அஞ்சலி: உள்ளத்தைத்தொடும் குரலுக்குச் சொந்தக்காரர் பாடகர் ஜெயச்சந்திரன்!

பாடகர் ஜெயச்சந்திரன் தனது எண்பதாவது வயதில் மறைந்துவிட்டார். ஆழ்ந்த இரங்கல். என்னைக் கவர்ந்த பாடகர்களில் இவரும் ஒருவர். இவரை நான் முதன் முதலாக அறிந்தது யாழ் ராஜா தியேட்டரில் பார்த்த ஶ்ரீதரின் அலைகள் மூலம்தான். அத்திரைப்படத்தின் மூலம்தான் முதன் முதலில் கன்னட நடிகரான விஸ்ணுவர்த்தனையும் அறிந்து கொண்டேன். அப்படத்தில் இடம் பெற்றுள்ள 'பொன்னென்ன பூவென்ன' பாடலைக் கேட்டதுமே பிடித்துப்போனது.
இது தவிர கடலோரக் கவிதைகள் படத்தில் இடம் பெற்றுள்ள கொடியிலே மல்லியப்பூ , அந்த 7 நாட்கள் - கவிதை அரங்கேறும் நேரம், கிழக்கே போகும் ரயில் - மாஞ்சோலைக் கிளிதானோ மற்றும் வைதேகி காத்திருந்தாள் - காத்திருந்து காத்திருந்து இவையெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த ஜெயச்சந்திரனின் பாடல்கள். பல தடவைகள் மீண்டும், மீண்டும் கேட்டு இரசித்த பாடல்கள் இவை.











'சிந்திக்கச் சொன்னவர் பெரியார். தந்தை பெரியார். சொந்தப் புத்தியை கொண்டே சிந்திக்கச் சொன்னவர் பெரியார். தந்தை பெரியார்.' என்று பாடுபவர் பிரபல கர்நாடக இசைப்பாடகர் டி.எம்கிருஷ்ணா - 














பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









