ஒலி, ஒளி ஊடகர் பி.விக்னேஸ்வரனின் 'நினைவு நல்லது' நூல் வெளியீடு!


*புகைப்படங்களைத் தெளிவாகப் பார்ப்பதற்கு ஒருமுறை அழுத்தவும். -
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் விருதுவிழா சென்ற சனிக்கிழமை 28-10-2023 ரொறன்ரோவில் உள்ள ஸ்காபரோ சிவிக்சென்றர் அரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. காலை 9:30 மணியளவில் விழாவிற்கு வருகை தந்தோருக்குத் தேநீர், சிற்றுண்டி வழங்கப் பெற்றது. 10:00 மணியளவில் நிகழ்வில் கலந்து கொண்ட சில பிரமுகர்களால் மங்கள விளக்கேற்றப் பெற்றதைத் தொடர்ந்து, கனடா பண்ணும், தமிழ்த்தாய் வாழ்த்தும் செல்வி சோலை இராச்குமார், செல்வி சென்னி இராச்குமார் ஆகியோரால் இசைக்கப்பெற்றது. தொடர்ந்து அமைதி வணக்கம் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து கனடா பழங்குடி மக்களின் அங்கீகாரம் வாசிக்கப் பெற்றது.
எழுத்தாளர் இணையத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய துணைத்தலைவருமான எழுத்தாளர் குரு அரவிந்தனின் வரவேற்புரையைத் தொடர்ந்து தேனுஜா திருமாறன் ஆசிரியையின் மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம் பெற்றது. தொடர்ந்து இணையத்தலைவர் கவிஞர் அகணி சுரேஸ் அவர்களின் தலைமையுரை இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து ‘கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் கடந்து வந்த பாதை’ என்ற தலைப்பில் உதயன் பத்திரிகை ஆசிரியரும், துணைச் செயலாளருமான ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களின் உரை இடம் பெற்றது. அதைத்தொடர்ந்து விருது விழா மலர் வெளியிட்டு வைக்கப்பெற்றது. இந்த நிகழ்வில் வர்த்தகப் பிரமுகர்கள் சிலர் சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்.
link here | Zoom Meeting ID: 918 584 6813 |No Passcode


அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் (Australian Tamil Literary and Arts Society – ATLAS) வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மெய்நிகரில் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் திருமதி சகுந்தலா கணநாதன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், செயலாளர் டொக்டர் நடேசன் ஆண்டறிக்கையையும் துணை நிதிச்செயலாளர் திரு. லெ. முருகபூபதி நிதியறிக்கையையும் சமர்ப்பித்தனர். 2023 – 2024 ஆம் ஆண்டுகளுக்கான நிருவாகிகளும் தெரிவுசெய்யப்பட்டனர்.
போட்டிக் கதைகளை அனுப்ப வேண்டிய இறுதித்திகதி - நவம்பர் 1, 2023
'காமன்வெல்த்' சிறுகதை பரிசு, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட, இதுவரை வேறெங்கும் வெளிவந்திராத புனைவு சிறுகதைகளுக்கு (2000-5000 வார்த்தைகள்) வழங்கப்படுகிறது. வேறு மொழிகளிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட கதைகளும் போட்டிக்கு தகுதிபெறும். ஒவ்வொரு வருடமும் வெற்றி பெறும் ஐந்து போட்டியாளர்கள் வெவ்வேறு ஐந்து காமன்வெல்த் பிராந்தியங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் £2500 வழங்கப்படுவதுடன் அவர்களில் இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர் ஒருவருக்கு £5000 வழங்கப்படும். பரிசு பெற்ற சிறுகதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால், அதன் மொழிபெயர்ப்பாளர் சில பரிசுத் தொகையைப் பெறுவார். போட்டியில் பங்குபெற அனுமதி இலவசம்.
தமிழில் கதை எழுதுபவர்கள் ஆங்கில மொழிபெயர்ப்பு இல்லையென்றாலும், தமிழிலேயே தங்கள் கதைகளை அனுப்பலாம். தேர்வு விதிகளின் ஓர் அங்கமாக, அக்கதைகள் அனுபவமுள்ள தமிழ் வாசகர்களால் வாசிக்கப்பெறும். இந்த முதல் நிலையை வெற்றிகரமாகக் கடக்கும் கதைகள், சர்வதேச தேர்வுக்குழுவினர் வாசிப்பிற்காக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும்.
நேற்று மாவை நித்தியானந்தனின் ஐந்து நூல்களின் வெளியீட்டு நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். எழுத்தாளர் பா.அ.ஜயகரனின் தலைமையில் நடந்த நிகழ்வைத் தேடகம் ( தமிழர் வகைதுறை வளநிலையம்) ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வில் எழுத்தாளர்கள் மீராபாரதி, துஷி ஞானப்பிரகாசம், எஸ்.கே.விக்னேஸ்வரன் ஆகியோர் நூல்களைப்பற்றிய உரைகளை நிகழ்த்தினர். சிறப்புப் பிரதிகளைக் கவிஞர் திவ்வியராஜன், எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம், நாடகவியலாளர் சொர்ணலிங்கம், ஒலி, ஒளி ஊடகவியலாளர் பி.விக்னேஸ்வரன், கலாநிதி பால சிவகடாட்சம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
எழுத்தாளர் மீராபாரதி வித்தியாசமாகத் தன் உரையினை ஆற்றினார். வழக்கமான உரையாக அல்லாமல் ஒரு நவீன நாடகக் காட்சியைப்போல் அவரது உரை அமைந்திருந்தது. பார்வையாளர்களின் பின்னாலிருந்து, வந்திருந்த கூட்டத்தின் எண்ணிக்கையைப்பற்றிய விமர்சனத்துடன் ஆரம்பித்து 'இனிச் சரிவராது' நாடகத்தின் உரையாடல்களை நடித்துக் காட்டியபடி தன் உரையினைத்தொடர்ந்தார். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பார்கள். அதுபோல் உரை, நடிப்பு என இரு வடிவங்களில் நினைவில் நிற்கும் வகையில் அமைந்திருந்தது அவரது உரை. வித்தியாசமான முயற்சி, ஆனால் நினைவில் நிலைத்து நிற்கும் வகையிலானதாக அமைந்திருந்தது.

கனடா ஸ்காபரோ நகரில், 'மக்கள் எழுத்தாளர்' கே. டானியலின் 'சாநிழல்' குறுநாவல் வெளியீட்டு நிகழ்வு கடந்த சனிக்கிழமை மாலை (30 - 09 - 2023) மிகச் சிறப்பாக நடைபெற்றது. மூத்த தோழர் சூ. மார்க்கு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கே. பி. லிங்கம், செகா சிவா, தர்சன் சிவகுருநாதன் ஆகியோர் டானியல் பணிகள் குறித்தும் சாநிழல் நாவலின் சிறப்புக் குறித்தும் உரையாற்றினர்.
டானியலின் அரசியல், இலக்கிய, சமூகப் பணிகளில் இறுதிவரை அவருடன் உடன்நின்று செயற்பட்ட தோழர் வி. ரி. இளங்கோவன், டானியலின் பணிகள் குறித்துச் சிறப்புரையாற்றினார். இளந்தலைமுறையினர் உட்படப் பெருந்தொகையானோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பலரும் விருப்புடன் நூலைப் பெற்றுச் சென்றனர்.
கல்வியாளர்கள் பார்வதி - கந்தசாமி, மூத்த தோழர் வீரசிங்கம், ஹரிகரன் ஆகியோர் சிறப்புப் பிரதிகள் பெற்றனர். டானியலின் மூத்த மகன் புரட்சிதாசன் சிறப்புப் பிரதிகளை வழங்கினார்.
கனடா 'தேடகம்' அமைப்பினர் இந்நிகழ்வினைச் சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தனர். இந்நூல் ஏற்கனவே யாழ்ப்பாணம், சென்னை, தஞ்சாவூர் ஆதியாம் இடங்களில் வெளியீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது..!
காற்றுவெளியின் மார்கழி மாத மின்னிதழ்(2023) நமது எழுத்தாளர் சொக்கன்(க.சொக்கலிங்கம்)அவர்களின் நினைவுச் சிறப்பிதழாக வெளிவரவுள்ளதால் அவரின் படைப்புக்கள்,பாத்திர வார்ப்புக்கள்,நாடகம்,நாவல்,சிறுகதை,கவிதை,தொகுப்புக்கள் போன்றதுறை சார்ந்த ஆழுமையினை ஆய்வுக்கட்டுரையாக(4 பக்கங்களுக்கு அதிகமாகாமல்) அனுப்புங்கள்.படைப்புக்கள் யாவும் யூனிக்கோட் எழுத்துருவிலும்,வேறெங்கும் பிரசுரமாகாமலும் இருத்தல்வேண்டும்.
அவர் சார்ந்த புகைப்படங்களையும் எதிர்பார்ப்பதோடு,இத் தகவலை நண்பர்களுக்கோ,ஊடகங்களுக்கோ பரிமாறுங்கள். தங்கள் மேலான ஒத்துழைப்பை நாடி, படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இடம்: Trinity Center, East Avenue,London
திகதி: 23.09.2023
நேரம்: காலை 10.30 - மாலை 7.30
சுவாமி விபுலானந்தர் கலை மன்றம் (கனடா ) கனடாவில் வாழும் காரைதீவைச் சேர்ந்த பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரம் அவர்களுக்குப் பாராட்டு விழாவினை ஞாயிற்றுக் கிழமை 17.09.2023 அன்று நடத்தவுள்ளது. இடம்- தமிழ் இசைக் கலாமன்றம், 1120 Tapscott Road, Scarborough. நாள் & நேரம்: 17.09.2023 ஞாயிறு மாலை 5 மணி.
- தெளிவாகப் பார்ப்பதற்குப் படத்தை இரு தடவைகள் அழுத்தவும். -
- அறிவித்தலைத் தெளிவாகப் பார்க்க ஒருமுறை அழுத்தவும். -
- அறிவித்தலைத் தெளிவாகப் பார்ப்பதற்கு ஒருமுறை அழுத்தவும். -