல், விற்பனை செய்தல் எனத் தன்னைப் படிப்படியாக ஒவ்வொரு நிலையிலும் உயர்த்திக்கொண்டாள். இது சங்க காலத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வந்தாலும் சமூக வயத்தளத்தில் குடும்பமென்ற ஒடுக்கு நிலைக்குள்ளும் பெண் ஆழாக்கப்பட்டாள். இதனால் குறிப்பிட்ட இயங்கு தளத்திலே தன்னை தகவமைத்துக்கொண்டு வாழமுற்படவும் செய்தாள். ஓவ்வொரு வயத்திலும் ஓர் அடையாளமாகப் பரிணமித்த பெண்கள் சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர். இதனால் உடல்தோற்றத்தில் மட்டுமின்றி வாழ்விலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தச் செய்ததுடன் சமூக அடையாளமாகவும் சில அணிகலன்களையும் மரபாக அணிந்தனர். அதில் ஒன்று தான் சிலம்பு. 

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









