யாழ் இந்துக் கல்லூரிக் கனடாச் சங்கம்: சிறப்பு விருந்தினர் மற்றும் விருதுகளுக்குப் பரிந்துரையுங்கள்! - சுதர்சன் (அருண்மொழிவர்மன்), செயலாளர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடா -
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சமூகத்தினருக்கு வணக்கம்,
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் வருடாந்த இராப்போசன ஒன்றுகூடலில் வழங்கப்படும் விருதுகளுக்கும் சிறப்பு விருந்தினருக்குமான பரிந்துரைகளை நாம் கோருகின்றோம். இவ்வருடம் பின்வரும் பிரிவுகளுக்காக விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன.
· தொழில் முனைவருக்கான விருது (Award for Enterpreneurship)
· விளையாட்டுத் துறையில் சிறப்புச் சாதனை புரிந்தவர்களுக்கான விருது (Award for Outstanding Achievement in Sports)
· கல்வித்துறையில் சிறப்புச் சாதனை புரிந்தவர்களுக்கான விருது (Award for Outstanding Academic Achievement)
· சமூகச் செயற்பாட்டாளருக்கான விருது (Award for Social Activism)
இவ்விருதுகளுக்காகவும் சிறப்பு விருந்தினருக்காகவும் பரிந்துரைக்கப்படுபவர்கள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவராகவோ அல்லது தற்போதையை / முன்னாள் ஊழியராகவோ இருப்பதுடன் சமூக அக்கறை கொண்டவராகவும் பரிந்துரைக்கப்படும் துறையில் நீண்டகால பங்களித்திருப்பவராகவும் சமூக மதிப்புடையவராகவும் இருப்பதுடன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவினால் இதற்குமுன்னர் விருதளிக்கப்படாதவராகவும் இருப்பது அவசியமாகும்.