மீண்டும் "தமிழ்ப்பூங்கா"

அன்பினியவர்களே ! அன்பான வணக்கங்கள். இதோ மிக நீண்டதோர் இடைவெளியின் பின் "தமிழ்ப்பூங்கா" புதியதோர் வடிவமைப்புடன் காலாண்டு இதழாக புதுவடிவம் பெற்று உங்களிடம் வருகிறது. வாழ்வின் கடமைகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட காலதாமதத்திற்கு வருந்துகிறேன். இது வழமை போல P.D.F ஆக இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன் இதனை வெள்ளோட்டமாக ஒரு மின்புத்தகமாக்கும் முயற்சியில் அதற்குரிய இணையத்தளத்தினைத் தருகிறேன் இதனைப் பார்வையிடுவதற்கு Adobi Flash மென்பொருள் உங்கள் கணணியில் இருக்க வேண்டும். என்றும் போல இப்பவும் உங்கள் ஆதரவையும், ஆக்கங்களையும் தந்து ஆதரவளிபீர்கள் எனும் நம்பிக்கை எனக்குண்டு. இ-புத்தக வடிவில் பார்க்க இணையத்தளம் - https://www.flipsnack.com/thamilpoonga/2.html




"பல்துறை ஆற்றலாளரான வி.ரி.இளங்கோவன் அவர்களது கவிதைத் தொகுதியினை ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் உலகத் தமிழர் படைப்பரங்கில் வெளியீடு செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம். கலை - இலக்கியவாதியாகவும், முற்போக்குச் சிந்தனையாளராகவும் விளங்கும் இளங்கோவன் புலம்பெயர்ந்து வாழும் பிரான்ஸ் நாட்டிற்கும் எமக்குமிடையே தமிழ் இலக்கியப் பாலமாக - தொடர்பாளராக விளங்குகிறார். பல நூல்களை வெளியிட்டுள்ள குறிப்பிடத்தக்க சிறந்த படைப்பாளியான அவரது கவிதைத் தொகுதியை உலகத்த தமிழர் படைப்பரங்கில் வெளியிட முன்வந்தமைக்காக அவருக்கு மக்கள் சிந்தனைப் பேரவை மகிழ்ச்சியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது."


கடந்தவாரம் சனிக்கிழைமையன்று (21.07.2018) மீண்டுமொரு மாலை வேளை ஈஸ்ட் ஹாம் Trinity Centre இல் தமிழ் மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் அமைப்பினரால் ‘பிரதிகள் மீதான வாசிப்பும் கலந்துரையாடலும்’ என்ற பதாகையின் கீழ் பல நூல்களின் அறிமுக விழாவும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.
மீண்டும் ஒரு அக்னிபார்வை நிகழ்ச்சி குறித்து. இம்முறை நிகழ்ச்சித் தொகுப்பாளர் தோழர் நடேசன் அவர்கள் புதிய திசைகள் ஒருங்கிணைப்பாளர் தோழர் மாசில் பாலன் அவர்களை நேர்காணல் செய்கிறார். தோழர் பாலன் அவர்கள் ஒரு தீவிரமான அரசியல் செயற்பாட்டாளர். புரட்சிகர குடும்பப் பின்னணியும் பின்புலமும் கொண்ட அவர் சிறு வயது முதலே தன்னை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் பிணைத்துக் கொண்டவர். 90 களின் பின்பும் பல்வேறு மக்கள் அமைப்புக்களுடன் இணைந்து பணி புரிந்தவர். இன்று முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்கு பின்னான புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனித்த பின்பு அங்கு ஏற்பட்டுள்ள ஒரு வெற்றிடத்தை நிரப்பும் முகமாக ‘புதிய திசைகள்’ என்ற அமைப்பினை ஒருங்கிணைத்து தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் பல்வேறு விதமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருபவர். இந்நிகழ்வில் அவர் தனது அமைப்பு குறித்தும் அதனது வேலைத்திட்டங்கள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார்.
கொஞ்சம் தாமதமான பதிவு. ஆயினும் இதனை இங்கு பதிவிடாமல் இந்த உரையாடல் வெளியினை கடந்து செல்ல முடியாது. கடந்த மாத இறுதியில் 30.06.2018 சனிக்கிழமையன்று மக்கள் கலை பண்பாட்டுக் களம் அமைப்பினரின் சார்பில் ஒரு நிகழ்வு ஒன்று இலண்டன் தெற்குப் பகுதியில் அமைந்திருந்த நியூ மோல்டன் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பறையிசை, பாடல்கள், கவிதா ஆற்றுகை போன்ற பல்வேறு கலை நிகழ்வுகளுடன் புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சியின் பொதுச்செயலாளரும் ‘புதிய பூமி’ பத்திரிகையின் ஆசிரியருமாகிய சி.கா. செந்தில்வேல் எழுதிய ‘வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை’ என்ற நூல் அறிமுகமும் நடைபெற இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.








பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









