உயிர் கொண்டு அலையும் மனிதனின் பயணத்தில் ஆறா வடு

சயந்தனின் ஆறாவடு நாவல் வாழத்துடிக்கும் ஒரு மனிதனின் கதை. அவன் தனி மனிதன் மட்டுமல்ல. அவன் வாழ்விடமும் வாழும் காலமும் அவன் கதையை தனி மனித வட்டத்தை விட்டு விசாலமான இன்னொரு தளத்திற்கு நகர்த்தி இருக்கிறது. போரிலக்கிய வரிசையில் போர்க்காலத்தில் நடந்த சம்பவங்களையும் அதன் பின்னணிகளையும் மட்டுமே சொல்லிச் சென்றிருக்கும் கதையல்ல ஆறாவடு. போர்க்காலத்தில் வாழத்துடித்த ஓரிளைஞனின் பயணமிது. போர், காதல், சண்டை, சச்சரவு , பணம், அதிகாரம், கதை, கவிதை எல்லாமே எதற்காக...? மனிதன் தன் இருத்தலை எப்போதும் உணர்ந்து கொள்ளும் தேடலுக்காக. அந்த தேடலின் பயணத்தில் போரும் காதலும் அதிகாரமும் அவனைப் பாதிப்பதும் அந்தப் பாதிப்புகள் எழுப்பும் கேள்விகளுக்கான பதில் தேடும் பயணமும் தொடர்கின்றன. சயந்தனின் ஆறாவடு நாவல் இப்படியான ஒரு தேடல்தான். இந்தத் தேடல் அமைதியான சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் ஒரு விதமாகவும் போர்க்கால சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் வேறுவிதமாகவும் இருக்கிறது. ஈழப்போரட்ட வரலாற்றில் போருக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது இந்நாவல் என்ப்தால் இந்த நாவலின் ஒவ்வொரு வரியும் கவனத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது.

In reading Chris Durban's great book, "The Prosperous Translator" (which is in the form of a series of questions and answers from translators), one of the main take-aways I learned was that writing ability in one's own native language is a critical skill of the best translators. Too many of us translators, me included, get caught up in the source language. We think that our native language is kind of automatic, and we don't have to work on it. This is wrong for the following reasons: The target language text is the only thing your client and reader will see. No matter how good your translation skill is, if you can't write well in your native language, it is all for naught. The black and white text on the page in your native tongue is the only thing the reader sees of your awesome translation skills. Language is constantly evolving. Words are being invented today in my native American English, that I don't know about. I need to keep up. If your text is 100% "perfect" from a translation point of view, but does not flow well, you are still going to be viewed as not very good.
கடந்த இருபது வருடங்களாக, சிட்னியில்; வசிக்கும் என்னுடய அம்மாவுக்கு வயது தொண்ணூறு. இந்த வயதிலும் அவருக்கு நோயற்ற திடகாத்திரமான உடம்பு! அவரின் முப்பத்திரண்டு பற்களும் ஒறிஜினல். சூத்தையோ, ஆட்டமோ அற்ற பால் வெள்ளைப் பற்கள் அவை. பல்வைத்தியரான என்னுடய மகன், அப்பாச்சியின் பற்களை வெவ்வேறு கோணங்களில் படம் பிடித்து, பல்வைத்திய மாநாட்டு விரிவுரைகளில் காட்டிப் பெருமைப்படுவான். 'நல்ல காலம்! ஆஸ்ரேலியர்களுக்கு அப்பாச்சியின் பற்கள் இல்லை. அப்பாச்சி போல, இங்கே பிறந்தவர்களும் இருந்தால், நான் கிளினிக்கை இழுத்து மூடவேண்டும்’ என பேத்தியாருக்கு 'கொமன்ற்’ அடிப்பான் பேரன். யாழ்ப்பாணத்து தண்ணியும், கைதடி முருங்கைக் காயும்தான், தனது உறுதியான பற்களுக்குக் காரணம் என்பது அம்மாவின் அசைக்க முடியாத நம்பிக்கை. முருங்கைக்காய் சமாசாரம்பற்றி பேச்சு வரும்போதெல்லாம் கைதடி முருங்கைக் காய்தான் திறமென அடம் பிடிப்பார். கைதடி, ஒரு கலட்டிப் பாங்கான பூமி. அங்கு எது வளருதோ இல்லையோ, முருங்கை மரங்கள் நன்கு வளர்ந்தன. எங்கள் கைதடி வளவிலும் அம்மா பலவகை முருங்கை மரங்களை நட்டிருந்தார். களிமுருங்கை, வலியன் முருங்கை, கட்டை முருங்கை, உலாந்தா முருங்கை என அம்மாவின் பாஷையில் அவற்றிற்கு வெவ்வேறு பெயர்கள்.
['புத்தம் வீடு' என்னும் தனது நாவலின் மூலம், உலகத் தமிழிலக்கியத்தில் தன் தடத்தினைப் பதித்த ஹெப்ஸிபா ஜேசுதாசன் பெப்ருவரி 9, 2012 அன்று இயற்கை எய்தினார். அவரது நினைவாக 'அ.ராமசாமி எழுத்துகள்' என்னும் வலைப்பதிவில் வெளியான கட்டுரையினை மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்-] ஹெப்ஸிபா ஜேசுதாசன் அறுபதுகளின் மத்தியில் ‘புத்தம் வீடு’ என்ற நாவலின் மூலம் தமிழ் இலக்கிய உலகில் பிரவேசம் செய்தவர். தான் எழுத ஆரம்பித்த காலம் தொடங்கி, தமிழ் இலக்கியச் சூழலில் நிலவும் ஒரு மனோபாவத்திற்கு எதிராக இயங்கியும் வருபவர். தமிழ் இலக்கியச் சூழல் என்பது பொதுவாக அறுபதுகளுக்கு முந்தியும் பிந்தியும் இரண்டு முகங்களைக் கொண்டதாகவே இருந்து வந்துள்ளது. குழுமன நிலையோடும், கட்சி அடிப்படையிலும் இயங்கிக் கொண்டிருக்கும் சிறுபத்திரிகை உலகம் ஒரு முகம். இதில் ஒரு எழுத்தாளன் ஒரு குழு சார்ந்தவனாகவோ, அல்லது கட்சி சார்ந்தவனாகவோ அடையாளங்காணப்படுதல் தவிர்க்க முடியாததாக இருந்து வருகிறது. இன்னொரு முகம் வெகுஜனப் பத்திரிகைகளின் உலகமாகும். பெருமுதலாளிகளின் வணிக லாபத்திற்கு எழுத்துச் சரக்கினை உற்பத்தி செய்யும் பேனாத் தொழிலாளர்களைக் கொண்டது இம்முகம். இவ்விருமுகங்களில் ஏதாவது ஒன்றை அணிந்து கொள்ளாமல் இயங்கி வருபவர் ஹெப்ஸிபா ஜேசுதாசன். அதே வேளையில் சிறுபத்திரிகைக் குழுவினராலும், கட்சி சார்ந்த விமரிசகர்களாலும் புறமொதுக்கப்படாமல், தமிழ் நாவல் இலக்கியத்திற்கு முக்கியப்பங்களிப்பு செய்தவர் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளவர். இத்தகைய விதிவிலக்குகள் நவீனத் தமிழிலக்கியப்பரப்பில் வெகு சொற்பமே.
வரலாற்று நாவல் என்பது என்ன? முகங்களாக ஆக்கப்பட்ட வரலாறு என்று அதைப்பற்றி கூறலாம். வரலாறு என்ற வரைபடத்தை மரங்களும், மிருகங்களும், மக்களும் வாழ்க்கையும் ததும்பும் நிலமாக மாற்றுவதே வரலாற்று நாவலின் கலை. சி.சு.செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம்’ ஏன் ஒரு தோல்வி என்றால், அந்நாவல் இந்தச் சவாலில் வெல்ல முடியவில்லை என்பதே. தல்ஸ்தோயின் ‘போரும் அமைதியும்’ ஏன் வெற்றிகரமான நாவல் என்றால் மொத்த வரலாற்றையும் நாமே சென்று வாழ்ந்து விட்டு மீளக்கூடிய ஒரு பரப்பாக, என்றும் உணரும் வாழ்க்கையாக அது மாற்றிவிடுகிறது என்பதே. அதாவது செல்லப்பாவின் நாவலில் நாம் வரலாற்றையே காணமுடியும். அதேசமயம் தல்ஸ்தோயின் நாவலில் நாம் வாழ்க்கையையே வரலாறாகக் காண்கிறோம். இதையே வரலாற்றுக்கு வண்ணம் சேர்க்கும் பணி என்று கூறுகிறேன்.
ஒரு புதிய கவிஞரின் முதலாவது கவிதை நூல் இது. இளைப்பாறிய ஆசிரியரான சுமதி குகதாசன் எழுதிய தளிர்களின் சுமைகள் என்ற நூல் இது. நூல் பற்றிய எனது கருத்துக்களைக் கூறுவதற்கு முன்பாக இன்றைய கவிதைகள் பற்றிய சில கருத்துக்களை பகிர்வது நூலிலுள்ள கவிதைகளை அணுக உதவலாம் என எண்ணுகிறேன்.
[முனைவர் மு.வரதராசன் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி, கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து பெறப்பட்ட தகவல்களிவை.] மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட 'டாக்டர்' மு. வரதராசன் (ஏப்ரல் 25, 1912 - அக்டோபர் 10, 1974) 20ம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள், போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார்.
சங்ககால இலக்கியமான பத்துப்பாட்டினுள் ஒன்றாக விளங்குவது மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக்காஞ்சியாகும். இந்நூல் எழுநூற்று எண்பது அடிகளை உடைய நெடும்பாடலாகும். இப்பாடலில் சங்ககால அறங்கள் எடுத்துரைக்கப் பெறுகின்றன. அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற நால்வகை வருணத்தாருக்கு உரிய அறங்கள், சமண, பௌத்த மதத்தோருக்கான அறங்கள், அறத்தைக் காக்கும் குழுக்களின் செயல்பாடுகள். பெண்களுக்கு உரிய அறங்கள் ஆகியன தெளிவு பட எடுத்துரைக்கப் பெற்றுள்ளன. இக்கருத்துகளின் முலம் சங்ககால அறங்கள் பற்றிய தெளிவினைப் பெற முடிகின்றது.
எஸ்.ராமகிருஷ்ணனின் உலக இலக்கியம் பற்றிய அறிமுகப் பதிவுகளை நான் விரும்பி வாசிப்பது வழக்கம். மிகவும் அழகாக படைப்பாளிகளைப் பற்றியும், படைப்புகள் பற்றியும், தன் உளப்பாதிப்புகளின் அடிப்படையில் விபரிக்கும் அவரது நடை வாசகர்களின் நெஞ்சங்களை ஈர்த்துவிடும். அவரது படைப்புகளில் காணப்படும் இன்னுமொரு அம்சம் இருப்பின் நிலையாமை பற்றிய சோகம். பெரும்பாலான அவரது படைப்புகளில் புனைவுகளாகவிருக்கட்டும், அபுனைவுகளாகவிருக்கட்டும் எல்லாவற்றிலுமே இவ்விதமான சோகம் பரவிக்கிடக்கும். நகரங்கள், பயணங்கள் எல்லாமே அவருக்கு எப்பொழுதும் கடந்த கால நிகழ்வுகளை, உறவுகளை, துயரங்களையெல்லாம் தம்முள் அடக்கி வைத்திருக்கும் படிவுகளாகவேயிருக்கின்றன. இதனால் பெரும்பாலான அவரது புனைவுகளை வாசிக்கும்பொழுது வாசகரொருவரின் உள்ளமானது வாசிப்பின் முடிவில் நிலையாமை பற்றிய ஒருவித துயரத்தால் கனத்துப் போகின்றது.
Abdul Karim Abdul Razak. —Dawn photoCOLOMBO: Abdul Karim Abdul Razak is an oddity. This Urdu-speaking Memon Muslim from what is now Pakistan, is a leading light in Tamil literary circles in Sri Lanka as a poet and writer! Tall and fair with a stubble and betel stained teeth, Razak is every inch a Memon, who no one would associate with Tamil poetry at first glance. But he has managed to break into a literary circle which has been the close preserve of ethnic Tamils and indigenous Sri Lankan Muslims whose mother tongue is Tamil. In fact, the 54-year-old Razak has the distinction of being the world`s first and the only Tamil litterateur from the Memon community. It was trade which took the Memons from Sindh to Gujarat, Mumbai, East Africa and Sri Lanka. Razak`s forefathers, who had migrated from Sindh to Junagadh in Gujarat, finally landed in Colombo to take advantage of the growing trade links between Ceylon and India during British rule. But while the Memons of Colombo were immersed in commerce, showing little inclination towards scholarship, literature or poetry, school student Razak was a different kettle of fish. He not only loved to read but had a passion for the Tamil language, with a burning ambition to be a revolutionary Tamil poet.Fittingly known as “Memon Kavi”, Razak has several volumes of poems in free verse to his credit, one of which, Naalayay Nokkiya Inril (Today Looking Towards Tomorrow), had won the Lankan Sahithya Award for the best Tamil poem in free verse in 1990.
மகாகவி பாரதியாரின் பிறந்த தினம் டிசம்பர் 11. தனது குறுகிய காலத்து வாழ்வில் அவரது சாதனைகள் வியப்பைத் தருவன. தான் வாழ்ந்த காலகட்டத்துச் சூழலை மீறிச் சிந்தித்த கவிஞன் அவன். 'தன்னுடை அறிவி னுக்குப் புலப்பட லின்றியே தேய மீதெவ ரோசொலுஞ் சொல்லினைச் செம்மை யென்று மனத்திடைக் கொள்வதாம் தீயபக்தி யியற்கையும் வாய்ந்தி'டாத கவிஞனவன். தன் அறிவு கொண்டு , தனக்குச் சரியென்று பட்டதை உரைத்திடத் தயங்காதவன் அவன். தான் வாழந்த சமுதாயத்தைப் பற்றி, அச்சமுதாயத்தில் நிலவிய சீர்கேடுகளைப் பற்றி, அந்நியர் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டுக் கிடந்த தன் பிறந்த மண் பற்றி, அதன் விடுதலை பற்றி, பெண் விடுதலை பற்றி, வர்க்க விடுதலை பற்றி, மானுட விடுதலை பற்றி, மானுட இருப்பைப் பற்றி, சக உயிர்களைப் பற்றியெல்லாம் சிந்தித்துப் பாடிய, எழுதிய படைப்பாளி அவன். பணத்தை மட்டுமே வைத்து எடைபோடும் இந்த மானுட சமுதாயம், அவன் வாழ்ந்த காலத்தில், வாழத் தெரியாதவனென்றெல்லாம் அவனை எள்ளி நகையாடியது. ஆனால் இன்று .. அதே மானுட சமுதாயம் அவனைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது. மாகவி பாரதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு 'பதிவுகள்' அவனது கவிதைகள் சிலவற்றை மீள்பிரசுரம் செய்கிறது.
பேராசிரியர் கைலாசபதி அவர்களின் 29 வது நினைவு தினம் டிசெம்பர் 6.2011. எமது தெற்காசிய சூழலில் செப்டம்பர் 26 என்பது அண்மைக் காலத்தில் வேறொரு வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியாவில் முஸ்லீம் தீவிரவாத தாக்குதலின் நினைவு கூரலுக்குரியது அது. சர்வதேச ரீதியாக செப்டம்பர் 11 என்பது இதுபோல முக்கியத்துவம் பெற்றுள்ளமையை அறிவோம். உலக மேலாதிக்க வாத நாடான அமெரிக்க மீது முஸ்லிம் தீவிர வாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நாள் செப்டம்பர் 11. எமது பிராந்திய மேலாதிக்கவாத நாட்டுக்கும் உலக மேலாதிக்கவாத நாட்டுக்கும் முஸ்லிம் தீவிரவாதம் பிரதான அச்சுறுத்தலாக மாறியுள்ள சூழலில் , இனி உலக செல்நெறி வர்க்க மோதலாக அன்றிப் பண்பாட்டு மோதலாகவே அமையும் , என்ற தர்க்கமும் முன்வைக்கப்பட்டு வருவதை அறிவோம். இலங்கையில் சிங்கள- தமிழ் -முஸ்லிம் -மலையக தேசியவாதப் பிளவில் சமூக வேறுபாடுகள் வலுபெற்றுள்ளது. தமிழியல் இன்று அதிகம் கரிசனைகொல்வதாக வர்க்க அக்கறை இன்றி தலித்தியம் ,பெண்ணியம் ,தேசிய இனப்பிரச்சனை என்பனவே மேலோங்கி உள்ளன.
ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கு முக்கியமானதோரிடமுண்டு. இன்று ,85 வயதினைக் கடந்த நிலையிலும், உற்சாகம் குறையாமல் இலக்கியப் பணியாற்றும் அவரது விடா முயற்சியும், சுறுசுறுப்பும் அனைவரையும் வியப்படைய வைப்பன. தீண்டாமைக் கொடுமைக்கெதிராக அடங்கி, ஒடுங்கிச் சோர்ந்து விடாமல், அதன் நச்சுக்கரங்களின் தீண்டுதல்களைக் கண்டு அஞ்சி விடாமல், அத்தீண்டுதல்களையெல்லாம் சவால்களாக ஏற்றுக்கொண்டு, இத்தனை வருடங்களாக 'மல்லிகை' என்னும் மாத இதழினைக் கொண்டு வரும் அவரது ஆற்றல் அனைவரையும் பிரமிக்க வைத்துவிடும். 'மல்லிகை'யையும் ஜீவாவையும் பிரிக்க முடியாது. 'மல்லிகை ஜீவா' என்று அழைக்கப்படுவது அவரது இலக்கியப் பங்களிப்பினை நன்கு புலப்படுத்தும். 'மல்லிகை' சஞ்சிகை பல இளம் எழுத்தாளர்களுக்குக் கை கொடுத்திருக்கின்றது; இன்றும் அவ்விதமே ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றது. ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த எழுத்தாளர்களை, ஆர்வலர்களை, புரவலர்களை அட்டைப்பட நாயகர்களாக்கிப் பெருமைப்பட்டிருக்கின்றது.
காலம் மனித நேயம் மிக்க ஒருவரை மீண்டும் நாம் நினைக்க வைத்துள்ளது. வர்க்கம் சார்ந்து, சாதிய முறைமைகளை எதிர்த்தபடி தனது கற்பனைத் திறத்தால் நம்மையெல்லாம் ஆட்கொண்டவர்தான் அகஸ்தியர். 29/08/1926இல் சவரிமுத்து-அன்னம்மா தம்பதியர்க்கு மகனாக ஆனைக்கோட்டையில் பிறந்தவர். அந்தக் காலத்து எஸ்.எஸ்.சி சாதாரண தரம் வரை கல்வி கற்றிருந்தாலும் அவர் வளர்த்துக்கொண்ட தமிழ் அறிவு அவரை நல்லதொரு படைப்பாளியாக நமக்குத் தந்திருக்கிறது.தமிழ்,சிங்களம்,ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் ஆற்றல் வாய்ந்தவராகவே தன்னை வளர்த்துக் கொண்டார். எழுத்தாற்றலால் தன்னை வளர்த்துக்கொண்டாலும் பலராலும் நேசிக்கப்பட்ட அதே வேளை சிலரால் இருட்டடிப்புக்குள்ளாக்கவும் பட்டதனால் இவரின் எழுத்துக்களை கண்டும் காணாது விட்டதும் பலரின் பார்வைக்குத் தெரியாமல் போய்விட்டார்; பலரிடம் இவர் படைப்புகள் சென்று சேர முடியாது போனது. ஆனாலும் பார்வைக்குக் கிடைத்தவைகள் காத்திரமானதான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை.
ஈழத்தின் பிரபல முற்போக்கு எழுத்தாளர் எஸ். அகஸ்தியரின் 16 ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது. (29. 08.1926 – 08.12.1995) பாரீஸ் தமிழர் கல்வி நிலையம் ஆரம்பிக்கப்பட்டு அதன் வளர்ச்சிப் பணியில் நாம் அதிக அக்கறை கொண்டிருந்த காலங்களில், எமது கல்வி நிறுவனத்தோடு அதிக அக்கறை கொண்டவராக அறிமுகமானவரே திரு.எஸ்.அகஸ்தியர் அவர்கள். ஆரம்பகால ஆண்டுவிழா, மலர் வெளியீட்டுகளிலும் ஆலோசனைகளையும், உதவிகளையும் செய்து எமது வளர்ச்சிப் பாதையில் துணை நின்றார். மனித நேயத்தை நேசித்து அதற்காக வாழ்ந்து மறைந்துவிட்ட ஒரு இலக்கியவாதியின் காலத்தில் அவரது புலம்பெயர் வாழ்வில் நாமும் வாழ்ந்திருக்கின்றோம் என்பதை இங்கு பெருமையோடு நினைவுகூர்ந்து மதிப்பளிக்கு முகமாகவே அவரைப்பற்றிய நிகழ்வுகளைத் தருகின்றேன்.
[முனைவர் பாரதி ஹரிசங்கர் 2007இல் கனடா வந்திருந்தபொழுது அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது பற்றி 'பதிவுகள்' இதழில் வெளியான கட்டுரையும், 'பதிவுகளி'ல் வெளியான அவரது படைப்புகள் சிலவும் ஒரு பதிவுக்காக இங்கு மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. -பதிவுகள் ]அண்மையில் தமிழகத்திலிருந்து கலாநிதி பாரதி ஹரிசங்கர் கனடாவுக்குக் 'கனடியக் கற்கைநெறி'க்கான 'சாஸ்திரி அறக்கட்டளைப்' புலமைப் பரிசில் பெற்று விஜயம் செய்திருந்ததை ஏற்கனவே பதிவுகள் வாசகர்களுக்கு அறியத் தந்திருந்தோம். அதன் பொருட்டுக் கனடாவின் பல்வேறு நகரங்களுக்கும் சென்றிருந்த பாரதி ஹரிசங்கர் தன் பயணத்தின் இறுதி இலக்காகத் 'டொராண்டோ'வுக்கும் வந்திருந்தார். 'டொராண்டோப் பல்கலைக் கழகத்தின் விடுதியில் தங்கியிருந்த அவரை எழுத்தாளர்கள் தேவகாந்தன், டானியல் ஜீவா மற்றும் வ.ந.கிரிதரன் ஆகியோர் சந்தித்தனர். அருகிலிருந்த உணவகமொன்றில் சந்தித்துச் சிறிது நேரம் கலந்துரையாடினர். பாரதி ஹரிசங்கரின் நிகழ்ச்சி நிரல் மற்றும் குறுகிய நேர அறிவிப்பு காரணமாக அவருடனொரு விரிவான கலந்துரையாடலினை ஏற்பாடு செய்ய முடியாது போய்விட்டது. இருந்தாலும் மேற்படி சந்திப்பானது குறுகியதாக அமைந்திருந்தாலும் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.
ஈழத்தின் இலக்கிய வரலாற்றில் முற்போக்கு எழுத்தாளர்கள் பெரும் பங்களிப்பை ஆற்றியதன் மூலம் ஈழத்து இலக்கியம் தனித்துவம் பெற்றதாக உயர்ந்து நிற்கின்றது. பேராசிரியர் க.கைலாசபதி அவர்களின் பங்களிப்பு விசாலமானது. அத்தகைய இலக்கியப் பரப்பில் தடம் பதித்த இளங்கீரன் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் எழுச்சிக்குப் பெரும் பங்காற்றிய ஒருவராக மதிக்கப் படுகின்றார். சமகால ஈழத்து இலக்கிய வரலாற்றைப் பற்றி எழுதும் எவரும் அவரை விட்டுவிட்டு எழுத முடியாத அளவுக்கு அவரது பங்களிப்பின் முக்கியம் பரவலாக உணரப் பட்டுள்ளது. அவரது படைப்பாற்றலின் வளர்ச்சி அவரது சமூக உணர்வின் வளர்ச்சியை ஒட்டியே நிகழ்ந்துள்ளமையே இதற்கான காரணமாகும். 1950 களிலிருந்து 1970கள்வரை படைப்பிலக்கியத் துறையில் இளங்கீரன் மும்முரமாகச் செயற்பட்டார். எழுத்தையே வாழ்வாகக் கொண்ட ஒருவராக வாழ்ந்து காட்டியிருக்கின்றார். இக்கால கட்டத்தில் அவரது எழுத்தும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும் ஈழத்தின் சமூக உணர்வின் வளர்ச்சியையொட்டிய விருத்தியினைக் காட்டி நிற்கின்றன. இளங்கீரன் பல்வகைப் பரிமாணங்களையுடைய ஒருவராக அறியப் படுகின்றார்.
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மொழியியல்துறை பீடத்தின் தலைவராக இருந்து செயற்படும் கலாநிதி செ. யோகராசா நவீன இலக்கியத்தின் பல்துறைப் பரிமாணங்களையும் அலசி ஆராய்ந்து தமது கருத்துக்களை முன்வைப்பதில் முன் நிற்பவராக முகிழ்ந்து நிற்கின்றார். கடந்த மூன்று தசாப்த காலத்திற்கும் மேலாக நவீன இலக்கியம் சம்பந்தமான பல்துறை சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை வெளிக்கொணர்ந்துள்ளார். சிறுவர் இலக்கியம் பற்றிய இவரது சிந்தனையை முதலில் நோக்குவோம். ‘ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்! ‘ஈழத்து சிறுவர் பாடல் களஞ்சியம்’ என்ற இவரது நூல்கள் இரண்டையும், ஆழ்ந்த அகன்ற அறிவிற்காய் ‘குமரன் புத்தக இல்லம் ‘வெளிக்கொணர்ந்துள்ளது. நவீன இலக்கியத்துறைகள் வளர்ந்துள்ள ஈழத்துத் தமிழ்ச் சூழலில் சிறுவர் இலக்கியத்துறையின் வளர்ச்சி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதென்பதனை ஈழத்து இலக்கிய ஆர்வலர்கள் நன்கறிந்திருப்பர். மேலை நாடுகளில் இத்துறைசார் வளர்ச்சி பிரமிப்பை ஏற்படுத்தக் கூடியதாய் உள்ளமை மனங்கொள்ளப்பட வேண்டியது. இந்நிலையில் சிறுவர் இலக்கியத்துறையில் நாம் எங்கே நிற்கின்றோம் என்று எம்மை நாமே கேட்டுக்கொள்வது அவசியமானது.
தஸ்தாயெவ்ஸ்கியின் முக்கிய நாவலான இடியட்டைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் பேராசிரியர் எம்.ஏ.சுசீலா. இவர் முன்னதாக குற்றமும் தண்டனையும் நாவலை மிகச்சிறப்பாக மொழியாக்கம் செய்தவர். இந்த மொழிபெயர்ப்பு நாவலுக்காக ஒரு முன்வெளியீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, இலக்கிய வாசகர்கள் அனைவரும் இதில் முன்பதிவு செய்து ஆதரிக்க வேண்டுகிறேன். தஸ்தாயெவ்ஸ்கியின் Crime And Punishment, The Idiot, The Possessed (or Devils), The Brothers Karamazov. ஆகிய நான்கு நாவல்களும் தனித்துவமானவை, அவற்றை ஒரு சேர ஒருமுறை வாசித்திருக்கிறேன், நான்கும் ஒரு பெரிய இதிகாசத்தின் தனிப்பகுதிகள் போலவே இருக்கின்றன. நான்கின் முக்கியக் கதாபாத்திரங்களும் தீவிரமான மனப்போராட்டமும் நெருக்கடியும் கொண்டவர்கள். தனிமை தான் அவர்களது முக்கியப் பிரச்சனை, மேகத்தில் மறைந்துள்ள சூரியனைப் போல அவர்கள் இருப்பு பிறர் கண்ணில் படாதது, நிலவறை உலகம் தான் அவர்களுக்குப் பிடித்தமானது, பகல் வெளிச்சத்தை அவர்கள் விரும்புவதில்லை, சக மனிதர்களோடு இயல்பாகப் பேசிப்பழக முடியாமல் ஒதுங்கியேவாழ்கிறார்கள். அதேவேளை உலகின் சகல குற்றங்களுக்கும் தாங்கள் ஒரு விதத்தில் பொறுப்பாளர்களாக கருதுகிறார்கள். அதன் பொருட்டு இடையுறாத மனவருத்தம் கொள்கிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்து வாசிக்க வாசிக்க ஈரக்களிமண்ணைப் போல பிசுக்கென நம் உடலோடு ஒட்டிக் கொள்ளக்கூடியது.
சென்னை, நவ. - 9 - எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ரஷ்ய நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆப் பிரன்ட்ஷிப் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெறும் முதல் இந்திய எழுத்தாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக பிரபல திரைப்பட இயக்குனர் மிர்னாள்சென்னுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் மெத்வதேவ் பிறப்பித்த உத்தரவின் நகலை இந்தியாவுக்கான ரஷ்ய துணை தூதர் நிகோலாய் ஜெயகாந்தனிடம் சென்னையில் வழங்கினார். இந்த நட்புறவு விருது வழங்கும் விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கான ரஷ்ய தூதர், ரஷ்ய அதிபரின் தூதர் குழுவினர் விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தோ -ரஷ்ய கலாசார மற்றும் நட்புறவு மையத்தின் தலைவராக ஜெயகாந்தன் உள்ளார். இவர் தனது எழுத்துப் பணியோடு இந்திய, ரஷ்ய நாடுகளிடையே உறவை வளர்க்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அவரது நாவலை தழுவி எடுக்கப்பட்ட உன்னைப் போல் ஒருவன் திரைப்படம் ரஷ்ய அதிபர் விருதை பெற்றது. இந்தோ, ரஷ்ய கலாசார மற்றும் நட்புறவு மையத்தை அவர் கடந்த 2006 ல் தொடங்கினார்.
[மீண்டும் இணையத்தில் 'பாரதி மகாகவியா' என்பது பற்றிய விவாதத்தை பிரபல தமிழ் எழுத்தாளரொருவர் தனது வலைப்பதிவில் ஆரம்பித்து வைத்துள்ளார். 'பாரதி பற்றிய இத்தகைய விவாதம் தமிழ் இலக்கிய உலகிற்கொன்றும் அந்நியமானதல்ல. 1936இலிருந்து இவ்விதமான விவாதங்கள் தமிழ் இலக்கிய உலகில் நடைபெற்று வந்திருக்கின்றன; இனியும் வரும்.. கோவை ஞானியின் 'பாரதி, மகாகவி: வரலாறு' என்னுமிந்தக் கட்டுரை இத்தகைய விவாதங்களுக்கெல்லாம் நல்லதொரு பதிலாக அமைந்திருக்கின்றது. காவ்யா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட 'ஞானி கட்டுரைகள் - III - தமிழ்க் கவிதை' என்னும் நூலில் வெளியான இக்கட்டுரையினை இச்சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்துவது பொருத்தமானதென்பதால் 'பதிவுகள்' அதனை மீள்பிரசுரம் செய்கிறது. ] 1936 வாக்கில் தமிழகத்தில் பாரதியார் மகாகவி இல்லையா என்ற விவாதம் எழுந்தது. காரைக்குடியில் வ.ரா. பேசும்போது பாரதியாரின் கவிதை வரி ஒன்றுக்கு சேக்ஸ்பியரோ செல்லியோ ஈடாக மாட்டார்கள் என்று பேசினாராம். பாரதியாரை மகாகவி என்று அடைமொழி தந்து நூல் எழுதியதோடு, தன் காலம் முழுவதும் பாரதி புகழ் பாடுவதையே தன் கடமையாக வ.ரா. கொண்டிருந்தார். வ.ரா.வின் கருத்து கடுமையான சர்ச்சைக்குள்ளாகியது. சுதேசமித்திரன், ஆனந்தவிகடன், தினமணி ஆகிய இதழ்களில் 'நெல்லை நேசன்' என்ற புனைபெயரில் பி.ஸ்ரீ.ஆச்சார்யா, கல்கி ஆகியோர் தமிழ்க் கவிதையில் பாரதியின் இடத்தைக் கேள்விக்குரியதாக்கி எழுதினார்கள். பாரதியைத் தேசியக்கவி என ஒப்புக் கொள்ளலாம் என்றும், வால்மீகி, காளிதாசர், சேக்ஸ்பியர், செல்லி, முதலியவர்களுக்கு நிகராகச் சொல்லமுடியாது என்றும் எழுதினார்கள்.கு.ப.ராவும் சிட்டியும் விரிவாக மறுப்பு எழுதினார்கள். ஓமர் முதலிய பெரும்கவிஞர்கள்பலரோடு ஒப்பிட்டு, அவர்களுக்கு நிகராக பாரதியை மகாகவி என்றார்கள்.
நூறு ஆண்டுகளுக்கொரு முறைதான் மகாகவிகள் தோன்றுகிறார்கள். இந்திய இலக்கிய வரலாற்றில் ஒரே காலக்கட்டத்தில் இரு மகாகவிகள் கவியாட்சி புரிந்தார்கள் என்றால் அவரகள் மகாகவி பாரதியம் தாகூரும்தான். எளிய சந்தம். எளிய மொழிநடை, எளிய மக்கள் என்பதாக எழுதி நாட்டிலும், சமுதாயத்திலும், படைப்பிலக்கிய வடிவத்திலும் மாற்றத்தைக் கொண்டு வந்த பாரதி. அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குச் சமமாக இந்திய இறையியலை உலகமொழியில் மொழிபெயர்த்துக் கீதாஞ்சலிசெய்து நோபல்பரிசினைத் தட்டி வந்த இரவீந்திரநாத் தாகூர் ஆகிய இருவரின் கவிதைகளை ஒப்பிடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









