நூல் வெளியீடு: எஸ்தர் - இன் 'கால் பட்டு உடைந்தது வானம்'



இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அனைவருக்கும் வணக்கம், கனடாவாழ் மூத்த எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் எழுத்துலகிற்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவுறுகின்றது. அவரைக் கொண்டாடும் முகமாக ‘’எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60’’ நிகழ்வு இலக்கிய நண்பர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.


உங்களின் படைப்புக்களுடன் இவ்வாரம் வெளிவருகிறது. இதழின் அச்சுப் பிரதி தேவையானோர் சந்தாவைச் செலுத்திப்பெற்றுக்கொள்ளலாம். பி.டி.எப் வடிவம் தேவைப்படுவோர் மின்னஞ்சலில் தொடர்பினை ஏற்படுத்துங்கள். நெய்தலின் இதழ் ஒன்றிற்கும் (2017),இரண்டிற்குமான (2018) இடைவெளி சற்று அதிகம் தான்.
கவிதைக்கான இதழ் ஆரம்பிக்கவேண்டும் என்ற கனவின் வெளிப்பாடே நெய்தலின் வருகை.எனினும் வழமையான வாழ்வியல் அசௌகரியங்களால் தாமதமாகின..
தொடர்ந்து காலம் பிசகாது வெளிக்கொணர முயற்சிக்கிறோம். நெய்தலை இதர படைப்பாளர்களுக்கும் அறிமுகம் செய்துவையுங்கள்.
- இவ்வறிவித்தலைப் பிரசுரிப்பதில் தாமதமாகிவிட்டது. வருந்துகின்றோம். ஒரு பதிவுக்காக இதனைப் பதிவு செய்கின்றோம். - பதிவுகள் -

உலகப் பெண்கள் தினவிழா!இலண்டன் தமிழ் பெண்கள் அமைப்பு வரும் சனிக்கிழமையன்று மார்ச் 3ஆம் திகதியன்று பிற்பகல் 230 தொடக்கம் 530 மணி வரை கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய கருத்து ரீதியான நிகழ் வுகளையடக்கிய விழாவை நடாத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. பெண்களுக்கென பெண்களால் நடாத்தும் விழா இது என்பதும் குறிப்பிடத் தக்கது.

தொடங்கி வைத்து திரைப்பட ரசனை குறித்து பேசுபவர்: இயக்குநர் வெற்றிமாறன் | 18-03-2018, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5 மணிக்கு. | MM திரையரங்கம், கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில். | தனி நிகழ்விற்கு: சந்தா 100 ரூபாய்.
நண்பர்களே சாமிக்கண்ணு திரைப்பட சங்கம் தொடக்க விழா மற்றும் பாலு மகேந்திராவின் அழியாத கோலங்கள் திரையிடப்பட்டு இயக்குனர் வெற்றிமாறன் திரைப்பட ரசனை பற்றிய அறிமுக வகுப்பும் எடுக்கவிருக்கிறார். மிக முக்கியமான இந்த நிகழ்வில் இன்னும் 50 பார்வையாளர்கள் மட்டுமே இணைய முடியும். இது பொது நிகழ்வல்ல, எல்லாரும் கலந்துக்கொள்ள இயலாது. உறுப்பினர்கள் அல்லது திரைப்பட சங்க விதிமுறைப்படி சந்தா செலுத்தியே பங்கேற்க முடியும். இந்த தொடக்க விழாவிற்கு கட்டணம் நூறு ரூபாய். முன்னமே தமிழ் ஸ்டுடியோவில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் தனியே சந்தா செலுத்த தேவையில்லை. புதிய நண்பர்கள் பியூர் சினிமா அலுவலகத்தில் நூறு ரூபாய் சந்தா செலுத்தி உடனே உங்கள் இருக்கையை உறுதி செய்துக்கொள்ளுங்கள். மீண்டும் சொல்கிறேன், இந்த நிகழ்வில் இன்னும் 50 வரை மட்டுமே கலந்துக்கொள்ள இயலும். எனவே உங்கள் இருக்கையை உறுதி செய்ய உடனே சந்தா செலுத்தி நுழைவு சீட்டை பெற்றுக்கொள்ளுங்கள். நேரில் வந்து 100 ரூபாய் செலுத்த இயலாதவர்கள் அலைப்பேசியில் உங்கள் பெயரை பதிவு செய்து நிகழ்வு நடக்கும் அடுத்த ஞாயிறு MM திரையரங்கில் நேரில் பணம் செலுத்தி நிகழ்வில் கலந்துக்கொள்ளலாம்.
‘ஈழத்தின் தேசிய விடுதலைப்போராட்டத்தில் மார்க்சிய அணுகுமுறையோடு இடதுசாரிச் சிந்தனையுடன் செயற்பட்ட கவிஞர் செழியனின் மறைவு ஈழத்து அரசியல் போராட்டத்தின் ஒரு துயர சம்பவமாகும்’ என்று லண்டனில் இடம்பெற்ற கவிஞர் செழியனின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் தலைமை வகித்துப் பேசுகையில் ‘பனி மலர்’ இதழ் ஆசிரியர் நா. சபேசன் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்: ‘ ‘மாணவர் குரல்’ என்ற சஞ்சிகையைச் செழியன் என்று அறியப்படும் சிவகுமாரன் அவர்கள் நடத்திய காலத்தில் இருந்தே அவரை நான் அறிவேன். மாவட்ட ரீதியில் பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தலை இலங்கை அரசு கொண்டுவந்தபோது அந்நடவடிக்கைக்கு எதிராக யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் ஒருங்கிணைத்துப் போராடும் முயற்சியில் செழியன் வகித்த பாத்திரம் முக்கியமானதாகும். மாணவர் எழுச்சிக்கு வழிவகுத்தவர் என்று மட்டுமல்லாது ஒடுக்குமுறைக்குள்ளான கூலி விவசாயிகளின் அமைப்பிலும் செழியன் தீவிர பங்காற்றி வந்திருக்கின்றார். தனது சொந்தக் கிராமமான உரும்பிராயில் சாதித் தடிப்பு மிக்க நிலவுடைமையாளர்கள் மத்தியில் எளிய, நிலமற்ற விவசாயிகளுக்காக அவர் போராடியபோது அதிகார மையத்தின் பெரும் எதிர்ப்பை அவர் எதிர்கொள்ளவேண்டி இருந்தது. எனினும் தனது சொந்தக் கிராமத்திலேயே புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்த முனைந்த புரட்சிகர செயற்பாட்டாளராகவே செழியன் திகழ்ந்தார்’ என்று நா. சபேசன் மேலும் தெரிவித்தார்.
விமர்சகர் மு. நித்தியானந்தன் உரையாற்றும்போது: ‘80களில் சமூக உணர்வு கொண்டு பல்வேறு இயக்கங்களிலும் தீவிர அர்ப்பணிப்போடும், பொதுநலச் சிந்தனையோடும் செயற்பட்ட உயிர்த்துடிப்பு மிக்க ஒரு சந்ததியின் குறியீடாகத் திகழ்ந்த கவிஞர் செழியனின் மறைவு வருந்தத்தக்கதாகும்.
‘மரணத்தைக் கண்டு நாம் அஞ்சவில்லையென்றும், புதிய எஜமானர்களின் அடிமைகளாக மரணிப்பதையே வெறுக்கிறோம்’ என்றும் பிரகடனம் செய்த செழியன் இறுதிவரை அடக்குமுறைக்கு எதிரான ஒரு கிளர்ச்சிக்காரனாகவே திகழ்ந்தார். அவர் கவிதைகள் வாழ்வின் குரூர யதார்த்தத்திலிருந்து பிறந்தவையாகும். அதனால்த்தான் எஞ்சியது கரித்துண்டுகளேயாயினும் இறுதிவரை எழுதியே தீருவோம்’ என்று அவரால் முழக்கமிட முடிந்தது. தனது கவிதைகளை அழகழகாய் அச்சிட்டுப் பார்க்க வேண்டுமென்றோ, உலகமொழிகளிலெல்லாம் தனது கவிதைகள் போய்ச் சேரவேண்டுமென்றோ ஒரு கணமு
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை ”உலகத்தமிழ்” என்னும் மின்னிதழைத் தொடங்கவுள்ளது. அந்த இதழுக்காக உலகெங்கிலுமுள்ள பேராசிரியா்கள், ஆய்வு மாணவா்கள், தமிழறிஞா்கள், தமிழ் ஆா்வலா்களிடமிருந்து தரம்வாய்ந்த படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. மேலும் தகவலுக்கு உலகத் தமிழ்ச் சங்கம் வலைத்தள முகவாி:www.ulagatamilsangam.in மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

திருப்பூர் மத்திய அரிமா சங்கம்: ஆண்டுதோறும் சிறந்த குறும்பட விருது, மற்றும் பெண் எழுத்தாளர்களுக்கான ”சக்தி விருது” ஆகியவற்றை வழங்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் வெளிவந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், பெண் எழுத்தாளர்களின் நூல்கள் ( 2 பிரதிகள் ), திரைப்படம், குறும்படம் குறித்த புத்தகங்களை இரு பிரதிகள் அனுப்பலாம்.கடைசி தேதி மார்ச் 15 , 2018. முகவரி: 94, எம்ஜிபுதூர் 3ம் வீதி , ஓசோ இல்லம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி, காந்திநகர், திருப்பூர் 641 604 .) /0421 2212210
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

‘கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஐரோப்பாவில் மட்டுமன்றி இலங்கை, தமிழ்நாடு போன்ற இடங்களிலும் தனது நாட்டியத் திறமையால் கலாநர்த்தகியாகத் திகழும் ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜா லண்டனில் விடாமுயற்சியுடன் தனது ‘சலங்கை நர்த்தனாலயா’ நடனப் பள்ளி மாணவர்களுக்குக் களம் அமைத்து, அவர்களின் நாட்டியத் திறமைகளை வெளிக்கொண்டுவருவது பாராட்டுக்குரிய விடயம்’ என்று முன்னாள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் விரிவுரையாளரும், சுயவயெஅ குழரனெயவழைn ஐ நடாத்தி வரும் கலாநிதி இரத்தினம் நித்தியானந்தன் அண்மையில் லண்டன் வின்சன்சேர்ச் மண்டபத்தில் இடம்பெற்ற சலங்கை நர்த்தனாலயா நுண்கலை அமைப்பு வழங்கிய ‘சலங்கைகளின் சங்கமம்’ நிகழ்ச்சியில் தனது பிரதம விருந்தினர் உரையில் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில் லண்டனில் பல்வேறு நிகழ்வுகளின் மத்தியில் மாணவர்களை ஒருங்கிணைத்து கணேச ஸ்துதி, அலாரிப்பு, .பதம், குறத்தி நடனம், சீதா கல்யாணம், முருகன் கௌத்வம், சிவ கிருத்தி போன்ற நாட்டிய வடிவங்களால் அலங்கரித்தமை மிக மெச்சத்தக்க விடயம். இதற்கு பார்வையாளர்கள்; மேலும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். இந்த அமைப்பின் தலைவியான நாட்டியக் கலாசாரதி ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜாவும், அவரது மகளான உயிரியல் பட்டதாரியான நாட்டிய ரூபினி சஸ்கியா யோகராஜாவும் மாணவர்களுடன் இணைந்து உறவும் மரபும் சேர்வதுபோல் வாழ்க்கையிலும், மகத்தான நாட்டியக் கலையிலும் ஒன்றிணைவது பார்வையாளர்களை மேலும் ஈர்ப்புக்கொள்ள வைத்தது என்றால் அது மிகையாகாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

The 22nd Technological Advances in Science, Medicine and Engineering Conference (TASME2018) will be hosted in SickKids / University of Toronto on July 7-8, 2018. This is a unique International conference dedicated specifically to Science, Medicine and Engineering Advancements. We need your support and active participation to make the event successful. Anyone willing to volunteer in various conference related activities, please let us know. You are welcome to contribute professional papers, student papers and/or student posters. We would also like to invite you and your students to submit papers to the conference. For more info please visit our website; http://www.tasmeconferences.org/

இந்தியாவின் பெருமைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்று என மதிக்கப்படும் ‘பாரதிய பாஷா விருது‘ இவ்வாண்டு தமிழ் எழுத்தாளர் மாலனுக்கு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில், ஜெய்காந்தன், சிவசங்கரி, ராஜம்கிருஷ்ணன், இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்ரன், பிரபஞ்சன்,வைரமுத்து ஆகியோருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.
40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் மாலன் இலக்கிய உலகில் பல சிறப்புக்களைப் பெற்றவர். இருபதிற்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். உணர்ச்சிகள், சம்பவங்கள் இவற்றிற்கு பதிலாகப் புனைவுகளில் சமூக விமர்சனம்,தர்க்கம் ஆகியவற்றை முன்னிறுத்தி எழுதுபவர். இலக்கியப் படைப்பாற்றலில் முழுமை கருதி இந்த விருது அவருக்கு அளிக்கப்பெறுகிறது. இவரது கதைகள் ஆங்கிலம் இந்தி போன்ற இந்திய மொழிகளில் மட்டுமன்றி சீனம், மலாய், பிரெஞ் போன்ற உலக மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. சாகித்ய அகாதெமி ஆலோசனைக் குழுவில் அங்கம் வகித்தவர்.சரஸ்வதி சன்மான் விருது வழங்கும் கே.கே. பிர்லா பவுண்டேஷனில் தமிழ் மொழிக் குழுவின் தலைவர்.
மனோன்மணியம் சுந்தரனார், பாரதிதாசன் பல்கலைக்கழக செனட்களில் உறுப்பினராக ஆளுநரால் நியமிக்கப்பட்டவர். மலேயா, சிங்கப்பூர், மெல்பன் ஆகிய பல அயலகப் பல்கலைக்கழகங்களில் உரையாற்ற அழைக்கப்பட்டவர். கடந்த ஆண்டு சிங்கப்பூர் நூலக வாரியம் அளிக்கும் லீ காங் சியான் ஆய்வுக் கொடை வழங்கப்பட்டு சிங்கப்பூரில் ஆறுமாத காலம் தங்கியிருந்து இலக்கிய ஆய்வு மேற்கொண்டவர். இந்தக் கொடை அளிக்கப்பட்ட முதல் இந்தியரும் தமிழரும் இவரே ஆவார்.
பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர், நாடகக் கலைஞர் என பல்வேறு முகங்கள் கொண்டவர் ஞாநி சங்கரன். பரீக்ஷா நாடகக் குழுவை 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார். அதன் மூலம் பல்வேறு சமூக நோக்குள்ள வீதி நாடகங்களையும், மேடை நாடகங்களையும் நிகழ்த்தியுள்ளார்.
1954ம் ஆண்டு செங்கல்பட்டில் பிறந்தவர். அங்குள்ள புனித சூசையப்பர் பள்ளியில் படித்தார். பின்பு கல்லூரிக் கல்வியை சென்னை கிறித்துவக் கல்லூரியில் படித்திருக்கிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் விளம்பர்ப பிரிவில் பணியாற்றியவர், இதழியல் பட்டயப் படித்து பின்பு அதே நாளிதழில் நிருபராகவும் பணியில் சேர்ந்தார். அதன் பிறகு பல்வேறு ஊடகங்களில் பணியாற்றிய காலத்தில் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எழுதி அவருக்கென ஒரு தனி பாணியை உருவாக்கினார். அவருடைய ஞான பானு என்கிற பதிப்பகத்தின் மூலம் அவருடைய படைப்புகள் அனைத்தையும் புத்தகமாக கொண்டுவந்தார். பல்வேறு பத்திரிகைகளுக்கு கெளரவ ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். கடைசியாக அவர் தினமலர் நாளிதழின் இணைப்புப் பிரதியான ‘பட்டம்’ இதழின் ஆலோசகராக பணியாற்றினார்.

எழுத்தாளரும் ஊடகவியலாளருமான லெ. முருகபூபதி பற்றிய ஆவணப்படம் – "ரசஞானி" கிளிநொச்சியில் திரையிடப்படவுள்ளது. கிளிநொச்சி, பழைய ஆஸ்பத்திரி மருந்தகத்துக்கு அருகில் உள்ள மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் இந்தப் படத்தை இயக்கிய 'மறுவளம்' எஸ். கிருஸ்ணமூர்த்தியும் கலந்து கொள்கிறார். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியாவில் வாழும் முருகபூபதி நீண்டகாலமாக வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றியவர். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். இதுவரையில் 25 புத்தகங்களுக்கு மேல் பிரசுரமாகியுள்ளன. பல நூற்றுக்கணக்கான பதிவுகளையும் கட்டுரைகளையும் எழுதியிருக்கும் முருகபூபதி, சமூகச் செயற்பாடுகளிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகிறார். இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற அமைப்பை நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி, அதன் மூலம் பல ஆயிரக்கணக்கான பிள்ளைகளுக்கு கல்விக்கான உதவிகளைச் செய்து வருகிறார்.

அன்பின் ஆசிரியருக்கு, இன்று இந்தியா,சென்னையில் ஆரம்பமாகியிருக்கும் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் 'எனது தேசத்தை மீளப் பெறுகிறேன்' எனும் எனது புதிய தொகுப்பு வெளியாகியிருக்கிறது. என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சர்வதேச புகழ்பெற்ற இருபத்திரண்டு ஆபிரிக்க எழுத்தாளர்களின் முப்பது உலகச் சிறுகதைகள் அடங்கிய பெருந் தொகுப்பாக அமைந்திருக்கும் இந் நூலை இந்தியாவின் பிரபல பதிப்பகங்களுள் ஒன்றான 'வம்சி' பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
எனது ஐந்து வருடங்களுக்கும் மேற்பட்ட, உலகப் புகழ்பெற்ற ஆபிரிக்க சிறுகதைகள் குறித்த வாசிப்பில், மனதை பெரிதும் ஈர்த்தவையும், பாதித்தவையுமே என்னால் இங்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. மேற்கத்தேய ஊடகங்களில் நர மாமிசம் உண்ணும் காட்டுமிராண்டிகளாகவும், வன்முறையாளர்களாகவும், ஒழுக்கமற்றவர்களாகவும், மனிதாபிமானமற்றவர்களாகவும் சித்தரிக்கப்படும் ஆபிரிக்கர்களையே நாம் பெரும்பாலும் கண்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் உண்மையில் அவ்வாறானவர்கள் அல்ல. நேர்மையும், மனிதாபிமானமும் மிக்க அம் மக்களது நிஜ சொரூபத்தையே இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் விவரிக்கின்றன. இந்த உண்மையானது, தமிழ் வாசகர்களிடத்திலும் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இச் சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்.
சிவாஜி ஒரு பண்பாட்டியற் குறிப்பு - ஜெயகாந்தன் உலகப்பொது மனிதன் ஆகிய ஆவணப்படங்களை தயாரித்தவரும், சிங்கப்பூர் தேசிய தொலைக்காட்சிக்காக குறும்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் இயக்கித் தயாரித்தவருமான எழுத்தாளர் 'கனடா' மூர்த்தி அவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்துள்ளார். 'கனடா' மூர்த்தி அவர்களுடனான சந்திப்பும் கலந்துரையாடலும் எதிர்வரும் 06-01-2018 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு மெல்பனில்
Clayton Community Centre Library Meeting Room மண்டபத்தில் (9-15, Cooke Street , Clayton, Victoria - 3168 ) சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இணையத்தளம்: www.atlasonline.org
Dr. Jayanthisri Balakrishnan is one of Tamil Nadu’s renowned mental health counselor and motivational speaker. Last year, she visited 18 war-impacted regions in Sri Lanka, and provided counsel to widows, teachers, and students who were impacted by war. She gave a poignant and powerful oration to the attendees in an effort to heal the psychological trauma experienced by the community members organized by Puthiya Velicham.
In January 2018, Puthiya Velicham will be holding similar workshops covering three major topics within the Jaffna, Mullaithivu, Kilinochchi, Mannar, and Vavuniya districts. These training workshops will be led and directed by Dr. Jayanthisri Balakrishnan along with others from Canada and abroad. Along with these speakers, we will also be collaborating with professors and other industry experts within the Jaffna district.
Below is a breakdown of the three major themes for the workshops:
Student workshops for students who completed their A/L
Educational training workshops for teachers
Each workshop has been designed to accommodate 100 participants, and will be held from January 2 - 12 in over 10 locations in each of the listed districts.
25 – 12 - 2017. - தமிழகத்தைச்சேர்ந்த சிறந்த உளநலம் சார்ந்த பேச்சாளரான பேராசிரியர் திருமதி ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள் கடந்த வருடம் இலங்கைக்கு வருகை தந்து சுமார் 18 நிலையங்களில் போரால் பாதிக்கப்படட மக்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரை ஆற்றுப்படுத்தும் வகையிலான உரைகளை ஆற்றி அவர்களின் உளநல மேம்பாட்டை வளர்ப்பதில் பெரும் பங்கு ஆற்றியிருந்தார். புதிய வெளிச்சம் இந்த செயற்பாடுகளை ஒழுங்குசெய்திருந்தது. அந்த வகையில் எதிர்வரும் தைமாதம், யாழ்ப்பாணம் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு மூன்று பிரிவுகளில் இலவச பயிற்சிப் பட்டறைகளை புதிய வெளிச்சம் ஒழுங்குசெய்கிறது. இந்த பயிற்சிப் பட்டறைகளை நடத்த இந்தியாவில் இருந்து பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் தலைமையிலான வளவாளர்களுடன், தமிழ் நாட்டிலிருந்து பயிற்றினர் விவசாயிகள் ஐக்கிய ராச்சியம் மற்றும் கனடாவில் இருந்தும் வளவாளர்கள் வருகை தர உள்ளார்கள். இவர்களுடன் யாழ்ப்பாணத்ததை சேர்ந்த துறைசார் வல்லுனர்களையும் இணைத்தே இந்த பயிற்சிப்பட்டறைகளை ஒழுங்கு செய்கிறோம்.
கீழ்வரும் பிரிவுகளில் பயிற்சிப் பட்டறைகள் இடம்பெற உள்ளன,
1. பாடசாலைக் கல்வியை பூர்த்திசெய்த இளைஞர் யுவதிகளுக்கான பயிற்சிப் பட்டறை.
2. ஆசிரியர்களுக்கான கற்பித்தல் பயிற்சிப் பட்டறை.
3. விவசாயிகளுக்கான இயற்கைவிவசாய பயிற்சிப் பட்டறை.- இதன் மூலம் ஜனவரி 8ஆம் திகதிமுதல் ஜனவரி 14ஆம் திகதிவரை “இயற்கை விவசாய விழிப்புணர்வு வாரம்” ஆக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு முழுவதும் தொடர் கருத்தரங்குகளை நடத்தவுள்ளோம்
ஒவ்வொரு பிரிவுகளிலும் நூறு பேர் பங்குபற்ற கூடியவாறு, ஜனவரி 2ஆம் திககி முதல் 12ஆம் திகதிவரை, ஒவ்வொரு மாவட்டங்களிலும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த பயிற்சிப் பட்டறைகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் புதியவெளிச்சம் ஒழுங்குசெய்யும் இந்த பயிற்சிப்பட்டறைகள் சரியான வழியில், பயன்பெற வேண்டியவர்களை சென்றடைவதில் மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், வடமாகாண கல்வி அமைச்சு, கல்வித் திணைக்களங்கள், பாடசாலைகள், யாழ்ப்பல்கலைக்கழக விவசாய பீடம் என்பவற்றின் ஒத்துழைப்பை பெற்றுள்ளோம்.

பாரதி புத்தகாலயத்தின் புத்தாண்டுக் கொண்டாட்டம்! அனைவரும் திரண்டு வருக!
அன்புடையீர், வணக்கம், பாரதி புத்தகாலயத்தின் சார்பில் வாசகர், எழுத்தாள்ர், பதிப்பாளர் சந்திப்பாக புத்தகங்களுடன் புத்தாண்டுக் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்வு டிசம்பர் 31 மாலை 7 மணி முதல் 2018 ஜனவரி 1 மாலை வரை நடைபெற உள்ளது. இச்சமயத்தில் பாரதி புத்தகாலய வெளியீடுகளுக்கு 33 முதல் 50% வரை சிறப்புக் கழிவு வழங்கப்படும்.
நீங்கள் இந்நிகழ்வில் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டுகிறோம்.
BHARATHI PUTHAKALAYAM
7, Elango Salai,
Teynampet.
Chennai 600018
044 24332424
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பிரதம பேச்சாளர் உரை:
'அரங்கும் கூத்தும்' - திரு.ஞானம் லம்பேட்
சிறப்புபேச்சாளர்கள் உரை:
'மட்டக்களப்புக் கலைகள்' - கலாநிதி இ.பாலசுந்தரம்
'முல்லைத்தீவுக் கூத்துக்கள்' - கலாநிதி பார்வதி கந்தசாமி
ஐயந்தெளிதல் அரங்கு
"புத்தகம் புதிது" - திரு.என்.கே.மகாலிங்கம்
நாள்: 30-12-2017
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
Unit 7, 5633, Finch avenue East,
Scarborough,
M1B 5k9 (Dr. Lambotharan's Clinic - Basement)

பேசா மொழி தமிழ் ஸ்டுடியோ: தமிழ் ஸ்டுடியோ புத்தாண்டு கொண்டாட்டம். 31-12-2017, ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணி முதல் இரவு 1 மணி வரை.
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
நன்கொடை : 250 ரூபாய். (கட்டாயமில்லை)
காலை 10 மணி: திரைக்கதை பயிற்சி: அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர்: ஸ்வர்ணவேல்
12:30 - 1:30 வரை உணவு இடைவேளை
மதியம் 2 மணி: எழுத்தாளர் & பத்திரிகையாளர் சமஸுடன் கலந்துரையாடல்
மாலை 4 மணி: ஒளிப்பதிவு கலந்துரையாடல்: 'தீரன்' ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியனுடன் ஒளிப்பதிவு குறித்து அதன் தொழில்நுட்பம் குறித்து கலந்துரையாடல்
மாலை 6 மணி: சமீபத்தில் வெளியான "ஒரு கிடாயின் கருணை மனு" திரையிடல் மற்றும் இயக்குனர் சுரேஷ் சங்கையாவுடன் கலந்துரையாடல்
இரவு 10 மணி முதல் அதிகாலை 1 மணி வரை: திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, இலக்கியம் குறித்து கலந்துரையாடல்: இயக்குனர் மிஷ்கினுடன் புத்தாண்டு கொண்டாட்டம்.

30-12-2017, சனிக்கிழமை, மாலை 5.30 மணிக்கு. பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
நண்பர்களே தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ பல்வேறு துறை சார்ந்த கலைஞர்களுடன் கலந்துரையாடலை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் சனிக்கிழமை சென்னை சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் ICAF அமைப்பின் பொது செயலாளர் தங்கராஜ் அவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இந்தியாவிலேயே ஒரு பிலிம் கிளப் நடத்தும் ஒரே சர்வதேச திரைப்பட விழா சென்னை திரைப்பட விழாதான். தொடர்ந்து பதினைந்து ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் இந்த திரைப்பட விழா நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு விமர்சனங்களும் இந்த அமைப்பின் வைக்கபப்டுகிறது. சென்னை சர்வதேச திரைப்பட விழா தமிழ் சினிமாவிற்கு பங்காற்றியமை, சினிமா விழாக்களின் முக்கியத்துவம், விருதுகளின் அரசியல் உள்ளிட்டவை குறித்து தங்கராஜுடன் கலந்துரையாடலும். ஒரு மாபெரும் திரைப்பட விழாவை ஒரு வாரத்திற்கு முன்னர்தான் நடத்தி முடித்திருக்கிறார்கள். திரளாக கலந்துக்கொண்டு அவர்களுக்கு நன்றி சொல்வதோடு, உங்கள் கேள்விகளையும் முன்வைக்கலாம். அவசியம் வாருங்கள்.