யாழ்ப்பாணத்தில் 'படிப்பகம்'
முற்போக்கான , சமூகம் சார்ந்த நூல்களை உள்ளடக்கிய நூலகத்துடன் கூடிய புத்தகக்கடை வரவேற்கத்தக்க விடயம். சமூக மற்றும் இலக்கியப் பிரக்ஞை மிக்க அனைவரும் பாவிக்க வேண்டிய அமைப்பு. பாவிப்பீர்! பயனடைவீர்!


முற்போக்கான , சமூகம் சார்ந்த நூல்களை உள்ளடக்கிய நூலகத்துடன் கூடிய புத்தகக்கடை வரவேற்கத்தக்க விடயம். சமூக மற்றும் இலக்கியப் பிரக்ஞை மிக்க அனைவரும் பாவிக்க வேண்டிய அமைப்பு. பாவிப்பீர்! பயனடைவீர்!


புனைவை வாசிக்கும்போது தனிமனிதர்களையும் அபுனைவுகளை வாசிக்கும்போது சமூகத்தையும் புரிந்துகொள்ள முடியும் என்பதாககேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பேராசிரியர் நுஃமானின் அபுனைவு எனக்குப் புனைவுகளைப் புரிய வைத்தது என்று சொல்லலாம். நான் இலக்கியத்தை முறையாகப் பயின்றவனில்லை. சுயம்புலிங்கமாகப் புரிந்துகொண்டவன் என்பதால் “சமூக யதார்த்தமும் இலக்கிய புனைவும்” என்ற பேராசிரியர் எம்.ஏ. நுஃமானின் புத்தகம் தெளிவைக்கொடுத்தது.
தமிழகத்திற்கு 84இல் முதல் முதலாக சென்ற நான், இராமேஸ்வரத்தில் இறங்கி அங்கும், அதன் பின்பு சென்னை சென்ற இரயிலிலும் கோட்டுப் போட்டஆண்களையும் பொன்னிறப் பெண்களையும் தேடி ஏமாற்றமடைந்தேன் என எனது எக்ஸைல்புத்தகத்தில் எழுதியிருந்தேன். நான் பார்த்த சினிமா ஊடகம் எனக்கு அவ்விதமான தேடலை உருவாக்கியது. அதேபோல் கவிதாயினி அனாரை சந்தித்தபோது, ” நான் கவிதையை ஊன்றிப் படிப்பவனில்லை “என்றேன். இது உங்களுக்குப் படிக்க இலகுவாக இருக்கும் எனச்சொல்லியவாறு, ‘கிழக்கிலங்கை நாட்டுப் பாடல்கள்’ என்ற நூலை கையில் தந்தார். வாசித்தபோது அதில் உள்ள பெண்களும் ஆண்களும் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடும் பாடல்கள் எனக்கு வியப்பைக் கொடுத்தன . பெண் விடுதலையான சமூகத்தை அந்த நாட்டுப் பாடல்களில் பார்த்தேன்.
புனைவிற்கும் சமூக யதார்த்தத்திற்கும் தூரம் அதிகம் எனத் தெரிந்தாலும் சமூகத்திலிருந்து இலக்கியம் இவ்வளவு தூரம் தள்ளியிருக்குமென்பதை நாட்டார் இலக்கியத்தில் காதல் பாடல்களில் – யதார்த்தத்தையும் புனைவையும் எடுத்து பேராசிரியர் நுஃமான் தெளிவாகக் கூறியுள்ளார். எமது இஸ்லாமியச் சமூகத்தில் இப்படியான விடயங்கள் நடப்பதற்கான சாத்தியமில்லை . அதாவது இவைகள் காதலர்களது படைப்புக்கள் அல்ல.முக்கியமாகக் கிழக்கிலங்கையில் விவசாய வேலைகளில் ஆண்களே ஈடுபடுவதாகவும் இப்படியான சினிமாத்தனமான பாடல்களுக்கு இடமில்லை என்கிறார்.
உதாரணமாக பெண்பாடுவது போல்
“ கச்சான் அடிக்க கயல்மீன் குதி பாய
மச்சானுக்கென்று வளர்த்தேன் குரும்ப முலை “
இப்படியான பாடல் பெண்ணால் பாடியிருக்க முடியாது. ஆண் கவிஞர்களது புனைவு என்கிறார் .
இதே தர்க்கத்தை நாம் வைத்தால், நமது அகநானூறு சங்கப் பாடல்கள் எல்லாம் சமூகத்தின் யதார்த்தத்தை விலகி நடந்த புனைவாக வேண்டும் . சங்ககால எழுத்துகளை வைத்து அந்தக் காலத்தை அறிய எத்தனை பேர் ஆய்வுசெய்தார்கள் ? அகநானுறை விடுங்கள். புறநானுறை உண்மையென நம்பி ஈழத்தில் புதிதாக மீண்டுமொரு சங்க காலத்தைப் படைக்க இரத்தத்தையும் எலும்புகளையும் நிலமெங்கும் வாரியிறைத்தோமே? புனைவை ஆய்வது பரவாயில்லை. ஆனால், புனைவை நிஜம் எனச்சொல்வதுதானே இங்கே உதைக்கிறது . இந்தியர்கள் ராமன் இருந்த இடம், கடந்த இடமென்பதுபோல் நாமும் கானலைத் தேடி தாகத்துடன் அலைந்தோம்.

அகில: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
"நண்பர் எழுத்தாளர் கற்சுறா அனுப்பியுள்ள நிகழ்வு பற்றிய இவ்வறிவித்தலை 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். தேடக அமைப்புடன் இணைந்து இயங்கிய திரு. சண்முகலிங்கன் அவர்கள் இலங்கையில் இருந்த காலத்தில் காந்தியம் அமைப்புடன் இணைந்து இயங்கிய சமூக, அரசியற் செயற்பாட்டாளர்; தன்னார்வத்தொண்டர். அதன் காரணமாகவே சிறைவாசம் அனுபவித்தவர். அவரைச் சந்திக்கும் வேளைகளிலெல்லாம் அவரது அனுபவங்களைப்பதிவு செய்யும்படி கூறுவேன். சிரித்தபடியே செய்யவேண்டும். 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிப்பதற்காக எழுதித்தருகின்றேன் என்று கூறுவார். அது நிறைவேறாமலே போனாலும் காலம் அவரை மறந்துவிடவில்லை என்பதற்குச் சான்று இந்நிகழ்வு. இந்நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ள அவரது நண்பர்களுக்கு வாழ்த்துகள். சண்முகலிங்கம் அவர்களை நினைத்தால் அவரது சிரித்த முகமும், 'கிரிதரன்' என்று வாஞ்சையுடன் அழைக்கும் குரலுமே எப்பொழுதும் நினைவுக்கு வரும். ஒரு காலகட்டத்துக்குரிய வரலாற்றுப்பங்களிப்பைச் செய்த இவரைப்போன்றவர்களை வரலாறு ஒருபோதும் மறந்துவிடுவதில்லை." - வ.ந.கி -


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

வடமேற்கு இலங்கையில் கம்பகா மாவட்டத்தில் நீர்கொழும்பில் 1954 ஆம் ஆண்டு விவேகானந்தா வித்தியாலயம் என்னும் பெயரில் தொடங்கப்பட்ட இன்றைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் முதலாவது தலைமை ஆசிரியரும் முத்தமிழ் அறிஞரும் பன்னூலாசிரியருமான கதிரேசர் மயில்வாகனனார் (1919 – 2019) அவர்களின் நூற்றாண்டு விழா 09 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு கல்லூரி பிரதான மண்டபத்தில் ஆரம்பமாகும். கல்லூரியின் ஸ்தாபகர் ( அமரர் ) எஸ்.கே. விஜயரத்தினம் அவர்களின் மருமகளும் நீர்கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் ( அமரர்) ஜெயம் விஜயரத்தினம் அவர்களின் துணைவியாருமான திருமதி யோகேஸ்வரி ஜெயம் விஜயரத்தினம் மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவரும் அவுஸ்திரேலியாவில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் முன்னாள் தலைவரும் பரிபாலன சபை உறுப்பினருமான திரு. இராஜரட்ணம் சிவநாதன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக இவ்விழாவில் கலந்துகொள்வர்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>

படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான அவுஸ்திரேலியாவில் வதியும் லெ. முருகபூபதி எழுதிய சொல்லவேண்டிய கதைகள் மற்றும் சொல்லத்தவறிய கதைகள் ஆகிய இரண்டு நூல்களின் அறிமுக அரங்கு எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் – நல்லூரில் நாவலர் மண்டபத்தில் மாலை 3.00 மணிக்கு நடைபெறும். 'சொல்லவேண்டிய கதைகள்' - யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதி கலை இலக்கிய மாத இதழின் வெளியீடாகும். யாழ்ப்பாணம் காலைக்கதிர் வார இதழ் உட்பட பல இணைய இதழ்களிலும் வெளியான 'சொல்லத்தவறிய கதைகள்' கிளிநொச்சி மகிழ் பதிப்பக வௌியீடாகும்.

- தகவல்: முருகபூபதி -

சென்னை சுயாதீன திரைப்பட விழா 2019 - முன்பதிவு தொடங்கியது
பிப்ரவரி 8, 9, 10 (வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை முழுநாள்)
பிரசாத் லேப் (70 MM திரையரங்கம், பிரிவியூ திரையரங்கம், சினிமா சந்தை)
MM திரையரங்கம் (கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்)
நுழைவுக்கட்டணம்: ₹ 250 (மூன்று நாட்களுக்கும் சேர்த்து) உதவி தொழிற்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைப்பட மாணவர்களுக்கு ₹ 150, பணம் இல்லை ஆனால் நிறைய ஆர்வம் இருக்கிறது என்பவர்கள் 100 ரூபாய் செலுத்தினால் போதும். பணமில்லை என்றால் இலவசமாகவே வந்து அனுமதி சீட்டை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அனுமதி சீட்டு இல்லாமல் திரைப்பட திருவிழாவில் பங்கேற்க இயலாது.பணம் பிரச்சனையில்லை. ஆனால் முன்பதிவு செய்துக்கொள்ளுங்கள்.
முன்பதிவு செய்ய: 9840644916, 044 48655405
இந்தியாவின் முதல் பொது மக்கள் நிதி சுயாதீன திரைப்பட விழாவான தமிழ் ஸ்டுடியோவின் சென்னை சுயாதீன திரைப்பட விழாவின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பெரும் கலை விழாக்களுடன் தொடங்குகிறது. இந்தியாவில் வேறெங்கும் பார்க்க முடியாத பல்வேறு மிக முக்கியமான திரைப்படங்களை இந்த சென்னை சுயாதீன திரைப்பட விழாவில் பார்க்க முடியும். திரைப்படங்கள் மட்டுமின்றி, பயிற்சிப்பட்டறைகள், மாஸ்டர் க்ளாஸ், கலந்துரையாடலை, முக்கிய திரைக்கலைஞர்களுடன் விவாதம் நிகழ்ச்சி என உலகின் எல்லா திரைப்பட விழாக்களுக்களி இருந்தும் மாறுபட்டு தனித்து நிற்கிறது IFFC . இது தவிர, உங்களிடம் இருக்கும் கதைகளுக்கு தேவையான திரைக்கதை ஆலோசனை, நடிப்பு பயிற்சி ஆலோசனை, உங்கள் படத்திற்கு தேவையான இணை தயாரிப்பாளர்களுடன் கலந்துரையாடல் என "சினிமா சந்தை" என்கிற பிரிவும் இருக்கிறது. மிக குறைந்த விலையில் உணவு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.