காலத்தால் அழியாத கானங்கள்: "ஒரு நாள் யாரோ? என்ன பாடல் சொல்லித் தந்தாரோ? - ஊர்க்குருவி -

நான் விஜய் தொலைக்காட்சியினரின் 'சுப்பர் சிங்கர்' நிகழ்ச்சியைத் தொடர்ச்சியாகப் பார்த்தவனல்லன். அவ்வப்போது பார்த்து வருபவன். 'சுப்பர் சிங்கர்' அறிமுகப்படுத்திய பாடகர்களில் இளம் பாடகி பிரியங்கா தனித்து ஒளிர்கின்றார். இவருக்குக் கலையுலகில் நீண்டதோர் எதிர்காலமுண்டு. இவரது குரல் தனித்துவமானது; இனிமையானது.
"மெல்லத் திறந்தது கதவு
என்னை வாவெனச் சொன்னது
உறவு
மெல்லத் திறந்தது கதவு
என்னை வாவெனச் சொன்னது
உறவு
நில்லடி என்றது நாணம்
விட்டு செல்லடி என்றது ஆசை" - கவிஞர் வாலி.
கவிஞர் வாலியின் சிறந்த பாடல்களிலொன்று. இடம் பெற்றுள்ள திரைப்படம் 'மேஜர் சந்திரகாந்த்'. இத்திரைப்படத்தின் மூலமே நடிகர் சுந்தர்ராஜன் மேஜர் சுந்தர்ராஜன் என்று அழைக்கப்படத் தொடங்கினார். இத்திரைப்படத்தில் நடிகர் நாகேசும், ஜெயலலிதாவும் சகோதர, சகோதரிகளாக வருவார்கள். மிகவும் சிறப்பாக நடித்திருப்பார்கள். பெண்களைத் தன் வலைக்குள் இழுத்து ஏமாற்றும் ரஜனிகாந்த் என்னும் பாத்திரத்தில் நடிகர் ஏ.வி.எம். ராஜன் நடித்திருப்பார். அவரிடம் ஏமாந்த பெண் விமலாவாக நடித்திருப்பார் ஜெயலலிதா. இறுதியில் தன் உயிரை மாய்த்துக்கொள்வார். பாடல்களுக்கு இசையமைத்திருப்பவர் இசையமைப்பாளர் வி.குமார்.


கவிஞர் முத்துலிங்கத்தின் சிந்தையை வசியம் செய்யும் வரிகள், மெல்லிசை மன்னரின் இசை, கே.ஜே.ஜேசுதாஸ் & வாணி ஜெயராமின் குரல், எம்ஜிஆர் & லதாவின் சிறப்பான நடிப்பு , என்.பாலகிருஷ்ணனின் ஒளிப்பதிவு எல்லாமே நன்கிணைந்து எனைக் கவர்ந்த கானமிது. கவிஞர் முத்துலிங்கத்தின் வரிகளை ஒவ்வொன்றாக இரசித்தவாறே, அவற்றைப் பாடும் பாடகர்களின் குரல்களையும், அபிமான நடிகர்களின் நடிப்பையும் இரசித்துப்பாருங்கள் நிச்சயம் நீங்கள் உங்களையே மறந்து விடுவீர்கள். இப்பாடலின் பொருளை விளங்கி அமைக்கப்பட்டுள்ள இசை, அதையுணர்ந்து அனுபவித்துப் பாடும் பாடகர்களின் குரலினிமை , விளங்கி நடிக்கும் நடிகர்களின் நடிப்பு எல்லாமே என்னை ஈர்த்தனவென்பேன்.
ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க - எஸ்.ஜானகி -
இலங்கை வானொலியில் நீண்ட காலம் பணியாற்றிய கலைஞர் அ. சிறிஸ்கந்தராசா கனடாவில் (20 – 01 – 2021) காலமானார். எமது நீண்டகாலக் குடும்ப நண்பர் சிறிஸ்கந்தராசாவின் மரணம் வேதனை தருகிறது. அறுபதுகளின் பிற்பகுதி முதல் அவரை நன்கறிவேன். அன்று வானொலியில் மாதமொருமுறை யாழ் மாவட்ட சனசமூக நிலையங்களின் சமாசம் சார்பாகக் கிராமசஞ்சிகை நிகழ்ச்சியை எனது சகோதரர் த. துரைசிங்கம் தயாரித்தளிப்பதுண்டு. அந்நிகழ்ச்சியில் அன்று மாணவனான நானும் பங்குபற்றியதுண்டு. அவ்வேளை அந்நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளராக விவியன் நமசிவாயம் கடமையாற்றினார். அவருடன் தயாரிப்பாளராகச் சிறிஸ்கந்தராசா பணியாற்றினார்.

அன்றிலிருந்து இன்று வரை இசையென்னும் தண்ணொளியை இசை மழையாகப் பொழிந்துக்கொண்டிருந்த இளைய நிலா தன் இயக்கத்தை நிறுத்தி விட்டது. பாட்டு, நடிப்பு என்று தன் பங்களிப்பைக் கலையுலகுக்கு நல்கியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள். அந்தபுன்னகை தவழும் முகமும், கேட்பவர் இதயங்களை வருடிச் செல்லும் குரலும் மீண்டும் மீண்டும் நினைவிலாடுகின்றன. கூடவே அந்தக் காணொளியும் நினைவிலாடுகின்றது. மருத்துவ நிலையத்துக்குத் தன்னைத் தனிமைப்படுத்தச் செல்லும்போது, வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்தாமல் , மற்றவர்களுக்குத் தொல்லை கொடுக்க விரும்பாமல் செல்வதாகக் கூறிய அந்தக் காணொளியும் நெஞ்சில் துயரத்தை ஏற்படுத்துகிறது.
இதன் சிங்கள மூலத்தை கூகுள் மொழிபெயர்ப்பு மூலம் மொழிபெயர்த்ததில் அதன் கூறு பொருளை அறிய முடிந்தது. கூகுள் மொழிபெயர்ப்பு முற்றும் முழுதாகச் சரியாகவிருப்பதில்லை. இருந்தாலும் பாடல் கூறும் பொருளை அறிவதற்கு உதவுகின்றது. அதன் மூலம் இப்பாடலானது இனிமையான கடந்த காலக் காதல் நினைவுகளை இரை மீட்டுவதை அறிய முடிகின்றது. இப்பாடலைக் கேட்டுப்பாருங்கள். இதயத்தை வருடிச்செல்லும் இசையும், குரலும் எம்மை மெய்ம்மறக்க வைப்பவையென்பதை உணர்வீர்கள்.
தினகரன் வாரமஞ்சரி யூன் 6, 20 : தமிழ் நாடக மேடைக்கு லடீஸ் வீரமணியின் பங்களிப்பு கூழாங்கற்களும் அவர் கைகளில் பட்டை தீட்டப்பட்ட வைரங்களாகும் - பி. பொன்னுத்துரை -


"எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று 
"பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
இப்பாடலை எப்பொழுது கேட்டாலும் எனக்குக் காற்சட்டையும், சேர்ட்டுமாகப் பால்ய காலத்தில் வவுனியாவில் வசித்துக்கொண்டிருந்த காலகட்டம் நினைவுக்கு வரும். உண்மையில் இப்பாடலை முதலில் கேட்டபோது நான் நண்பர்களுடன் வவுனியா நகரசபை மைதானத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தேன். பாடசாலை முடிந்து வீடு திரும்புகையில் பல்வேறு வழிகளில் திரும்புவது வழக்கம். அதிலொரு வழி நகரசபை மண்டபத்துக்குப் பின்புறமாக , புகையிரத இருப்புப்பாதைக்குமிடையில் மரங்கள் நிறைந்திருந்த பகுதியினை ஊடறுத்துச் சென்ற பாதை. அப்பாதை வழியாக காமினி வித்தியாயலயத்துக்கு முன்புறமாகச் சென்று கொண்டிருந்த மன்னார் வீதிக்கு வர முடியும்.
எனக்கு பிடித்த இலங்கைத்தமிழ்ப்பாடகர்களில் இவருமொருவர். இவரது பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்று இவர் பாடிய "வான நிலவில் அவளைக் கண்டேன் நான். வாசமலரில் அவளை கண்டேன் நான் ." இப்பாடலை எழுதியவர் அல்வாய் சுந்தரம். பாடலுக்கு இசையமைத்திருப்பவகே. சவாஹிர். எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்து நேற்று (16.02.2020) மறைந்த செய்தியினை முகநூலில் நண்பர்கள் பகிர்ந்திருந்தார்கள். என்னைப்போன்ற பலரைத் தன் குரலால் இன்பமூட்டியவர் ராமச்சந்திரன் அவர்கள். அவருக்கு என் அஞ்சலி. அவரிழப்பால் வாடும் அனைவர்தம் துயரத்திலும் நானும் 'பதிவுகள்' சார்பில் பங்குகொள்கின்றேன். அத்துடன் ஜூலை 15, 2012 ஞாயிறு தினகரன் வாரமஞ்சரியில் வெளியான "பொப்இசை பாடகர் எஸ். இராமச்சந்திரன்" என்னும் இவரைப்பற்றிய கட்டுரையினையும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
கவிஞர் கண்ணதாசனின் கவித்துவத்தையும், மொழியாற்றலையும் வெளிப்படுத்தும் சிறந்த திரைப்படப்பாடல்களிலொன்று. மானுட வாழ்க்கையைப்பற்றிய சிந்தனையைத்தூண்டிவிடும் கருத்துகளின் பெட்டகம் இப்பாடல். கே.பாலச்சந்தர் படப்பாடல்களில் முதலிடத்திலுள்ள பாடல்களிலொன்று. வாணி ஜெயராம் பாடிய சிறந்த பாடல்களிலொன்று. அவரது பாடல்களைப்பற்றி நினைத்தால் முதலில் நினைவுக்கு வருவது மல்லிகை என் மயங்கும் பாடல். கூடவே நினைவுக்கு வரும் பாடலிப்பாடல். எம்,எஸ்.வி இசையமைத்த சிறந்த பாடல்களிலொன்று. 
எம்ஜிஆர் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலும் சரி , இன்றும் சரி எம்ஜிஆரின் படங்களென்றால் அவை ஒரே மாதிரியானவை. கருத்துள்ள பாடல்களைக் கொண்டவை. காதல் பாடல்கள் இனிமையானவை. இவற்றுடன் தம் கருத்துகளை நிறுத்தி விடுவார்கள். ஆனால் எம்ஜிஆர் சண்டைக்காட்சிகளில் மட்டுமல்ல இன்னுமொரு விடயத்திலும் நன்கு சிறப்பாக செயற்படக்கூடியவர். அது அவரது நடனத்திறமை. திரைப்படங்கள் பலவற்றில் எம்ஜிஆரின் நடன அசைவுகளை அவதானித்தால் அக்காலகட்டக் கதாநாயக நடிகர்களில் அவரைப்போல் நடனமாடக் கூடிய நடிகர்கள் வேறு யாரையும் என்னால் உடனடியாக நினைவுக்குக் கொண்டு வரமுடியவில்லை. நடிப்புத்திறமை மிக்க நடிகர் திலகத்தால் 'வண்டி தொந்தி'யுடன் விரைவாக, சிறப்பாக ஆட முடிவதில்லை. ஆனால் முறையான உடற் பயிற்சியினால் உடலைச் சிறப்பாகப்பேணிய எம்ஜிஆர் தனது இளமைப்பருவத்தில் மட்டுமல்ல வயது ஐம்பதைத்தாண்டிய நிலையிலும் மிகச்சிறப்பாக ஆடியுள்ளார்.
இலங்கையில் வசிக்கும் ஓவியர் கெளசிகன் நடிகர் திலகத்தின் பிறந்ததினத்தையொட்டி அனுப்பிய நினைவுக் குறிப்புகள் இவை. 1997இல் நடிகர் திலகம் இலங்கை வந்தபோது அவரைச் சந்தித்ததையும், அவருக்குத் தான் வரைந்த ஓவியத்தைக் கொடுத்ததையும் நினைவுகூர்கின்றார். அத்துடன் அந்நிகழ்வுக்கான காணொளியினையும் பகிர்ந்துகொள்கின்றார். மேலும் அந்நிகழ்வில் நடிகர் திலத்தை வைத்துத் தான் வரைந்த இன்னுமோர் ஓவியத்தையும் காட்டி அதில் நடிகர் திலகத்தின் 'ஆட்டோகிராப்'பையும் வாங்கிக் கொள்கின்றார். அவ்வோவியத்தையும் நம்முடன் பகிர்ந்துகொள்கின்றார் கெளசிகன். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. - பதிவுகள் - 


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









