'அன்னா கரினினா'வின் தமிழ்த்திரை வடிவம் 'பணக்காரி'

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் டால்ஸ்டாயின் புகழ் பெற்ற நாவல்களிலொன்று 'அன்னா கரினினா' . இந்நாவலைத் தழுவித் தமிழில் 1953இல் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் 'பணக்காரி' என்னும் பெயரில் திரைப்படமொன்றும் வெளியாகியுள்ளது. சித்தூர் நாகையா அன்னாவின் கணவன் கரீன் ஆக நடித்துள்ள திரைப்படத்தால் அன்னா வேடத்தில் நடித்திருப்பவர் அந்நாளைய 'கனவுக்கன்னி' டி.ஆர்.ராஜகுமாரி. இத்திரைப்படத்தில் அன்னாவின் காதலன் வெரோன்ஸ்கி என்னும் இளம் இராணுவ அதிகாரி வேடத்தில் நடித்திருப்பவர் யார் தெரியுமா? பின்னாளில் எம்ஜிஆர், புரட்சி நடிகர், மக்கள் திலகம் என்றெல்லாம் அறியப்பட்ட எம்.ஜி.ராமச்சந்திரன்தான்.








முன்பு ஒரு காலத்தில் ஊருக்குள் நம்ப முடியாத செய்திகளை நம்ப வைத்ததில் தெருச்சித்திரங்களுக்கும் பங்கிருந்தது. பாடசாலை கழிவறைகள் தொடக்கம் தெரு மதகுகள் சிதிலமடைந்த மதிற் சுவர்கள் மயான மண்டபங்கள் போன்றன கரித்துண்டுகளாலும் பச்சிலைகளாலும் கிறுக்கர்களின் களமாகி கிறங்கடித்தன. அசுத்தமான இடங்கள் அவர்களுக்கு தடையாக இருந்ததுமில்லை. அசிங்கமான வார்த்தைகளுக்கு அவர்கள் தடை விதித்ததுமில்லை. வியப்பு – திகைப்பு – தவிப்பு – முறைப்பு – வெறுப்பு – கடுப்பு என பல உணர்வுகள் பாதிப்படைந்தவர்களிடம் மட்டுமல்ல அவற்றை பார்த்தவர்களிடமும் ஏற்பட வேண்டும் என்ற கற்பனையுடன் அந்த கிறுக்கர்கள் அநாமதேயமாகவே சிரித்தார்கள். - அந்த கிராமிய நினைவுகள் பலருக்கு இப்பொழுதும் மங்கலாக ஞாபக இடுக்குகளில் அப்பியிருக்கும்.







இசையமைப்பாளர் வேதா காலத்தால் அழியாத தமிழ்த்திரைப்படப் பாடல்கள் பலவற்றை வழங்கியவர். ஒரு சில மேனாட்டுப் பாடல்களின் தழுவல்களுமுண்டு. தமிழ்த்திரையுலக இசையில் தழுவாதவர்கள் யாருளர்?

டிசம்பர் 24 எம்ஜிஆரின் நினைவு தினம். எம்ஜிஆர் திரைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்தவை அவற்றில் இடம் பெறும் ஆரோக்கியமான கருத்துகள் உள்ளடங்கியுள்ள பாடல்கள்தாம். நல்ல கருத்துகளைக் கூறும் அப்பாடல்கள் வாழ்க்கைக்கு மிகவும் உதவும் தன்மை மிக்கவை. வழிகாட்டுபவை.


எனக்கு நடிகரும் பாடகருமான மு.க.முத்து மீது எப்போதுமே ஒருவித அனுதாபமுண்டு. கலைஞர் எம்ஜிஆரின் அரசியல் மற்றும் திரையுலகச் செல்வாக்கைப்பற்றித் தப்புக் கணக்கு போட்டார். அரசியலில் அவர் போட்ட தப்புக்கணக்கு எம்ஜிஆரைக் கட்சியிலிருந்து விலக்கியது. விளைவு? எம்ஜிஆர் உயிருடன் இருந்தவரையில் கலைஞரால் ஆட்சியைப் பிடிக்கவே முடியவில்லை. அதுபோல் எம்ஜிஆரைக் கட்சியிலிருந்து விலக்க முன்னர் எம்ஜிஆரின் திரையுலக வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரத் தன் புதல்வனான மு.க.முத்துவைக் கதாநாயகனாக வைத்து எம்ஜிஆரைப்போல் நடிக்க வைத்தார். அது அவர் போட்ட எம்ஜிஆர் பற்றிய முதலாவது தப்புக் கணக்கு. விளைவு? நடிப்புத் திறமை, பாடும் திறமை மிக்க மு.க.முத்துவின் கலையுலக வாழ்க்கை உதித்த வேகத்திலேயே அஸ்தமித்துப்போனது. எம்ஜிஆருக்கு எதிராக மு.க.முத்துவை நடிக்க வைத்ததற்குப் பதிலாக நடிக்க வைத்திருந்தால் மு.க.முத்துவின் கலையுலக வாழ்க்கை பிரகாசித்திருக்கும் என்பதே என் கணிப்பு. 


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









